Saturday, 16 May 2015

தமிழ் நாடகம் வளர்ந்த கதை 1

நாடகம் க்கான பட முடிவு

தமிழ் நாடகம் வளர்ந்த கதை

தொன்மைத் தமிழரின் வாழ்க்கையில் நாடகம் எந்தச் சூழலில் எப்படி தோன்றியது என்பதை அறிவதற்குமுன், கூத்து, நாடகம், நாட்டியம் முதலிய சொற்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் பயின்று வந்துள்ள வழக்காறு மற்றும் அவற்றின் பொருள் பற்றிக் காண்பது முக்கியமில்லையா?
     கூத்து என்ற சொல், கலித்தொகை தவிர சங்கஇலக்கியங்களில் இல்லை. கலித்தொகைக்கு முந்திய திருக்குறளில் முதலிலும், கலித்தொகைக்குப் பிறகு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றது.
கூத்துஆட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுஇளிந் தற்று (குறள் 332)

வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து (கலித் 65)

செருக்குறித் தாரை உவகைக்கூத்து ஆட்டும்(கலித்85)

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்து (சிலம்பு 3 12 13)

குமரிக் கோலத்து கூத்துள் படுமே (சிலம்பு 12)

கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் (சிலம்பு 26)

என்ற அடிகளில் கூத்து என்ற சொல்லாட்சியைப் பார்க்கலாம். இதற்கு முன் இச்சொல் தமிழ்ப் பரப்பில் வேறெங்கும் இல்லை.
      ஆனால் தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும் (கலித்தொகை தவிர) கூத்து என்ற சொல் இல்லாவிட்டாலும் கூத்தர் என்ற சொல் உண்டு. இச்சொல்லும் மிக அரிதாகவே பயின்று வந்துள்ளது.
  குதிப்பது கூத்து என்பர் சிலர். அது தவறு என்கிறார் ஆய்வாளர் வெ.மு.ஷாஐகான் கனி.அதனை ஏற்றுக்கொண்டே என் ஆய்வு தொடர்ந்த்து,
  அதன் ஏற்பு இப்படி தான்
 கூத்து, கூம்பு, கூடு, கூட்டு என்னும் சொற்களுக்கு வேர்ச் சொல் கூ என்பது கூ கூடு கூட்டு கூது என்னும் வடிவம் கன்னட மொழியில் உள்ளது. கூ என்பது ஒன்றுசேர் என்னும் பொருண்மையுடையது. கூத்து என்பது கூடி ஆடும் ஆட்டம் குறிப்பது என்று வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் தம் கலைக்களஞ்சியம் இரண்டாம் தொகுதியில் குறித்துச் செல்கிறார்.(பக்கம் 198)
கூத்து கூடியாட்டமாயின், வேலன் காந்தள் என்னும் கூடியாட்டம் ஆடிய வெட்சிக் காலத்திலேயே இச்சொல் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. இதன் வேர்ச்சொல் வேறு. அது எது?
40 comments:

 1. இதன் வேர்ச்சொல் வேறு. அது எது?---நீங்கள்தான் அதையும் சொல்லனும்

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டா போச்சு,,,,,,,,,,,,,,,
   தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.

   Delete
 2. வணக்கம்
  நல்ல தகவல் அறிந்தேன் தங்களின் பதிவுவழி தொடருங்கள் அடுத்த பகுதிக்கு காத்திருக்கோம்...பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம், சகோ, வாருங்கள்,
   தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 3. வேறு சொல் டீச்சர்தான் சொல்லனும். இரண்டாம் பாகத்துக்கு வருகிறேன்.
  ஷாஜஹான் - ஷாஐகான் என்று வந்து இருக்கிறது சகோ...

  ReplyDelete
  Replies
  1. டீச்சர் சொன்னா தான் எதிர்கேள்வி கேட்பீங்களே,
   பார்த்தீங்களா?
   அடுத்த வரியிலே,
   சரி சகோ, சாரி இல்ல, கணிப்பொறியில் அப்பப்ப எழுத்து உரு இருக்கும் இடம் மறந்து போவது தான். சரிசெய்துக்கொள்கிறேன், தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 4. அருமையான பதிவு விடைக்காக காத்திருக்கிறேன் ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அன்பின் இனியா, தங்கள் வாழ்த்துக்கும், அன்பின் வருகைக்கும் நன்றிகள்.

