Wednesday 13 April 2016

காலம் தந்த பொக்கிஷம்

                      காலம் தந்த பொக்கிஷம்



என் சிரிப்பின் ஆணிவேர் இவள்,,


பால்மனம் மாறாத

பவளசிரிப்பில்

இதழோரம் வடிந்த

நீர்த்துளிகளில்

நான் கரைந்தே

போனேன்,,

                    காலம் தந்த பொக்கிஷம் இவள்,,

                    என் கன்னத்தில் முத்தமிட்ட

                    ஈரம் இன்னும் காயவில்லை 

                    அதற்குள் ஆகிவிட்டது

                    அகவை அய்ந்து,,







                                

                                 







                                      




                                                  குழந்தைக்கு பிறந்தநாள் கவிதைகள் க்கான பட முடிவு
நன்றி,,,,

29 comments:

  1. பல நலன்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க..

    அன்பின் சாராவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,

      Delete
  2. வாழ்க வாழ்க பல்லாண்டு....
    புன்னகை ராணியாய்
    புன்னகை சிதறாமல்
    வாழ்க வாழ்க பல்லாண்டு...

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,

      Delete
  3. அன்பில் கரைந்திடுங்கள் அன்பை விதைத்திடுங்கள். அன்பில் முகிழ்ந்திடுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல ஐயா ,,

      Delete
  4. அருமை.

    குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகளும்.

    வாழ்க வளமுடன். பல்லாண்டு வாழ்க. இன்று போல என்றும் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல ஸ்ரீ

      Delete
  5. சாராவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆல்போல் தழைத்து வாழ்க...
    A.D.M.K. பார்ட்டியா ?

    ReplyDelete
    Replies
    1. என் இல்லத்தில் இணையம் இழுவையாக இருந்ததால் அவரிடமே எழுதிக்கொடுத்து, பதிவிட சொன்னேன், அதான்,, போட்டோ அவர் தேர்வு,,, ம்ம் அவர் அந்த பார்ட்டிதான் சகோ,,,

      Delete
    2. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,

      Delete
  6. சாராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன். இறைவனின் ஆசிகள் என்றும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழட்டும் உங்கள் மகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா.

      Delete
  7. சாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா

      Delete
  8. தங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள்.

    எதிலும் முதலிடம் பிடித்து நம் தமிழக முதல்வர் போல அதிர்ஷ்டமாக இருக்கட்டும்.

    {6 வது படத்தைப் பார்த்ததும் ஏனோ எனக்கு இதுபோல சொல்லணும் போல ஓர் ஆசை ஏற்பட்டது}

    //என் சிரிப்பின் ஆனிவேர் இவள்//

    இதைப்படித்ததும் ஆனி மாதம் பிறந்திருப்பாரோ என நினைக்கத் தோன்றியது. ஆனால் இப்போது நடப்பதோ பங்குனி/சித்திரை. அதனால் ஒருவேளை அது ஆணிவேர் என மாற்றப்பட வேண்டியதோ, எனவும் நினைக்கத்தோன்றுகிறது.

    எதற்கும் யோசித்து முடிவு செய்யவும்.

    குழந்தைக்கு மீண்டும் என் அன்பான நல்லாசிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், எழுத்து தவறு தான்,, அவள் பிறந்தது பங்குனி தான்,, மீள்பார்வைக்கும் வழி இல்லாததால் இன்று தான் பார்க்க நேர்ந்தது,, தவறைச் சுட்டியமைக்கு நன்றிகள் ஐயா,,
      ஆஹா ஆஹா முதல்வர்,,, அவளும் அப்படித்தான்,,
      மாவட்ட ஆட்சியாளர் ஆகனுமாம்,, அந்த அதிகாரம் பன்னுவது,, அரசியல்,,பார்ப்போம்,,
      ஆஹா அந்த படமா? என்னளவில் அது நாட்காட்டி மட்டுமே,,

      வருகைக்கும் தங்கள் அன்பின் ஆசிகளுக்கும் நன்றிகள் ஐயா,

      Delete
  9. சாராவிற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வரும் புத்தாண்டு எல்லாவிதத்திலும் நன்மை பயக்கவும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,

      Delete
  10. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,, தங்களுக்கும் எம் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,,

      Delete
  11. வாழ்த்தி மகிழ்கிறேன்,,,/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கு முதலில் நன்றிகள் ஐயா,

      வாழ்த்திற்கும் ஐயா,,

      Delete
  12. உங்கள் பொக்கிஷமான சாராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்தும் ஆசியும்! எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆனி வேர் என்பதை ஆணிவேர் என்று மாற்றிவிடுங்கள் மகி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மா, தவறினைச் சுட்டியமைக்கும்,, மாற்றிவிட்டேன். நன்றி நன்றி

      Delete
  13. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,

    ReplyDelete
  14. வணக்கம் பேராசிரியரே !

    அகத்தொளிர் அன்பின் செல்வம்
    அகவைகள் ஐந்தைக் காண
    இகத்தொளிர் இன்பம் எல்லாம்
    இடையறா வாழ்த்து சொல்லும்
    முகத்தொளிர் வண்ணம் கண்டால்
    முத்தென எண்ணத் தோன்றும்
    மகத்தொளிர் மாட்சி பூக்கும்
    மழலையே வாழ்க வாழ்க !

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சாரா என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன்






    ReplyDelete
  15. தாமதமாக இன்றுதான் தளம் கண்டேன். பிறந்த நாள் வாழ்த்துகள்,

    ReplyDelete
  16. தங்களின் சிரிப்பின் ஆணிவேர்க்கு ,எனது காலம் கடந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete