புணர்தல்
எனும் இயற்கை
கண்ணகி என்றால் கடுகிப் போ
மாதவி
என்றால் மடிமேல் வா
என்று கோவலன் மாதவியைத்
தேடிச்சென்றான்.
ஆனால்,,,,,,,,,, ஆஹா,
நான் என்ன நடத்த வந்து என்ன நடத்துகிறேன். என்ன பாடம் ஆரம்பிக்கலாம் தானே, நான்
சொல்ல வந்த பாடம் இதுவல்ல, பொதுவாக இந்தச் சொல்லை நாம் பாலியல் சார்ந்த
அர்த்த்திலேயே பயன்படுத்தியதால் புணர்ச்சி என்றால் அப்படியே பார்க்கிறோம்.
அப்படியும், இரண்டு உயிர்கள் தம்முள் புணர்வது புணர்ச்சி எனப்படும். அதனை
எல்லாவற்றிர்க்கும் பயன்படுத்தலாம்.
இங்கு இலக்கணத்தில் இரண்டு தம்முள் புணரும்
போது, அதாவது இரணடு சொற்கள் தம்முள் சேர்தலை இலக்கண ஆசிரியர்கள் புணர்ச்சி
என்றனர்.
இதன் பொருள் சேர்தல்,கூடுதல் என்பது, இரு
சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது இரண்டு வகையான புணர்ச்சிகள் நடைப்பெறும்.
1.இயல்புப் புணர்ச்சி
2.விகாரப் புணர்ச்சி
இயல்புப் புணர்ச்சி
என்றால் இரு சொற்கள் சேரும் போது எந்த மாற்றமும் நிகழாது.
இது இயல்புப்
புணர்ச்சி.
இரு சொற்கள் என்பது
நிலைமொழி வருமொழி
அப்படின்னா?
அதான்
பூ+மாலை
இதில் பூ என்பது
நிலைமொழி,
மாலை என்பது வருமொழி,
இன்னும் எளிமையா
+ க்கு முன்னால் உள்ளது நிலைமொழி,
பின்னால் உள்ளது வருமொழி.
சரியா,
இப்ப இதனையே
எடுத்துக்கொள்வோம்.
பூ+மாலை இது இரண்டும்
சேர்ந்தால்
பூமாலை
அதானே, இதில் ஒன்னுமே
ஆகலை இல்லையா?
அதான் இயல்புப்
புணர்ச்சி.
சரிங்க
விகாரப் புணர்ச்சி ஏதாவது
வரும்.
அதான்,
சரியா சொன்னீங்க
எப்படி?
இந்த பூ அப்படியே
இருக்கட்டும்.
மாலைக்கு பதில் வேறு சொல்
எடுத்துக்கொளவோம்.
சரம்
இது எப்படி புணரும்.
பூ+சரம்
இது பூச்சரம்
என்றாகும்.
இல்ல,
ஏன் ச் வரனும்
என்று நமக்கு தோன்றும். அது அப்படித்தான் என்று சொன்னால் என்ன ஆகும். என் மேல்
கோபம் கன்னா பின்னா என்று வரும்.
நான் அப்படி சொல்ல
மாட்டேன், அதற்கும் ஒரு விதி இருக்கு. அதைப் பின்னால் சொல்கிறேன். இப்ப பூச்சரம்,
இங்கு இடையில் ஏதோ நடந்து இருக்கு,
அது என்ன?
ச் தோன்றி இருக்கில்லையா?
இது தான் விகாரப் புணர்ச்சி என்கிறார்கள்.
இது 3 இடங்களில் வரும்
அதுக்கு முன்னாடி
இயல்புப் புணர்ச்சி புரிந்ததா?
அப்படீன்னா இயல்பா
புணரும் 10 சொற்கள் எழுதனும்.
அய்யோ சும்மா சொன்னேன்.
படித்து கருத்து மட்டும் சொன்னால் அடுத்த விகாரப் புணர்ச்சி வருவேன்.
