Saturday 20 June 2015

9 ஆம் நாள் விழா


9 ஆம் நாள் விழா

        பிரமிக்க வைக்கும் விழா என்றால் மிகையன்று,      தஞ்சை அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம், சரஸ்வதி மகால் நூலகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. 

2

ஆம் இன்று புத்தகக் கண்காட்சி 9ஆம் நாள் விழா இனிதாக முடிந்தது.
   மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேச்சாளர் திருமதி.பாரதிபாஸ்கர் அவர்களின் சொற்பொழிவு என விழா அழகாகச் சென்றது.
    மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தஞ்சைப் பெரிய கோயில் எவ்வாறு உலகமக்களால் பேசப்படுகிறதோ அந்த வகையில் இந்தப் புத்தக விழா பேசபடுவது தான் இதற்கு கிடைத்த வெற்றி என்றார்.
    இவ்விழா நாளையுடன் முடிவடையப்போகிறது, சிறப்பாக அமைய உழைத்த நல் உள்ளங்கள் அத்துனைப் பேரையும் வாழ்த்துவோம் வலை உறவுகளே,
வாசிப்பு என்பது நம்மின் சுவாசமாகிப்போனதால்,,,,,,,,,,,,,,









38 comments:

  1. சீர்மிகும் புத்தகத் திருவிழாவின் நேர்முக வர்ணனை - சிறப்பு!..
    அழகாகத் தொகுத்து வழங்கியமை மனதில் நிற்கின்றது..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்,
      தாங்கள் சொல்வது போல் அவ்வளவு சிறப்பாக எல்லாம் நான் சொல்லவில்லை, ஆனால் அருமையான ஏற்பாடு, சிறப்பாக சென்றது, பகிர்ந்தேன். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  2. புத்தகத் திருவிழாவுக்கு வாழ்த்துகள்
    சகோ பதிவு முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ, புகைப்படங்கள் இணைக்க முடியாததால் ஏற்பட்டது, நன்றி சகோ வருகைக்கு.

      Delete
  3. விழா மிகச் சிறப்பாக அமைய உழைத்த நல் உள்ளங்கள் அத்துனைப் பேரையும் வாழ்த்துவோம்.

    பதிவு முடியாததுபோல மிக நீண்ண்ண்ட வெற்றிடம் காணப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. புகைப்ப்பபபபபபபபபபடத்தால் ஏற்பட்ட வெற்றிடம், வருகைக்கு நன்றிய்யா,

      Delete
  4. புத்தகத் திருவிழாவை கண்டு மகிழ்ந்து இருக்கிறீர்கள்...கொடுத்துவைத்தவர் தான் நீங்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, ஆம் உண்மைதான், புத்தகங்கள் எவ்வளவு அப்பப்பா,,,,,,,,, வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  5. வாசிப்பை
    நேசிப்போம்
    சுவாசிப்போம்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, வருகைக்கு நன்றி.

      Delete
  6. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி சார், எங்கே தங்களைக் காணோம் என்று நினைத்தேன், வருகைக்கு நன்றி.

      Delete
  7. வாசிப்பு என்பது நம்மின் சுவாசமாகிப்போனதால்,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. ஆம், வருகைக்கு நன்றி வலிப்போக்கரே,,,,,,

      Delete
  8. புத்தகத் திருவிழா பற்றிய செய்தி இனிப்பானது தான்.அதில் நீங்கள் கலந்து சிறப்பித்தது மட்டுமல்லாமல் தந்த வர்ணனையில் நாமும் கலந்து கொண்டது போல் உள்ளது. நன்றி நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா இனியா, நான் அப்படி ஒன்றும் பெரிதாக எழுதவில்லையம்மா,,,,,,,
      ஆனால் தொடர்ந்து எல்லா நாட்களும் போக முடியல,
      நிறைய புத்தகங்கள்
      மகிழ்ச்சியாக இருந்தது,
      வருகைக்கு நன்றிம்மா

      Delete
  9. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்க SPS sir. வருகைக்கு நன்றி

      Delete
  10. கணினி வந்து இணையம் வந்து
    அறிவுத் தேடல் என்று வந்ததும்
    கூகிள் தேடுபொறியை நாடினாலும்
    தகவல் கிட்டினாலும் சான்றுக்குக் காட்ட
    அச்சுப் பதிப்பு ஆவணம் அல்லவே...
    சான்றுக்குத் தூக்கிக் காட்ட வருவது
    என்றும் அச்சுப் பதிப்பு ஆவணங்களே!

    கணினி வந்து இணையம் வந்து
    அறிவுப் பசிக்குத் துணையாக வந்தும்
    மின் நூல்களை விட அச்சு நூல்களே
    அதிகம் எமக்குத் துணை நிற்பன...
    வயிற்றுப் பசி வந்தால் கறி பெரிதல்ல
    அறிவுப் பசி வந்தால் இணையம் பெரிதல்ல
    கையில் தவழும் அச்சு நூல்கள் போதுமே!

    மனிதன் வாசிப்பதால் தானே
    முழுமை அடைகின்றான் - அதற்கு
    துணைபுரியும் புத்தகக் கண்காட்சி
    நடாத்திய நல் உள்ளங்கள்
    எல்லோருக்கும் எனது பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      நானும் இந்நிலையில் இருந்தேன், ஆனால் அங்கு சென்றபின் கூட்டத்தைப் பார்த்பின் ஆஹா வாசிப்பு இன்னும் இருக்கிறது என் மகிழ்ந்தேன்,
      தாங்கள் சொல்லும் வரிகள் உண்மையே,
      வருகைக்கு நன்றிகள்.

