Tuesday 1 December 2015

புது அம்மா அப்பா


தோழியர் கூட்டம் படம் க்கான பட முடிவு


புது அம்மா அப்பா




       அது கிறித்துவ அருட்சகோதிரியர்களால் நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி. பள்ளியோடு இயைந்த மாணவிகள் விடுதி. மாணவிகள் ஆயிரத்திற்கும் மேல் படிக்கும் கல்வி நிலையம். எனவே விடுதி மாணவிகள் எண்ணிக்கைக் கொஞ்சம் அதிகம் தான்.

விடுதியில் மூன்று பிரிவுகள் உண்டு.

பெற்றோர் இல்லாதவர்கள்

குறைந்த வருமானம் உடையவர்கள்

பணம் கட்டக்கூடியவர்கள்

  இந்த வித்தியாசம் இருக்கும் இடம், உணவு போன்றவற்றில் தான், மற்ற இடங்களில் எல்லோரும் ஒற்றுமையாகத் தான்.

   இதில், பின் இரு பிரிவுகளில் உள்ளவர்கள் விடுமுறை எனில் தத்தம் இல்லங்களுக்கோ, உறவினர் இல்லங்களுக்கோ சென்று விடுவர்.

முதல் நிலையில் இருக்கும் மாணவிகள் அங்கே தான் இருப்பர்.

முழு கல்வி பரீட்சை முடியும் நேரம். குறைந்தது 30 நாட்களுக்கு மேல் விடுமுறை இருக்கும்.

தேர்வுகள் முடிந்து ஒன்று இரண்டு நாட்கள் பள்ளி நடக்கும். அது சும்மா,,,,,

 தேர்வுகள் முடிந்து, தேர்வு முடிவுகள் அஞ்சல் அட்டையில் வரும் வரைக் கொண்டாட்ம் தான்.

  விடுமுறைத் தொடங்க இருக்கும் முதல் நாள் இரவு முதல் நிலை பிரிவின் கண்காணிப்பாளர் அருட்சகோதிரியிடம் இருந்து அங்குள்ள மாணவி ஒருவருக்கு அழைப்பு. அவள் பெயர் லெட்சுமி. ( இனி லெட்சுமி என்றே பார்ப்போம்). லெட்சுமி உன்னை சிஸ்டர் அழைக்கிறார்கள் என்று சமையல் அக்கா சொல்லவும், அவள் ஏன் எதற்கு என்று கூடியிருக்கும் தன் வயது தோழிகளிடம் கேட்டுக்கொண்டே நடக்கத் தொடங்கினாள். மற்ற நாட்களாக இருந்தால் திட்டு, அடி விழும் படிப்புத் தொடர்பாக,,, மட்டும் தான். (அந்த அருட்சகோதிரி அங்கு இருந்த காலம் முதல் அந்த மாணவிகளை தன் மகள்கள் போலவே பார்த்துக்கொண்டார்.) இப்ப தான் அது இல்லையா? சரி ஏதேனும் வேலையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு சமையல் அக்காவுடன் நடந்தாள். இங்கு ஒரே பாட்டுக் கச்சேரி தான், அதான் படிக்க வேண்டாமே,,,,

   சிறிது நேரத்தில் லெட்சுமி வந்தாள். ஏய் ஏன் அழைத்தார்கள் என்று கேட்ட தோழிகளிடத்தில், இருங்கடி வருகிறேன் என்று சொல்லி எங்கோ சென்று விட்டு திரும்ப வந்தாள்.

ஏய், ஏன் எதுவும் திட்டு வாங்கினாயா? என்று கேட்டதற்கு இல்லைப்பா என்றாள். பின்ன என்ன சொல்லுடி, ரொம்ப பிகு பன்னாம என்று கேட்டபிறகு, தயங்கியபடியே, என்னை யாரோ ஒரு பணக்காரங்க கேட்டாங்களாம் அங்கு போகிறாயா? என்று கேட்டாங்க என்றாள்.

நீ என்ன சொன்னாய் என்றதற்கு,

நான் ஒன்னும் சொல்ல, என்ன சொல்வது, வந்துட்டேன். என்றாள்.

