Tuesday 26 May 2015

புணர்தல் எனும் இயற்கை ii




              இயற்கை செயற்கையானது


             இயல்புப் புணர்ச்சி என்றால், இரு சொற்களும் எந்தவிதத்திலும் மாறாது. காந்தத்தை அருகருகே வைத்தால் பச்சக் என்று ஒட்டிக்கொள்வதுபோல் ஒட்டிக்கொண்டு, அதேபோல் நிற்கும் என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார். இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார்.

தோன்றல்,திரிதல்,கெடுதல்,விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும்
                        என்பது நன்னூல் நூற்பா (154)
 மொழி = சொல்
மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை, கடை
ஆகிய மூன்று இடங்களிலும்.
அதாவது,
         பூ + மாலை = பூமாலை. இந்தப் புதிய சொல்லில் பூவும் உள்ளது, ‘மாலையும் உள்ளது, இரண்டும் இயல்பாகச் சேர்ந்துள்ளன. ஆகவே, அது இயல்பு புணர்ச்சி.
     இப்போது, ‘பூவை அப்படியே வைத்துக்கொள்வோம், ‘மாலைக்குப் பதில், அதே பொருள் தரும் இன்னொரு சொல்லாகிய சரம்என்பதைப் பயன்படுத்துவோம். பூ + சரம் என்பது எப்படிப் புணரும்?
         பூசரம்என்று புணர்ந்தால் அது இயல்பு புணர்ச்சி. ஆனால் அவை பூச்சரம்என்றுதான் புணரும்!
       இங்கே நடுவில் ஓர் ச்ஏன் வந்தது, எப்படி வந்தது என்றெல்லாம் பின்னர் விரிவாகப் படிக்கலாம், இப்போதைக்கு, ‘பூமாலைஎன்பதும் பூச்சரம்என்பதும் ஒரேமாதிரி புணர்ச்சி அல்ல என்பதைமட்டும் கவனித்தால் போதும்.
       பூமாலைஎன்ற சொல்லில், ‘பூ’, ‘மாலைஆகிய சொற்கள் இயல்பாக அமைந்திருப்பதுபோல, ‘பூச்சரம்என்ற சொல்லில் பூ’, ‘சரம்ஆகியவை அமையவில்லை. ஏதோ விகாரம் நடந்திருக்கிறது.
             இதைதான் நாம் மேலேப் பார்த்த நூற்பா விளக்குகிறது. அதான் விகாரப் புணர்ச்சிஎன்கிறோம். அதில் மொத்தம் மூன்று வகைகள் உண்டு:
தோன்றல் -           ஒரு புதிய எழுத்து தோன்றுதல்
 திரிதல்       -           ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்
கெடுதல்    -           ஏற்கெனவே உள்ள ஓர் எழுத்து நீங்குதல்
உதாரணங்களுடன் பார்ப்போம்,
முதலில் தோன்றல் பார்ப்போம்,
    பூ + சரம் = பூச்சரம்
       இங்கே பூ’, ‘சரம்ஆகியவற்றுடன், ‘ச்என்ற புதிய எழுத்து தோன்றியிருக்கிறது. அதுதான் தோன்றல் விகாரம்’.
இன்னும் சில உதாரணங்கள்
பூ+கொடி = பூங்கொடி
ங் என்ற எழுத்து தோன்றியது
யானை+கொம்பு = யானைக்கொம்பு
க் என்ற எழுத்து தோன்றியது
அன்பு+தொல்லை= அன்புத்தொல்லை
த் என்ற எழுத்து தோன்றியது

 அடுத்து திரிதல் விகாரம்
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
பொன்+குடம்=பொற்குடம்
          நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் வேறு எழுத்தாகத் திரிதல் உண்டு.
பொன்+தாமரை=பொற்றாமரை
        நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த் என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.

அடுத்த விகாரம்  கெடுதல்
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும்.
கெடுதல்-மறைதல்
மரம்+நிழல்=மரநிழல்
                நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
மரம்+வேர்=மரவேர்
                நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.
வந்தது, கெட்டது,போனது எல்லாம் சரி, ஆனா ஏன் எப்படி?
அதானே,
வரேன், காரணம் சொல்ல,
இதைப் பற்றிய தங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,

64 comments:

  1. நான் தான் முன்னால வந்தேன்... எனக்குத் தான் ஞானப்பழம்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,தங்கள் முதல்வருகைக்கு நன்றிகள். தங்களுக்கு ஞானப்பழமா? கொடுத்துட்டா போச்சு, இருங்கள் யார் கடைசியில் வருகிறார்கள் என்று பார்த்து பின் தருகிறேன்.தொடருங்கள். நன்றி.

      Delete
  2. வணக்கம்

    இலக்கணவிளக்கத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் குறை ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. எல்லாம் நிறைவாக உள்ளது தொடருங்கள் படிக்க காத்திருக்கேன். பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடருங்கள்.

      Delete
  3. அருமை சகோ வகுப்பறைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். தெளிவாய் புரிகிறது நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் உமையாள் வணக்கம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடருங்கள்.

      Delete
  4. பதிவு மிக அருமை. தெளிவாகவும் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  5. டீச்சர் மிகையில்லை உண்மை என்னைப்போன்ற பாமரனுக்கும் அழகாக புரிகின்றது தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு புரிவதுபோல் சொல்ல எம்மால் முடியும் எனும் போதே கண்ணைக்கட்டுதே, மிகையில்லை எனின் மகிழ்ச்சியே, வாருங்கள். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  6. வணக்கம் சகோ!
    வலை வானத்து வாசலிலே!
    மே மாதத்து மேகமாய்
    மோகத் தமிழை பொழிந்தாய்
    தாகம் குளிர்ந்தேன் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கவியில் வாழ்த்திய புதுவையே உன்
      கவிக்கும் வருகைக்கும் எம் நன்றிகள்
      வாருங்கள் தொடர்ந்து நான் வளர
      நன்றிகளுடன்
      நான்

      Delete
  7. எனது நீண்ட நாள் சந்தேகங்களே இவைதான் சகோதரியாரே
    தோன்றல், கெடுதல், திரிதல்
    ஆகா எளிமையோ எளிமை
    காரணங்களை அறிய அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தரும் ஊக்கம் தான் நான் தொடர்ந்து பதிவிட முடிகிறது சகோ, தொடருங்கள். வருகைக்கு நன்றி.

      Delete
  8. எடுத்துக்காட்டுகளுடன் மிக அருமையாக விளக்கி புரியவைத்துள்ளீர்கள்
    பாராட்டுக்கள்...
    தொடர வாழ்த்துக்கள் ...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தொடருங்கள்.

      Delete
  9. புணர்தல் எனும் இயற்கை விதியினையும், அவைகள் எங்கெங்கு எவ்வாறெல்லாம் புணர்கின்றன என்பதையும், தகுந்த ஒருசில உதாரணங்களுடனும் விளக்கியுள்ளது மிக அருமை.

    சற்றே கடுமையாகத் தோன்றும் தமிழ் இலக்கணத்தினை மிகச்சுலபமாக எங்கள் எல்லோருக்குமே புரியும் வண்ணம் கற்றுத்தருவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் தங்களின் இத்தகைய சேவை.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா, தாங்கள் பாராட்டும் அளவிற்கு நான் சொன்னேனா என்று தெரியல, ஆனால் இனி வரும் பதிவுகள் சிறப்பாக அமையனும் என்ற பயம் மட்டும் என் உள் பெரிதாகிவிட்டது. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

      Delete
  10. எதோ..எனது மண்டைக்குள் குடைந்து செல்கிறது... “க்,த்,ப்,” போன்றவைகளை சேர்க்க வேண்டிய வரிகளில் ...வார்த்தைகளில் சேர்க்காமல் எழுதிய விவரம் .....புரிந்தது மாதிரி இருக்கிறது. நண்பரே.....!!!

    ReplyDelete
    Replies
    1. என்ன வலிப்போக்கரே இப்படி சொல்லிட்டீங்க, சரியா போச்சு போங்க,
      வரும் ஆனா வராது போல,,,,,,,,,,,,,
      புரியும் ஆனா புரியாது,,,,,,,,,,,,,,,,,,
      புரிந்தது மாதிரி இருக்கிறது.
      புரியாதது மாதிரி இருக்கிறது,
      நல்லா போங்க,,,,,, இதுக்குத் தான் இலக்கணம் எழுதச் சொன்னீங்களா?
      சரி அடுத்த பதிவையாவது நல்லா எழுத முயற்சிக்கிறேன். இப்போதைக்கு என் நன்றிகள் மட்டும் உங்களுக்கு புரியட்டும்.

      Delete
    2. அடுத்த பதிவில் கண்டிப்பாக தேர்ச்சி அடைந்துவிடுகிறேன் நண்பரே....

      Delete
    3. அப்ப அடுத்த பதிவு போடலாம் என்கிறீர்கள். சரி அதிலும் நான் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியது தான். நன்றி தங்கள் மீள் வருகைக்கு.

