எருமை யன்ன கருங்கல் லிடைதோ
இப்பாடல், ஏனோ இன்று நினைவில் வந்து போனது, அதனைத் தங்களுடன் பகிர்ந்துக்கொள்ள நினைத்தே பதிவிடுகிறேன்.
என்னது, சினிமா பாட்டா?
அது நமக்கு கொஞ்ச தூரம் தான்,,
இது தான் நமக்கு தெரிந்த பாடல்ங்க,
ஆம்,
தன்னைக் காண்போருக்கு நலம் விளைவிக்கும் தோற்றச் சிறப்பு மிக்க கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு உடல் நலம் பெற்ற நரிவெரூத்தலையார் சொல்வதாக அமைந்த பாடல்.
பாடல்
எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே.
இதனை இப்படியாக பிரித்தும் படிக்கலாம்,,,,,,
எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே,
நீ இத்தகைய வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேள். கருணையும், அன்பும் இல்லாமல் தீமைகள் செய்து நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவர்களோடு சேராமல், உனது நாட்டை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து வருவாயாக. அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.
எருமை – எருமை மாடு
கருங்கல் – கரிய கற்கள்
இடைதோறும் – இடங்கள் எல்லாம்
ஆனின் – மாடுகள்
பரக்கும் – பரவியிருக்கும்
யானை – யானை
முன்பு – வலிமையான
கானக – காடுகளைக் தன்னகத்தே கொண்ட
நாடனை – நாட்டினை ஆளும் தலைவனே
நீயோ – நீ தான்
நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால்
நின் – உனக்கு
ஒன்று – ஒன்று
மொழிவல் – சொல்கிறேன்
அருளும் – கருணையும்
அன்பும் – அன்பும்
நீக்கி – விலக்கி
நீங்கா – நீங்காத
நிரயம் – நரகம்
கொள்பவரோடு – இடமாகக் கொள்பவரோடு
ஒன்றாது – சேராமல்
காவல் – காக்கும் நாட்டை
குழவி - குழந்தை
கொள்பவரின் - கொண்டிருப்பவராய்
ஓம்புமதி - பாதுகாப்பாயாக
அளிதோ தானே - அளிக்கத் தக்கது
அது பெறல் - அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது
அருங்குரைத்தே - அரியது ஆகும்.
அரசன் என்பவன் தான் ஆளும் நாட்டினை குழந்தையைப் போல் பாதுகாக்குமாறு,,,
அதாவது,
குடிமக்களைக் குழந்தையைப் பேணிக் காப்பது போல் காக்க வேண்டும் என்று,,,,
தமிழ் அமுதம்.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றிகள்
Deleteஅருமையான பாடல். அழகான விளக்கம். தங்களின் விளக்கம் மட்டும் இல்லையேல் இவற்றையெல்லாம் என்னால் நிச்சயமாகப் புரிந்து விளங்கிக்கொள்ளவே இயலாது. :) பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவிளக்கவுரை தந்ததால் என்னைப்போன்ற மரமண்டைக்கும் விளங்கியது முனைவரே...
ReplyDeleteவாங்க சகோ, நம்பிட்டேன்,
Deleteவருகைக்கு நன்றி.
பாடலின் முதல் வரி படிக்கும் போதே ஸ்க்ரோல் செய்து விளக்கம் இருக்கிறதா என்று பார்த்தபின் தான் தொடர்ந்தேன் எளிமையாக பொருள் உணரும் படி அந்தக் காலத்தைய புலவர்களுக்கு எழுதத் தெரியாதோ.
ReplyDeleteஇது தான் அவர்களுக்கு, எளிதில் புரியும் நடை,
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா
பாடலும் விளக்கமும் அருமை மகேஸ்வரி.
ReplyDeleteவருகைக்கு நன்றிமா
Deleteஇந்த பாடலுக்கு விளக்கம் எழுதாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக எனக்கு புரிந்து இருக்காது.
ReplyDeleteஅருமையான விளக்கம்.
"//குடிமக்களைக் குழந்தையைப் பேணிக் காப்பது போல் காக்க வேண்டும் என்று,,,, //" - ஆமா இந்த வரிகள் யாரை குறிக்கிறது???
வாருங்கள் சகோ,
Deleteஆமா இந்த வரிகள் யாரை குறிக்கிறது??? ,,,,,,,,,,,,,,,,,
தெரியலையேப்பா,,,,,,,
வருகைக்கு நன்றி சகோ
நீயோ பெரும
ReplyDeleteஆகலின்
என்று சொல்கிறார்... நாம் என்ன சொல்ல?
அருமை சகோதரி, தேவையான பாடலும் பாடலுக்கு விளக்கமும்!
வாங்க,
Deleteஎன்ன செய்வது, இது போல் எழுதியும் பேசியும் தான் நாட்களைக் கடத்தனும்.
வருகைக்கு நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் பேராசிரியரே!
Deleteசங்க இலக்கியத்தின் இற்றை பெயர்ப்பு ஒவ்வொரு பதிவிலும் நவில்தொறும் நூன்நயம் போல சுவை கூடிக் கொண்டே செல்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்கள் இதுபோல பெயர்க்கப்படும் போது நவீன தமிழ் வாசிப்பிற்கு அது நிச்சயம் உதவுவதாய் இருக்கும்.
தொடர்கிறேன்.
