ஓரெழுத்து சொல்
ஓரெழுத்துக் கூட ஒரு சொல்லாகப் பொருள் தரும் சூழ்நிலை தமிழில் உண்டு. அதனை அன்றைய மரபுக் கவிதைகளில் காணலாம். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக
வந்து பொருள் தருவது
ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச்
சொல் என்று பெயர்.
உதாரணமாக தை.. இந்த “தை” என்ற
எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து
“தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய
சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
அதனைக் காண்போமே,
அ - எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
ஏ - அம்பு
ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா - சோலை, காத்தல்
கூ - பூமி, கூவுதல்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன், தலைவன், இறைவன்
சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ - இகழ்ச்சி, திருமகள்
சே - எருது, அழிஞ்சில் மரம்
சோ - மதில்
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு
து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - நாயகன், தெய்வம்
தை - மாதம்
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நொ - நொண்டி, துன்பம்
நோ - நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
பா - பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு
பை - பாம்புப் படம், பசுமை, உறை
போ- செல்
மா - மாமரம், பெரிய, விலங்கு
மீ - ஆகாயம், மேலே, உயரம்
மு -மூப்பு
மூ - மூன்று
மே - மேன்மை, மேல்
மை - அஞ்சனம், கண்மை, இருள்
மோ - முகர்தல், மோதல்
யா - அகலம், மரம்
வா - அழைத்தல்
வீ - பறவை, பூ, அழகு
வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
ஏ - அம்பு
ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா - சோலை, காத்தல்
கூ - பூமி, கூவுதல்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன், தலைவன், இறைவன்
சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ - இகழ்ச்சி, திருமகள்
சே - எருது, அழிஞ்சில் மரம்
சோ - மதில்
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு
து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - நாயகன், தெய்வம்
தை - மாதம்
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நொ - நொண்டி, துன்பம்
நோ - நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
பா - பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு
பை - பாம்புப் படம், பசுமை, உறை
போ- செல்
மா - மாமரம், பெரிய, விலங்கு
மீ - ஆகாயம், மேலே, உயரம்
மு -மூப்பு
மூ - மூன்று
மே - மேன்மை, மேல்
மை - அஞ்சனம், கண்மை, இருள்
மோ - முகர்தல், மோதல்
யா - அகலம், மரம்
வா - அழைத்தல்
வீ - பறவை, பூ, அழகு
வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்
இன்றைய தொழில்நுட்ப உலகில் அழைப்பேசி, கணனி, இணையம் போன்றவற்றின் வருகை பல ஓரெழுத்து ஒரு சொற்களை இளம் தலைமுறையினரிடம்
தோற்றுவித்துள்ளன. அவை இலக்கணம் ஆகா.
ஓரெழுத்துச் சொல்...பொருள்...அறியத்தந்தைமக்கு நன்றி சகோ
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Delete8 என்பதற்கான வரி வடிவம் தானே '' அ '' ..
ReplyDeleteமற்றபடி நீங்களும் பாடம் நடத்தத் தொடங்குங்கள்!..
மாலை நேர வகுப்பில் சேர்ந்து கொள்கின்றோம்!..
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். ஆம் இலக்கணம் அதைத் தான் சொல்கிறது. தங்களுக்கு பாடம் நடத்தும் அளவிற்கு நான் சான்றோன் அல்ல. தங்களிடம் தான் நான் கற்றுக்கொண்டது உண்டு.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteதங்கள் பகிர்வு நன்று. தெளிவாக புரியும் வகையில் ஓரெழுத்துச் சொல்லின் பொருள்கள் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் வாழ்த்துக்கும் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteபடிக்கத்தொடங்கி விட்டேன் மீண்டும் பலன் உண்டு எனக்கு நன்றி.
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். படிக்க தொடங்கியதே தங்கள் பதிவுகள் கண்டுதான், இது எப்படியிருக்கு? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteதெளிவாக புரியும் வகையில் அருமையான பதிவு கொடுத்திருக்கீங்க.
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteதமிழின் பெருமை
ReplyDeleteதமிழின் அருமை
உணர்த்தும் உன்னத பதிவு
நன்றி சகோதரியாரே
அன்பின் சகோ,
Deleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
அருமை...
ReplyDeleteGMB ஐயாவின் தளத்தில் எனது மறுமொழி ஒன்று (தொகுப்பு) உண்டு...
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். அவசியம் உடன் பார்க்கிறேன். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஎவ்வளவு தகவல்கள் தமிழில் தெரிந்து கொள்ள இருக்கின்றன...
ReplyDeleteநீங்கள் காட்டியதுள் தொல்காப்பியம் காட்டும் ஓரெழுத்து ஒரு மொழி, சட்டென நினைவிற்கு வருகிறது..
“ஐ வியப்பாகும்”..
நிறைய கற்க வேண்டிவற்றைப் பதிவிடுகின்றமைக்கு நன்றிகள்.
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். நன்றி ஊமையாரே,
Deleteதங்களின் வியப்பு சின்ன பிள்ளைத்தனமான பதிவு என்று தானே,
நான் இப்ப தான் கற்க தொடங்கியுள்ளேன்.