      Delete
  11. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கணம் புரியத் தொடங்குகிறது.
    நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் SPS , உங்களுக்கு பிடித்தது என்றால் மகிழ்ச்சியே, தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  12. நல்லாரைக் காண்பதுவும் நன்றே..நலமிக்க
    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே !

    இலகுவான விளக்கங்கள் அனைவருக்கும் பயன்படக் கூடிய பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள் ....தங்கள் வலையில் இணைந்திட்டேன் நன்றி !

    ReplyDelete
    Replies
    1. பாட்டு எனக்குத் தானா? அந்தளவுக்கு நான் இல்லையப்பா, வாருங்கள் இணைந்ததற்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.தொடர்ந்து வந்து கருத்திட அன்புடன் அழைக்கிறேன்.

      Delete
  13. பேராசிரியர்க்கு வணக்கம்.

    பலவற்றைக் கற்றுக் கொள்ளத் துணைபுரிகின்ற தங்களின் இடுகைகளைப் பார்க்க மிக மகிழ்வாக இருக்கிறது.

    இந்தப் பின்னூட்டம் நீண்டுவிடும் போல்தான் தோன்றுகிறது.

    இருக்கின்ற சொற்ப நேரத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறேன்.

    // நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.//

    என்னும் தங்களின் கூற்றின் படி நோக்க,

    தமிழ் + இனியன்

    என்னும் சொற்களைப் புணர்ச்சிக்குட்படுத்தித் “தமிழினியன்” என்று எழுதும் மாணவன்,

    இங்கு எழுத்து மாற்றம் நிகழ்ந்திருக்கிறது,

    எனவே இது விகாரப் புணர்ச்சியின் பாற்படுமா எனக்கேட்டால் நாம் என்ன பதில் சொல்வது? :))

    அது விகாரப் புணர்ச்சி இல்லையே….!

    அது ஏன் என்பதற்கான பதிலை இப்பின்னூட்டத்தின் இறுதியில் தருகிறேன்.

    நான் சொல்ல வந்தது இக்கருத்தன்று.

    பழஞ்செய்யுட்களைச் சந்திபிரித்து எழுதும் போது அது படிப்பதற்கு எளிதாகிறது.

    “சந்திபிரித்தால் என்ன..? ஓசை கெடும்…. ஆனால் புரிதல் எளிதாகிறதே..!” என்பவர்களுக்கு, இது போன்ற இலக்கணச் சூத்திரங்களைச் சந்திபிரித்தலின் போது அதற்குரிய நுட்பத்தை அவை பல நேரங்களில் இழந்து விடுகின்றன என்ற கருத்தினை உறுதிப்படுத்தவே இப்பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

    உங்கள் ஊரின் சென்ற தலைமுறையின் மிச்சமாய், தமிழகத்தின் மீதமிருக்கின்றன ஓரிரு தமிழாளுமைகளுள் ஒருவராய்க் கருதப்படும் சோ.ந. கந்தசாமி அவர்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அறிந்திருக்க வேண்டும். அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த போது, சந்திபிரித்து வாசிப்பு எளிமைக்காக அந்நாளில் வெளியிடப்பட்ட மர்ரே பதிப்புகளை மாணவர் எவரேனும் வைத்திருக்கக் கண்டால் பிடுங்கி வெளியே எறிந்துவிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


    சரி நம் கதைக்கு வருவோம்.

    புணர்ச்சி விகாரங்கள் பற்றி நீங்கள் சந்திபிரித்து அளித்திருக்கும் நூற்பாவின் புணர்ச்சி முறையிலேயே எனக்குச் சந்தேகம் வந்தது.
    உ.வே.சா அவர்கள் வெளியிட்ட மயிலை நாதர் உரை ( நன்னூல் மயிலைநாதர் உரை பக்கம்- 63, உ.வே.சா. இரண்டாம் பதிப்பு 1946 )
    மற்றும் சங்கர நமச்சிவாயர் உரை ( நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை, பக்கம். 96. உ.வே.சா.நான்காம் பதிப்பு 1953 ) கொண்ட நன்னூல் பதிப்புகள் இரண்டிலும் இந்நூற்பா,

    “தோன்ற றிரிதல் கெடுதல் விகாரம்
    மூன்று மொழிமூ விடத்து மாகும்”

    என்றிருக்கிறது.

    நீங்கள் அளித்ததைப் பார்க்க இது புணர்ச்சிக்குட்படுத்தப்பட்ட வடிவம்.
    ஆனாலும் முழுமையான புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட வடிவமாய் இல்லை என்கிற சந்தேகம் உ.வே.சா. பதிப்பைப் பார்க்க எனக்குள் இன்னும் வலுப்பட்டது.

    அது ஒரு உள்ளுணர்வு.

    பல நேரங்களில் அது என்னை ஏமாற்றியதில்லை.

    இன்னும் சற்றுப் பின்னால் போய் நன்னூலின் மூலத்தைத் தன்னுரையோடு ( இது பெரிதும் அவருக்கு முன்னிருந்த உரைகளின் பாதிப்புத்தான் ) சுவடிவழிப் பதிப்பித்த இராமனுசச் கவிராயரின் பதிப்பைப் பார்க்க நேர்ந்தது.( இராமாநுசக் கவிராயர் நன்னூல் விருத்தியுரை பக்கம். 79. முதற்பதிப்பு1846 – ஆண்டு நூலாசிரியரின் முகப்புக் கடித ஒப்பத் தேதியின்படி-)

    அதில் இந்நூற்பா கீழ்க்கண்டவாறு உள்ளது,

    “தோன்ற றிரிதல் கெடுதல் விகார
    மூன்றுமொழி மூவிடத்தது மாகும்”

    என் கணிப்பு சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. உ.வே.சா பதிப்பிற்கும் இராமநுசக் கவிராயரின் பதிப்புக்கும் உள்ள வேறுபாடினைக் கவனித்தீர்களா..?

      முதல் அடியின் ஈற்றுச் சீரில் உள்ள ஒரு மகர மெய் இராமாநுசக் கவிராயரின் பதிப்பில் இருக்கிறது. உ.வே.சா பதிப்பில் இல்லை.
      உ.வே.சா, அதைப் பொருள் விளங்கப் பிரித்து, “விகாரம்” என்று எழுதியிருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் மொழி புணர் இயல்பின்படி இங்கு “விகார மூன்று” என்றே வரல் வேண்டும்.

      என் ஐயப்பாட்டிற்கான துணைக் காரணங்களில் இது ஒன்று எனினும் முதன்மைக் காரணம் வேறு.

      “மூன்று மொழி” என்பதைக் கவனியுங்கள்.
      இங்கும் “மூன்றும் மொழி” என்றுதான் இருக்க வேண்டும்.
      புணர்ச்சி இயல்பின்படியே இது மூன்று மொழி என்று எழுதப்பட்டுள்ளது.

      சரி…விஷயத்திற்கு வருகிறேன்.

      இந்த ஒரு மகரம் அதுவும் புணர்ச்சியில் மறைந்ததைப் பொருள் விளங்குவதற்காக உ.வே.சா. காட்டியது பெருங்குற்றமா எனக் கேட்டால்..?

      சரி….. நான் ஏன் இதில் உள்ளே புகுந்து இந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடு பட்டேன் தெரியுமா? என் ஐயத்திற்கான முதல் காரணமும் அதுதான்.

      நீங்கள் ,

      தோன்றல் விகாரம்,

      திரிதல் விகாரம்,

      கெடுதல் விகாரம் என்றெல்லாம் சொல்லி எடுத்துக் காட்டுகள் தருகிறீர்கள் இல்லையா?

      இவ்விகாரங்களுக்கான எடுத்துக்காட்டுகள் எல்லாம் இந்நூற்பாவிலேயே இருக்கின்றன.

      இதோ,

      நூற்பாவில் வரும்,

      1) மூ+இடத்தது= மூ+வ்+இடத்தது= நிலைமொழி வருமொழி புணர்ச்சியின் இடையில் உயிரை ஒட்டுறுத்த வகர உடம்படுமெய் தோன்றிற்றாகையால் இது தோன்றல் விகாரம்.

      2) தோன்றல் + திரிதல் = தோன்ற றிரிதல் என நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் லகரம் றகரமாகத் திரிந்ததால் இது திரிதல் விகாரம்.

      ( நான் ஏன் ம் தேடினேன்……?

      என் சந்தேகத்தின் முதற்காரணம் ... அது இதற்காகத்தான்.

      இந்தக் கெடுதல் விகாரத்தைக் கவனியுங்கள்.)

      3) விகாரம் + மூன்று = விகார மூன்று, நிலைமொழி வருமொழிப் புணர்ச்சியில் மகரமெய் கெடுவதால் இது கெடுதல் விகாரம்.

      ஒரு விதியைச் சொல்லும் சூத்திரத்திற்குள்ளேயே அதற்கான எடுத்தக்காட்டுகளை அதனுள் பொதிந்து வைத்திருக்கும் இலக்கணக்காரனின் நுட்பத்தை இந்தச் சந்திபிரித்து எழுதப்படும் மரபு கொன்றுவிடுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

      இவ்வாறு ஒருவிதியையே அவ்விதிக்கான எடுத்துக்காட்டாயும் கொள்ளுதலை இலக்கணங்கள் ‘உடம்பொடு புணர்த்தல்’ என்கின்றன.

      இன்று சந்திபிரித்துக் கொடுத்தாலே பழம் நூல்களைப் படிக்க இடர்படுவோர் மத்தியில் இதுபோல் கொடுத்தால் நம் பக்கமே வரமாட்டார்கள் என்பது வேறுகதை! ( நானும் அதுவே செய்கிறேன்.)

      நீங்கள் தமிழ்ப்பேராசிரியர் என்பதால் அறிந்ததைப் பகிர்ந்து போகிறேன் அவ்வளவே!

      ஆரம்பத்தில்,

      தமிழ் இனியன் என்பது தமிழினியன் என்று புணரல் விகாரப்புணர்ச்சி ஆகாது அது இயல்புப் புணர்ச்சியே என்பதற்கான காரணம்,

      “ உடல்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே ”
      என்பதனால்.
      உடல் மேல் உயிர் ஒன்றுவது இயல்பே அன்றி விகாரம் அன்று என்பதே அதைநாம் இயல்புப் புணர்ச்சி எனக் கொள்ளக் காரணம்.

      இதிலும்,

      உடல்மேல் + உயிர் = உடல்மேலுயிர்

      என உடல்மேலுயிர் ஒன்றுதலுக்குச் சான்றாவதை நூற்பாவிலேயே எடுத்துக்காட்டையும் வைத்திருக்கிறான் பார்த்தீர்களா….???!!!!

      மென்மேலும் கற்பியுங்கள்.
      கற்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. வாருங்கள் அய்யா, வணக்கம்.
      தாங்கள் எல்லாம் என் பதிவினைப் படித்து கருத்துக்களைப் பகிர்வதே நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
      தங்களுக்குச் சிரமம் இல்லையெனின் எவ்வளவு பெரிய பின்னூட்டம்யினும் பதில் தருகிறேன்.
      தமிழ்+இனியன் =தமிழினியன்,
      ஆம் தங்களுக்கு தெரியாத? புணர்ச்சி இது மட்டுமா?
      எல்லாவற்றையும் நான் ஒரே இடத்தில் சொல்ல இயலாது இல்லையா? அது இன்னும் மிரட்டும் என்பது தான்.

      இவையெல்லாம் தாங்கள் சொல்ல வந்த செய்திக்கு முன்னோட்டம் என்று நான் அறிவேன்.
      ஒரே சொல்லில் இரண்டு அல்லது 3 வரும் என்பதும் தாங்கள் அறிந்தததே,
      நான் சுட்டிய நூற்பா என் நினைவில் இருந்து எழுதியது, பிரித்து எழுதினால் படிப்பதற்கு எளிது என்று தான்.

      அது மிகப் பெரிய தவறு என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.
      தங்கள் உள்ளுணர்வுக்கு என் நன்றிகள்.
      பதிப்பாசிரியர்கள் இன்னும் எத்துனை நூற்பாக்கள் மாற்றினரோ,
      தங்களின் ஒப்பீடுகள் சரியே,
      அய்யாவை நான் கேள்விப்பட்டுள்ளேன். பார்த்ததில்லை.
      என் அடுத்த பதிவு பண்புப்பெயர் புணர்ச்சி தான்,

      எடுத்துக்காட்டுகள் சிறு சொற்கள் என்றே கொடுத்தேன். இனி தாங்கள் சொன்னது போல் முயற்சிக்கிறேன்.
      இன்று சந்திபிரித்துக் கொடுத்தாலே பழம் நூல்களைப் படிக்க இடர்படுவோர் மத்தியில் இதுபோல் கொடுத்தால் நம் பக்கமே வரமாட்டார்கள் என்று தாங்கள் சொல்வது சரியே,
      ஆயினும் நான் தமிழ்ப்பேராசிரியர் என்பதால் கட்டாயம் சரியாகத் தான் செய்ய வேண்டும்.
      தாங்கள் அறிந்ததைப் பகிர்ந்து போங்கள்.

      மென்மேலும் கற்பியுங்கள்.
      கற்கிறேன்.
      இதானே வேனாங்கிறது. யார் யாருக்கு கற்பிப்பது.
      தெரிந்ததைப் பகிர்ந்தேன்.
      தொடர்ந்து நெறிப்படுத்துங்கள்.
      தங்கள் வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள் பல.
      பிழை இருப்பின் சுட்டுக.











      Delete
    3. பேராசிரியர்க்கு வணக்கம்.

      மிகத்தாமதமாக இப்போதுதான் என் பின்னூட்டத்திற்கு உங்கள் மறுமொழி காண நேர்ந்தது.

      இதுபோன்ற பதிவுகளில், சந்தி பிரித்து எழுதுதல் தவறு என்கிற தொனி அதில் வெளிப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.

      இன்றைய தமிழில், அப்படிக் கொடுப்பதுதான் எளிதாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

      ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை ஏற்கும் போது நாம் இழப்பது என்ன என்பது பல நேரங்களில் அறியப்படாமலே போகிறது.

      அல்லது,

      அல்லது இழப்பு இவ்வளவுதானே என அலட்சியப்படுத்தப் படுகிறது.

      இலக்கணச் சூத்திரங்கள் செறிவு மிகுந்தவை. இறுக்கமான கட்டமைப்பைப் உடையவை.

      வடமொழியில் சொல்வார்கள், “சூத்திரத்தில் ஒரு எழுத்தைக் குறைக்க முடித்தால் அவ்வாசிரியன் ஓர் ஆண் மகனைப் பெற்ற மகிழ்ச்சி அடைவான்” என்று.

      ( ஆண் மகனைப் பெற்றால்தான் மகிழ்ச்சி என்பது உங்கள் கருத்தா என்று கேட்டுவிடாதீர்கள் - இது அவர்கள் சொன்னது)

      இது தமிழுக்கும் பொருந்தும்.

      வேண்டாத சொற்களென நமக்குப் படுவதைக் கூட விதப்புக் கிளவி என்றும் இலேசென்றும் கொண்டு பொருளுரைப்பர் நம் உரைக்காரர்.

      தமிழ்ப்பயிற்று முறை தமிழ்க்கல்வி மரபில், இந்தச் சந்திபிரித்து எழுதப்படல் - படிக்கப்படல் என்பவற்றில் நாம் இழப்பன வற்றின் ஒரு துளியைச் சுட்டிச் சென்றேனே அன்றி,
      பதிவுலகில் பொதுப் பட யாவர்க்கும் கூறும் போது இது போல் சந்தி பிரித்துக் கொடுத்தலே எளிதாகும் என்பதே என் கருத்தும்.
      நானும் அவ்வாறே செய்கிறேன்.

      தமிழ் உயர்கல்வி வகுப்புகளில் இதன் அவசியம் புரிந்து கொள்ளப்படவேண்டும். வலியுறுத்தப் படவேண்டும். அது உங்களைப் போன்றோரால் மட்டுமே இயலுவதாகும் என்பதால் கூறிச் சென்றேனே அன்றி வேறில்லை.

      இன்னொரு புறம் பார்த்தால் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரமும் எழுதும் துணிவை அளித்தது என்பேன்.

      பண்புப் பெயர் புணர்ச்சியில் எனக்குப் பல ஐயங்கள் உண்டு.
      இதுகாறும் விடைதெரியாதவை பல.

      உங்களது அடுத்த பதிவு மூலம் அவற்றைத் தெளிவு படுத்திக் கொள்ள, “ பருகவனன்ன ஆர்வத்தனாகிக் ” காத்திருக்கிறேன்.

      யார் யாரிடம் கற்பது என்கிற பேதமெல்லாம் எனக்கு இல்லை.

      புதிய செய்திகளை, அறியாதவற்றை யார் சொல்லித் தந்தாலும் கற்கப் பெருவிருப்புற்றிருக்கிறேன்.

      எனவே அறியத் தாருங்கள்.

      நன்றி.

      Delete
    4. வாருங்கள் அய்யா, வணக்கம். தங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனக்கு மீள் வருகைத்தந்தற்கு என் நன்றிகள் பல,
      ஒரு சிலர் செய்யக் கூடாத செயல்கள் உண்டு. அப்படித் தான் நானும் சிலவற்றைச் செய்ய கூடாது என் கல்வியின் வழி அது,எனவே தான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்.
      ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை ஏற்கும் போது நாம் இழப்பது என்ன என்பது பல நேரங்களில் அறியப்படாமலே போகிறது.
      உண்மைதான் எல்லாவற்றிலும்.

