தமிழ் நாடகம்
வளர்ந்த கதை
இதன் வேர்ச்சொல் வேறு, அது எது?
அதற்குமுன் நீங்கள் வேறு
ஒன்றினைத் தெரிந்துக்கொள்ளுதல் அவசியமாகப்பட்டது எனக்கு,
அது என் எழுத்துக்கு
வலுசேர்ப்பதும் கூட,
டார்வின் கோட்பாடு,
என்ன நாடகம் வளர்ந்த கதைச்
சொல்லச்சொன்னால் இவுங்க தியரி எல்லாம் போறாங்க என்று முனுமுனுப்பது கேட்கிறது.
பயப்பட வேண்டாம் ரொம்ப
அறுக்கமாட்டேன்.
சரி,
இன்று மேன்மை மிகுந்த அறிவு
படைத்த மனிதனின் வேராக, பிள்ளையார் சுழியாக இருந்த ஆதி உயிரினம் எது தெரியுமா?
பிள்ளையாரின் வாகனமான,
என்ன?
வேண்டாம் வேண்டாம்,,,,,
முஞ்சுறுதான்,,,,,,,,,
அல்லது வௌவ்வால்
இது ஓர் ஊகமான கருத்தாக எழுந்தது,
மனிதனின் முன்னோடி உயிரினங்களைப் பிரிமேட்ஸ் (Primates) என்று ஆங்கிலத்தில்
கூறுவார்கள்.
இதன் வழிவந்த இனங்களில் ஷ்ரு (Shrew) என்ற அணில் போன்ற உயிரினத்தை மனித இனத்தின் ஆரம்ப
முன்னோடியாக கருதினர். முக்கும் முழியுமாக இருக்கும் தேவாங்கு இனத்தின் முன்னோடி
அதுவே என்றும் ஷ்ருவைக் கூறுவார்கள்.
(Shrew)
ஷ்ரு (Shrew) என்ற உயிரினம் துறுதுறுவென்று பார்க்கும் இயல்பு
கொண்டது,நிலத்திலும் மரத்திலும் தன் இனத்தோடு கூட்டமாகக் கூடியும் வாழும்
குணமுடையது.
(Lemur)
லெமுரும் ஷ்ருவைப் போலவே
மரத்திலும் நிலத்திலும் வாழக்கூடியது. குரங்குகளைப் போலத் தன் இனத்தோடு கூடி
வாழும் குணமுடையது. இதன் வழிவந்த வாரிசாக டார்சிர் (Tarsier) என்ற இனத்தைக் கூறுவார்.
(Tarsier)
டார்சிரின் கண்கள் அகன்று
பெரிதாகப் பளிங்கு போல் பளபள என மின்னும். இவையும் தன் முன்னோடிகளைப் போலக் கூடி
வாழும் குணத்தைக் கொண்டிருந்தன.இந்த இனத்தின் வழிவந்த இனமே தேவாங்கு (Sloth)என்பர்.
(Sloth)
தேவாங்கு மரத்தில் ஏறியும் ஊஞ்சலாடியும் வாழ்வதில் குரங்கை ஒத்து விளங்கும்
உயிரினமாகும்.
தேவாங்கில் இருந்து பரிணமித்த விலங்கினமே குரங்குகள்.
(Monkey)
குரங்கினத்தில் ஆயிரக் கணக்கான வகைகள் உண்டு என்பர். அதில் வால்குறைந்தும் முற்றிலுமாக மறைந்தும் பரிணமித்த மனிதக் குரங்குகள் தோன்றின. நான்கு கால்களால் நடந்தும் முன்னிரு கால்களைத் தூக்கி மனிதர்களைப் போலவே இரண்டு கால்களால் நடந்த குரங்கினங்கள் தோன்றின.அவற்றை மனிதக் குரங்கு (Ape ) என்று பொதுவாக வகைப்படுத்துவர்.
மனிதக் குரங்கில் உலகின்
ஒவ்வொரு பகுதியிலும் சில வகைகள் உண்டு. பபூன்(Baboon) என்ற மனிதக் குரங்கு வகை மிகப் பெரிய உருவம் உடையது.
இன்று மனிதர்களுக்கு
இருப்பதைப் போன்றே, சிங்கப் பற்கள் நான்கு அதற்கு உண்டு. நான் சொல்லப்பா,,,,,,,,,,
(Gibbon)
(Orangutan)
உராங்குட்டான் (Orangutan) என்ற மனிதக் குரங்கு
உடம்பெல்லாம் சடைமுடிகள் நிறைந்த தோற்றம் கொண்டது.
(Gorilla)
கொரில்லா (Gorilla) என்ற வகை மனிதக்
குரங்கு கால்களும் கைகளும் பருத்துத் தொந்தியும் தொப்பையுமாகத் தோன்றும்.
சிம்பன்சி (Chimpanzee) என்ற மனிதக் குரங்கு
மனிதனைப் போலவே அச்சு அசலாக இருக்கும். மனித இனம் சிம்பன்சி வகையிலிருந்தே
பரிணமத்தது என்று கருதுகிறார்கள்.
சிம்பன்சி மனிதர்களைப் போன்றே சிரிக்கும், நையாண்டி செய்யும், கோபப்படும், தன் குட்டிக்கு ஒன்று என்றால் தலையில் கைவைத்து அழும், மனிதரால் காட்ட முடிகிற அத்துனை பாவங்களையும் அது காட்டும். இன்றைய நாடகத்தில் ஒரு கைதேர்ந்த கலைஞன் நடிப்பதைப் போலவே பலவகையான முகபாவனைகளை அதனால் காட்ட முடியும். மனித இனத்தின் நாடக நடிப்புக் கலை சிம்பன்சி குரங்கு இனத்தின் காலத்திலேயே உருவாகிவிட்டது, என்றே இதனைப் பின்வரும் சிம்பன்சி உருவப் படங்கள் காட்டும்.
சிம்பன்சி மனிதர்களைப் போன்றே சிரிக்கும், நையாண்டி செய்யும், கோபப்படும், தன் குட்டிக்கு ஒன்று என்றால் தலையில் கைவைத்து அழும், மனிதரால் காட்ட முடிகிற அத்துனை பாவங்களையும் அது காட்டும். இன்றைய நாடகத்தில் ஒரு கைதேர்ந்த கலைஞன் நடிப்பதைப் போலவே பலவகையான முகபாவனைகளை அதனால் காட்ட முடியும். மனித இனத்தின் நாடக நடிப்புக் கலை சிம்பன்சி குரங்கு இனத்தின் காலத்திலேயே உருவாகிவிட்டது, என்றே இதனைப் பின்வரும் சிம்பன்சி உருவப் படங்கள் காட்டும்.
என்னங்க? எப்படி? சரி சரி முறைக்காதீர்கள்,
என்னால் முடியலப்பா,கொஞ்சம் இருங்க இதோ வருகிறேன்.
நீங்க எங்க போறீங்க? இது எப்படி என்று சொல்லிட்டு போங்க,,,,,,,
கோட்பாடு வந்து சொல்கிறேன்.
நமது மூதாதையர்களை தேடிப்பிடித்து அழகிய புகைப்படங்களுடன் அழகாக விளக்கமளித்தமைக்கு நன்றி சகோ...
ReplyDeleteதமிழ் மணம் இணைக்க முடியவில்லையே... காரணம் என்ன சகோ....
வாருங்கள் சகோ, தமிழ் மணம் இணைக்க டிடி சார் சரிசெய்து தருகிறேன் என்று சொல்லியுள்ளர்கள். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஆஹா..! அற்புதமான பதிவு! நமது முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. நன்றி !
ReplyDeleteவாருங்கள் SPS தங்கள் பாராட்டிற்கு நன்றிகள்.
Deleteஆஹா..! அற்புதமான பதிவு! நமது முன்னோர்களை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. நன்றி !
ReplyDeleteவாருங்கள் SPS தங்கள் பாராட்டிற்கு நன்றிகள்.