  உடன் அவள் நெருங்கிய தோழி அவளிடம் நான் ஒன்னு சொன்னா கேட்பாயா? லெட்சுமி, நமக்கோ யாரும் இல்லை, உன்னை அவர்கள் நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு குழந்தையில்லை போலும் சின்ன குழந்தை வேண்டாம் என்று நம் போல் பெரிய பிள்ளைகள் போதும் என நினைத்து கேட்கிறார்கள். ( அவள் ஒன்பதாம் வகுப்பு படிப்பவள்) நீயும் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு நல்லா படிக்கலாம். எப்படியும் உன்னை அவர்கள் நல்லா பார்த்துக்கொள்வார்கள். நான் பெரியவள் ஆன போது எவ்வளவு அழுதேன். மற்ற பிள்ளைகள் தங்களுக்கு செய்த சடங்கு போட்டோக்களைக் காட்டும் போதும்,,,,, என்றாள், உடனே லெட்சுமி அதான் சிஸ்டர் உனக்கு வீட்டில் இருந்தால் எப்படி இருக்குமோ அது போலவே செய்தார்களே, ( அந்த நிகழ்வு பிறகு சொல்கிறேன்.) போட்டோ முதற்கொண்டு என்றாள்.

   இருந்தாலும் நாம்,,,,,,,,,

  சரி லெட்சுமி, உன்னிடம் சிஸ்டர் கேட்டா, போகிறேன் என்று சொல்லி விடு. உனக்காவது அப்படி ஒரு உறவு கிடைத்தால் நல்லது தானே என்றாள்.அவளும் அமைதியாக பதில் ஏதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டாள். அதற்குள் அங்கிருந்த மற்ற மாணவிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செய்தி தெரிந்து அக்கா நீங்க போறீங்களா என்று சின்னப்பிள்ளைகள் முதல் அனைவரும் அவளிடம் கேட்க தொடங்கினார்கள்.

  அவளுக்கு ஒன்றும் புரியல. எல்லோரும் நல்லவிதமாக சொன்னதால் சரி என்று அரைக்குறை மனதுடன் இருந்தாள். இப்படி பேகிக்கொண்டே அனைவரும் உறங்க தொடங்கினார்கள். அவள் மனநிலை மட்டும் பலவாறு சிந்திக்க தொடங்கியது. தாம் அவ்வீட்டில் அவர்கள் மகள் போல் நடத்தப்படுவது போல், புது புது ஆடைகள், நல்ல உணவு, பல இடங்களுக்கு தன் புதிய தாய் தந்தையுடன், நிறைய மனிதர்கள், அவர்களும் உறவுகளாய்,,,,,,,,, இப்படி பல நினைவுகளுடன் உறங்கிப் போனாள். விடிந்ததும் எப்பவும் எழும் நேரம் கடந்தும் உறக்கத்தில். அது நிம்மதியான உற்க்கம் அல்லவா?

  அவள் தோழி எழுப்பியவுடன் எழுந்தவள், உடனே அவளிடம், இனி நீ கவலைப் படாதே நான் இருக்கேன் உனக்கு, இனி எல்லா விடுமுறைக்கும் நீயும் என் வீட்டிற்கு வரலாம், நான் உன்னைப் பார்க்க இங்கு வருவேன். உனக்கு எல்லாமும் நான் தான் கவலைப்படாதே, நிறைய தின்பண்டங்கள் வாங்கி வருவேன் நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். என்று நிறைய நிறைய பேசினாள். அவள் தோழிக்கும் ஏதோ ஒரு ஆறுதல் போல் தோன்றியது. பிறகு எப்பவும் போல் அவர்கள் வேலைகள் முடிந்து காத்திருந்தாள். இப்போ அருட்சகோதிரி அவர்களே நேரில் அவ்விடம் வந்து, தம் அறைக்கு அவளை அழைத்தார்கள்.   அவளுடன் அவள் தோழியும் சென்றாள். வாமா லெட்சுமி நான் அவர்களிடம் எல்லாம் பேசிவிட்டேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டார்கள், சும்மா துணைக்கு தான் வேலை ஒன்றும் இருக்காது. இந்த ஒரு மாதம் மட்டும் தான். பள்ளி திறந்தவுடன் வந்து விடலாம் என்றார். அவளுக்கோ, தோழிக்கோ ஒன்றும் புரியல, சிஸ்டர் என்ன சொல்கிறீர்கள் என்று அவள் தோழி தான் கேட்டாள். சிஸ்டரும் அவளை அவர்கள் வீட்டிற்கு ஒரு மாதம் சும்மா சின்ன சின்ன வேலைகள் செய்ய அனுப்ப,,,,,,, என்று அவர் முடிக்கும் முன், அவள் அழதுக்கொண்டே ஓடிவிட்டாள்.

