Saturday 31 October 2015

வித்தகர்கள்

                            வித்தகர்கள்

    நண்பர்களே, ஒரு முறை, ஓரே ஒரு முறை என்னொடு வருகிறீர்களா? அன்னைத் தமிழின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்து, தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ் முனிவரின் தமிழ்த் தலத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வருகிறீர்களா? என்ற நூல் வழி பயணத்தில் பயணித்த  நான் என் இதயம் ஈர்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து போகிறேன்,,

  சில சந்திப்புகள்,முதல் சந்திப்பிலேயே முற்று பெற்று விடும். ஆனால் சிலரது சந்திப்புகளோ, நாம் வாழும் வரையில், நெஞ்சில் நீங்கா இடம் பெற்று, நிரந்தரமாய் அமர்ந்துவிடும், என்கிறார் இந்நூல் ஆசிரியர்,,,,,,,,

  விருதுநகர் மாவட்டத்தில் வாழவந்தாள்புரம் எனும் சிற்றூரில் பிறந்து திருக்குறள் பால் அன்புக்கொண்டு அதன் வழி நடப்பவருமான போற்றுதலுக்குரிய பெருமகனார் தமிழ்க்கடல் புலவர் திரு.இளங்குமரனார் அய்யா அவர்கள்,

   நா து என்னும் சொல்லொன்றினைக் கூறினார். சிலப்பதிகாரத்தில் நா து என்னும் சொல் வருகிறது, நா என்றால் நாக்கு. து என்றால் துணை. அதாவது பேச்சுத்துணை.
ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது,தன் கணவரின் சகோதரியே,,,
என்ன என்று தெரிந்துக்கொள்ள ஆவலா, வாருங்கள் இந்நூலுக்குள்,,

                                      நான் சந்தித்த மாமனிதர்கள்

டெல்லி உச்ச நீதிமன்றம் வரைச் சென்று தன்னுடைய வாதத் திறமையால் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்த வழக்கறிஞர் திரு.ஆர்.சிங்காரவேலன் அவர்கள்,

  எதையும் படிக்காமல் சொல்லக்கூடாது யாரோ ஒரு தலைவர் சொன்னாரு, ஏதோ ஒரு பத்திரிக்கையில் படிச்சேன்னு சொல்லாதே, மூலநூல்களைப்படி,,,என்ற அறிவுரைப் பகிர்ந்த அன்புத் தந்தையைப் பெற்ற புதுக்கோட்டைப் பகுதியில் நூல் ஆலயம் எழுப்பி பாதுக்காத்து வரும் ஞானாலயா திரு.பா.கிருட்டினமூர்த்தி அய்யா அவர்கள்,

   12,000 கி,மீ. கடலில் பயணம் செய்து தென் துருவத்திற்கு சென்று தஷின் கங்கோத்ரி இராணுவத்திட்டத்தின் தலைவராக 480 நாட்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றி சாதனைப் புரிந்து, ஒவ்வொரு நாளுமே போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான் அண்டார்டிகா வாழ்க்கை, அவ்வாழ்க்கையை நமக்கு படமாக காட்டுகிறது இவரது எழுத்துக்கள், பாருங்களேன்.

   புறவெளிச்சம் அறியாத முனைவர் வெற்றிவேல் முருகன் அவர்களைப் பற்றி இவர் எழுத்துக்களைத் நான் கடந்து செல்ல இயலவில்லை, அந்த உணர்வுகளுக்குள் நீங்களும் வரனுமா??

 எங்களின் அன்புச் சகோதரரும், கரந்தைத் தமிழ்ச்சங்க கல்வி நிறுவனமான உமாமகேசுவரா மேல்நிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியருமான திரு.கி.ஜெயக்குமார் அவர்கள் எழுதிய வித்தகர்கள் எனும் நூலினை வாசித்து சுவாசித்துப் பாருங்கள்,

நான் எதுவும் இங்கு சொல்லவில்லை, உங்களின் வாசிப்பிற்கே விடுகிறேன்.

 இந்நூல் இவரின் ஆறாவது நூல்
.
  வாழ்வில் தான் சந்தித்த வித்தகர்களை, அவர்தம் சாதனைகளை, நாமும் அறியும் வகையில், நூலாக்கி நம் கரங்களில் தவழ விட்டிருக்கிறார். இவரின் எழுத்துப் பணிதொடர வாழ்த்தி, உங்களுக்கு இதோ, 

நூல் கிடைக்க,
பிரேமா நூலாலயம்,
சிங்காரம் இல்லம்,
4 ஏ. தமிழ்நகர் மூன்றாவது தெரு,
மருத்துவக்கல்லூரி சாலை,
தஞ்சாவூர் 613004

 

 26 comments:

 1. வணக்கம் சகோ தங்களது மேலோட்டமான விமர்சனம் நன்று நான் நூலை கண்டிப்பாக வாங்கி படிக்க முயல்வேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,

   Delete
 2. நூலைப் படித்துவிட்டேன். வாழும் காலத்தில் வாழும் அரிய மனிதர்களைப் பற்றிய அருமையான பதிவு. நூலாசிரியருக்கு பாராட்டுகள். விமர்சனத்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா,

   Delete
 3. தங்களின் மாறா அன்பிற்கு என்
  நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்
  கொள்கின்றேன் சகோதரியாரே
  நன்றி
  என்றும் வேண்டும் இந்த அன்பு

  ReplyDelete
  Replies
  1. தாமதமான பதிவு சகோ, உடன் செய்திருக்க வேண்டிய ஒன்று,பொறுத்தருள்க,
   வருகைக்கு நன்றி சகோ,

   Delete
 4. வணக்கம்

  விமர்சனத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,

   Delete
 5. Replies
  1. வருகைக்கு நன்றி டி டி சார்,

   Delete
 6. வணக்கம் பேராசிரியரே!

  நண்பரின் நூலை வாங்கியும் படித்தும் விட்டேன், அவரது பதிவுகளின் ரசிகன் என்கிற முறையில் இந்நூலை ஏனையோர்க்கும் அறியத் தரும் தங்களின் முயற்சிக்கு நன்றி கூறுகிறேன்.

  உங்களின் அடுத்தடுத்த பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா,

   Delete
 7. அருமையான உங்கள் விமர்சனம் புத்தகத்தை உடனே படிக்க தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது.

  வாழ்த்துக்கள் புத்தக ஆசிரியருக்கும்,அதை விமர்சித்து அறிமுகம் செய்த உங்களுக்கும் அம்மா.

  கோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அரசே,
   நீண்ட நாட்களுக்கு பிறகு, நன்றி நன்றி,,

   Delete
 8. நண்பரின் புத்தகத்தை வாங்க வேண்டும். எங்க ஊர்க்காரர்! பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா, வருகைக்கு நன்றி ஸ்ரீ,

   Delete
 9. அருமையான புத்தகத்தை அருமையாக மதிப்பிட்டிருகிறீர்கள்!! கரந்தை அண்ணனுக்கும், தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,

   Delete
 10. வித்தகரின் நூலை படிக்க முயலுகிறேன். தங்களின் தகவலுக்கும் சிறப்புரைக்கும் நன்றி! நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வலிப்போக்கரே,

   Delete
 11. அருமையான நூல் அறிமுகம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி திரு தளீர் அவர்களே,

   Delete
 12. நண்பரின் அபார எழுத்தாற்றலுக்கு இந்த நூலும் இன்னொரு சாட்சி. அற்புதமாக விமர்சித்த தங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,

   Delete
 13. அருமையான நூல் அறிமுகம். அடுத்த தமிழகப் பயணத்தின் போது தான் வாங்க வேண்டும்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,

   Delete