Deleteரசித்துப் படித்தேன்... ஹா... ஹா... அருமை...
ReplyDeleteவாருங்கள் டிடி சார், தாங்கள் ரசித்து படித்தமைக்கும் வருகைக்கும் நன்றிகள்
Deleteமனிதனின மூதாதையர்களை பற்றி அறியவைத்ததுபோலவே..நாடகத்தின் பிதாமகனையும் தெரியபடுத்தி உள்ளீர்கள். தங்களின் பதிவை படித்தப்பின்தான் தெரிகிறது. தேவாங்கே.குரங்கே என்று ஏன் திட்டுகிறார்கள் என்று....
ReplyDeleteஎன்னைத் தேவாங்கே.குரங்கே திட்டுவது போல் உள்ளது. இது தான் சொந்த காசில் சூனியம் வைப்பது என்பதோ,தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteசூனியத்தில் எல்லாம் நம்பிக்கை உள்ளவரா??....மனிதனின் மூதததையர்களை அறியத் தருகிறார்...!!!
Deleteஎன்னப்பா பன்றது உங்களை எல்லாம் பார்க்கும் போது, தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள்.
Deleteஅருமையான பதிவு. புகைப்படங்களும் அழகு.
ReplyDeleteவாருங்கள் அம்மா, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅருமையான பல்வேறு ஆராய்ச்சிகள். படங்களும் மிகப்பொருத்தமாகவே. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete//மனித இனத்தின் நாடக நடிப்புக் கலை சிம்பன்சி குரங்கு இனத்தின் காலத்திலேயே உருவாகிவிட்டது//
சபாஷ். நல்ல தகவல்கள்.
வாருங்கள் வலைச்சர ஆசிரியர் திரு. வைகோ சார் அவர்களே, தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல.
Deleteஔவால் = வெளவ்வால்
ReplyDeleteதுருதுருவென்று = துறுதுறுவென்று
என மாற்றினால் ’வெளவ்வாலும்’ பதிவும் எழுத்துப்பிழை இல்லாமல் ’துறுதுறுவென்று’ சரியாக இன்னும் ஜோராக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
தாங்கள் சுட்டியமைக்கு நன்றிகள் பல, மாற்றம் செய்துள்ளேன்.
Deleteதிருத்தங்களுக்கு மிக்க நன்றி.
Delete’துரு’ என்பது துருப்பிடித்தல் என்ற இடத்தில்தான் வரும் என நினைவில் கொண்டால் நமக்கு மறக்காது. எனக்கும் இதுபோல நிறைய சந்தேகங்கள் அவ்வப்போது வரும். நானும் இதுபோல பல தவறுகள் செய்துள்ளேன். பிறர் எடுத்துச் சொன்னால் உடனே திருத்தி விடுவேன். நன்றி.
தங்கள் மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லாததால் எழுத்துப்பிழைகளை இங்கு பிறர் பார்க்கும் வண்ணம் சொல்லும்படியாகிவிட்டது. கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்.
Deleteதங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் சார், உடன் வந்தது மகிழ்ச்சியே, இனி கவனமாக இருக்கிறேன். நன்றி சார்.
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள். நான் அவ்வாறு நினைப்பாளில்லை. தாங்கள் சுட்டுங்கள் நான் சுடர்விட, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteமூதாதையரைப் பற்றி நிறைந்த விஷயங்கள்..
ReplyDeleteஅழகிய படங்கள்.. ஆர்வமூட்டுகின்றன.. வாழ்க நலம்!..
வாருங்கள் அய்யா, வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஇத்துனைப் படங்களை எப்படி பிடித்தீர்கள் சகோதரியாரே
ReplyDeleteபடங்களுக்காகவே பாராட்ட வேண்டும் தங்களை
பதிவு அருமை
வாருங்கள் சகோ, படங்கள் அனைத்தும் கூகுலில் எடுத்தேன். இப்போ எளிமையாக கிடைத்தது. அப்போ கொஞ்சம் சிரமப்பட்டேன். தங்கள் பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றிகள் பல.
Deleteஎவ்வளவு படங்கள், எத்தனை நுட்மான செய்திகள். ஒரு செய்தியை ஆழமாகப் பதியவைப்பதற்கு அருமையான வழி இதுவே. நன்கு பதிந்தது. நன்றி.
ReplyDeleteநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல. நான் படித்துவிட்டேன் பதிவினை. நன்றிகள். தொடருங்கள்.
Deleteபடங்களோடு பதிவும் படிப்படியான விளக்கமும் அருமை. பாராட்டுகள் பாலமகி.
ReplyDeleteவாருங்கள் வணக்கம். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteநம்முன்னோர்களே....நமக்கு நாடகக் கலையையும்...தந்து இருக்கிறார்கள் என நீங்கள் அழகான நவரசப் படத்தைப் போட்டு....காட்டி விட்டீர்கள் சகோ...... எவ்வளவு விடயங்கள்....அறிந்து கொண்டோம்...சூப்பர் சகோ
ReplyDeleteவாருங்கள் உமையாள், வணக்கம்.தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஎவ்வளவு நல்ல விடயங்களை தெளிவாகப் புரியும்படி சொல்லி அழகான படங்களை கொடுத்து அசத்தி விட்டீர்கள். முன்னோர்கள் பற்றிய தகவல்களும் படிப்படியாக அருமையாக விளக்கியுள்ளீர்கள். தெளிவாகத் தெரிந்து கொண்டோம். நன்றி சகோதரி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் வணக்கம். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteவணக்கம் பேராசிரியரே !
ReplyDeleteநாடகம் வளர்ந்த கதை முன்னமே படித்த நினைவு வருகிறது மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி ....ஆனால் இப்படிப் படங்களை அன்று காட்டலையே அவர்கள் ...
ஷ்ரு - லெமுர் - டார்சிரி - தேவாங்கு - சிம்பன்சி ---------------------------மனிதன்
நல்லாத்தான் கூர்ப்படைத்து இருக்கிறான் மனிதன் அதனால்தான் இன்னும் குரங்குப் புத்தி போகல்ல ஹா ஹா ஹா ....நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி பேராசிரியரே
வாழ்க வளமுடன்
வாருங்கள் வணக்கம். இன்னும் குரங்குப் புத்தி போகல்ல, எனக்கு தானே, அதான் பதிவிட்டேன். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஇதுக்குத் தான் பொல்லைக் கொடுத்து அடிவாங்கக் கூடாது என்பது ஹா ஹா ....
DeleteThankyou Iniya
Deleteby
mahi
அடடா மூதாதையர்கள் அனைவரையும் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே. ம்ம்.ம்ம். நாடகக் கலையையும் வளர்த்திருப்பது ஆச்சரியமே. ஆமா மூஞ்சூறு என்றே நாம் அழைப்போம் எம்மூரில் எது சரியென்று எனக்கு தெரியவில்லை அருமையான விளக்கங்கள்மா. தொடர வாழத்துக்கள் ...!
ReplyDeleteவாங்கம்மா இனியா, வணக்கம். மூஞ்சூறு மூஞ்சுறு சரியாக இருக்கும். எனக்கு இந்த நெடில் மு தெரியல டைப்பில். இனி சரியாக முயற்சிக்கிறேன். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஎங்கேயோ இருந்து எங்கேயோ தாவிட்டிங்களே?
ReplyDeleteஆமாம் இதில் எது உங்களுடைய ...........?
பதிவு அற்புத தொகுப்பு.
கோ
தாவினது நான் தானே, என்னுடைய படம் எது என்று கேட்கிறீர்கள்.
Deleteஉங்களுக்கு தெரியலையா? உங்கள் படம் இருப்பதில் இருந்து நாலாவது தான் நான். எப்படி நல்லா இருக்கா? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
அப்ப நான் நினைத்தது சரிதானா? அதே ஜாடை அப்படியே தாத்தாவ உறிச்சி வச்ச மாதிரியே இருக்குது பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு.(யார் தாத்தாவ யார் ..)
