Thursday 17 December 2015

வாடையிலும் வசந்தம் தான் வாசலில்,,,

  வாடையிலும் வசந்தம் தான் வாசலில்,,,   
                                                    
 கோலம் கவிதைகள் க்கான பட முடிவு
                                                                                                       நன்றி கூகுல்                                                                                



மார்கழி முப்பது நாளும் 

விழாக் கோலம்

வாடையிலும் வசந்தம் தான்

                                                                  வாசலில்,,,
                                      

இன்று மார்கழி மாதம் முதல் நாள். நம் முன்னோர்கள் வகுத்த ஒவ்வொரு நிகழ்வும் நம்மை வியக்க வைக்கிறது.

மாதங்களில் நான் மார்கழி

என்று கடவுள் சொல்வதாக பாடல் உண்டு. நாம் அறிந்ததே,

                               

  எனக்கு மார்கழி மாதம் மிகவும் பிடித்த மாதம்.கோலம் போடுவதற்கு என்றே..........



கோலங்கள் சில, பல புள்ளிகளால் இணைக்ப் பட்டு சிறியதாகவோ, பெரியதாகவோ அமையும்.

 கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாகத் தான் நான் அதை நினைக்கிறேன்.

அவரவர் கற்பனை செய்த காட்சிகளை, பூமியின் மேல் தூவுவது, கோலம்.



கோலம் என்னும் வரைகலை வெளிப்பாடு, தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாகும்.


  கோலம் என்றால், அழகு, ஒப்பனை என்ற பொருளிலும் கூறலாம்.

ஆடல்மகளுக்கும், மணமகளுக்கும், இசை கருவிகளுக்கும்  செய்யப்பட்ட ஒப்பனையே கோலம் என்றது சிலப்பதிகாரம்.

 

கோலத்தின் வகைகள் பற்றி நாளைப் பார்ப்போம்.

சரி, அப்படியே போயிடாதீங்க. இந்த மாதம் முழுக்க கோலம் இங்கு வரும். வந்து பார்த்துச் செல்லுங்கள்.

36 comments:

  1. //கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சியாகத் தான் நான் அதை நினைக்கிறேன். அவரவர் கற்பனை செய்த காட்சிகளை, பூமியின் மேல் தூவுவது, கோலம்.//

    கோலங்களும் அதைவிட கோலத்தைப்பற்றிய விளக்கங்களும் வெகு அருமை. பாராட்டுகள்.

    //இந்த மாதம் முழுக்க கோலம் இங்கு வரும். வந்து பார்த்துச் செல்லுங்கள்.//

    சரி .... ஆகட்டும். பார்த்துடுவோம். :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா, வணக்கம்,
      தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தொடர்வதற்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  2. மார்கழி மாதம் பக்தி மார்க்கமான மாதம் அதிகாலையில் கோவிலில் ஒவிக்கும் பக்தி கானங்கள் கேட்பது இனிமை அழகிய கோலங்களையும் காணலாம்.

    அபுதாபியிலும் அரேபிய பெண்கள் அதிகாலை 3 மணிக்கே குளித்து முடித்து வாசலில் அழகிய மாக்கோலங்கள் இடுவதை பார்த்திருக்கின்றேன் - கனவில்

    ReplyDelete
    Replies
    1. ஓஓ இடத்திற்கு தகுந்தார் போன்ற கனவும், ம்ம் நடக்கட்டும்.
      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  3. கோலங்கள் பற்றிப் படித்ததும் முன்பு சிவகுமாரன் எழுதி இருந்த நீளம் தாண்டப் பழகோணம் என்னும் கவிதை நினைவுக்கு வந்தது/ தெரு முழுவதும் கோலங்களால் மறைக்கப்பட்டு அவற்றை மிதிக்காமல் நடக்க என்று எழுதி இருந்ததை ரசித்தேன் கோலங்கள் அழகு. அவை கலை உணர்ச்சியின் வெளிப்பாடு வாழ்த்துக்களா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா,

      அவரின் கவிதைகளைப் இனி தான் படிக்கவேண்டும். ஆம் சிலர் கோலத்தை மிதிக்காமல் செல்வேண்டும் என்பர். ஆனால் வெளியில் இடும் கோலங்கள் காலால் மிதிப்பட்டால் சிறப்பு என்பவரும் உண்டு.
      வருகைக்கு நன்றி ஐயா.

      Delete
  4. கோலம் போடுவது தனிக்கலை மார்கழி கோலத்தை ரசிப்பதற்கென காலையில் தெரு பயணம் நிச்சயம் பாலமகி..