   Delete
  2. வாருங்கள் அன்பின் இனியா, தங்கள் வாழ்த்துக்கும், அன்பின் வருகைக்கும் நன்றிகள்.

   Delete
 5. பேராசிரியர்க்கு வணக்கம்.

  முதலில் தங்களின் இந்தப் பதிவு என்னைப் போன்றவர்களுக்குப் பெரிதும் உதவும் பயன்படும் என்பதனால் மகிழ்ச்சியும் நன்றியும்.

  முதலில் தொல்காப்பியத்தில் சுட்டப்படும் இக்கூத்தர் என்னும் சொல்லில் வரும் கூத்து, நாடகத்தோடு நாட்டியத்தையும் குறித்து வருவதாகும் என நினைக்கிறேன்.

  ஏனெனில், தொல்காப்பியம் சுட்டும், கோ வெல்லப் பாடிய உண்டாட்டும், காமுற்றுடல் மெலிவுற்ற தலைவியின் நோய் தீர நிகழ்த்தப்பெற்ற வெறியாட்டும், வென்ற வேந்தின் முன்னும் பின்னும் ஆடப்பெற்ற முன்தேர்ப் பின்தேர்க் குரவை யாட்டும், கூடார் கொன்றுதம் நாடே வெல்ல வயவர் ஆடிய வள்ளிக் கூத்தும், அஞ்சிப் பகைப்புலம் அலறி ஓட நெஞ்சு நிமிர்த்திக் கொன்றழித்த வீரமறவனுக்கு வேந்தன் கழலணிவிக்க, அவனைச் சுற்றி ஏனையோர் ஆடிய கழற்கூத்தும், வீழ்ந்த பகைவேந்து சுற்றி வாளொடு வென்ற வீரர் ஆடும் அமலைக் கூத்தும் கூத்தெனும் சொல் நாட்டியத்தைக் குறிப்பதைக் காட்டின.

  நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்று சொல்லும் தொல்காப்பியம் நாடக வழக்கென்பதைத் தனித்துக் காட்டுவதையும் நோக்க வேண்டும்.
  கலியும் பரியும் அதற்கு உரிமையுடைத்தென்னும் போது அப்பாடல் வடிவங்கள் அந்நாடகக் கூத்து நிகழ்த்தப் பெற்றபோது பாடற்குரிய தகுதிபெற்ற பாவடிவினதாகலாம்.
  தொல்காப்பியர், பாடலுக்கு இன்றியமையாதனவாகக் காட்டுகின்ற கூற்று, கேட்போர், முன்னம் ஆகியவை நாடகத்திற்கும் இன்றியமையாதனவாக உள்ளன. அன்றியும் வடநூலாற் நாடகவியலிற் கூறும், ரசமும் பாவமும், தொல்காப்பியத்தில், “பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளினவாய்” மெய்ப்பாட்டியலில் அமைந்திருக்கக் காண்கிறேன். உரையாசிரியர் இதனை, “மெய்யின் கண் தோன்றுவதால் மெய்ப்பாடாயிற்று” என்று சொல்லும் போது, இது செய்யுளைக் கடந்து கூத்திற்கே பெரிதும் பொருத்தப்பாடுறுகிறது.
  தங்களின் பதிவு மிக அருமை.
  ஆடற்கலையின் கோட்டோவியமாய் வகையுணர்த்தும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் குறித்தும் தாங்கள் பதிவில் சொல்ல வேண்டுகிறேன்.

  இவ்வளவு வளவளப் பின்னூட்டத்தின் பின்னும் உங்கள் கேள்விக்கான பதில்……..

  அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

  காத்திருக்கிறேன்.

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அய்யா தாங்கள் என்னைப் பேராசிரியர் என விளிப்பது சரியா?
   அது என் பணி மட்டுமே,
   ஆனால் கற்றுக்கொள்ள எவ்வளவோ,,,,,,,,,,,,,,,
   ஆம் அய்யா,
   நிறைய தெரியும் என்ற என் மண்ட கனம் இன்று இல்லை.
   முதலில் தங்கள் வருகைக்கு என் நன்றி.
   தங்கள் வழிகாட்டுதலுக்கு அடுத்த நன்றி.
   முதலில் தொல்காப்பியத்தில் சுட்டப்படும் இக்கூத்தர் என்னும் சொல்லில் வரும் கூத்து, நாடகத்தோடு நாட்டியத்தையும் குறித்து வருவதாகும் என நினைக்கிறேன்.
   ஆம், அது நான் ஆய்வில் கண்ட உண்மை.
   தமிழ் நாடகம் என்று பிறந்த்து என்றோ? எங்கே பிறந்த்து என்றோ? விடையினைத் தேடி நம் அறிஞர் பெருமக்கள், இறுதியில்
   என்று பிறந்தவள் என்றுண ராதஇயவ்பின ளாம் எங்கள் தாய்,
   என்ற பாணியில் நாடகத்தின் தோற்றத்தினையும் பழமையுடையது என்று கூறினர். இது சரியாக இருக்கலாம். ஆனால் ஆய்வாளருக்கு???????????
   சரி,
   தமிழ் நாடக்ம் பற்றிய தகவல்கள் தொல்காப்பியத்தில் நிறைய உண்டு,
   என்னால் அதைமட்டும் கொள்ள முடியல,
   எனவே இன்னும் சென்றால் என்ன?
   என்ற நிலையில்,
   ஆய்வாளர் வே.மு.ஷாஜகான்கனி அவர்களின் மனிதன் தோன்றிய காலம் தொட்டு எப்படி இருந்தான் என்ற சார்லஸ் டார்வின் பரிணாமக்கொள்கியில் இருந்து விளக்கி இருந்த்து எனக்கு ஏற்பளிப்பதாய் இருந்த்து.(சமயம் அமையும் போது அதனையும் விளக்குகிறேன்,)
   வேட்டைச் சமுகத்தைச் சேர்ந்த நம்முன்னோன் ஆடிய காதலும் போரும் கூத்தின் தொடக்கம் என்றார்.

   தீம்புனல் ஆயம் ஆடும், காஞ்சியம் பெருந்துறை(பதிற்,48)
   இன்னகை ஆயத் தாரோடு (குறுந்351)
   ஆம்.
   இப்படி காதலும் போருமாக நாகரிகமடைந்த தமிழர் வாழ்ந்த காலம் சுமார் 20,000 ஆண்டுகட்டுமுன் என்று கணிக்கலாம்.
   ஆடற்கலையின் கோட்டோவியமாய் வகையுணர்த்தும் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் குறித்தும் தாங்கள் பதிவில் சொல்ல வேண்டுகிறேன்.
   அய்யா என் அளவில் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் குறித்தும் நிச்சயம் தொகுத்து சரி செய்து பதிவிடுகிறேன்.
   தங்கள் வருகைக்கும் என்னை வளப்படுத்தும் கருத்திற்கும் என்றும் என் நன்றிகள் பல.

   Delete
 6. // இதன் வேர்ச்சொல் வேறு. அது எது?//

  நல்ல கூத்தாய் இருக்கிறதே ..... :) உங்களின் இந்தக்கேள்வி.

  இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து எழுதியுள்ள நீங்கள்தான் அதையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சொல்கிறேன் அய்யா, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
  2. சொல்கிறேன் அய்யா, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 7. முதலில் காட்டியுள்ள படத்தேர்வு அருமை.

  இதேபோன்ற கூத்து ஒன்றை நான் நேரில் பார்த்து ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதில் நான் என் கேமராவில் எடுத்துள்ள படமும் இணைத்துள்ளேன். முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கோ:

  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html
  http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

  அந்த நான் சொல்லும் கூத்துப்படம் மேலே கொடுத்துள்ள பகுதி-2 இல் காட்டியுள்ளேன்.

  ReplyDelete
 8. நாடகம் ஊடாகவே
  எழுத்துலகில் - நான்
  கால் பதித்தேன்...
  தங்கள் தொடரை பெரிதும் விரும்புகிறேன்
  இன்றைய திரைப்படங்கள் கூட
  நாடகங்களில் இருந்தே தோன்றியது!
  நாடகங்களில்
  வாசிப்பதற்கு வேறாக
  மேடையேற்றத்திற்கு வேறாக
  புனையப்படுகிறது
  கூத்து நாடகம் என்றால்
  பாடல்கள் தான் அதிகம் - அதுவும்
  விடிய நடிப்பார்கள்...
  இலங்கையிலும்
  வடமோடி, தென்மோடி என
  இரு கூத்துநாடகங்கள் முதன்மை பெறுகிறது.
  எனவே, தங்கள் தமிழ் நாடகம் வளர்ந்த கதை தொடரை
  பெரிதும் வரவேற்கிறேன்
  தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,
   என் முனைவர் பட்ட வழிகாட்டியவர்கள் தம் பேச்சில் இக்குறிப்புகளை சொல்லியுள்ளார். அறிவேன். பாடல்கள் அதிகம் என்பதை விளம்பரபடுத்திய காலமும் உண்டு. நன்றி தொடருங்கள் சகோ,

   Delete
  2. வணக்கம் சகோ,
   என் முனைவர் பட்ட வழிகாட்டியவர்கள் தம் பேச்சில் இக்குறிப்புகளை சொல்லியுள்ளார். அறிவேன். பாடல்கள் அதிகம் என்பதை விளம்பரபடுத்திய காலமும் உண்டு. நன்றி தொடருங்கள் சகோ,

   Delete
 9. அறிய காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், காத்திருங்கள். வருகைக்கு நன்றிகள் பல

   Delete
  2. வாருங்கள், காத்திருங்கள். வருகைக்கு நன்றிகள் பல

   Delete
 10. ஒரு நல்ல தலைப்பைத் தெரிவு செய்து எழுத ஆரம்பித்துள்ளீர்கள். பாராட்டுகள். இத்தொடர் பதிவு மூலமாக பல புதிய செய்திகளை அறிய காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் நன்றிகள் பல.

   Delete
  2. அய்யா தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் என் நன்றிகள் பல.

   Delete
 11. நேற்று பதிவு வெளியானதுமே - படித்து மகிழ்ந்தேன்..
  ஆயினும், வேலைக்குச் செல்ல வேண்டிய அவசரம்..

  வகுப்பு களை கட்டி விட்டது..

  அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களின் அணிவகுப்பு தொடர்வதற்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வகுப்பில் தாங்கள் சேர கட்டணம் கட்டாயம் உண்டு. இன்று கல்வியெல்லாம் காசாகிப் போனதால்,,,,,,,,,,,
   மகிழ்ச்சி. நன்றி.

   Delete
  2. வகுப்பில் தாங்கள் சேர கட்டணம் கட்டாயம் உண்டு. இன்று கல்வியெல்லாம் காசாகிப் போனதால்,,,,,,,,,,,
   மகிழ்ச்சி. நன்றி.

   Delete
 12. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு சொல்கிறேனம்மா, நன்றி.

   Delete
 13. கூத்து என்னும் நாடக கலை வளர்ச்சியைத் தங்களின் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது! தங்களின் ஆராய்ச்சி குறிப்புகள் பயனுள்ளன! தொடருங்கள்! கற்றுக்கொள்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.

   Delete
 14. Wow ! Fantastic article . Keep going akka . Sry i cant able to comment in tamil .

  ReplyDelete
  Replies
  1. தம்பியாரை நீண்ட நாட்களாக காணல, எந்த மொழியாயினும் புரிதல் எனின் நன்று.தொடர்ந்து வாருங்கள்.

   Delete
 15. முதலில் உங்கள் தலைப்பிற்கு வாழ்த்துகள்! அருமையான ஒரு தலைப்பு. அந்த வேர் சொல்லை அறிய காத்திருக்கின்றோம். சகோதரி!

  கூத்து என்பது நாட்டிய நாடகம் தானே?! தெருக்கூத்து என்று கூட உண்டுதான் இல்லையோ அந்தக் காலங்களில் இது ஒரு கலையாகவே இருந்தது தானே! இப்போது கூட கூத்துப்பட்டறை என்று சொல்லிக் கொடுக்கப்படும் பட்டறை சென்னையில் கூட இருக்கிறது ஆனால் நவீனக் கூத்துப்பட்டறை என்று.....

  ReplyDelete
 16. கூத்து என்பது நாட்டிய நாடகம் தானே. ஆம் அய்யா, அதன் மாறிய நிலை,
  இன்றும் சில இடங்களல் உண்டு, கூத்துப்பட்டறை நடக்கிறது. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 17. அப்படியே தாங்கள் கூத்துக்கும் கூத்து பட்டறைக்கும்உள்ள தொடர்பை பதிவிட்டால் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 18. அவசியம் அறியத் தருகிறேன். இரண்டும் கல்வியும் கல்விக்கூடமும் போல் தான். விரிவாக தருகிறேன். என்னையும் கேட்டதற்கு நன்றிகள் பல. தங்கள் மீள் வருகைக்கும்.

  ReplyDelete
 19. வேர்ச் சொல்அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரியாரே

  ReplyDelete
 20. வாருங்கள், தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 21. வாருங்கள் தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

  ReplyDelete