இயல்புப் புணர்ச்சி மற்றும் விகாரப் புணர்ச்சி பற்றிய இலக்கிய உதாரணங்கள் மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன. எப்போதோ பள்ளியில் படித்ததை நினைவூட்டியுள்ள அருமையான பதிவு. தொடரட்டும் தங்களின் இதுபோன்ற தமிழ் இலக்கியச்சேவைகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல
Deleteபள்ளி நாள்களில் இலக்கணத்திற்குப் பயந்து ஓடினோம். தற்போது ஓடமுடியவில்லை. படித்தேன். ஓரளவு புரிந்தது-
ReplyDeleteஓட முடியாமல் படித்தீர்களா? அப்ப நான் இன்னும் மாற்றி சொல்லனும். முயற்சிக்கிறேன்.
Deleteஆஹா இலக்கண வகுப்பு.... நல்ல விஷயம். தொடருங்கள்.
ReplyDeleteவாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteநேரில் பேசுவது போல அழகான விளக்கம்...
ReplyDeleteநன்றி திரு டிடி சார். ஆனாலும் தாங்கள் சொல்வது சூப்பர்.
Deleteமுனைவர் ஐயா அவர்களாலேயே ஓட முடியவில்லை எனில் நாமெல்லாம் எந்த மூலைக்கு!..
ReplyDeleteஅது - சும்மா நகைச்சுவைக்கு!..
ஓட விரும்பவில்லை என்பதே உண்மை!..
ஏனெனில் நல்ல தமிழ் வகுப்புகள் ஆரம்பமாகி இருக்கின்றன..
மீண்டும் - வகுப்பறை!.. மகிழ்ச்சி..
டீச்சர் இதோ வீட்டுப் பாடம்!..
மாமரம், வாழைமரம்,
பனைமரம், கண்மணி,
மணிவிளக்கு,மதுரசம்,
தேன்மொழி, பொன்மலை,
மாலைமதியம், முத்துமாலை..
தப்பா இருந்தா பெஞ்சு மேல நிக்கனுமா!?..
மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் வருகைக்கு. அனைத்தும் சரி. தாங்கள் தரும் ஊக்கம் என் வளர்ச்சி. நன்றி. பெஞ்சு மேல் நிற்க.
Deleteஅய்யோ..இலக்ணமா....?? அப்போது வகுப்பை “கட்” அடித்தேன்.. இப்போது அப்படி செய்யமுடியாது என்பதால் ஓடிவிடாமல் படித்துவிட்டேன. ஒருதடவைக்கு இரு தடவை படித்தால் எனக்கும் புரியும் என்று நிணைக்கிறேன்.
ReplyDeleteஇந்த கட் அடிக்கற வேலை எல்லாம் வேண்டாம். ஒழுங்கா வந்து படிக்கனும் சரியா? அப்படின்ன மிரட்டவா முடியும்? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteகுறிஞ்சியின் உரிப்பொருள் கட்டுரையோ என்றார்வமிகுதியில் விரைந்தோடி வந்தவனுக்கு இன்பதிர்ச்சியாய் அமைந்தனதம் கட்டுரை .
ReplyDeleteஎப்படி ? எல்லாமே விகாரப்புணர்ச்சிலயே ஒரீ கருத்துரை இடுவோம்ல
தம்பியாருக்கு அடுத்து உரிப்போருள் தான்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteபேராசிரியர்க்கு வணக்கம்.
ReplyDeleteஇலக்கணம் என்றாலே காத தூரம் ஓடிய என்போன்றோர்க்கு இது போன்ற முறையில் அது கற்பிக்கப்பட்டிருக்குமானால், என்றோ தேறியிருக்கலாம்.
தங்களின் முயற்சி நிச்சயம் போற்றப்படும்.
தொடர்கிறேன்.
நன்றி.
அய்யா தாங்கள் இப்படி சொல்வது என்னை வஞ்சப் புகழ்ச்சிப் போல் தெரிகிறது. இதற்கு நல்லா திட்டியே இருக்கலாம். உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று. எப்படியோ முயற்சிக்கிறேன். தாங்கள் வழிகாட்டினால் சரி.நன்றி.
Deleteவெகு எளிதாக அனைவருக்கும் புரியும் படி எழுதியிருக்கிங்க. தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஅன்பின் சகோ, தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஎல்லோருக்கும் புரியும் படியாக இருக்கு. அருமை.