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஒரே செயலில் இரண்டு பலன்கள், நடைப்பயிற்சியும், மனம் விரும்பியதும்,,
      வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  5. மார்கழி மாத கோலங்கள் மிக அருமை மகேஸ்வரி. எனது 300 வது பதிவான சோளமாவு அல்வாவை ருசிக்க தளத்திற்கு வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்தேன், ருசித்தேன்,

      வருகைக்கு நன்றிமா,,

      Delete
  6. காலத்திற்கேற்ற கோலம்...!

    வாசலில் இருந்து வாழ்க்கை வரை கற்றுக்கொள்ள எவ்வளவு இருக்கிறது.

    தொடர்கிறேன் பேராசிரியரே!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  7. சிறப்பான கோலங்கள்! சின்னவயதில் தங்கைகளோடு வீதியில் ரங்கோலி போட்ட நினைவுகள் தோன்றி மறைகிறது! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தளீர்

      தங்கள் பழய நினைவுகளை எழுப்பிய பதிவா?

      வாருங்கள் வாருங்கள், வருகைக்கு நன்றி.

      Delete
  8. கோலம் மன ஒருங்கமைவின் பிரதிபலிப்பு/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  9. ஆஹா அழகிய கோலங்கள்மா. கோலம் ஒருபோதும் நான் போட்டதில்லை. ஆனால் அத்தனை சுலபம் இல்லை இப்போது. ரசித்தேன் மா நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மா,

      இன்னும் நிறைய கோலங்கள் இருக்கு. உங்களுக்காக பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றிமா

      Delete
  10. மார்கழியின் மகிழ்ச்சி
    வாழ்வு முழுதும் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  11. கோலங்கள் அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  12. மார்கழி முழுதும் மாக்கோலங்கள்..
    அழகிய கோலங்களின் அணிவகுப்பு..
    வண்ணமயமாகட்டும் பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் பல.

      Delete
  13. வணக்கம்
    கோலங்கள் அழகாக இருக்கிறது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. பேராசிரியருக்கு,

    கோலங்கள் அருமை அதன் செய்திகளோடு.

    முன்பு நான் எழுதிய "கோலங்கள் மாயா ஜாலங்கள்" எனும் பதிவிற்கு உங்களின் பின்னோட்டமான, "நல்ல பகிர்வு, கோலம் நான் மிகவும் விரும்பி போடுவது,தகவல் அருமை. சேகரிக்க முயற்சிக்கிறேன்" என சொல்லிய சொல்லை காப்பாற்றும் வகையில் இந்த பதிவு அமைந்தது, நீங்களும் சொல்லிய சொல்லை காப்பாற்றுபவர் என்பதை புரிய வைக்கின்றது.

    உங்களின் மகிழ்ச்சியை இந்த கோலங்கள் பிரதிபலிப்பதாகவும் உணர்கிறேன், மகிழிச்சி நிலைத்து நீளட்டும்.

    தொடரட்டும் உங்கள் மாய ஜாலங்களான கோலங்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அரசே

      Delete
  15. கில்லரின் கனவு நிச்சயமா ஒரு நாள் நிஜமாக வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இது போல் கனவுகள் உண்டா அரசே

      Delete
  16. வணக்கம் பேராசிரியரே !

    வாழ்மனை கொழிக்க ! மங்கை
    ...வரைந்திடுங் கோலம் ! மண்ணில்
    சூழ்புகழ் கொடுக்கும் பண்பைச்
    ...சுற்றியே காட்டும் ! கோடு
    ஏழ்'பிறப் பெடுத்தும் அன்பால்
    ...இன்புறும் வழிகள் சொல்ல
    ஆழ்மனத் தூய்மை காட்டி
    ...அழகுறும் முற்றுப் புள்ளி !

    அழகிய கோலங்கள் அசத்துங்கள் பேராசிரியரே

    மார்கழிக் கோலம் மனம் நிறைக்கட்டும்
    அத்தனையும் அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாவலரே,

      தங்கள் கவிவரிகள் கண்டு கோலங்கள் மகிழ்கின்றன.

      வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி பாவலரே.

      Delete
  17. கோல மாதம். பொங்கல் மாதம்.

    ஸ்கேல், பாகைமானி வைத்து வரைந்தாற்போல ஒழுங்கான அளவுகளில் கோலங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்கேல், பாகைமானி கிண்டல் தானே,

      வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் ஸ்ரீ

      Delete
  18. பிறந்த மண் கும்பகோணம் என்ற நிலையில் நான் ரசித்துவருவனவற்றில் ஒன்று கோலம். அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  19. உள்ளத்தை நெருடும்
    உண்மைக் கோலங்கள்
    மார்கழியின் சிறப்பு!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete