Monday 21 December 2015

பனி விழும் விடியல் - கோலம் 2

 பனி விழும் விடியல்


        கோலம் என்ற கலைத் தமிழ்நாட்டு கலைகளில் ஒன்றாகும். கோலம்

 என்ற  சொல்லிற்கு அழகு, ஒப்பனை, மாதிரி என்ற பொருள் சொல்கிறது 

வாழ்வியற்  களஞ்சியம். 


 பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் கோலப்பொடியினை 

வைத்து நெடியதாய் விழுமாறு செய்து, அதனால் தரையில் வடிவங்களை 

அமைப்பது கோலமாகும்.

 


கோலம் இரு வகைக்படும்

 1. புள்ளிக் கோலம்

2. புள்ளியில்லாக் கோலம்  ( ரங்கோலி)

 
 9 புள்ளி 5ல் நிறுத்த ( இடுக்கு புள்ளி)


புள்ளிக்கோலம்  இரு வகைப்படும்

1.சிக்குக் கோலம்

2.உருவக் கோலம் ( பூ மீன் தேர்,,,,,,,,, போல,,




சிக்குக் கோலம், இதனைக் கம்பிக் கோலம் என்றும் அழைப்பர். இதில் நேர்

 புள்ளி, இடுக்கு புள்ளி ( ஊடு புள்ளி) என்ற முறையிலும் புள்ளிகள் வைத்துப்

போடப்படும்.

இதில் புள்ளிகளை விலக்கி கோடுகள் செல்ல வேண்டும்.




சிக்குக் கோலம் போடுவதற்கு சிக்கலானது என்பர். ஆனால் உண்மையில்

 எளிமையானது. கை எடுக்காமல் போடலாம்.




கோலத்திற்கு பாடர் கொடுப்பது உண்டு.

சிக்குக் கோலத்திற்கு பூக்கள் பாடர்.

பூக்கள் கோலத்திற்கு சிக்கு பாடர்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும். 





பொதுவாகத் தரையில் போடப்படும் கோலங்கள் கால்பட்டு அழிவதே

சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

மார்கழியில் 
இலையில் தவழும் பனியும் 
அழகிய கோலம் தான்.

41 comments:

  1. அழகு.. அழகு..

    பனி விழும் விடியல் - கவித்துவம்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  2. குனிந்து நின்று இவ்வளவு பெரிய கோலங்கள் போட்டால் இடுப்பு என்னாவது.?

    ReplyDelete
    Replies
    1. நல்ல உடல் பயிற்சி தானே ஐயா,

      Delete
  3. The Half Day Diet Review

    What would you say if I told you that you can jumpstart your flat tummy diet and get on with getting great abs by eating great food? If you are like many people you may mistakenly believe that in order to get a thin tummy you need to go on a liquid diet or starve yourself. That doesn't sound like a lot of fun. In fact, that sounds a little unhealthy and unsustainable.

    http://innertradingcirclereviews.co/the-half-day-diet-plan-review/

    ReplyDelete
  4. அழகிய கோலங்கள் சகோ
    கோலம் போடுவது பெண்களுக்கும் உடற் பயிற்சி போன்றதே

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, வருகைக்கு நன்றி.

      Delete
  5. அழகான கோலங்களும் அவைகளை இடும் முறையுமாய் பதிவு மின்னுகின்றது! அருமை பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றிகள்.

      Delete
  6. எல்லாக்கோலங்களும் அழகாக உள்ளன. முதல் கோலம் துளஸி மாடமா? அது ஓர் தனி அழகாக பளிச்சென்று உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, துளசி மாடம் தான் அதன் போட்டோ அமைப்பு தலைக்கீழாக போய்விட்டது.

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  7. கோலப்பாடம் சிறப்பு! படிக்கோலம் பற்றி சொல்லவில்லையே!கோலங்கள் கவர்ந்தன! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படிக்கோலம் புள்ளிக்குள்ளும், புள்ளி அல்லாதன இதனுள் தானே வரும் என்று விட்டேன். தகவலுக்கு நன்றி தளீர்,
      வருகைக்கு நன்றிகள்.

      Delete
  8. மார்கழி கோலங்கள் அசத்தலா இருக்கு மகேஸ்வரி.

    ReplyDelete
  9. எனக்கு புரிந்துவிட்டது காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதற்கு..பனி விழும் விடியல் - கோலம்தான் காரணம் என்று....

    ReplyDelete
    Replies
    1. புரிந்ததா வலிப்போக்கரே,

      வருகைக்கு நன்றி

      Delete
  10. அழகிய கோலங்கள் கலக்குங்க பேராசிரியரே எல்லாமே ரசித்தேன் தொடருங்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பாவலரே

      Delete
  11. அனைத்தும் சூப்பர்! அம்மாடி எப்படி இப்படி அழகா வருது wow ...!
    அசத்துங்கம்மா அசத்துங்க !

    ReplyDelete
    Replies
    1. நீங்க பாராட்டியதாலோ ,,,,,,

      வருகைக்கு நன்றிமா

      Delete
  12. இரண்டாவது கோலம் இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.

    அதையும் 6,7,8 ஆகிய கோல வகைகளையும் நானே போட்டிருக்கிறேன். புள்ளி வைத்த கோலங்களில் கழுகு, வாத்து போன்றவை போடுவதோடு, குறுக்குப் புள்ளி, நெடுக்குப் புள்ளி என்று பக்கத்து வீடுகள் பேசுவதை நைஸாகக் கேட்டு நானே சில வடிவங்களை உருவாக்கிக் கோலம் போட்டிருக்கிறேன் - இதெல்லாம் என் பள்ளி, கல்லூரிக் காலங்களில்! காலை நாலு, நாலரைக்குப் போட்டு விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீ,

      இந்த கோல நோட்டுக்கு சன்டை வரும் பாருங்கள். என்னுடைய 20 மேற்பட்ட நோட்டுகள் காணவில்லை. இப்போ தான் மீண்டும் சேகரிக்கிறேன். கேட்டு, பார்த்து. அதே நேரம் தான் நானும் போடவேன்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  13. கோலங்களை ரசித்தேன். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  14. அருமையான
    அழகான கோலங்கள்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  15. அருமையான கோலங்கள். மனைவி பார்த்துவிட்டு, இவங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் அழகாக கோலம் போட வருதுன்னு கேட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, மிக்க மகிழ்ச்சி சகோ, சகோ விடமும் சொல்லுங்கள் என் மகிழ்ச்சியை, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. கோலங்களைப் பற்றிய அழகான விளக்கம், மனதை கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  17. பேராசிரியரே,

    கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவனையும் மிஞ்சிவிட்டீர்கள் உங்கள் கைவண்ணத்தில் மின்னும் கோலங்களால்.

    உங்கள் மகி -மையே, மகி - மைதான்.

    கலக்குங்கள்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் அரசே,

      Delete
  18. மார்கழி வந்தாச்சு
    ஆளுக்கொரு கைவண்ணம்
    நாளுக்கொரு கோலம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  19. அழகிய கோலங்கள்! நம் பாரம்பரிய வழக்கம் இன்னும் நடைமுறையில் இருப்பது மகிழ்ச்சியான செய்தி. பாராட்டுக்கள் மகி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  20. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  21. கோலங்கள் மிக அழகாக இருக்கின்றன சகோ...இந்த வகைகள் பற்றி இன்னும் நிறைய உண்டு...கேரளத்துக் கோலங்கள் வகை வித்தியாசமானவை பெரும்பாலும் வீடுகளில் போடுவதில்லை (தமிழர்கள் அங்கு உள்ளவர்களைத் தவிர) கோயில் திருவிழாக்களில் சில பூஜைகளுக்காகப் போடுவதுதான். ..

    அருமை...உங்கள் வரைதல் கலைக்குப் பாராட்டுகள்

    ReplyDelete