ReplyDeleteவாருங்கள் அம்மா வணக்கம். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஇலக்கணம்னாலே....ஐயோன்னு வரும் ஆனா...இப்போ வகுப்பறைகளை தட்டிக் கழித்து ஓட முடியவில்லை....ஏன்னா சொல்ல்ல்லிக் கொடுக்கும் சகோக்களின் அன்பின் பால் வகுப்பறைக்கு ஆஜர் ஆகி விடுகிறோம். நல்ல எளிமையா சொல்லித் தருகிறீர்கள். புரிகிறது....தொடர்கிறேன் ஆசானே...இன்னைக்கு பாடம் ஓவர்...வருகிறேன். அடுத்த வகுப்பிற்கு ஆவலாய்... நன்றி சகோ
ReplyDeleteஅய்யோ நான் ஆசான் எல்லாம் அல்ல, ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பிடிக்கும் ஆசிரியரின் பாடம் பிடிக்கும் என்பது. நன்றி சகோ, வருகைக்கு தொடர்ந்து வந்தால் நான் வளர்வேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteதெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள், வணக்கம். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.
Deleteஇவ்வளவு தூரம் படிக்கும் பாக்கியமெல்லாம் எனக்கு கிடைத்தில்லை ஆகவே அந்த பாக்கியை இப்பொழுது படிக்க ஆவலாய் இருக்கின்றேன்.
ReplyDeleteதங்கள் சித்தம் என் பாக்கியம்.
பூ + பறிக்க = பூப்பறிக்க
பூப்பறிக்க + கோடரி = பூப்பறிக்கக் கோடரி
கோடரி + தா = கோடரியைத் தா
சரியா ? டீச்சர்.
வாங்க,ஏன்? நான் என்ன சொன்னேன். நீங்க என்ன? சரி போங்க நான் அடுத்த பகுதி நடத்த மாட்டேன். அதப்பாருங்க டீச்சர் சொன்னத சரியா கேக்காததால் துரை சார் சொன்னது போல் பெஞ்ச் மேல் ஏறி நிற்கவும். நின்னாச்சா? அப்படியே அடுத்த வகுப்பு வரை நிற்கவும். தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஐய்யோ உண்மையிலேயே சகோ எனது படிப்பு லட்சணம் உங்களுக்குத் தெரியாது நாளைய எனது அறிவுக்கண் பதிவு பாருங்கள் எனது படிப்பு பற்றி அறிந்து கொள்வீர்கள் நன்றி.
Deleteஅய்யோ சகோ, சாரி, நான் ஏதோ,,,,
Deleteஉங்கள் பதிவுகளை எல்லாம் பார்க்கும் போது நான் தொடர்ந்து எழுதலாமா? என்று நினைக்கிறேன். பயமுறுத்தாதீர்கள்.
தங்கள் மீள் வருகைக்கு நன்றி.
புணர்ச்சியின் போது 'ச்'வருவது இயல்புதானே ,அதையேன் விகாரம் ஆக்கினார்களோ :)
ReplyDeleteஒன்றாததால் விகாரம் ஆனது. நன்றி ஜி தங்கள் அன்பின் வருகைக்கு.
Deleteபுணர்ச்சியின் போது 'ச்'வருவது இயல்புதானே ,அதையேன் விகாரம் ஆக்கினார்களோ :)
ReplyDeleteஅட வகுப்பு இப்பவே களை கட்டி விட்டது போல் தெரிகிறது யாரும் ஒடாம ஒழுங்கா வந்து படிக்கணும் ok வா! அப்புறம் பெஞ்சு மேல நிக்க சொன்னா கஷ்டமாயிடும் இல்ல. நான் ஒழுங்கா வருவேன்மா ஆனா ஒன்று பெஞ்சு மேல நிக்க சொல்லக் கூடாது. அன்பா கண்டிக்கனும் ok தானே ம்..ம்..ம் நன்றாக உள்ளது அருமையான விளக்கங்கள். தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாங்க இனியா, வணக்கம். நல்லா இருக்கா? தங்கள் உளமான பாராட்டிற்கு நன்றி. கண்டிப்பா பெஞ்ச் மேல் நிக்க வேண்டாம். மண்டையில் இரண்டு கொட்டு சரியா?
