Monday, 28 December 2015

மாக்கோலம் அலங்கரிக்கும் மார்கழி

மாக்கோலம் அலங்கரிக்கும் மார்கழி 


     காலையில் எழுந்து தினமும் வாசல் தெளித்து, புள்ளி வைத்தும், வைக்காமலும் இரண்டு கம்பிக் கோடுகளை இழுத்து இது தான் கோலம் என்று வந்தது,,,, இந்த மாதம் பெரிய பெரிய கோலங்கள் வாசல் நிறைக்கும். தினமும் என்னென்ன புதுப்புது வகையில் கோலம் போடலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கும்.

வாசல் அடைத்துக் கோலம் போட்ட காலம் எல்லாம் போய்விட்டது. இன்று 

இங்கு வாசல் எங்குள்ளது எனும் நிலையாகிவிட்டது. இன்று வீடுகளே ஒரு 

வாசல் அளவுக்கு போனநிலையில், வாசல்களே இல்லாத நிலையில் வாசல் 

அடைத்துக் கோலம் எங்கு போடறது.

சிக்குகோலம் 60 புள்ளிகள் வைத்து போடுபவர்களை எல்லாம் 

பார்த்திருக்கிறேன். படிக்காத இவர்கள் எப்படி புள்ளிகளைக் கணக்கில் 

கொண்டு சரியாக போடுகிறார்கள் என்று நான் வியந்துப் போனது 

உண்டு.புள்ளிகளை வைத்து அதனை இணைக்கும் கம்பிகள் எனக்கு கண்கட்டி

 வித்தையாக இருக்கும். அத்துனை பெரியக் கோலங்கள், இன்றும் ஆச்சிரியம் 

தான் போங்க.

 
  கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான்.

  கணக்கும் நுண்ணிய கவனிப்பும் இதற்கு உள்ளே பொதிந்திருக்கும் அறிவியல் விஷயங்கள். இன்னோரு பயன், மனத்தை ஒருமைப்படுத்துவது.

அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்திஊக்கமுடைமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன. கற்பனைத்  திறனும், படைப்புத்  திறனும் (creativity)  கைவந்த கலையாகிவிடுகின்றன.

கோலம் இடும் பெண்ணுக்கு குனிந்து நிமிர்ந்து சில நிமிடங்கள் கோலம் போடுவதால், உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆகிறது.இது மட்டுமா, கோலம் இடுவது சீரண  உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும்.
 




  இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு பகுதியிலயும் அவங்கவங்க வழக்கப்படிக் கோலம் போடறாங்க. தமிழ் நாடுன்னா புள்ளி வெச்ச, வைக்காத இழைக்கோலங்கள், கேரளான்னா அத்தப்பூக்கோலம் அப்றம் வட மாநிலங்கள்ன்னா ரங்கோலின்னு ஒவ்வொரு பகுதியோட பேரைச் சொல்றப்பவும் அந்தப் பகுதிக்குண்டான கோலங்களும் சேர்ந்தேதானே ஞாபகம் வருது.



அத்தப்பூ கோலம் க்கான பட முடிவு
                              (இது நெட்டில் சுட்டது)

    நம்மூர்ல விசேஷங்களுக்கு பச்சரிசி மாவால கோலம் போடுறது சம்பிரதாயம். வாசல்ல போடற கோலங்கள் வீட்டுக்குள்ள துர்சக்திகள் நுழையாதபடிக்கு காவல் காக்குதுங்கறது ஐதீகம். வீட்டுக்குள்ள நுழையப் பார்க்கற சக்திகள் அந்த இழைகள்ல மாட்டிக்குமோ என்னவோ.. ஆனா, அமாவாசையன்னிக்கு மட்டும் கோலம் போடாம விட்டு வைக்கிறது வழக்கமாம். ஏன்னா பித்ருக்கள் வீட்டுக்குள்ள வரணுமேன்னு சொல்லுவாங்க. கேள்விப் பட்டது ரைட்டா இல்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க. அதேமாதிரி நல்ல விசேஷங்கள் நடக்கறப்ப போடறதுக்குன்னு தனி வகைகளும் அல்லவிஷயங்கள் நடக்கறப்ப இன்னொரு வகைகளும் இருக்காம். நல்ல விசேஷங்கள் நடந்தா கண்டிப்பா ரெட்டை இழைக்கோலம்தான் போடறது வழக்கம்.
                                             (நன்றி ராஜிமா) 

 