  தோழியோ விடாமல், வேண்டாம் சிஸ்டர் அவள் இங்கே உங்களுடன் இருக்கட்டும். வேண்டாம் என்றாள். எனக்கும் விரும்பம் இல்லைமா, அவர்கள் ரொம்ப நல்லவர்கள், ரொம்ப வருந்தி கேட்டார்கள், நானும் சரி என்று சொல்லவில்லை, என் மகளிடம் கேட்கிறேன் என்று தான் சொன்னேன். இவளிடம் கேட்டேன், இவளும் எதுவும் சொல்லவில்லையா,,,,, சரி ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்று தான்,,,,,,,

   சரி நீ போ அவளிடம் வேண்டாம் என்று சொல்லிவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களிடம் சொல்லிவிடுகிறேன். நீ போ என்றார்.

தோழியும், அது இல்ல சிஸ்டர், வந்து அவள்,,,,,,,

நீ போ, பிறகு பேசுகிறேன் என்று சிஸ்டர் போய்விட்டார்கள்.

தன் தோழியிருக்கும் இடம் தேடி அழும் அவளைச் சமாதானப்படுத்த தெரியாமல் தானும் சேர்ந்து அழுதாள். அவர்கள் அழுவதைப் பார்த்து மற்றவர்களும் செய்தி தெரிந்து அழ,,,,,,,,,,

சரி விடுங்கள் இது தான் நாம்,,,,,,,,

   வலை உறவுகளே தேவகோட்டை கில்லர்ஜி ஒரு தொடர்பதிவு ஆரம்பித்தார். அதில் பலரும் கடவுளைக் கண்டு பொதுநல கோரிக்கைகளை வைத்தனர். ஏனோ நான் தப்பித்து வந்தேன். நாம் தான் கடவுள் குறித்து ,,,,,

 சரிங்க, அதில் பாருங்க அன்புத்தோழி கீதா, மாலதி சகோ வை அழைக்க, மாலதி சகோ நம்மை தொடுக்க, நானும் சகோவிடம் எனக்கு பொதுநலம் எல்லாம் இல்ல சகோ, சுயநலம் தான் இருக்கு என்றேன். உடனே அவரும். பொதுநலமோ சுயநலமோ எதுவானாலும் ஆசையைச் சொல்ல என் தடை என்றார்கள். என் மனதில் தோன்றிய ஆசைகள் பெரும்பாலும் எல்லோரும் சொல்லிவிட, சரி என்னத்த சொல்வது என்று,,,,,,,

  சகோ, கடவுளைக் கண்டால் இந்த ஒன்று மட்டும் கேளுங்கள். ஏன் பூமியில் இந்த நிலை மனிதருக்கு என்று, இது ஒன்று மாறினாலே அனைத்தும் சரியாகும் இல்லையா,

அனாதைகள் இல்லாத உலகம் வேண்டும்,,,,,,,,

   இன்றுடன் நான் உங்களை எல்லாம் சந்தித்து (வலையில்) ஒரு வருடம் ஆகிறது. ஆம் நான் வலைத் தொடங்கி ஓர் ஆண்டு இன்றுடன்.

  என்னுள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது இவ் வலைப்பூ. அதற்கு முதலில் என் நன்றிகள், சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, அவர்களுக்காக நான் எழுதிய என் முந்தைய பதிவு என் வலைதள ஆசான்

  இங்கு நான் எதுவும் புதுசா சொல்லலீங்க, ஆனா நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் காத்திருக்கிறேன் கற்றுக்கொள்ள,,,,,,,

   என்னை ஊக்கப்படுத்தி உற்சாகத்துடன் எழுதத் தூண்டும் அன்புள்ளங்கள், உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

தொடர்கிறேன்.......

 

 

44 comments:

  1. >>> நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் காத்திருக்கிறேன் கற்றுக் கொள்ள,,,<<<

    ஆகா!.. அருமை.. இந்த ஒரு குணம் போதுமே... வாழ்வில் மேன்மேலும் சிறப்புகளை அடைவதற்கு!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றிகள் என்றும்.

      Delete
  2. வாழ்த்துகள்...

    இணைப்புகள் அனைத்தையும் சிறிது கவனிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டிடி சார்,

      பார்க்கிறேன்.

      Delete
  3. வாழ்த்துகள் சகோதரி
    ஓராண்டு நிறைவினை பெற்ற "பாலமகி பக்கங்கள்" இன்னும் பல்லாண்டு பைந்தமிழ் சேவைகள் செய்ய குழலின்னிசையின் சார்பில் வாழ்த்துகிறேன்.
    வாழ்க! வளர்க!
    நட்புடன்,
    புதுவைவேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் புதுவையாரே,

      Delete
  4. ஓராண்டு நிறைவு பெற்றமைக்கு
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் வகுத்து கொடுத்தது சகோ,

      நன்றி என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல,,,,,,

      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  5. வாழ்த்துக்கள் மகி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  6. வணக்கம்

    ஓராண்டு நிறைவுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் தொடருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ,

      Delete
  7. ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி. தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மா, வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிமா.

      Delete
  8. அன்புள்ள சகோதரி,

    வாழும் தெய்வங்கள் பூமியில் இருக்கின்றன என்று அருமையாக சகோதரி மூலம் லெட்சுமிக்கு காட்டுவதாக அனைவருக்கும் காட்டியது கண்டு படித்து மகிழ்ந்தேன்.

    ஓராண்டு முடிந்து ஈராண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதலில் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் ஐயா,

      ஆம் நல்லோரும் உள்ளனர் ,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  9. வணக்கம் சகோ
    அனாதைகள் இல்லாத உலகம் வேண்டும்
    அருமையான உயர்ந்த எண்ணம் சகோ வாழ்த்துகள்
    இணைப்புகள் அனைத்துமே திறக்கவில்லை சகோ கவனிக்கவும்
    இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. வணக்கம் சகோ
    அனாதைகள் இல்லாத உலகம் வேண்டும்
    அருமையான உயர்ந்த எண்ணம் சகோ வாழ்த்துகள்
    இணைப்புகள் அனைத்துமே திறக்கவில்லை சகோ கவனிக்கவும்
    இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,

      ஆம் எனக்கு இது தான் கடவுளிடம் கேட்க தோன்றியது.

      தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  11. ஓர் ஆண்டு ஆகி இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாலமகி பக்கங்கள்..வலையில் பல பககங்களை நிரப்ப வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வெறும் பக்கத்தை மட்டும் நிரப்புகிறேன் என்கிறீர்கள் அப்படி தானே வலிப்போக்கரே,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  12. ஓராண்டு நிறைவு என்பது தானே எழுந்து நிற்கக் கற்று நடைபயிலத் துவங்கும் வயது. நிறையவே சாதிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, நானும் இப்போ தான் நடைபயிலத் துவங்குகிறேன், வலைப்பூ எனும் நடைவடணடிப் பற்றி சமூகத்திற்குள் செல்ல,,,,,,

      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் என்று நன்றிகள் ஐயா.

      Delete
  13. மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்......

    ReplyDelete
    Replies

    1. ஆம் சகோ, என்னை முதன் முதிலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர்களே,,,,,,

      இதோ அது,,,

      பாலமகி பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் மகேஷ்வரி பாலச்சந்திரன். ”புது வருட வரவேற்பு”எனும் அவருடைய பதிவொன்று இன்றைய அறிமுகப் பதிவாக!

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      நன்றி நன்றி.

      Delete
  14. நீங்கள் பாஸ் செய்து விட்டீர்கள் ,வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நான் பாஸாயிட்டேன்,,, பகவான் ஜீ சொல்லிடாரு,,,,,

      நன்றி ஜீ வருகைக்கும், வாழ்த்திற்கும்.

      Delete
  15. நீங்கள் பாஸ் செய்து விட்டீர்கள் ,வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீ வருகைக்கும், வாழ்த்திற்கும்.

      Delete
  16. என் வீட்டின் அருகே இதுபோன்ற விடுதி ஒன்று உண்டு.
    சிறு பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் விடுதி.
    அருட்(?) சகோதரியர்களால் நடத்தப்படுவது.
    பலமுறை மனம் பதைத்திருக்கிறேன்.
    இப்போது உங்களின் இப்பதிவினூடாகவும்.
    பதிவுலகில் ஒருவயது கடந்து தொடரும் பயணத்திற்கு வாழ்த்துகள்.
    நூறைக் கடக்க வேண்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி பேராசிரியரே!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, சில விடயங்கள் மறக்க இயலா,,,,

      அருட் ?,,,,,,, ?????????? ம்ம்

      நூறைக் கடக்க, வயதா? பதிவா?

      வயதெனின், இப்பவே கண்ணைக்கட்டுதே,,,,,,

      பதிவெனின், முடியும் அது கடந்தும் என்று இப்போ தோன்றுகிறது.

