Tuesday 21 July 2015

உடல் விட்டு உயிர் போகும்,,,,,,,,,,,,,,,



உடல் விட்டு உயிர் போகும்,,,,,,,,,,,,,,,
sad girl க்கான பட முடிவு

       உடல் மட்டும் தான், உயிர் போகும் உன் நினைவால்,

   அன்பானவர்களின் பேச்சு நின்றால் வெறும் உடல் தான்,,,, உயிர் இல்லை தானே,,,,,,,,,,

என்னது இது பேச்சு மூச்சு என்று பினாத்தல்,

ஆஹா எனக்கு இந்த காதல் வார்த்தைகள் எல்லாம் இப்ப சரியா வரல போல் இருக்கு,

அது ஒன்றும் இல்லை, மைடியர்,

ச்சே,,, மையீற்றுப் புணர்ச்சி சொல்ல வந்தேன்,  அதான் இந்த உளரல், 

அது சரி, 

அதில் உளராமல் சொன்னால் சரி,

        ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்

       ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்

       தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்

       இன மிகல் இனைய உம்பண்பின் கு இயல்பு ஏ


                  1.ஈறுபோதல்


                  2.இடை உ கரம் இ கரம் ஆதல்


                  3.ஆதி நீடல்


                  4.அடி அ கரம் ஐ ஆதல்


                  5.தன் ஒற்று இரட்டல்


                  6.முன் நின்ற மெய் திரிதல்


                  7.இனமிகல்

  இதாங்க இந்த பாட்டில் இருப்பது,

சரி இனைய என்று ஒன்று இருக்கிறதே என்கிறீர்களா?

அதனைப் பின் சொல்கிறேன்,

  இரண்டு விதி இருக்குங்க,

1. உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும்


   நிலைமொழியில் உயிர்மெய் (உகரம்) வந்து, வருமொழியில் உயிர் வந்தால் உகரம் மெய்யை மட்டும் விட்டு ஓடிவிடும்.
 இதைப்பாருங்கள்,
      வண்டினம்
      வண்டு+இனம்
      டு வில் உள்ள ட்+உ இதில் உகரம் போய்,
      வண்ட்+இனம்
என ஆகும்.
பின்

2. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

    நிலைமொழியில் மெய் இருந்தால், வருமொழியில் உள்ள உயிர் வந்து அதனுள் தங்கும்.
வண்ட்+இனம்
வண்டினம்
எனவாயிற்று,

சரி இப்போ மையீற்றுப்பண்புப் பெயர் புணர்ச்சி பார்ப்போம்,

அதன் நன்னூல் விதி,

           செம்மை சிறுமை சேய்மை தீமை
           வெம்மை துமை மென்மை மேன்மை
           திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
           இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ

 1.ஈறுபோதல்

    ஈற்று எழுத்து போதல், அதாவது இரு சொற்களாக பகுக்கும் போது, நிலைமொழியின் இறுதி எழுத்து போதல்,
                    முதுமரம்

                   முதுமை+மரம்
ஈறுபோதல் எனும் விதிப்படி மை விகுதி போனது,
                    முது+மரம்
முதுமரம் என புணர்ந்தது.
2.இடை உ கரம் இ கரம் ஆதல்
                     கரியன்
                    கருமை+ அன்
 இதில்
ஈறுபோதல் படி மை விகுதி போகும்,
                      கரு+அன்
என்றாகி,,,,
(நாம் நிலைமொழியில் உயிர்மெய் எழுத்து உள்ளது, வருமொழியில் உயிர் உள்ளது, எனவே, உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் என்றும்,
பின்னது, உடல் மேல் உயிர் வந்து ஒன்றும் என்றால், கரு+அன்= கர்+அன்= கரன் என்று தான் வரும்.)

 எனவே அவ்விதி விடுத்து, இடையில் உள்ள உ கரம் இ கரமாதல்,,,, 

எனும் விதிக்கொண்டு,
இடை உ கரம் இ ஆதல் எனும் விதிப்படி 
                 கரு+அன் (ரு=ர்+உ, ரி=ர்+இ)
                         கரியன் 

எனப்புணர்ந்தது.
.3.ஆதி நீடல்
ஆதிநீடல்- ஆதி எழுத்து,முதல் எழுத்த நீண்டு வருதல்,

                           மூதூர்
                      முதுமை + ஊர்
ஈறுபோதல் படி மை போகும்,
                          முது + ஊர்

என்றும்,
உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் எனும் விதிப்படி
                            முத் + ஊர்
என்று,
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் எனும் விதிப்படி
                               முதூர்
என்று,
ஆதி நீடல் எனும் விதிப்படி
முதல் எழுத்து மு-மூ என,
                                 மூதூர் 

என புணர்ந்தது.
4.அடி அ கரம் ஐ ஆதல்

முதல் எழுத்து அதாவது அடி எழுத்து அ கரம் ஐ ஆகுதல் 
                        பைங்கொடி
                       பசுமை + கொடி
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                       பசு + கொடி
                       சு கெட்டு
                       ப + கொடி
என்றாகி,

இனமிகல் எனும் விதிப்படி ங் தோன்றி

                        பங் + கொடி
என்றாகி,
அடி அ கரம் ஐ ஆதல் எனும் விதிப்படி ப (ப்+அ = ப்+ஐ=பை)

                         பைங்கொடி
எனப் புணர்ந்தது.