Deleteஇப்ப இல்ல, அப்புறம். தொடர்ந்து வந்து படிக்க அன்புடன் அழைக்கிறேன்.
வகுப்பறையில் - தாங்கள்
ReplyDeleteபாடம் நடாத்துகையில் - நேரில்
நான் வந்திருந்து படித்தது போல
"இரு சொற்கள் சேரும் போது
எந்த மாற்றமும் நிகழாது.
இது இயல்புப் புணர்ச்சி." என்று
எளிமையாகத் தெளிவாக
விளக்கமளித்ததாக அமைந்திருக்கிறது.
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
தங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஎனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது
ReplyDeleteஎங்கு க் , ப், ச் சேர்க்க வேண்டும்
இன்று வரை புரியாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
தாங்கள் குறிப்பிடும் விகாரப் புணர்ச்சியில்
எனது சந்தேகங்களுக்கு அழுகுத் தமிழில்
எளிய வார்த்தைகளில் விடைக் கூறும் என காத்திருக்கிறேன்
நன்றி சகோதரியாரே
தாங்கள் வந்தபின் ஏனோ ஒரு மகிழ்ச்சி. வலைதளம் நல்லா போய்க்கொண்டு இருக்கிறதா? என்பது போல்,
ReplyDeleteவிடைத் தெளியும் சகோ,
மீண்டும் என் நன்றி.
தங்களின் வலைப்பதிவிற்கு முதல் முறையாக கருத்து பதிவிடுகிறேன். மிக அருமையான பதிவு. தமிழின் புணர்ச்சி விதிகளைப் பற்றி தெளிவாக புரியும் படி சொல்லி சென்றுள்ளீர்கள். படிக்க சுவையாக உள்ளது.
ReplyDeleteதொடர்கிறேன்!
தங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteதமிழ் இலக்கணம் கற்றுத்தரும் உங்கள் சேவை தொடரட்டும்,
ReplyDeleteவாழ்த்துக்கள். மாலை+ முரசு = மாலைமுரசு. வாசித்தீர்களா?
கோ
படித்தேனே, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteசகோ ....எனக்கு ஒன்றுமே புரியவில்லை ...உங்க வாழ்கை நன்றாக இருந்தால் சரி வேறு ஒன்றும் வேண்டாம்
ReplyDeleteஎனக்கும் ஒன்றும் புரியல
Deleteஅடுத்த தமிழ் இலக்கணம்..............தொடரட்டும்....
ReplyDeleteதொடர்கிறேன். நன்றி.
Deleteஆஹா நான் தாமதமா வகுப்பில் சேர்ந்துள்ளேன் போல...டீச்சர் சாரி ...அட இது நல்லாருக்கே..சூப்பர்மா
ReplyDeleteதங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஎளிமையான சொற்களுடன் ௬டிய இலக்கண வகுப்பில் நானும் சேர்ந்து விட்டேன். பள்ளியில் படித்த இலக்கணங்கள் சுத்தமாக மறந்த எனக்கு தங்களது இந்தப் பதிவு அந்த நினைவை இனிமையாக மீட்டுத் தருகிறது. அக்கறையுடன் இனி என்றும் தங்கள் வகுப்பறையில் இலக்கணம் படிக்க ஆஜர் ஆகிவிடுவேன். எளிமையாக புரியும் விதத்தில் சொல்லிக் கொடுக்கும் தங்களுக்கு மிகுந்த நன்றி சகோதரி.
என் பதிவுகளுக்கு வந்து கருத்திட்டு என்னை உற்சாகப் படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி .
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும். ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteவாருங்கள் சகோ, அன்பின் வருகைக்கு நன்றிகள் பல. தொடருங்கள்.
ReplyDeleteஎளிமையானதொரு தொடக்கம்...இதன் தொடர்ச்சியைப் படித்து விட்டோம்...தொடர்கின்றோம்...தங்களின் இலக்கண வகுப்பை!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல. தொடருங்கள்.
Delete