தமிழண்ணலே
தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும்
இராம. பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத்
தலைவராக விளங்கினார். இலக்கிய உலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகள் ஏராளம் ஏராளம்.
இவர் 12.08.1928 இல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரில்
பிறந்தவர்.
இயற்பெயர் பெரியகருப்பன். இராம.பெரியகருப்பன் என்றும் அழைப்பர். இவர்தம் பெற்றோர் இராமசாமி, கல்யாணி ஆவர்.
மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்), முதுகலைத் தமிழ் ஆகிய பட்டங்களைப் பெற்றவர்.
முனைவர்
சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனார் இவர்களின்
நெறிப்படுத்தலின் கீழ் மதுரை
தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய
மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்
தமிழண்ணல் தமிழ் இலக்கியம்,
இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரைநடை, நாடகம் எனப் பல நூல்கள் யாத்துள்ளார்.
அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு,
வாழ்வரசி புதினம்
நச்சுவளையம் புதினம்
தாலாட்டு
காதல் வாழ்வு
பிறைதொழும் பெண்கள்
சங்க இலக்கியத் தொன்மை
அகச்சான்றுகள்
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள்
சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள்
தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்
புதியநோக்கில் தமிழ்இலக்கிய வரலாறு
தமிழியல் ஆய்வு(இ.முத்தையாவுடன்)
ஆய்வியல் அறிமுகம்(இலக்குமணனுடன்)
ஒப்பிலக்கிய அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு
விளக்கம்
தொல்காப்பியம் உரை
நன்னூல் உரை
அகப்பொருள் விளக்கம் உரை
புறப்பொருள் வெண்பாமாலை உரை
யாப்பருங்கலக் காரிகை உரை
தண்டியலங்காரம் உரை
சொல் புதிது சுவை புதிது
தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும்
திருத்தமும்
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
பிழை திருத்தும் மனப்பழக்கம்
உரை விளக்கு
தமிழ் உயிருள்ள மொழி
தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
தமிழ்த்தவம்
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
திருக்குறள் உரை
இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன
தமிழ்
வளர்ச்சிக்கும், தமிழ்பண்பாட்டைப் பாதுகாக்கவும் பாடுபட்டவர். தமிழண்ணலே நீவீர் மறையவில்லை, என்றும் எங்களுடனே இருக்கிறீர், உம் எழுத்துக்களால்.
தமிழுக்கு இழப்பு.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்.
தங்கள் முதல் வருகைக்கு நன்றி ஸ்ரீ
Deleteதமிழண்ணல் அவர்களுடைய ஆக்கங்கள் சிலவற்றைப் படித்துள்ளேன்.
ReplyDeleteதமிழுக்குக் கிடைத்த வரம் - தமிழண்ணல்..
தமிழார்ந்த நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பார்..
வருகைக்கு நன்றிகள்.
ReplyDeleteபேராசிரியரே,
ReplyDeleteதமிழ் அண்ணலை நினைவு கூர்ந்த விதம் அருமை. வாழ்க அவர் புகழ்.
கோ
வருகைக்கு நன்றிகள்.
Deleteவணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteநம்மிடையே வாழ்ந்த தமிழின் தகைசிறந்த மொழியாளுமைகளுள் ஒருவரை நாம் இழந்து போனோம்.
தங்களது பதிவின் வாயிலாகத் தமிழண்ணலுக்கு எங்களின் அஞ்சலிகளும்.
நன்றி.
தமிழன் வாழுவரை இவரின் நினைவுகளும் வாழும்.
ReplyDeleteதங்களுக்கு 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteஇவருடைய நினைவுத்தடயங்கள் எப்போதும் பெயர்சொல்லும்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஅன்னாரின் நினைவோடு இந்த ஆண்டு முற்று பெறுகிறது.
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஎன்னே ஒரு இழப்பு. இந்த ஆண்டு விடைபெறும் நேரத்தில் அவரும் விடை பெற்றுள்ளார். அன்னாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஅன்னாரின் ஆன்மா மீழ்பிறக்க வேண்டுகிறேன்
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் சகோ
Deleteஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteநட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கு நன்றிகள்
Deleteஅன்பு சகோதரி,
ReplyDeleteவணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வருகைக்கு நன்றிகள் புதுவையாரே
Deleteசாதாரண மக்களிடமும் தமிழைச் சேர்த்தார். நானும் உங்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் ஐயா
Deleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
எங்க சிவகங்கை சீமையின் நெற்குப்பை கண்டெடுத்த முத்து எங்கள் ஐயா தமிழண்ணல் அவர்கள்.
ReplyDeleteஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
----------------
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றிகள் சகோ
Deleteதமிழண்ணல் குறித்த இந்தப் பதிவு மூலம் நானும் அவரைப்பற்றித் தெரிந்து கொண்டேன் அன்னாரது மறைவுக்கு அஞ்சலி செய்வதில் நானும் பங்கு பெறுகிறேன்
ReplyDeleteதமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்பண்பாட்டைப் பாதுகாக்கவும் பாடுபட்டவரான தமிழண்ணல் பற்றி தங்கள் மூலம் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது.
ReplyDelete//நீவீர் மறையவில்லை, என்றும் எங்களுடனே இருக்கிறீர், உம் எழுத்துக்களால்.//
மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அதே .. அதே !
வருகைக்கு நன்றிகள் ஐயா
ReplyDelete