எனக்கு இந்த வீட்டில் இருக்கவே
பிடிக்கல, இங்க யாருக்கும்
என்னைப் பற்றிய கவலை இல்லை, இப்படியாக
புலம்புவதைக் கேட்டிருப்போம். எனக்கு இந்த ஊரே பிடிக்கல, இங்கு இருக்கும் சொந்தங்களுக்கு என்னைப் பற்றிய கவலையே இல்லை,
இப்படியும் புலம்பல் உண்டு. இது என்ன நாடு, இந்த நாடே எனக்கு பிடிக்கல, நான் இங்கிருந்து போகிறேன், என்னைப் பற்றிய கவலை யாருக்கு இருக்கு. இது போன்ற புலம்பல்களை நாம்
கேட்டிருப்போம். இது இப்ப மட்டும் இல்லங்க. அன்றும், தலைவி ஒருத்தி இப்படித் தான் புலம்பி
இருக்கிறாள். எனக்கு இந்த ஊரு பிடிக்கல, இங்கு இருப்பவர்கள் யாரையும் பிடிக்கல, சங்க இலக்கிய தலைவியின் புலம்பல்
தான்.
அந்தப் பாடலைப் பார்ப்போமா?
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரோ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே
கொல்லனழிசியார் ஆசிரியர்
பாடல் 145
குறுந்தொகை
இந்த தூங்குமூஞ்சி மக்களைப் பார், என் கவலை அறியாது நன்றாக உறங்கும் ,இவர்கள் இருக்கும் இந்த
ஊர் நான் வாழ்வதற்கு தகுதியற்ற ஊராக போனது என்று தன் தோழியிடம் புலம்புகிறாள்.
தலைவன் இல்லாத ஊர், தலைவிக்கு, உறைவதற்கு உரிய ஊராகத்
தோன்றவில்லை. தலைவியின் இவ்வுணர்வு "புலம்பித் தோன்றல்" எனப்படும்.
இவ்வூர் கடல்
பகுதியைச் சார்ந்தது. அதாவது சிறுகுடி. தலைவன் பொருள் தேட சென்றுவிட்டான். திரும்பி வர வேண்டிய காலம் கடந்து விட்டது. அதனால் தலைவிக்கு, இரவுப்பொழுது நீண்டுக்கொண்டே செல்கிறது. முன்பு இன்பத்தைத் தந்த, துறையும்
கானலும் மக்களும் தலைவன் பிரிந்த பின் தனக்குத் துன்பம் செய்தலால், இவ்வூர் உறைபதி
அன்று எனச் சினந்து கூறுகிறாள். இவ்வூர் பிறர் துன்பம் கண்டு வருந்தும் அருள்
உள்ளம் இல்லாதவர்களைக் கொண்டது. தலைவியின் துன்பம் குறித்து கேட்காமல் நல்ல உறங்குதலும்
செய்தலால் தலைவியின் வெறுப்புக்கு உள்ளாயிற்று.
கானல் அம் சேர்ப்பன் – கடற்கரைச் சோலையையுடைய சேர்ப்பனது
கொடுமை எற்றி – கொடுமையை நினைந்து
ஆனா துயரமொடு – மிகுகின்ற துன்பத்தோடு
வருந்தி – துயரமுற்று
பானாள் – நடுயாமத்தில்
துஞ்சாது உறைநரொடு – துயிலாமல் தங்குவாரை
உசாவா – ஏனென்று வினவாத
துயிற்கண் மாக்களொடு – துயிலுதல் பொருந்திய கண்களையுடைய
அறிவற்ற மாக்களோடு
நெட்டிரா வுடைத்தே – நெடிய இரவை உடையது
ஆதலின்
உறைபதி யன்றி - இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.
என்ன, அந்த தலைவி சொல்வது சரி தானே, பதில் சொல்லிட்டுப் போங்க.
