Sunday, 31 December 2023

 

சட்ட நூலாய் தொல்காப்பியம்

              தொல்காப்பிய ஆசான் , தோழிக்கும் தலைவிக்குமுள்ளஉறவைப் பொருளியலில் பொருள் நிலையோடு ஒப்பிட்டுப்பேசும்  பகுதியே அது. ஆம் அங்கு தான் ஒரு மனிதன் தன்னுடைய சொத்துக்கள் என்று எவ்வவற்றை  உரிமைக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இதோ அப்பாடல்

            தாயத்தின் அடையா ஈயச் செல்லா

            வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

            எம்மென வருஉம் கிழமைத் தோற்றம்

            அல்ல வாயினும் புல்லுவ வுளவே

                                                                   (தொல்.பொருளியல்.நூற்பா 24)

ஒருவர் ஒரு பொருளைத் தனது என்று உரிமை கொண்டாடுவதற்கு நான்கு வழித்தடங்களே உள்ளன.

1.          தம் முதாதையர்களால் வாரிசு அடிப்பமையில் கிடைக்கும் பொருள்.

2.        கொடைப்பொருளாக அல்லது அன்பளிப்பாக பெறப்படும் பொருள்.

3.        தம் நேரிய உழைப்பால் கிடைத்த பொருள்

4.        போட்டிகளில் ஈடுபட்டோ வழக்குகளில் ஈடுபட்டோ வெற்றியால் தமக்கு கிடைத்த பொருள்

என இந்நான்கு வழிகளில் வரும் பொருள்களே ஒருவரின் உரிமைப் பொருள்கள். பிற வழிகளில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் தனது என்று ஒருவர் கூற அவருக்கு உரிமையில்லை

இது சரி தானே

நம் இலக்கியங்கள் நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளன. நாம் தான் வரப்புச் சண்டை போட்டு, வயல் விற்று வழக்கு நடத்துகிறோம்.

சரிங்க

இப்பாடல் இதனை மட்டும் சொல்லவில்லை, தலைவியின் மேல்  தனக்குள்ள உரிமையைப் தோழி கூறுவதாக விளக்க வந்த பாடல்.

                                                                  நன்றி

அனைவருக்கும்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

 


Friday, 11 August 2023


அனைவருக்கும் வணக்கம்

நான் வந்துட்டேன்

இதோ உங்களுக்கான ஒரு சங்க இலக்கிய பாடல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

        சங்க இலக்கிய பாடல்கள் அனைத்தும் ஐந்து உரிப்பொருள்களையும் அடிப்படையாக் கொண்டும், கருப்பொருள்களைத் அதற்கு தக்க துணைமைகளாக கொண்டும் விளங்குகின்றன. பகலும் இரவும் தவறாது தலைவியைக் கண்டு வந்த தலைவன் யாது காரணமோ தெரியவில்லை, சில காலமாக தலைவியைக் காண வரவில்லை. இதனால் வருத்தம் அடைந்த தலைவி தன் தோழியிடம் புலம்புகிறாள். அன்புத் தோழி ஆறுதல் கூறியும், அமைதி பெறாத தலைவி, மனம் நொந்து தன் தலைவினோடு கொண்டுள்ள காதலை விளக்கமாக பேசுவதாக அமைந்த குறுந்தொகைப் பாடல் இது.

                                     யாவதும் அறிகிலர் கழறு வோரே

தாயில் முட்டை போலவுட் கிடந்து

சாயின் அல்லது பிரிதெவ னுடைத்தோ

யாமைப் பார்ப்பி   னன்ன

காமம் காதலர் கையற விடினே

(குறுந்தொகை 152)

 

             என் அன்புத் தோழியே, என்னை ஆற்றியிரு என்று கூறுகிறாயோ, நான் என் தலைவன் மீது கொண்டுள்ள காதல் எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியாதா உரைக்கின்றேன் கேள். ஆமையைப் பார்த்திருக்கின்றாயல்லவா அந்த ஆமையின் பார்ப்பு அதாவது அதனுடைய பிள்ளை, தாயின் முகம் பார்த்துத்தானே நாளும் வளரும். அது போலவே என் காதலன் அருட்பார்வையிலேயே தான் என் காதலும் வளர்ந்தாக வேண்டும். மேலும், கேள் என் தோழியே, கோழியால் அடைகாக்கப்படாத  முட்டை என்னவாகும் நாளும் தனித்து கிடந்தால் அதன் உட்கரு அழிந்து போகுந்தானே அதைப்போலவே என் காதலனின் அரவணைப்பை நான் இழந்தேனென்றால் என் காதல் அழிய நானும் அழிந்து போவேன். என் காதல் நிலைமை இவ்வாறிருக்க நீ என்னை பொறுத்திரு என்று கூறுவது ஏற்புடைத்தன்று என்று கூறுகின்றாள். இவளின் கூற்றிற்கு ஆமையும் அதன் பார்ப்பும், கோழியும் அதன் முட்டையும் துணை நிற்கின்றன. தலைவியின் நிலைப்பாட்டை விளக்கும் வரிகளைத் தருபவர் கிளிமங்கலங்கிழார் எனும் புலவர்.



Monday, 5 December 2022

                                                             வணக்கம் அம்மா




ஆளுமை மிகுந்த ஆற்றல் மிகு பெண்ணாய்,,,,,,,,

                                               

வணங்குகிறேன்.



Wednesday, 30 November 2022

                                                     

                                          இப்பாடல்

                                         கலிங்கத்துப்பரணி

 தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்

தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்

டரமகளி ரவ்கூயிரைப்  புணரா முன்னம்

ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

                                                                                        ஜெயங்கொண்டார்

இதுவே இப்படியாக,,,,,,,,,

                           உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

                          அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

                           உன்னை வேறுகைகளில் தரமாட்டேன்

                          நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்



Wednesday, 24 August 2022

 

அனைவருக்கும் வணக்கம்.

 

வலைப்பூ பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.

இனி தொடர்ந்து எழுத வேண்டும். உங்களின் மேலான விமர்சனங்களுடன்.

தொடர்கிறேன்.

நன்றி


 

Monday, 1 March 2021

                                                         வணக்கம்


                            செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

                             எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்

                                                                                                        (திருப்பாவை)





Wednesday, 1 January 2020

HAPPY NEW YEAR





                                                      HAPPY NEW YEAR

                                                                               TO ALL

                                      flower images க்கான பட முடிவு