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
This comment has been removed by the author.
ReplyDeleteயா - அகலம், மரம்,இதுதான் உண்மையான அர்த்தம் ,இதை அறியாமல் இளம் தலை முறையினர் இதை அதிகம் பயன் படுத்துகிறார்களே :)
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். யா என்றால் அவர்கள் நாங்கள் மரம் என்றும் அகலம் என்றும் சொல்வார்களோ என்னவோ,தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteமிகவும் பயனுள்ள பகிர்வு. இவற்றில் பாதிதான் எனக்கு ஏற்கனவே தெரிந்தவை. மீதி இன்று தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது தங்களின் இந்தப்பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் பாராட்டுக்கும்,தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deletewow நன்றி நன்றி இதில் எதோ கொஞ்சம் தெரிந்திருக்கும் ஆனால் இவ்வளவு விரிவாக இப்போ தான் அறிந்தேன்.பயனுள்ள பதிவு.
ReplyDeleteஎங்கே என் பக்கம் வருவதே இல்லையே. அட வழி மறந்து போச்சா என்ன ஹா ஹா ....
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். அன்பின் இனியா தங்கள் பக்கம் வராமல் இருப்பேனா? வருகிறேன்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஆ......இம்புட்டு இருக்கிறதா...?????
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். அப்புறம் எம்புட்டு என்று நினைத்தீர்கள்,தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஆ......இம்புட்டு இருக்கிறதா...?????
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான சொல் விளையாட்டு... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். தங்கள் கவியை விடவா? நான் ஏதோ தொகுத்து கொடுத்துள்ளேன்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஅட்டகாசமான தொகுப்பு தோழி! இது என் தோழி மாலதி அவர்கள் எழுதிய இதேபோன்ற பதிவு http://malathik886.blogspot.in/2014/05/blog-post_6661.html. நேரம்கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்!
ReplyDeleteசில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். அவசியம் உடன் தங்கள் தோழி தளம் செல்கிறேன். படிக்கிறேன் பகிர்வுக்கும் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteதாங்கள் தமிழிலுள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்துச் சொல்லாக விளங்குவதாக குறிப்பிடுகின்றீர்கள். ஆனால், இன்னோர் அறிஞர் அதிகமாகக் கூறுகின்றார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கினால் புரிந்துகொள்வீர்கள்.
https://yarlpavanan.wordpress.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&submit=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95
சில காரணங்களால் என்னால் உடன் வர இயலவில்லை. வருந்துகிறேன். அவசியம் உடன் தங்கள் தளம் செல்கிறேன். படிக்கிறேன். பகிர்வுக்கும் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,
Deleteவருந்துவதும் கவலைப்படுவது பதிவர்க்கு அழகல்ல......
ReplyDeleteஎனக்கு உடன் வந்து கருத்துச் சொன்னவர்களுக்கு என்னால் பதில் தர இயலாததனால் ஏற்பட்ட வருத்தம் கவலை. நன்றி தங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஒற்றை எழுத்தின் "மகி"மையினை எடுத்துரைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நல்ல பதிவு.
ReplyDeleteஇப்பவாவது புரிஞ்சிருக்கும் நான் யார் என்று...
தமிழில் "வா" என்ற ஒற்றை எழுத்தின் அர்த்தம் என்னவென்றால், "வாருங்கள் என் வலை பக்கமும்" என்று ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.
நட்புடன்
"கோ" - (பசுதோல் போர்த்தாத) அரசன்.
தங்கள் அன்பின் வருகைக்கு என் நன்றிகள் பல. நான் அறிவிளியே தாங்கள் இன்னார் என அறியயியலவில்லை, வருந்துகிறேன்.தங்கள் பக்கம் உடன் வருகிறேன். மீண்டும் நன்றி.
ReplyDeleteபள்ளி பருவத்தில் தமிழ் இலக்கணத்தில் படித்தது, தங்கள் பதிவின் மூலம் அறியாததை அறிந்து கொள்ளமுடிந்தது...நன்றி...
ReplyDeleteவாழ்க வளமுடன்...
வாருங்கள் சகோ,
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றி. தங்கள் பள்ளி நாட்களை மீட்டினேனோ?
நினைவு படுத்திக் கொள்ளவும் நினைவில் வைத்துக் கொள்ளவுமான பதிவு... பதிவின் முடிப்புப் பத்தி புன்னகையை வரவழைத்தது.
ReplyDeleteதங்களுக்கு, நினைவுக்கு எனும் போது மகிழ்ச்சி.ஆனால் புன்னகை,,,,,,,,, நன்றி தங்களின் வருகைக்கு.
Deleteஓரெழுத்துச் சொற்கள் பலவற்றின் பொருள் அறிந்தேன். புக்மார்க் செய்துகொண்டேன். நன்றி பாலமகி.
ReplyDeleteவாருங்கள் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteவாருங்கள் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஓரெழுத்து ஒரு மொழி பற்றிய தொகுப்பை அறியச் செய்தமைக்கு நன்றி மகி. குறித்து வைத்துக்கொண்டேன்.
ReplyDelete