 5.தன் ஒற்று இரட்டல்
தன் ஒற்று எழுத்தே இரண்டுமுறை வருதல்,
                       வெற்றிலை
                       வெறுமை+இலை
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                        வெறு + இலை
உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும் எனும் விதிப்படி
                      வெற் + இலை
தன் ஒற்று இரட்டல் எனும் விதிப்படி
                   வெற்ற் + இலை
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் எனும் விதிப்படி
                      வெற்றிலை
எனப்புணர்ந்தது.
6.முன் நின்ற மெய் திரிதல்
 முன் உள்ள மெய் எழுத்து திரிதல்,
                    செந்தமிழ்
                 செம்மை + தமிழ்
ஈறுபோதல் எனும் விதிப்படி மை போகும்,
                   செம் + தமிழ்
முன் நின்ற மெய் திரிதல் எனும் விதிப்படி 
                    செந்தமிழ் ( ம் ந்) 

எனப்புணர்ந்தது.
7.இனமிகல்
 இன எழுத்து தோன்றுதல்,
                            பூங்கொடி
                            பூ+ கொடி
 பூப் பெயர் முன் இனமென்மையும் தோன்றும் எனும் விதிப்படி
                             பூங்கொடி 
எனப்புணர்ந்தது,

சரி

 அந்த இனையவும் என்னாச்சு என்று தானே, அது தான் இனையவும்,  விதிகளை இனைக்க,

இது பற்றி,

அதாவது பண்புத்தொகையில் இரு வேறு கருத்துக்கள் இருக்கிறது,

 இனையவும் என்ற விதப்புக் கிளவி வேண்டியன விளைவிக்கும்,

இதற்கு இன்னும் வேறு பெயர்களும் உண்டு,
 
அடுத்து,

நான் இவ்வளவு நேரம் சொன்னேன் இல்லையா?

அதைப் பொறுமையா கேட்ட உங்களுக்கு இது,

                  பைந்தமிழ்

இதனை எவ்வாறு பிரித்து எழுதி விதி செய்வீர்? 

                                            தொடரும்,,,,,,,,,,,,,
                       
                    மலர்கள் க்கான பட முடிவு


60 comments:

  1. Replies
    1. வாருங்கள் சகோ,
      அதெப்படி நான் பதிவிட்டு அடுத்த நிமிடம் தங்கள் வருகை, ஊர் பயணம் எப்படி இருக்கு, வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  2. பைம்மை + தமிழ் = பசுமை + தமிழ் = பைந்தமிழ்

    அடியகரம் ஐ ஆதல்

    சரியான விளக்கத்தை காண காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி சார் ஏன்??????????????
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  3. நான் திடுக்கிட்டுப் போனேன்...
    பள்ளிக்கு வருகின்றவர்களுக்கு - இப்படிப் பயமூட்டலாமா!..

    இன்றைக்கு ஆடிச் செவ்வாய்!..
    அம்பாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்..
    மனதில் தைரியம் பிறக்கும்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      தலைப்பா,,,,,,,
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டேன்.
      நன்றி.

      Delete
  4. இப்போதெல்லாம் வலைத் தளங்களில்தமிழின் குரலே ஓங்கி உரைக்கப் படுகிறது நாம் பேசும் எழுதும் தமிழில் இவை எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது. மொழிக்குப்பின் இலக்கணமா , இலக்கணத்துக்குப் பின் மொழியா.?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,
      தெரிந்ததை பகிர்ந்து போகனும் என்பதால்,
      நான் படித்ததில் இருந்து
      இலக்கியம் கண்டதற்கோர் இலக்கணம் இயம்பல் என்று,,,,
      எல்லோருக்கும் தெரிந்தவையே,
      இப்போதெல்லாம் வலைத் தளங்களில்தமிழின் குரலே ஓங்கி உரைக்கப் படுகிறது என்ற தங்கள் குரல் கேட்டு மகிழ்ச்சியே,
      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அய்யா.

      Delete
  5. உண.மையைச் சொல்கிறேன். கோபம் கொள்ளாதீர்கள்... எனக்கு தலைசுத்துகிறது... பலதடவை படித்தும் ......????

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே,
      பார்த்து கீழே விழுந்து விடாதீர்கள்,,,,, நல்லவேளை அடுத்து சொன்னீர்கள்,,,,,,,,,, நான் வேறு ஏதோ என்று நினைத்து,,,,,,,
      வருகைக்கு நன்றி.

      Delete
  6. வணக்கம் பேராசிரியரே!