      தங்கள் வழிகாட்டுதல் இருக்கும் போது,,,,,,

      வருகைக்கும், வாழ்த்திற்கும் என்றும் நன்றிகள் ஐயா.

      Delete
  17. பேராசிரியர் அம்மா,

    ஓராண்டிற்குள் ஓராயிரம் இதயங்களை வென்றிட்ட உங்கள் பண் பட்ட எழுத்தோவியங்கள்
    பாராண்டிடும் பதிவுலகில் கால் பதித்து -பல தடங்கல்களை கடந்து நல்ல தடம்களை தந்ததினால் , பலரும் அதில் தடை இன்றி தவழ்ந்திட உங்கள் தமிழ் பாலை பருகிட தவமிருந்து , யாக பூசைகள் செய்து ஆசையுடன் காத்திருக்கும் உங்கள் அடுத்தடுத்த படைப்புகளுக்காக.

    தொடரட்டும் உங்கள் தமிழ்பணி படரட்டும் அவை எங்கும் இனி.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அரசே,

      வணக்கம்.

      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா, தாங்கள் தரும் உற்சாகம் நிறைந்த பின்னூட்டங்கள்,,,,,, அவை தரும் ஊக்கம் இவையே இன்னும் சிறப்பாக எழுத தூண்டுகிறது.

      முயற்சிக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் மனம் நிறை வாழ்த்திற்கும் என்றும் நன்றிகள்.

      Delete
  18. ”நான் பெரியவள் ஆன போது எவ்வளவு அழுதேன். மற்ற பிள்ளைகள் தங்களுக்கு செய்த சடங்கு போட்டோக்களைக் காட்டும் போதும்,,,,, என்றாள்”
    இருப்பவர்களின் கொண்டாட்டம் இல்லாதவர்களின் வலி தவிர்க்க முடியாதது ஏற்றதாழ்வுகள் உள்ளவரை..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கு நன்றி,

      அது ஏற்ற தாழ்வால் வந்தது இல்லையே, ஒஒஒ ஆம் ஆம் யாரும் இல்லையே என்ற ஏற்ற தாழ்வு தான்.

      தங்கள் வருகைக்கு நன்றிகள், தொடருங்கள்.

      Delete
  19. வணக்கம் பேராசிரியரே !

    அனாதைகள் என்று யாரும் இல்லை எல்லோருக்கும் உறவுகள் உண்டு !

    நன்றாக இருந்தது கதை வலிகளோடும் எதிர்பார்ப்போடும் அருமை !
    இன்றோடு ஓராண்டு ஆகிறதா வலைப்பூ தொடக்கி வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீர் ஆள்பவரே,

      இருக்கிறார்களா?

      கதையில்லை ஐயா நிஜம்,,,,,

      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  20. சகோதரி,

    " இன்னும் காத்திருக்கிறேன் கற்றுக்கொள்ள,,,,,,, "

    அருமையான, உண்மையான வரி ! நான் கற்றுக்கொள்ள இனி ஏதுமில்லை என ஒரு மனிதனின் அகந்தை விழிக்கும்போதுதான் அவனின் வீழ்ச்சி தொடங்குகிறது !

    தங்கள் வலைப்பணி தொடர்ந்து, நீங்கள் மேன்மேலும் பல சிறப்புகளை பெற வாழ்த்துகிறேன்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,

      தங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி, தொடருங்கள்.

      Delete
  21. சகோ இந்த உலகில் யாருமே அனாதைகள் இல்லைதானே....ஆனால் உங்கள் விவரணம் மனதை அந்தக் குழந்தைகளை அந்த வயதில் அவர்களது ஆசைகளை நினைத்து நெகிழ வைத்ததுதான்....நல்ல விவரணம்...

    ReplyDelete
  22. .......சகோ இந்த உலகில் யாருமே அனாதைகள் இல்லைதானே...

    எப்படி சகோ, சொல்வது எளிது. உறவு இல்லாத மனங்கள் ஏராளம் இந்த பூமியில்.

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  23. ஆஹா ‘செம்புலப் பெயர் நீர்’ வெளியிட்டு அதற்கு ஓராண்டு முடிந்து 76 வது பதிவும் வெளியாகிவிட்டதா !!!!!


    அம்மம்மா ..... அப்பப்பா .....

    {புது அம்மா அப்பா .... தலைப்புபோலவே}

    பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா,

      Delete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete