கடந்து வந்த பாதையில் என்
கால்கள் பதிந்தது நிச்சயம் முள் மேல் இல்லை
கற்பனைக் கோட்டைகள் நான்
கட்டினாலும் இடிந்துவிடவில்லை
அவை இதயத்தில் இன்னமும் உறுதியாய்
அன்பால் சாதிக்க முடியும் தான்,
அனைவராலும்?????????
அகிலம் மிகப் பெரியது தான்
மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்
மனிதனின் அனுபவங்கள் பெரிது
மற்றவர் மேல் நம்பிக்கை அற்றுப்போனது
மனிதம் செத்துப் போனதால்
தேய்பிறையாகவே இருக்கும் அன்பு
தேய்ந்து பின் வளர்பிறையாகும்
நம்பிக்கையில்
கடக்கவிருக்கும் பாதையில்
காத்திருக்கும் அனுபவங்கள் பல
இவ்வாண்டும் கடந்து,,,,,,,
கற்பனைக் கோட்டைகளை
ReplyDeleteநிஜக்கோட்டைகளாய்
மாற்றும் ஆண்டாக
வரும் ஆண்டு அமையட்டும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.
Deleteஅடுத்தாண்டு மேலும் நலமுடன் அமையும் சகோ வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி சகோ,
Deleteநம்பிக்கை தான் வாழ்க்கை சகோ. கண்டிப்பாக அடுத்த ஆண்டு கற்பனைக் கோட்டைகள் நிஜக் கோட்டைகளாக மாறும் என்றும் நம்புவோமாக.
ReplyDeleteநம்புவோம், நன்றி சகோ,
Deleteபுத்தாண்டு வாழ்த்துகள் சகோ! எப்போதுமே நம்பிக்கைதானே வாழ்க்கை! உங்கள் கனவுகள் யாவும் கோட்டைகளாகி வெற்றிக் கொடி பறக்கும்!
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ,
Deleteநல்ல மனதிற்கு எந்நாளும் குறைவேயில்லை..
ReplyDeleteவாழ்க நலம்!..
அப்படியா, நன்றிகள்
Deleteவரும் ஆண்டை நம்பிக்கையோடு எதிர் கொள்வோம்.
ReplyDeleteநன்றி சகோ,
Deleteஅழியாத கோலங்கள் அழகு ,வருமாண்டு வருத்தமில்லா ஆண்டாக மலரட்டும் :)
ReplyDeleteபகவான் ஜி , நன்றி.
Deleteநம்பி நம்பி நாற்று நட்டால்
ReplyDeleteநட்டம் இல்லை ஞானப் பெண்ணே!
விட்டம் பார்த்து நோட்டம் இட்டால்
பட்டம் பறப்பது பாராய் ஞானப் பெண்ணே!
வல்லமை பொருந்திய வளர்பிறை ஆண்டு பூக்கட்டும் சகோதரி!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் கவி வரிகள் அருமை, நன்றி புதுவையாரே.
Deleteநம்பிக்கையான வரிகள். வரும் ஆண்டும் மனம் மலரட்டும். மனிதம் செழிக்கட்டும்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ
Deleteகடந்து வந்த பாதையை அசைபோட்டுப் பார்ப்பது கோர்ஸ் கரெக்ஷன் செய்து கொள்ள ஏதுவாயிருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா
Deleteபேராசிரியரே,
ReplyDeleteநிஜகோட்டைகளின் தொடக்கமே ஒரு கற்பனை வரைவுதானே.
நினைவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்.
கோ
என் நினைவுகள் நிஜமாக வாழ்த்தியதற்கு நன்றிகள் அரசே.
Delete//தேய்பிறையாகவே இருக்கும் அன்பு
ReplyDeleteதேய்ந்து பின் வளர்பிறையாகும்//
சரி, சந்தோஷம்.
கடந்து வந்த பாதையில் ஓர் கோலம் ... இன்னும் அழியாமல் அழகாகவே ! பாராட்டுகள்.
பாராட்டிற்கும், வருகைக்கும் நன்றிகள் ஐயா
ReplyDelete