    நான் கருத்திடலாமா? :)

    ReplyDelete
  7. வணக்கம் என் ஆசானே,
    தங்கள் கேள்வி எனக்கு விளங்கவில்லை,
    இதன் விளக்கம் தங்களைச் சார்ந்தது என்பதால் நான் விளக்கவில்லை, விரும்பவில்லை,,,,
    தாங்கள் தான் சொல்லனும் என்று பதிவிலே சொல்லியிருப்பேன், ஆனால் தாங்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்ற பயம், எனவே தாங்கள் கொடுத்த விளக்கத்தை தாங்களே நிறைவு செய்யுங்கள், இது உங்கள் இடம்,
    கற்றுக்கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்,,,,,
    தவறாக நினைக்க வேண்டாம்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      மீண்டும் என் வகுப்பறைகளின் நினைவு வந்தது அதுதான் கேட்டேன்.

      நீங்கள் பாட்டுக்கு என்னை வடவாற்றில் தூக்கிப் போட்டுவிட்டால்..?

      உங்கள் கல்லூரியின் பின் ஓடிக்கொண்டிருக்கும் நதி அல்லவா? :)

      எனக்கோ நீச்சலும் தெரியாது.

      பண்புப் பெயர் புணர்ச்சியும்.

      அதனால் சில சந்தேகங்கள் மட்டும் தான் கேட்கிறேன்.

      தொகைச் சொற்களைப் பிரிக்கக் கூடாது என விதி சொல்கிறது தொல்காப்பியம்.

      1) இங்கு நன்னூல் சொல்வது போல் பண்புத் தொகைகளை, நிலைமொழி வருமொழி எனப் பிரித்துப் புணர்ச்சி விதி சுட்டுதல் சரியானதா?

      2) ““““““மையீற்றுப் புணர்ச்சி சொல்ல வந்தேன், ““““““““““ என நீங்கள் பண்புத் தொகைப் புணர்ச்சியைச் சொல்வதாக இருந்தால்

      ‘வட்டப்பலகை’ என்பது பண்புத் தொகைதானே?

      இதை மை விகுதி கொண்ட நிலைமொழியாய் எப்படிப் பிரிக்க முடியும்..?

      3) தீந்தமிழ் என்பதை இவ்விதிப்படிப் பிரித்தால், தீமை + தமிழ் என்று ஆகிவிடாதா? அது தவறான பகுப்பல்லவா?

      4) நீங்கள் சொன்ன ஈறு போதல் விதிப்படி, இந்தப் பைந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்துக் காட்டுபவர்களுக்கு என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன். இது வெறும்பேச்சல்ல.

      ( என் மாணவர்களிடம் இது போல் சவால்விட்டு நிறைய இழந்திருக்கிறேன் என்றாலும், அதனால் நான் பெற்ற அறிவின் மதிப்பு, நான் இழந்தவற்றைவிட அதிகமானது.)

      4) பைந்தமிழ் என்ற சொல்லின் பிரிப்பு, பை + தமிழ்.

      ( இதனால் எனக்குத் தமிழில் முட்டை மதிப்பெண் கிடைத்தாலும் பரவாயில்லை )

      விடைகளுக்குக் காத்திருக்கிறேன். கேள்வியைத் திருப்பிவிட்டு விடாதீர்கள்.

      நன்றி.

      Delete
    2. என் ஆசானுக்கு வணக்கம்,

      தங்கள் வருகைக்கும் விளக்கத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      தங்கள் வகுப்பறை நினைவுகளை எழுப்பியது என்ன பதிவு என்றால் மகிழ்ச்சியே,

      ஆசானே தங்கள் ஒன்று செய்யுங்கள் எனக்கு கொஞ்சம் தாள் (A 4 Sheet) வாங்கிக் கொடுத்துவிடுங்கள், காரணம் தங்கள் வினாக்களுக்கு விடையளிக்க நான் வினாக்களை என் பதிவில் இருந்து நகல் எடுத்துக் கொண்டு அமர்ந்து எழுத வேண்டியுள்ளது.

      அய்யா தொகைச்சொற்களை பிரித்தல் கூடாது என்றும் சொல்லும் தொல்காப்பியன் கூற்றே சரி,

      காரணம்

      வட்டப்பலகை

      மையீற்று புணர்ச்சியில் இயலாது,


      தீந்தமிழ்

      தீம்+தமிழ்

      தீம் இனிமை, அமுது என்று பொருள்.


      எனவே தீம்+தமிழ் சரியான வடிவம்,

      பைந்தமிழ் ம் அவ்வறே

      பை + தமிழ்

      தான்
      பை என்றாலே பசுமை

      ஆனால் நம் பாடநுல்கள் சொல்வது தவறு என்று இப்போ உறுதியாக சொல்ல முடிகிறது,

      இதனை ஏற்பது யார்
      பசுமை+தமிழ்

      என்று தான் வகுப்பறைகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

      அது தவறு

      இதனை இவ்வாறு நாம் பாடநூல் கேள்விக்கு பதிறுத்தோமானால் தாங்கள் சொன்ன முட்டை மார்க்தான்,,,,,,

      பைந்தமிழ்
      பசுமை+தமிழ் என்று பிரிக்க கூடாது என்பதை தாங்கள் சொன்ன வகையிலும் நான் சரிபடுத்திக்கொண்ட தன்மையிலும் உறுதியாக சொல்ல முடியும்.