Deleteகோ
அப்ப சரி தங்கள் மீள் வருகைக்கு மிக்க நன்றி.
Deleteதமிழ்ப் பாடம் நடத்தப் போறீங்கனு நினைத்தேன். இது அறிவியல் பாடமா:) அதிலும் நம்ம ஹீரோ கொடுத்திருக்கும் கடைசி ஸ்டில் சான்ஸ் லெஸ்:)))
ReplyDeleteவாருங்கள் வணக்கம்.அதிலும் நம்ம ஹீரோ கொடுத்திருக்கும் கடைசி ஸ்டில் சான்ஸ் லெஸ்:))) நன்றி.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
வணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteதாமத வருகையைப் பொறுத்தாற்றுங்கள்.
குரங்கில் இருந்துதான் மனிதன் என்ற டார்வினின் சித்தாந்தத்தை வைத்துத் தங்கள் நாடக ஆய்வினைத் தொடங்கியிருப்பீர்கள் என முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
அப்படியென்றால்,
இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
கணவனை இழந்து கைம்மை உற்ற மந்தி மரமேறுதல் கல்லாத் தன் குட்டியைத் தன் சுற்றத்திடம் ஒப்படைத்து மலைமேலிருந்து விழுந்து தற்கொலை செய்த செய்தியைக் குறிப்பிடும் இந்தப் பாடலில், இது போன்ற நிகழ்வு பண்டைய காலத்தில் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டா என விளக்க வேண்டுகிறேன்.
தங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன் நன்றி.
வாருங்கள் ஆசானே,
ReplyDeleteவணக்கம். நான் ஏற்கனவே சொன்னது போல், ஆய்வு நெறிகாட்டியின் ஆளுமைக்குள் என் ஆய்வேடு அமைவதால் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அவற்றில் இவையும் ஒன்று.ஆனால் சங்க இலக்கியபாடல்கள் சிலவற்றையும் சுட்டிச்சென்றுள்ளேன்.
தங்கள் கேள்வி, இவ்வாறு நடந்து இருக்குமா? என்பது தானே, தலைவி இங்கு தன் தலைவனுக்கு ஏதேனும் நடந்துவிடக் கூடாதே என்ற கவலையில், கொடிய காட்டு வழியில் வாராதீர். அப்படி வரும் போது ஏதேனும் நடக்கூடாதது நடந்தால் இந்த குரங்குபோல் நானும் இறந்துவிடுவேன் என்று சொல்கிறாள்.
சரி நான் என் வாதத்திற்கு வருகிறேன், நாடகம் கூத்து இதன் தொடக்ககாலம் போர்களம் தான் என்று கூற,
வாருங்கள், தொடருங்கள், தொடர்கிறேன்.
நன்றி.
நம்மூதாதையர்கள் பற்றி அருமையான விளக்கமும் படப்பகிர்வும்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteமூதாதையர்கள் பற்றிய தங்கள் ஆய்வு அருமை! ஆனால் முதல் என்று சொல்லும் போது கண்ணிற்குப் புலப்படாத மைக்ரோ ஆர்கானிசமைத்தான் குறிப்பிடுகின்றார்கள் இல்லையா சகோதரி?!! இந்த மில்கிவேயில் உள்ள பூமியில் முதலில் உயிர் தோன்றிய அறிவியல் என்சைக்ளோபீடியாவிலிருந்து அறிந்தது.....டிஸ்கவரி சேனலிலும் ஒரு முறை பார்த்த நினைவு...
ReplyDeleteசிம்பன்சி பற்றி நிறைய இருக்கின்றது. அவர்களால்(அவை) மனிதனை விட மிக நன்றாக, மிகக் கடினமான கணக்குகளைப் போட முடியுமாம்....தீர்வுகள் காண முடியுமாம். அவர்களுடனேயே ஒரு பெண் ஆராய்ச்சியாளர் (அமெரிக்கப் பெண் வயதானவர்) இருந்து பல ஆய்வுகள் செய்திருக்கின்றார். (இப்போது நினைவில்லை கூகுளைக் கேட்டால் தெரியும்) இதுவும் அனிமல் ப்ளேனட்டில் பார்த்த நினைவு. ரீடர்ஸ் டைஜஸ்டில் வாசித்த நினைவு. அந்தப் பெண் கூட தனக்கு உதவியாளர் வேண்டும் அடுத்து ஆய்வினைத் தொடர்வதற்கு என்று அறிவித்திருந்தார்......