      Delete
  11. புத்தகத்திருவிழாவில் பங்கு கொள்வதே ஒரு சுகம்தான்.
    வாழ்த்துகள்
    கில்லர்ஜி வைகோ சார் சொன்னது என்னவென்று பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வங்க அய்யா, வணக்கம். மாற்றியுள்ளேன். வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  12. வாசிப்பு என்பது நம்மின் சுவாசமாகிப்போனதால்,,,,,,,,,,,,,,
    வெற்றிடம் போல் மனம் லேசாகி விட்டதென்று குறிப்பால் சொல்ல வர்றீங்க போலிருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீ,,,,,,, அப்பயும் இருக்கலாம், வருகைக்கு நன்றி.

      Delete
  13. தொகுத்து தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தளிர், வணக்கம். வருகைக்கு நன்றி.

      Delete
  14. புத்தகத்திருவிழா செல்வது என்றாலே தனிமகிழ்வு தான் சென்று படத்துடன் பகிர்ந்தது சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  15. புத்தக திருவிழாவின் 9 ஆம் நாள் நடப்பை பகிர்ந்தமை சிறப்பு.

    ஆமாம் நீங்க தஞ்சை அரண்மனை (சு)வாசியா?

    அந்த அம்மாதான் மாவட்ட ஆட்சியரா?

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோ,
      அந்தம்மா மாவட்ட ஆட்சியர் இல்லை, நான் அரண்மனை வாசியும் அல்ல,
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  16. வணக்கம் பேராசிரியரே !

    இனிதே நிறைவு பெற்றிருக்கும் புத்தகத் திருவிழா மிக்க மகிழ்ச்சி
    செல்லும் இடமெல்லாம் சிறப்புற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் இன்னும் இணைக்கவில்லையா ? வாக்கிட முடியவில்லையே ?

    ReplyDelete
  17. வாங்க கவிஞரே வணக்கம்,
    பாதை மறந்ததோ,
    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
    தமிழ் மணம் இன்னும் சரியாகல,
    வருகைக்கு கவிஞருக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பாதை மாறவும் இல்லை மறக்கவும் இல்லை முன்னப் பின்ன ஆனாலும் வந்திடுவோம்ல

      Delete
    2. தங்கள் மீள் வருகைக்கு நன்றி கவிஞரே,

      Delete
  18. வை கோ சாருக்கு நீங்கள் கொடுத்த
    பின்னூட்டத்தை மிகவும் இரசித்தேன்
    படம் மிகத் தெளிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வாங்க, வணக்கம். தாங்கள் ரசித்தமைக்கு நன்றிகள் பல, தங்கள் வருகைக்கும்.

    ReplyDelete
  20. தஞ்சை கீழ் வீதியில் இருக்கும் அரண்மனை சரஸ்வதி மஹாலில்
    புத்தகத் திருவிழா நடக்கிறது என்பது
    எனக்கு பேருவகை அளிக்கிறது.

    தஞ்சையில் 42 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அந்த சரஸ்வதி மஹால் புத்தக நூல் நிலையத்திலும் அந்த அரண்மனையின் ஒரு கோட்டை வாசலின் படிக்கட்டுகளில் எத்தனையோ மணிக்கணக்கான நேரங்களை படிப்பதும் விவாதத்திலும் அந்த1 970,1980,90 களி லே செலவிட்டு இருக்கிறேன்.
    அண்மையிலே கூட சதாசிவ பிரும்மேந்திரர் பற்றிய ஒரு பி. ஹெச்.டி.படிப்புக்கு ஒரு மாணவருக்கு உதவி செய்ய அங்கு ஒரு வடமொழிப் புத்தகம் தேடி உடன் எனக்குக் கிடைத்தபோதும் அதை எனக்கு உடன் எடுத்துத் தந்த அந்த நூலக உதவியாளர் செய்த உதவியும் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது.

    இன்னமும் பல மராட்டி, கிரந்தம், வடமொழி , மற்றும் மணிபிரவாள நடையிலே உள்ள தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடி நிலையிலே தான் இருக்கின்றன. அந்த பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது எனவும் கேள்விப்படுகிறேன்.

    இந்த கணினி யுகத்தில், எதை வேண்டினாலும் உடன் நமக்கு இன்டர்நெட்டில் விவரம் மட்டும் அல்ல, புத்தகமே கிடைக்கிறது.
    அப்போது, இன்னமும், அச்சிடப்படும் புத்தகங்களுக்கும் ஒரு சந்தை இருக்கிறது என்பதும் பாராட்டுக்குரியதே.

    புத்தகத் திருவிழா குறித்த தகவலுக்கு மிக்க நன்றி.

    தஞ்சை வரும்போது சரஸ்வதி மகால் செல்லவேண்டும்.
    அறிவுப் பசி உள்ளவர்க்கு எல்லாம் தஞ்சம் தந்து
    நெஞ்சு நிறைய அள்ளித்தருவது சரஸ்வதி மஹால்.

    வாழி.

    சுப்பு தாத்தா.

    வலைச்சரத்தில் தங்கள் பெயர் கண்டு இங்கு வந்தேன்.

    ReplyDelete
  21. வாருங்கள் சுப்பு தாத்தா.
    வணக்கம்.
    தாங்கள் என் தளம் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது,
    தைவிடவும் ஆனந்தத்தில் கூத்தாட தோன்றுகிறது.
    தங்கள் நினைவுகள் மீட்ட என் பதிவு எனும் போது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியே,
    தாங்கள் அவசியம் தஞ்சை வரனும், நாங்கள் சந்திக்கனும்.
    தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல.
    அன்புடன்
    மகேசுவரி.

    ReplyDelete