      ஒன்றன் புணர்ச்சி இருவடிவாதல் இல்லை
      பசுமை+ தமிழ் என்பதன் புணர்ச்சி வடிவம்
      பசுந்தமிழ்.
      பை என்றாலே பசுமை
      அகராதி தரும் பொருள்
      அப்ப என் வங்கி கணக்கு என் தருகிறேன் ஆயிரம் ரூபாய் எனக்கே தான்.,,,,,,,,,,,,,,,,,

      தாங்கள் தங்கள் ஒரு பதிவில் நான்கு வரியில் சிலப்பதிகாரம் - அதில் உருபுகளுக்கு ஒரு பாடல்

      “ காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி
      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      இந்த பாடலை நான் ஒரு மாணவனுக்கு சொல்லி கொடுத்து அவன் அதனை பதிலாக எழுதினான் என்றால் அவனுக்கு மதிப்பெண் வழங்கப்படுமா??????????????

      அவ்வாறு தான் இதுவும்,

      மாற்றம் காண வேண்டிய பாடநூல்கள் மாறனும்,

      நன்னூல் விதிகளைக் மட்டும் சொல்லும் இவை தரும் தவறுகள் இது,

      இலக்கண நூல்களில் புணர்ச்சி பற்றி மாறுபாடான கருத்துகளைச் சொல்வது வீரசோழியம்.

      தொல்காப்பியத்தில் இல்லாத புணர்ச்சி இலக்கணங்கள் வீரசோழியத்தில் உள்ளது,

      ஒன்றன் புணர்ச்சி இருவடிவாதல் இல்லை

      அய்யா தாங்கள் சொன்ன விளக்கத்தைக்கொண்டு, என் கருத்தையும் சொல்லிப்போகிறேன்,

      தாங்கள் தான் இன்னும் விளக்க வேண்டும்.
      கேள்வியைத் திருப்பிவிட்டேன்,

      தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதற்கும் பதில் அளியுங்கள், பதிலுக்காய்,,,,

      நன்றிகள்.

      Delete
    3. ““““அப்ப என் வங்கி கணக்கு என் தருகிறேன் ஆயிரம் ரூபாய் எனக்கே தான்.,,“““““

      அதெப்படி..?

      என் கேள்வி,

      நீங்கள் சொன்ன ஈறு போதல் விதிப்படி, இந்தப் பைந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்துக் காட்டுபவர்களுக்கு என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன். ““““
      என்பதுதானே?

      நீங்கள் எங்கே இந்த விதிப்படிப் பிரித்துக் காட்டினீர்கள்?

      இந்த விதி இங்கு எப்படிப் பொருந்தும் ? :)

      ம்ம்.

      ஆயிரம் ரூபாய் அப்படியே இருக்கிறது.

      நன்றி.

      Delete
    4. வணக்கம் என் ஆசானே,

      இப்படி தான்

      பைந்தமிழ்

      பசுமை+தமிழ்

      ஈறுபோதல் படி

      பசு+தமிழ்

      இனையவும் படி

      சு கெட்டு

      ப+தமிழ்

      அடி கரம் ஐ ஆதல் படி

      பை+தமிழ்

      இனமிகல் படி

      பைந்தமிழ்

      என்றானது
      .
      இனயவும் என்பது விதியல்ல, விதப்பு கிளவி, அதாவது வேண்டியன விளைக்கும்,
      வேண்டிய இடத்தில் சேர்க்க,,,

      தாங்கள் சொன்னது போல்
      ஒன்றன் புணர்ச்சி இருவடிவாதல் இல்லை,

      தாங்கள் சொன்னது,

      நன்றி
      இதில் இன்னமும் இருக்கு,,,,

      Delete
    5. வணக்கம்.

      இனையவும் என்பது விதப்புக் கிளவி.

      அது வேண்டியன விளைக்கும்.

      ஆனால் அப்படி விளைக்க எங்கேனும் விதி இருக்க வேண்டும்.

      விதியன்றி வேண்டியது விளைக்கும் என்று கொண்டால்,

      எல்லாப் புணர்ச்சிக்கும் இந்த இனையவும் என்ற ஒற்றைவிதி போதும்.

      இங்கு இனையவும் என்னும் இலேசு, மிகை, அல்லது நீங்கள் சொன்னது போன்ற விதப்பு,

      இது போன்ற இன்ன பிற விதிகளும் என்று பொருள் கொள்ளவே வந்தது.

      சரி,

      இனி,

      சு என்னும் எழுத்து எந்த விதிப்படிக் கெட்டது என்பதற்கு விதி கூறுங்கள்.

      அந்த ஆயிரம் உங்களுக்குத் தான்.

      நன்றி.

      Delete
    6. வணக்கம் என் ஆசானே,
      தவிர்க்க முடியா சில பணியின் காரணமமாக தங்களுக்கு உடன் பதில் இறுக்க இயலாமல் போனது குறித்து முதலில் என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்,

      தங்களின் தொடர் பதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,

      நன்றிகள் பல,

      சரி தங்கள் கேள்விக்கு வருகிறேன்,

      சு என்னும் எழுத்து எந்த விதிப்படிக் கெட்டது என்பதற்கு விதி கூறுங்கள்......
      இடையுகரம் சகரத்தோடு கெட்டு வருமெழுத்திற்கு இனம் மிகுந்து,,,,,,,,,,,,,

      இடையுகரம் சகரத்தோடு கெட்டு,,,,,,,,,,,
      நன்னூல் - விருத்தியுரை,,,சோம இளவரசு பதிப்பாசிரியர்)

      மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்

      தொல் - மொழிமரபு 13)

      ஆசானே எனக்கு தெரிந்ததைச் சொல்லிப்போனேன்,,

      தாங்கள் கற்றுத்தருபதைக் கற்க காத்திருக்கிறேன்,

      நன்றி.

      Delete

    7. மதிப்பிற்குரிய சோம. இளவரசு அவர்கள்,

      “இடையுகரம் சகரத்தோடு கெட்டு வருமெழுத்திற்கு இனம் மிகுந்து,,,,,,,,,,,,,

      இடையுகரம் சகரத்தோடு கெட்டு,,,,,,,,,,,““““

      என்பதை நன்னூலின் எந்த விதியின் அடிப்படையில் சொல்கிறார் என்பதைத்தான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

      இதைப் பதிப்பாசிரியர் பிறர் மதம்மேற் கொண்டுரை செய்திருந்தாலென்றால் அந்நூற்பாவை அறியத் தந்தால்
      இப்பொதே 1000 அனுப்பி விடுகிறேன்.

      நன்றி

      Delete
    8. வணக்கம்,
      இந்நூல் தங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன், இல்லையேல் காப்பி செய்து இதில் அனுப்புகிறேன்,,,,,

      இதைப் பதிப்பாசிரியர் பிறர் மதம்மேற் கொண்டுரை செய்திருந்தாலென்றால் அந்நூற்பாவை அறியத் தந்தால் //-

      தங்களின் வினா இது தான் என்னால் அவதானிக்கயிலவில்லை,,,,,,,,,,,

      நன்றி ஆசானே,,,,,,

      Delete
    9. வணக்கம் பேராசிரியரே..!

      என் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ!

      நான் சோம இளவரசு சொல்கிறாரா மயிலை நாதர் சொல்கிறாரா சங்கநமச்சிவாயர் சொல்கிறாரா என்று கேட்கவில்லை.

      இதை யார் சொல்லியிருந்தாலும், அவர்கள் எந்த நூற்பாவின் அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் என் கேள்வி.

      மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் என்னும் நூற்பா தனிமெய்களை நாம் சொல்லும் வழக்காறு குறிப்பது.

      அது இவண் சுட்டப்பெற்றதன் காரணம் விளங்கவில்லை.

      நான் கேட்க வருவது,

      சோம இளவரசு கூறியிருந்தாலும்,

      “தனிக்குறில் முன்னொற்று உயி்ர்வரின் இரட்டும்“

      என்பதைப் போலும்,

      “ உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் “

      என்பதைப் போலும்,

      “ உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே“

      என்பதைப் போலும்,

      இந்த சுகரம் கெடுகிறது என்பதற்கு உரிய விதிகளாக இலக்கண நூல்கள் குறிப்பிடுவனற்றையே!

      மீண்டும், இது பற்றி நன்னூலோ அல்லது அதற்கு முந்நூலோ அல்லது தொல்காப்பியமோ இது பற்றிக் கூறிய விதிகள் இருப்பின் அறியத் தாருங்கள்.

      அன்றி, உரையாசிரியர் குறிப்புகளையோ பதிப்பாசிரியர் குறிப்புகளையோ அன்று.

      எனக்குத் தேவை,

      இதற்கான ஒற்றைச் சூத்திரம்.

      நூலோ நகலோ அல்ல.

      1000 ரூபாயுடன் காத்திருக்கிறேன்.:)

      நன்றி.

      Delete
    10. வணக்கம் என் ஆசானே,
      தங்கள் கேள்விக்கும் என் பதிலுக்குமான இடைவெளி அதிகம் தான்,,,,,,,,

      அன்றி, உரையாசிரியர் குறிப்புகளையோ பதிப்பாசிரியர் குறிப்புகளையோ அன்று.

      எனக்குத் தேவை,

      இதற்கான ஒற்றைச் சூத்திரம்.

      நூலோ நகலோ அல்ல.

      கொஞ்சம் கடுமைத் தெரிகிறது, அடிவாங்கியது இல்லை,,,,

      இது பற்றி நன்னூலோ அல்லது அதற்கு முந்நூலோ அல்லது தொல்காப்பியமோ இது பற்றிக் கூறிய விதிகள் இருப்பின் அறியத் தாருங்கள்.

      அந்த ஒற்றைச் சூத்திரம்,,,,, ம்ம்,,,,,,,,

      அய்யா உயிரிற்றுப்புணர்ச்சியில் நூற்பா எண் 199 ல்

      ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,
      முன்னதின் முன்னல ஓட உயிர்வரின்
      ,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,,


      நிலை மொழி முதலெழத்து ஒன்று நிற்க அல்லன எல்லாம் கெட, இது மட்டும் கொண்டு, ச காரம் உ கரத்துடன் கெட்டு என்று சொல்லிப்போனதாக ,,,,,,,,,,

      தாங்கள் தான் சொல்லனும். சரியா என்று, மீண்டும வருகிறேன்,
      நன்றி.



      Delete
    11. வணக்கம் பேராசிரியரே!

      கடுமை என்றும் இல்லை.

      என் பின்னூட்டம் புரிந்து கொள்ளப்படாமல் போயிற்றோ என்ற எண்ணத்தில் சொன்னது அது.

      நிற்க,

      நான் மீண்டும் என் கேள்விக்கான சிக்கலுக்கு வந்துவிடுகிறேன்.

      இது,

      பசுமை + தமிழ்

      என்பதில் ஈறுபோதல் விதிப்படி, மை என்னும் எழுத்துக் கெட்டு, அதனை அடுத்து நிலைமொழியில் நிற்கும் சு என்னும் எழுத்து, இனையவும் என்ற விதப்பான் கெடுமிடத்து அது எந்த விதியின் அடிப்படையில் கெடுகிறது என்பது.

      சரிதானே?

      நீங்கள் காட்டிய நன்னூற் சூத்திரம் எண்ணுப்பெயர் புணர்ச்சிக்கானது.

      “ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்
      முன்னதின் முன்னல வோட வுயிர்வரின்
      வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.“

      என்பது இதன் முழுவடிவம்.



      “ஒன்று முதல் பத்துவரையுள்ள எண்களில் ஒன்பது என்ற எண்ணைத் தவிர்த்த ஏனைய ஒன்பது எண்களும் ( 1,2,3,4,5,6,7,8,10 ) தம்மோடு தாம் வரும்போது ( ஒன்று + ஒன்று, இரண்டு + இரண்டு, மூன்று + மூன்று ....என ) நிலைமொழியின் முதல் எழுத்து மட்டுமே நிற்க, மற்றவை கெடும் ( ஒ + ஒன்று , இ + இரண்டு, மூ + மூன்று......என )

      நிலைமொழியில் முதல் எழுத்து, உயிர் எழுத்தாக அமைந்தால் ( ஒ + , இ + என்னுமாறு....) அங்கு வகரமெய் தோன்றிப் ( ஒ + வ் + ஒன்று, இ + வ் + இரண்டு ....என்னுமாறு) புணரும்.

      உயிரல்லாத மெய்யெழுத்து வந்தால் அம்மெய்யே மீண்டும் தோன்றிப் புணரும். ( மு + ம் + மூன்று, ப + ப் + பத்து .......என )

      நெறி என்ற மிகையால் , நான்கு + நான்கு என்னும் எண்ணுப்பெயர் புணர்ச்சியில் நா என்பதன் முதல் குறுகி, நந்நான்கு என்றும், ஐ + ஐந்து என்னும் போது, இடையே வகர மெய்க்குப் பதில், யகர உடம்படுமெய் தோன்றி ஐயைந்து என்றும் வருவனவும் கொள்ளப்படும் என்பர் உரையாசிரியர்.“

      இதுவே நானறிந்தவரை இந்தச் சூத்திரத்தன் பொருள்,!

      இது எண்ணுப்பெயர் அல்லது அளவுப் பெயர் புணர்ச்சியை விளக்கும் சூத்திரமேயன்றிப் பண்புப்பெயர்களுக்கு ஆனதன்று.

      அன்றியும்,

      உடல்மேல் உயிர் வரல், தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டல், உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடல் என்பனபோல் இந்தச் சூத்திரம் ஒரு பொதுச்சூத்திரமும் அன்று.

      எனவே, நீங்கள் காட்டியது போன்று, பைந்தமிழை பசுமை + தமிழ் எனப்பிரித்தலின் போது, மை எனும் எழுத்து ஈறுபோதல் விதிப்படிக் கெடுகிறது.

      ஆனால்,

      நீங்கள் காட்டியுள்ள இவ்விதி எண்ணுப்பெயர் புணர்ச்சிக்கான சிறப்பு விதி என்பதால் அதனை இங்குப்பண்புப்பெயராக வரும் பசு + தமிழ் என்பதில் சு என்னும் எழுத்தை நீக்குதற்கு விதப்பான் கொள்ளும் பொதுவிதிக்குப் பொருத்தமாகக் கொள்ள முடியாது என்பது எனது கருத்து.

      மாற்றுக் கருத்திருப்பின் அறியத்தாருங்கள்.

      தங்களது தேடலில் நானும் கற்கிறேன்.

      நன்றி.

      Delete
    12. வாருங்கள் வணக்கம் என் ஆசானே,
      தங்களின் அறி வினாவிற்கு என் பதில் அறியா வினா ஆகிவிடுமோ??????
      ம்ம்,,,,,,
      முடியாது,,,
      வருகிறேன், நன்றி.

      Delete
    13. வணக்கம் என் ஆசானே,

      அந்த ஓற்றைச் சூத்திரத்தை அறியத் தாருங்கள்,

      ஆயிரம் தோற்றேன்,

      நன்றி.

      Delete
    14. வணக்கம் என் ஆசானே,

      இச்சூத்திரமாய் இருக்கும் என,,,,,,,,

      உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
      குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
      உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
      ஐம்பா லறியும் பண்புதொரு மொழியும்
      செய்யும் செய்த என்னும் கிளவியின்
      மெய்ஒருங் கியலும் தொழில்தொரு பொழியும்
      தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம்
      எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்
      அன்னவை எல்லாம் மருவின் பாத்திய
      புணரியல் நிலையிடை உணரத் தோன்றா
      ( 482 தொல்காப்பியம்)

      Delete
    15. உயிர் எழுத்து இறுதியாயும் புள்ளி எழுத்து இறுதியாயும் குறிப்பின்கண்ணும் பண்பின் கண்ணும் இசையின் கண்ணும் தோன்றிப் பெயரினும் வினையுனும் நிலைத்தடுமாறியும் ,,,,,,,,,,,,,,,,

      Delete
    16. வணக்கம் என் ஆசானே,

      இச்சூத்திரமாய் இருக்கும் என,,,,,,,,

      உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
      குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
      உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
      ஐம்பா லறியும் பண்புதொரு மொழியும்
      செய்யும் செய்த என்னும் கிளவியின்
      மெய்ஒருங் கியலும் தொழில்தொரு பொழியும்
      தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம்
      எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்
      அன்னவை எல்லாம் மருவின் பாத்திய
      புணரியல் நிலையிடை உணரத் தோன்றா
      ( 482 தொல்காப்பியம்)

      Delete
  8. வகுப்பறைக்கு வந்து விட்டேன் சகோ....நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      நன்றிங்க,,,,,,,,,

      Delete
  9. # பூப் பெயர் முன் இனமென்மையும் தோன்றும் எனும் விதிப்படிபூங்கொடி # மென்மையை உணர முடிகிறது :)

    ReplyDelete
    Replies
    1. பகவானே,,,,, இதிலுமா????
      வருகைக்கு நன்றி.

      Delete
  10. # பூப் பெயர் முன் இனமென்மையும் தோன்றும் எனும் விதிப்படிபூங்கொடி # மென்மையை உணர முடிகிறது :)

    ReplyDelete
  11. உங்கள் பதின் தலைப்பு கண நேரம் பதற செய்து விட்டாலும் , செய்யுளின் பதங்களை பிரித்து, கோர்த்து,நீங்கள் செய்துவிக்கும் இந்த "அணி"கலன் அற்புதம். உங்களின் இதுபோன்ற ஆக்கம் தரும் ஆய்வுகளும் பகிர்ந்தளிப்பும் தமிழ் மொழியின் நுட்பனான இலக்கண அளவைகளும் அவற்றை பகுத்தளித்த தமிழ் மூத்த குடிகளின் இலக்கண அறிவும் ஆச்சரியத்தை அளிக்கின்றன.

    உங்களின் படிப்பறிவும் பண்பட்ட அனுபவ அறிவும் இன்றைய கால தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழை ஆய்வுசெய்யும் ஆய்வாளர்கள், முனைவர் பட்டம் முயல்வோருக்கும் ஒரு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    உங்களை தமிழகத்தின் நவீன அவ்வை என்று பாராட்டினாலும் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.

    பாராட்டுக்கள், தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு, தொடரும் அதை தேடி இந்த தமிழ் வண்டு அதன் சுவை கண்டு.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அரசருக்கு வணக்கம்,

      தாங்கள் சொல்வது போல் எனக்கு பெரிய அனுபவம் எல்லாம் இல்லை, ஏதோ தெரிந்ததை பகிர்ந்து போகிறேன்,

      இப்படி வெறும் பட்டம் மட்டுமா?,

      பொற்கிழி எங்கே,

      போன தடவை போல் கதைச் சொல்ல வேண்டாம்,

      இன்றைக்கு என்னவாயிற்று,
      எல்லோரும் எனக்கு பொன் முடிப்பு தருகிறார்கள்,,,,,,

      எது எப்படியோ, தாங்கள் என்னை பாட்டி எனச்சொல்ல,,,,,,,,,,

      வண்டு தான்.

      நன்றி.

      Delete
    2. இதுவரை எத்தனையோ பேர் பொற்கிழி கொடுத்ததாக சொல்லுகின்றீர்கள், அதுவே " போதும் என்கிற மனமே மனமே பொன் செய்யும் மருந்து".

      கோ

      Delete
    3. வணக்கம் அரசே,
      பொற்கிழிக்கோ, புகழ்பெறவோ, பிறர் பாராட்டவோ நான் என்றும் ஆசைப்பட்டது இல்லை அரசே.
      தங்கள் மீள் வருகைக் கண்டு மகிழ்ச்சி, நன்றி.

      Delete
  12. வந்தேன். படித்தேன். கருத்திட்டேன் (கருத்தை இட்டேன்).

    :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்,,,,,

      ஏதோ உள் குத்து போல் உள்ளது,

      நன்றிகள் பல.

      Delete
  13. இலக்கணத்தில் பரிச்சயம் இல்லாதவன் நான் ! உங்களின் இதுபோன்ற பதிவுகளின் மூலமே கற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்...

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,

      தங்கள் பதிவு வாசித்து என் பழய நினைவுகள் பதிந்தும் வந்தேன்,

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  14. என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...
    பசுமைத்தமிழ் பசுந்தமிழ் ஆகி பைந்தமிழ் ஆகியிருக்கும் என்று எண்ணுகிறேன் .....தெரியலை பார்க்கலாம் அப்புறம் வருகிறேன். பேராசிரியரே இன்னும் கற்கணும் .....நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா இனியா,
      உங்கள் சகோ விடம் இந்தப் பதிலை சொல்லி ஆயிரம் ரூபாய் இழக்க வேண்டாம்,
      அதனால் நான் மட்டும் பார்த்துக்கொள்கிறேன்,
      இது என்ன புது பழக்கம், பேராசிரியரே,,,,,,,,
      எப்பவும் போல் அழைத்தாலே போதும்,
      வாருங்கள்
      நன்றிம்மா

      Delete
    2. எல்லோரும் அப்படித் தானே அழைக்கிறார்கள். நானும் ஆசையா கூப்பிட்டுப் பார்த்தேன்மா ....சரி மகிம்மா வழமை போலவே உங்க விருப்பப் படி அழைக்கிறேன் ok வா. ஆமா அப்போ யாருக்கு ஆயிரம் போகப் போகிறது ம்..ம்..ம் நல்ல சான்சை mis பண்ணக் கூடாதில்லை ம்..ம் நல்லா யோசிங்கம்மா.

      Delete
  15. இவ்வாறான பதிவுகளைப் படிக்கும்போது நாம் சரியாக எழுதுகின்றோமா என்ற எண்ணம் வந்துவிடுகின்றது. இவ்வாறான பதிவுகள் மனதில் தெளிவினை உண்டாக்குகின்றன. இருப்பினும் முற்றிலும் உணர்ந்துகொண்டு கடைபிடிப்பது சற்று சிரமமாக இருக்குமெனத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்

      சரியாகத்தான் எழுதுகிறோம், சில செய்திகள் சொல்லிச் செல்லவே,,,,,,
      முற்றிலும் கடைப்பிடிப்பது என்பது சிரமம் என்று ,,,,,

      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  16. வணக்கம்
    சிறப்பான இலக்கண விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன் வணக்கம்,
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  17. இலக்கணத்தில் படிக்கும் காலத்திலேயே எனக்கு புணர்ச்சி விதி என்றால் ஒவ்வாமை வந்துவிடும்! எனவே வேகமாக விரைகையில் விஜு சாரின் பின்னூட்டம் கொஞ்சம் நிறுத்திவைத்தது. உங்கள் போட்டியால் தமிழ் இன்னும் எளிமையாகவும் அருமையாகவும் எங்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தளீர், வணக்கம்,
      தாங்கள் பதிவிடும் இலக்கியங்களும் சுவையே, பார்ப்போம்,
      நன்றி.

      Delete
  18. இது எதுவும் தெரியாமல் நானும் தமிழ் எழுதுக் கொண்டிருக்கிறேன்!தெரிந்து கொள்ள விரும்பினாலும் இந்த வயதில் மண்டையினுள் ஏற மறுக்கிறதே!

    ReplyDelete
  19. அய்யா வாருங்கள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  20. அருமையான இலக்கண விளக்கம். நிறைய தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா,
      வருகைக்கு நன்றி

      Delete
  21. அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது.....அனைத்தும்....ஹிஹி...ம்ம்ம் மண்டையில் பதிய வைத்துக் கொள்ள முயற்சி....சேர்த்தல் பிரித்தல் அறிந்தாலும், அன்று படித்து மறந்த விதிகளை மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள உடல் மேல் உயிர் வந்து ஒன்றல் இயல்பாகின்றது....

    அருமையான விளக்கம், வகுப்பு...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      வணக்கம்,
      நானும் நக்கீரர் போல் படித்துக் கொண்டேன்,
      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல.

      Delete
  22. அருமையான பாடலுடன்
    உயிர் வரின் உக்குரல் மெய்விட்டு ஓடும்
    உடல் மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே
    என்றவாறு எளிமையான இலக்கணம்
    நான் படிக்க இலகுவாயிற்றே!

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      தங்கள் வருகைக்கு நன்றிகள், தங்கள் காட்டலைப் படிக்கிறேன்,
      நன்றி.

      Delete
  23. அந்நன்றி எங்ஙனம் புணரும்

    ReplyDelete