மிக மிக நல்ல பதிவு! அறிவு பூர்வமான பதிவு!
வாருங்கள் அய்யா, வணக்கம். தாங்கள் சொல்வது சரியே, ஆனால் நான் மனிதனின் தொடக்கம் பற்றி சொல்லவரவில்லை. நாடகத்தின் தொடக்கத்திற்காக சிலவற்றை விட்டுவிட்டேன். இருப்பினும் தாங்கள் சுட்டியது நலம். ஆம் சிம்பன்சி ஆச்சிரியமான உயிரினம் தான்.எனக்கு படங்கள் கூகுள் கொடுத்தது தான்.தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.தொடருங்கள்,,,,,,,,,,,
Deleteசகோதரி...
ReplyDeleteதமிழ் நாடகம் வளர்ந்த கதையை இயற்கையின் நாடக மேடையான உலகின் கதாநாயகனான ( அவன் அப்படித்தானே நினைத்துக்கொண்டிருக்கிறான்... ?! ) மனிதனின் மூலத்தில் தொடங்கியது புதுமை !
தொடருங்கள்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வாருங்கள், தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.தொடருங்கள்.
ReplyDeleteஇவ்வளவு அருமையான பதிவுக்கு சம்பந்தமில்லா தலைப்பு ,அதான் ,பார்க்காமல் என் முன்னோரின் குணத்தின்படி, வேறு தளத்திற்கு தாவி இருக்கிறேன் .இனி பிடியை விடாமல் தாவலாம்னு இருக்கேன் :)
ReplyDeleteஓ,,,,,,,,,,,,,,, இது தான் காரணமா? நான் கூட ,,,,,,,,, காணோமே என்று நினைத்தேன்.சரி சரி ,இனி உங்களை மாதிரியே தலைப்பிட முயற்சிக்கிறேன். இனி தாவாமல் தொடரவும். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன தான் சொல்லுங்கள். நான் குரங்கின் வழியில் பிறந்தவன் என்பதை என் மனம் ஏற்க மறுக்கின்றது. குரங்கிற்கும் மனிதனுக்கும் தான் எவ்வளவு பெரிய வித்தியாசம் உண்டு.
ReplyDeleteபொறாமை- திருட்டு புத்தி - பேராசை போன்ற தீய குணங்கள் குரங்கிடம் இல்லையே. மனிதனிடம் தானே உண்டு. மனிதன் குரங்கு வழியில் வந்து இருக்க வாய்ப்பே இல்லை . உங்கள் படத்தையும் நண்பர் கோவின் படத்தையும் நன்றாக ரசித்தேன். மற்றும், நல்ல வேளை, இந்த படம் எடுக்கும் நாள் அன்று நான் ஊரில் இல்லை.
வாருங்கள் நூல் ஆசிரியரே, வணக்கம். தாங்கள் சொல்வது உண்மைதான்.
Deleteஎன்ன இப்படி சொல்லீட்டீங்க, படம் எடுத்த அன்று தாங்கள் இல்லை, ஆனால் தங்கள் நண்பர் கோ அவர்களிடம் தங்கள் படத்தையும் வாங்கி இதில் இணைத்து விட்டேன் எப்படி?
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
விழா சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சியே, நண்பர்கள் சந்திப்பும், நன்றி.
Deleteவந்தேன், வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteவாழ்க்கை என்ற நாடகத்தில்
ReplyDeleteமனிதன் என்ற பாத்திரத்தின்
தோற்றம் அழகாயிருக்கு
இப்படித் தான்
தமிழ் நாடகம் வளர்ந்த கதை
அமையும் போல...
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
Delete