வணக்கம்
ReplyDeleteகோலம் படமும் பாடலுக்கான விளக்கமும் அரும்பத விளக்கமும் நன்று
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றிகள் பல
Deleteஅப்படி கவலைப்படாமல் இருந்தால் தலைவி கூற்று சரியே! அடுத்தவர் நிலை கண்டு இரங்கும் விஷயத்தில் நம் தமிழகம் அப்படி இல்லை என்று சமீபத்திய வெள்ளம் சொல்லுமே...!
ReplyDeleteஇது காதலின் வெளிப்பாடு ஸ்ரீ
Deleteவருகைக்கு நன்றிகள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteநன்றி சகோ
Deleteகோலம் அழகு! பாடலும் விளக்கமும் அருமை. கூற்று சரிதான்...அப்படி யாரும் இல்லை என்றால். ஆனால் நம் ஊர் அப்படி எல்லாம் இல்லையே..தலைவி எந்த ஊரைச் சொல்லுகின்றாளோ?!!! சென்னையும் கடற்கரை ஊர்தான்...எப்படி உதவினார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
ReplyDeleteநம் ஊர் அப்படியில்லை தான்.
Deleteவருகைக்கு நன்றி சகோ,
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசங்கப்படாலை விளக்கத்துடன் சொன்னதால் அர்த்தம் புரிந்தது.
தங்களும் சகோ,
Deleteவருகைக்கு நன்றி.
தான் உறங்காவிட்டால் யாரும் உறங்கக் கூடாது என்பது என்ன நியாயம். பாடலின் கருத்து உடன்பாடில்லை. அவள் ஒரு செல்ஃப் செண்டர்ட் பெண்மணி. ஆனால் பாடலின் விளக்கம் அருமை கோலமும் அருமை. .
ReplyDeleteகாதலில் எங்கே பொதுநலம் இருக்கு ஐயா
Deleteவருகைக்கு நன்றி ஐயா
அழகிய விளக்கம் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயோ ஐயோ நான் கூட உச்சா குஜேந்தரைப்பற்றி எழுதுகின்றீர்களோ என்று நினைத்து விட்டேன்
அப்படியெல்லாம் நினைக்காதீர்,,,
Deleteவருகைக்கு நன்றி சகோ
அதுக்குள்ளே அலுத்திருமா? அக்கரையில் நின்று இக்கரை பார்த்தலின் வெளிப்பாடே இந்த புலம்பல்!
ReplyDeleteகோலம் அசத்தல்.
உங்களுக்கும் எங்களனைவரின் புதிய வருட நல் வாழ்த்துகள்.
நன்று நன்று,
Deleteவருகைக்கு நன்றி சகோ,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்க நலம்..
நன்றிகள்.
Deleteபேராசிரியரே,
ReplyDeleteஇந்த சங்க இலக்கிய தலைவியின் பாடல் மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு உண்மை, நமக்கு மட்டும் இந்த கஷ்டங்கள், துன்பங்கள் இல்லை, உலகில் நிறைய பேருக்கு உண்டு.
அதேபோல உனக்கும் கீழே உள்ளவர்கொடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்பதும்.
நாலு பேருக்கு பாடம் புகட்டும் நல்ல பதிவு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கோ
நாலு பேருக்கு பாடம் புகட்டும் நல்ல பதிவு.
Deleteநாலு பேர் தானா?
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் அரசே
உள்ளவர்கோடி,
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் அரசே
Deleteபேராசிரியர்க்கு வணக்கம்.
ReplyDeleteகோலப்பாட்டு அருமை.
புத்தாண்டு வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா,
ReplyDeleteகோலப்பாட்டா???
வருகைக்கு நன்றிகள் ஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!
ReplyDeleteநன்றிமா
Deleteபுலம்பவேண்டிய நேரத்தில் புலம்பியும் ஆக வேண்டும் போலிருக்கிறது.. புலம்பலை தோழியிடம் கொட்டியதால்.தலைவி மன அழுத்தத்திலிருந்து தப்பித்து விட்டார். நண்பரே......
ReplyDelete"புலம்பித் தோன்றல்" பற்றி நன்றாகப் புலம்பி விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteமுதலில் வரைந்து காட்டியுள்ள கோலம் அழகாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுகள்.