      தமிழ் உயர்கல்வி வகுப்புகளில் இதன் அவசியம் புரிந்து கொள்ளப்படவேண்டும். வலியுறுத்தப் படவேண்டும்.
      என்னால் இயன்றவரை நான் அவ்வாறு தான் செய்துக்கொண்டுள்ளேன்.
      தமிழ்மொழியில் என்ன இல்லை, என்று மட்டும் கூறாமல் இருக்கும் எல்லாவற்றையும் என்னால் முடியும் வரைப் பிறருக்கு தந்துபோக வேண்டும் என்பதே என் அவா.
      யார் யாரிடம் கற்பது என்கிற பேதமெல்லாம் எனக்கு இல்லை.
      நானும் அவ்வாறே, என் அனுபவம் மிகக்குறைவு, தாங்கள் நோக்கும் பார்வை விசாலமானது.

      புதிய செய்திகளை, அறியாதவற்றை யார் சொல்லித் தந்தாலும் கற்கப் பெருவிருப்புற்றிருக்கிறேன்.
      காத்திருக்கிறேன் என்றும்.
      இன்னொரு புறம் பார்த்தால் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரமும் எழுதும் துணிவை அளித்தது என்பேன்.
      நன்றி. இச்சுதந்திரம் என்றும் அப்படியே, தொடர்ந்து வாருங்கள் நெறிபடுத்துங்கள். நன்றி.

      Delete
  14. அருமையான விளக்கங்கள் (கருத்துரையிலும்)...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி டிடி சார். தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  15. தமிழை எளிமையாகவும் இனிமையாகவும் கற்றுத் தரும் தங்களை எப்படிப் போற்றுவேன். மிக்க நன்றி !கருகும் ஆவல் பெருகுகிறது. வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இனியா,என் எழுத்து தங்களுக்கு இனிமையாக உள்ளது என்பது நிஜமா? அப்படியாயின் இனியும் இனிமையாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
  16. மன்னிக்க கற்கும் ஆவல் என்று வாசியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை இனியா, இது ஒரு செய்தியா? நான் மாற்றி படிக்கிறேன்.நன்றி இனியா.

      Delete
  17. இலக்கண அறிவு என்பதானது பழகப் பழகவே மேம்படும். பயன்பாடு மூலமாக இன்னும் அறிந்துகொள்ளலாம். தங்கள் பதிவுகளின் மூலமாக அவ்வாறான ஒரு (படித்ததைப் பயன்படுத்தும்) முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா, தாங்கள் சொல்வது உண்மைதான் பழகப்பழக மேம்படும் என்பது சரியே.நன்றிய்யா.

      Delete
  18. தோன்றல் - ஒரு புதிய எழுத்து தோன்றுதல்
    எ-கா: பூ + சரம் = பூச்சரம்
    திரிதல் - ஓர் எழுத்து இன்னோர் எழுத்தாக மாறுதல்
    எ-கா: பொன்+குடம்=பொற்குடம்
    கெடுதல் - ஏற்கெனவே உள்ள ஓர் எழுத்து நீங்குதல்
    எ-கா: மரம்+நிழல்=மரநிழல்
    என்றவாறு இன்றைய வகுப்பை
    இனிதே நடாத்தி முடித்துள்ளீர்கள்...
    இனி நம்மவர் வலைப்பூக்களில்
    பிழையின்றித் தமிழில் பதிவுகளைப் பார்க்கலாம்.

    ReplyDelete
  19. வாருங்கள், என் பதிவுகளில் காணவில்லையே என நினைத்தேன். ஆஹா, நான் இனி இன்னும் கவனமாக எழுதனும். நன்றி தங்கள் வருகக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  20. வணக்கம் தோழர். அருமையான பதிவு. தோன்றல், திரிதல், கெடுதல் ஆகியவற்றை லகுவாக புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. உங்கள் வலைப் பக்க முகவரியல் என் வலையின் முகப்பில் வைத்து விட்டேன். பாருங்கள். இனி தொடர்ந்து வாசிக்க இயலும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழர், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

      Delete
  21. அருமை ...
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மது, தங்கள் வருகைக்கு நன்றி.
      தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. அடே டே... இவ்வளவு அழகாக எழுதுங்கின்றீர்களே, வாழ்த்துக்கள். ஒரு விடயத்தை எடுத்து கொண்டு நூல் பிடித்தார் போல் விளக்குவது மிகவும் கடினமான செயல். அது தமக்கு நன்றாக வருகின்றது. அடுத்த சில நாட்கள் பயணத்தில் செல்ல போகின்றது. அது முடிந்து மீண்டும் வீடு வந்து சேர்ந்த வுடன் தங்களின் மற்ற பதிவுகளை படிக்க அவா ...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா, தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். தங்கள் பணம் இனிதே அமையட்டும். பின் வாருங்கள். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
    2. ஆஹா பயணம். நல்லா சிரித்தீர்களா?

