Wednesday, 1 January 2020

HAPPY NEW YEAR

                                                      HAPPY NEW YEAR

                                                                               TO ALL

                                      flower images க்கான பட முடிவு

Wednesday, 5 September 2018

வாழ்த்துகள்அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

flower க்கான பட முடிவு

Wednesday, 18 July 2018

நிலம்தொட்டுப் புகார்


                           நிலம்தொட்டுப் புகார்


                மணம் பேசி வரவேண்டிய காதலன் வரவில்லை. அவன் எங்கு போனான் என்பதும் தெரியவி்ல்லை, அவனை எப்படித் தேடுவது என்று தெரியாமல் அல்லல்படும் பெண்ணை ஆற்றுவிக்கும் தோழியின் எண்ண அலைகளே இப்பாடல். இந்தப் பாடலை இயற்றியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர்.

                      நிலம்தொட்டுப் புகார் வானம் ஏறார்
                     விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்
                      நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
                     குடிமுறை குடிமுறை தேரின்
                    கெடுநரும் உளரோ நம் காதலோரே.
                                                                                                   வெள்ளிவீதியார் 

         சாதாரணமாக, நாம் பேசிக்கொள்ளும் பேச்சு வழக்கிலே இப்பாடலின் மொழிநடையும் அமைந்துள்ளது.

         அவர் எங்கே போகப் போகிறார்? நிலத்திற்குள் புகப் போவதில்லை, வானத்திற்கு மேலேயும் ஏறவும் முடியாது, கடலுக்குள் சென்றிருக்கவும் மாட்டார், நாடு நாடாக, ஊர் ஊராக, குடியிருப்பு குடியிருப்பாகத் தேடினால் நம்மிடம் அகப்படாது போய்விடுவாரோ நம் காதலர்! என்கின்றாள் தோழி.                                       http://siragu.com/wp-content/uploads/2015/12/sangappaadalgal1.jpg
                                                                                                                   படம் இணையத்திலிருந்து 

Monday, 9 January 2017

                       
                               நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய


கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண


வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்


ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை


மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்


தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்


வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ


நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


                          அம்பரமே தண்ணீரே

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்


எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!


கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!


எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்


அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த


உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்


செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!


உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


                 
                                                                        


                                                                                  உந்துமத களிற்றன்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


                   குத்து விளக்கெரிய (குத்து விளக்கு எரிய)குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்


மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்


கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்


வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்


மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை


எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்


எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்


தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


                             முப்பத்து மூவர்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று


கப்பம் தவிர்க்கும் கலையே! துயிலெழாய்


செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு


வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்


செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்


நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்


உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை


இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
Friday, 30 December 2016

எல்லே இளம்கிளியே


                     எல்லே இளம்கிளியே

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


   விளக்கம்


 ஏய், இளம் கிளியே, இன்னும் உறங்குகிறாயே, உனக்காக நாங்கள் எல்லாம் 

இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படி எல்லாம் அழைத்தும் இன்னும் 

உறங்குகிறாய். என்று தோழிகள் சற்று கடுமையாகவே அழைத்தனர்.அப்போது 

அவள் ஏன் இப்படி கத்துகிறீர்கள், இதோ வந்துவிட்டேன். என்று அவளும் 

கோபமாக கத்துகிறாள்.


 உடனே தோழிகள், உன் வார்த்தை நன்றாக இருக்கிறதே, இவ்வளவு நேரம் 

நாங்கள் உன்னை எழுப்ப கத்திக்கொண்டு இருக்கிறோம். நீ எங்களை 

கோபிக்கிறாயே என்று சிடுசிடுத்தனர். சரி சரி விடுங்கள் எனக்கு பேச 

தெரியவில்லை, நீங்களே திறமைசாலிகளாக இருங்கள், நான் 

ஏமாற்றுக்காரியாக இருந்துவிட்டுப்போகிறேன். அடியேய் நாங்கள் முன்னமே 

எழுந்து வந்து உன்னை எழுப்ப வேண்டும், அப்படி என்ன நீ பெரிய ஆளா??? 

எங்களிடம் இல்லாத சிறப்பு உன்னிடம் என்ன?? அவளும் விடுவதாக 

இல்லை,, அவளும் வாயாடி போலும்,, ஏய் என்ன என்ன,, என்னவோ நான் 

மட்டும் எழாதது போல் பேசுகிறீர்கள்,எல்லோரும் எழுந்து வந்துவிட்டீர்களா? 

என்கிறாள். உடனே தோழிகள் நீயே வந்து இங்கு இருப்பவர்களை எண்ணிப் 

பார்த்துக்கொள். வலிமை பொருந்திய யானையை அழித்தவனும், 

வேட்டையாடும் திறன் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி 

வாழ்த்தி பாட போகனும் சீக்கிரம் வா,,

(தோழியை எழுப்பும் பாடல் இத்துடன் நிறைவு) 
Thursday, 29 December 2016

உங்கள் புழக்கடை

             
                          உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்


செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்


தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்


எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்


நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!


சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.


விளக்கம்

   உங்கள் வீட்டின் பின் வாசலிலுள்ள தோட்டத்தின் குளத்தில் செங்கழுநீர் மலர்கள்  மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலைகவிழ்ந்தன.காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஓளிவீச கோயில்களை நோக்கி திரிசங்கு  ஊத சென்றுவிட்டனர். ஆனால் பெண்ணே சங்கும் சக்கரமும் ஏந்திய கரங்களை உடையவனும், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட நீ இன்னும் எழாமல் இருக்கிறாயே, நேற்று நீ என்ன சொன்னாய்,, நாளை நான் முன்பே எழுந்து வந்து உங்கள் எல்லோரையும் எழுப்புவேன் என்று வீரம் பேசினாயே, கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே,, வா,,  எழுந்து வா,,

Tuesday, 27 December 2016

கற்றுக் கறவை

                         


                       கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!

புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்    கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால்கறப்பவனும், தங்களை

பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனுமான 

கோபாலனை குற்றமற்ற அன்போடு நேசிக்கிறாய், பொற்கொடியே, அழகியே, 

மயில்போன்றவளே, நம் சுற்றுப் புறத்தில் உள்ள தோழியர் அனைவரும் உன் 

வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டனர்.மேகவண்ணனாகிய கண்ணனைப் 

புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், பொறுப்பானவளே,பெண்மையை 

புனிதமாய் காப்பவளே,, இவையெல்லாவற்றையும் கேட்டும் அசையாமலும் 

பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே, இந்த அர்த்தமற்ற உறக்கம் 

தேவையா? அதனால் என்ன பயன் உனக்கு, எழுந்து வா  பாவையே

                                                                                                                             (இந்த மார்கழி கோலம் அல்ல,,,)                     கனைத்திளம் கற்றெருமை
கனைத்திளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர


நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்


பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்


சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்


இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!


அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


  

  விளக்கம்


  பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் 

மடியில் சொறியும் பாலைச் சிந்தியபடியே அங்கும் இங்கும் 

செல்கின்றன.அவை சொறிந்த பால் இல்லத்து வாசலை சேறாக்குகின்றது. 

இந்த அளவுக்கு பால் சொறியும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் 

தங்கையே,கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, எருமைகள் சொறிந்த 

பால் கால் நனைக்க, உன் வீட்டு வாசலில் காத்துகிடக்கின்றோம். சீதையை 

கவர்ந்து சென்ற இராவணனை அழிக்க அவதாரம் எடுத்த கோமானாகிய அந்த 

நாராயணனின் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம், நீயோ பேசாமல் 

இருக்கிறாய், எல்லா வீடுகளிலும் உள்ள அனைவரும் எழுந்து வந்து விட்டனர்,

உனக்கு ஏன் இத்தனை பேருறக்கம்.


                                                (இந்த மார்கழி கோலம் அல்ல,,,)

            

                     புள்ளின் வாய் கீண்டானைப்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்


கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்


பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்


வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று


புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே


பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்


கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


விளக்கம் பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை ஏகிய இராவணனின் தலையைக் கொய்யவும்

அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்றாகிவிட்டது.

கீழ் வானத்தில் வெள்ளி முளைத்துவிட்டது, வியாழன் மறைந்து விட்டது.பறைவகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய

கண்களை உடையவளே, விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், எழாமல் இருப்பது ஏன்?உடல் நடுங்கும்படி குளீர்ந்த நீரில்

நீச்சல் அடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே, மார்கழியில் அவனை

நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? உனக்கு ஏன் இந்த திருட்டு தூக்கம், எழுந்து எங்களுடன் வா,,