நன்றி.
வாருங்கள் ஐயா,
Deleteதாங்கள் சொல்லும் திருத்தங்கள் என் எழுத்தைச் செம்மைப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். தாங்கள் முதலில் அனுப்பிய பின்னூட்டம் ,,,,,,,,,
முன்பு- தான் ஐயா, மாற்றி விட்டேன்.
பெயரும்,,
தாங்கள் நெறிபடுத்துவதையே நான் விரும்புகிறேன்.
சுட்டுங்கள், திருத்த
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஐயா.
>>> உனது நாட்டை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து வருவாயாக. அத்தகைய வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.<<<
ReplyDeleteஇதையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கின்றார்கள்!?..
அப்படி நினைத்துப் பார்ப்போரும் - இனிமேல் வரக்கூடுமோ!..
வணக்கம், நலம் தானே,
Deleteஆம் எதிர்பார்ப்பு தான்,,,
வருகைக்கு நன்றிகள் பல.
அருமையான பாடல். அர்த்தத்துடன் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteகடைசி வரியின் உள்குத்தை ரசித்தேன் :)
ReplyDeleteவருகைக்கு நன்றி பகவான் ஜி,,,
Deleteவிளக்கம் ஆகா...!
ReplyDeleteவருகைக்கு நன்றி டிடி சார்.
Deleteகுடிமக்களைக் குழந்தையைப் பேணிக் காப்பது போல் காக்க வேண்டும் என்று,,,,
ReplyDeleteநமது நாட்டைப் பற்றிய பாடல் இல்லைதானே இது
ஆம் சகோ, நம் நாட்டைப் பற்றிய பாடல் அல்ல,,,
Deleteஆனால் நம் நாட்டவர் பாடிய பாடல்
வேதனையின் உச்சம்,,
நன்றி சகோ.
மன்னன் மக்கள் ஆட்சி எவ்வாறு இருக்கணும் என்று எத்தனையோ பேர் சொல்லிட்டாங்க எவனும் அதைக் காதாலும் கேட்பதாய் இல்லை ம்ம் நல்ல பாடலும் விளக்கமும்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் பேராசிரியரே வாழ்க வளமுடன்
வாருங்கள் பாவலரே,
Deleteஅற்றைய மன்னர்கள் தமக்கு வரும் அறிவுரைகளைக் காது கொடுத்து கேட்பவர்களாய் இருந்தார்கள். நடந்தார்கள்.
வருகைக்கு நன்றி
சங்க காலப் பாடலும் விளக்கமும் அருமை! நாட்டைக் குழந்தை போல காக்க வேண்டும் எத்தனை உண்மை ஆனால் யார் ...... ம்..ம் நம்ம தலைஎழுத்து எப்படியோ .......தாமதத்திற்கு மன்னிக்கணும். நலம் தான் மா! ரொம்ப நன்றிம்மா தங்கள் அன்பிற்கு.
ReplyDeleteவாருங்களம்மா,
Deleteநலம் குறித்து மகிழ்ச்சிமா, தங்கள் வருகையே இன்னும் மகிழ்ச்சிமா.
நாம் வாழும் காலக்கட்டம் இப்படியானவர்களுடன், என்ன செய்வது.
நன்றிமா தொடருங்கள்.
பேராசிரியரே,
ReplyDeleteஎங்கிருந்து பிடிக்கின்றீர்கள் இப்படிப்பட்ட (சங்க) பாடல்களை? வாழ்த்துக்கள்.
நாட்டை ஆளும் அதிகாரம் என்பது ஒருவருக்கு வரமாக கிடைக்ககூடிய ஒரு அரும் பாக்கியம். அதனை நல்லபடியாக பயன்படுத்தி தங்கள் பெயரும் ஆட்ச்சிகாலமும், என்றென்றும் மகிழ்வுடன் நினைவுகூற தக்க வகையில் ஆட்சியாளர்கள் மக்களை குறையின்றி குழந்தைகளைபோன்று காப்பது அவர்களின் சீரிய கடமை - அருமை.
அவ்வகையில் , நாட்டு மக்களாகிய "குழந்தைகளை", இதை (??) சாப்பிடகூடாது, இதை(??) உடுத்தக்கூடாது, இதை(??) வணங்ககூடாது, இதைதான் செய்யவேண்டும், நான் சொல்வதுபோல்தான் நடந்துகொள்ளவேண்டும், கேட்க்கும்போது உங்களிடம் இருக்கும் நிலத்தையோ, வீட்டையோ விட்டு வெளியேறவேண்டும்..., தேவையற்ற கேள்விகள் கேட்க்ககூடாது, எந்த கோரிக்கைக்கும் கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் செய்ய கூடாது, என்று பக்குவபடுத்தும் ஆட்சியாளர்கள் இன்றைக்கும் "குழந்தைகளுக்கு" வழி காட்டியாக இருப்பது நாம் செய்த புண்ணியம்.
நல்ல இலக்கிய சாரல், பகிர்விற்கும் , பத - விளக்கங்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் .
கோ
தமிழ் கற்போரும் படிப்போரும் வருக! என்று கில்லர்ஜி சொல்வது உண்மை..உண்மை...
ReplyDeleteதமிழ் கற்போரும் படிப்போரும் வருக! என்று கில்லர்ஜி சொல்வது உண்மை..உண்மை...
ReplyDelete