      Delete
  24. தாமத வருகைக்கு பிரம்படி கிடையாது தானே...?

    அனைவருக்கும் புரியும்படி அருமையாக விளக்கிய விதம் சிறப்புங்க . தொடர்கிறேன்.

    ReplyDelete
  25. வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்பு தானே கொடுத்தால் போகுது,

    ReplyDelete
  26. வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்பு தானே கொடுத்தால் போகுது,

    ReplyDelete
  27. வணக்கம் சகோதரி.

    இந்தப் பகுதியையும் தெளிவாகச் சொல்லித் தந்து வழி நடத்தியமைக்கு நன்றி சகோதரி. தொடரும் அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  28. எங்கேயோ இருந்து எங்கேயோ தாவிட்டிங்களே?

    ஆமாம் இதில் எது உங்களுடைய ...........?

    பதிவு அற்புத தொகுப்பு.

    கோ

    ReplyDelete
    Replies
    1. இந்த பின்னூட்டம் எந்த பதிவுக்கு, பார்த்து சொல்லப்பா? , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  29. தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் பற்றித் தெரிந்து கொண்டேன். தொடருங்கள். விளக்குவது எளிதில் புரியும் படி இருக்கிறது. தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  30. சொற்களின் புணர்ச்சி, விகாரங்கள் பற்றி பள்ளியில் கற்றதை இங்கு மீண்டெடுத்து நினைவு கூர்ந்தோம். மிக்க நன்றி சகோதரி!. விஜு ஆசானின் கருத்துரையையும் வாசித்தோம். ஏனென்றால் அவர் நிச்சயமாக நல்ல விளக்கங்களுடன் வருவார் என்று அறிந்ததால். அவரது விளக்கங்களைக் குறித்துக் கொண்டோம்.

    ஸ்பாஆ தாங்கலப்பா....ஹஹஹஹஹ உங்க ரெண்டுபேரோட அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும், விளக்கங்களையும், அறிவு ஜீவிகளின் உலகிற்குள் புகுந்து மீண்டு வர முடியாமல் எங்கு செல்வது என்று திக்குத் தெரியாத காட்டில் உலவுவது போல இருக்கு....நாங்கல்லாம் பாமரங்கப்பா.....ஹஹஹ்ஹ ஜோக்ஸ் அபார்ட்....அருமையான பதிவு......

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள், ஆம் அவரின் விளக்கங்கள் என்னை மேலும் சரிசெய்தது. அய்யோ இது என்ன அபத்தம், அவரோட நான்,,,,,,,,,,,,,,,
      இல்லை அவரின் எழுத்துக்கள் முன் என்னுடையவை,,,,,,,,,,,,,,,,,,
      அவரின் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்து நான் கவிதை பதிவதை விட்டுவிட்டேன்.
      இந்த அளவுக்கு விவகாரமான ஆளை நான் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார்களிடம் கூட கண்டதில்லை. எனக்கு தெரிந்த வரையில் அவரின் கூர் நோக்கு செய்திகள் வித்தியாசமானவை,
      இருந்தாலும் விடமாட்டேன் அவரைப் போல் முயற்சிக்கிறேன். பூ வோடு சேர்ந்த நார்,,,,,,,,,,,,,,,,,,,,,
      தாங்கள் என் பல பதிவுகளை உடன் படித்து கருத்து சொல்லியுள்ளீர்கள். நன்றி.மீண்டும் என் உளம் நிறைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      Delete
  31. வணக்கம் சகோதரி!

    அருமையான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள்!
    தோண்டத் தோண்டத்தான் சுரக்கும் நீர் என்பர்கள்.
    அதுபோலக் கற்கக் கற்கத்தான் பெருகும் அறிவும்.
    நல்ல பகிர்வு. நன்றி!

    ஐயா பாரதிதாசன் அறிமுகத்துடன் இங்கே நுழைந்தேன்.
    ஏற்கனவே நீங்கள் என் வலைப்பக்கம் வந்து வாழ்த்திவிட்டீர்கள்.
    என் வருகையிற்தான் தாமதம்.
    தங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றியுடன்
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  32. வாருங்கள் சகோ,
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா,
    தொடரவும்.

    ReplyDelete