       நூல்ல கட்டிய சாக்பீஸை எடுத்துக்கிட்டு கோலம் போடத் தேர்ந்தெடுத்த இடத்துல நூலோட நுனியை தரையோட அழுத்திப் பிடிச்சுக்குவாங்க. இன்னொருத்தர் அடுத்த நுனியில் இருக்கற சாக்பீஸை வெச்சு உக்காந்திருக்கறவரைச் சுத்தி பிரதட்சிணம் வந்து அளவா அழகா ஒரு வட்டம் போட்டுக்குவாங்க. இது நம்ம கணக்குப் பாடத்துல உபயோகப்படுத்தற காம்பஸை அடிப்படையாக் கொண்டதுன்னு கொள்க. இதான் அடிப்படை.இனிமே டிசைனைப் பொறுத்து அங்கங்க அரை வட்டங்களும் வளையங்களும் பூக்களோட டிசைன்களும் வரையப்படும். அப்றம் ஒவ்வொரு பகுதியா கலர்ப்பொடி கொண்டு நிரப்புவாங்க. பெரிய பகுதிகளுக்கு சல்லடையும் சின்ன பகுதிகளுக்கு டீ வடிகட்டிகளும் உபயோகப் படுத்துவாங்க. கலர்ப்பொடியை நிரப்பி லேசா தட்டிக்கிட்டே இருந்தா அழகா எல்லா இடங்கள்லயும் ஒண்ணு போல கலர் நிரம்பும். இப்படி மொதல்ல கலரை நிரப்பினப்புறம் வெள்ளைக் கோலமாவை புனல்ல எடுத்துக்கிட்டு அங்கங்க இழைகளால் அலங்கரிப்பாங்க.
 



  இப்பல்லாம் கோலம் போடுற கலை கொஞ்சம் கொஞ்சமா அருகிக்கிட்டே வருது. ஒரு காலத்துல அடுத்த தலைமுறைப் பெண்குழந்தைகளும் கோலம் போட ஆசையா கத்துக்கிட்டாங்க. இப்பல்லாம் எதுக்கும் டைம் இல்லைன்னு ஓடிடுதுங்க.ஏதோ பண்டிகை சமயங்கள்லயாவது கோலம் போட ஹெல்ப் செய்யுதுங்களேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். அதுவுமில்லாம இருக்கற அவசர யுகத்துல காலைலயும் சாயந்திரமும் வாசத்தெளிச்சு கோலம்போட யாருக்கு நேரமிருக்கு?.. அதனால ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிடறாங்க. அதுவும் அடுக்கு மாடிக்குடியிருப்புன்னா கேக்கவே வேணாம். நம்மூட்டு ஸ்டிக்கர்ல பாதியை பக்கத்தூட்டு ஸ்டிக்கர் மறைச்சுட்டு இருக்கும்.

  கோலம் பற்றி நான் பேசிய போது, ஆர்வமாக அவர்கள் சொன்னதை அப்படியே கொடுத்துள்ளேன்.


     இவ்ளோ அழகான கலையை அழிய விடலாமா?..  
 

18 comments:

  1. //கல்விக்கூடங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்களுக்கு கணக்கு கற்றுக் கொடுத்தவை இந்தக் கோலங்கள்தான்//

    உண்மையான விடயம் மேலும் மாக்கோலம் போடுவது காலையில் எறும்புகளுக்கு உணவளிப்பதாகவும் சொல்வார்கள்
    இன்று காலையில் வாயிற்படியில் சிறிய கோலப்பாயை விரித்து வைத்துவிட்டு ஒருமணி நேரம் கழித்து எடுத்து விடுகின்றார்கள்

    ReplyDelete
    Replies
    1. உடன் உங்கள் வருகைக் கண்டேன், பதில் அளிக்க முடியவில்லை.தங்கள் தகவலுக்கு நன்றி சகோ,

      Delete
  2. கோலங்களும், விளக்கங்களும் அருமை. காலையில் எழுந்தவுடன் கோலம் போடுவது என்பது ஒரு வகையான உடற்பயிற்சி என்று சொல்லுவதை ஏனோ இன்றைக்கு சில பெண்கள் மறந்துவிட்டு உடற்பயிற்சி நிலயத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வது தான் புரியாத புதிர். .

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மைதான் சகோ, வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

      Delete
  3. எனக்கு என்னவோ இந்த மாதிரி கோலங்கள் போடுவது எல்லாமே
    நமது பாரம்பரியத்தில் ஒரு ஒழுங்கு முறை ஒரு நியதி ஒரு கால நிர்ணயம் , அதன் மையப்புள்ளி, பரிதி, எல்லாவற்றையும் கற்று கொடுக்கிறது.

    வாழ்வின் சிறப்பு அதை எங்கனம் நாம் புரிந்து வாழ்கிறோம் என்பது தான்.
    வண்ண வண்ணங்கள் வாழ்வில். இருப்பினும் அவை ஒரு கட்டத்துக்குள், ஒரு வட்டத்துக்குள் இருக்கையிலே அழகு ஜொலிக்கிறது. அமைதி தழைத்து ஓங்குகிறது.
    கோலமும் இதைத் தான் உணர்த்துகிறது.

    விளக்கங்கள் எல்லாமே அருமை.
    \
    பித்ருக்கள் தினம் மட்டும் தான் வாசலில் கோலம் இடுவதில்லை. அமாவாசை எங்கள் கிராமத்தில் போடுவது வழக்கமே.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
      பித்ருக்கள் தினம் மட்டும் தான் போட கூடாதா?, அப்ப சரி, நான் மறந்து அமாவாசை நாட்களில் போட்டுவிடவேன். பிறர் சொல்லும் போது கஷ்டமாக இருக்கும். இப்ப சிறிது நிம்மதி.
      தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  4. வணக்கம்
    கோலங்களும் விளக்கங்களும் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  5. வாசலில் இடும் கோலங்களைக் கொண்டு அவரவர் குணங்களைக் கூறி விடலாம்..

    அப்படியும் இருக்கின்றது ஒரு விஷயம்..

    கோலத்தினைப் போல - அழகான பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாசலில் இடும் கோலங்களைக் கொண்டு அவரவர் குணங்களைக் கூறி விடலாம்......

      அப்படியா? அப்ப சொல்லுங்களேன்.,,,,

      வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

      Delete
  6. ஒவ்வொரு கோலமும்
    அழகு
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  7. வர்ணங்கள் போல உங்கள் வார்த்தைகளும் ,அத்துணை அழகு..

    கோலத்தின் சிறப்பை எல்லாருக்கும் தெளிவாக எடுத்து சொன்ன விதம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சகோ,

      Delete
  8. கோலங்களும் விளக்கங்க்ளும் அருமை சகோ! இதில் குறிப்பாக புள்ளிக் கோலங்கள் நினைவுத்திறனை வளர்ப்பவை, சிக்கல் வந்தால் தீர்ப்பது பற்றிச் சிந்திக்க வைப்பவை, என்றால், புள்ளியில்லா வரை கோலங்கள் கற்பனைத் திறனையும், புதிய டிசைன் சிந்திக்கவும் வைக்கும். இப்போதெல்லாம் அருகிவருகின்றது அடுக்குமாடிக் கலாச்சாரம் ஆகிவருவதால்...

    ReplyDelete
  9. உண்மைதான் சகோ,
    அருகிவரும் கலை தான் இது. தங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை.
    வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  10. பேராசிரியரே,

    கோலங்கள் அத்தனையும் சிறப்பு, அதனூடே உங்கள் வர்ணனை மிக சிறப்பு.

    இப்போதும் பெரும் புள்ளிகள் பலரும் படிக்காத புள்ளிகள்தானே.

    உலக ஆரம்பமே ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு புள்ளியில் முடியும் எனும் தத்துவத்தை உணர்த்துவதாககூட இந்த புள்ளி கோலங்களை கணக்கில் எடுத்துகொள்ளலாம்.

    இன்றைய காலகட்டத்தில் தலை சாய்க்க கூட இடமின்றி தவிக்கும் அலங்கோலமான மனித வாழ்வில் இதுபோன்ற அழகு கோலங்கள் இட்டு மகிழும் வாய்ப்பும் வசதியும் உங்களை போன்றோருக்கு அமைந்திருப்பது ஒரு அளப்பரிய பாக்கியமே.

    கோலங்கள் வாசலுக்கு மட்டுமா அழகு சேர்கின்றன, மனித வாழ்க்கைக்கும் கூடத்தான் அழகு சேர்க்கின்றன, மனதில் ஒரு மகிழ்ச்சியை கோர்கின்றன, காலையில் கண்கள் பார்த்த கோலங்களின் வர்ண ஜாலங்கள் இரவு படுக்கபோகும்வரை நம்மை மயக்கி போடுகின்றனவே.

    உங்கள் கைவண்ணம் உங்கள் எழுத்துக்களைபோலவே மின்னி மிளிர்கின்றன.

    கோலங்கள் தொடரட்டும் உங்கள் மனைதனில் மகிழ்ச்சியும் விரிந்து படரட்டும்

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  11. ’மாக்கோலம் அலங்கரிக்கும் மார்கழி’யில் ஒவ்வொரு கோலத்தில் கோலமும் ரசிக்கத்தான் வைக்கின்றன.

    நடுவில் ஒரு பூக்கோலம் .... நெட்டில் சுட்டதால் அது படு அழகு ! :)

    ReplyDelete