அப்பா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாரி
பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
என்பது நான்கடிப் பாட்டு.
இதன் பொருள் வருமாறு:
“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வெற்றியையும் வள்ளல் தன்மையும் குறித்து
அவன் ஒருவனையே
போற்றுவர் புலவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”
மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.
மேகம் யாரிடமும் எந்த பலனும் எதிர்ப்பார்ப்பது
இல்லை.பிறருக்கு உதவுவது மட்டுமே அதன் செயல்.
அத்தகைய
வள்ளல் தன்மை கொண்ட மன்னன் பகைவரின் வஞ்சக சூழ்ச்சியால் கொல்லப்பட்டு, தன் மக்களை
அனாதையாக விட்டு சென்றார்.வெண்றெறி முழவம் வீழ்ந்த கையோடு
குன்றிலே
தோய்ந்த முகநிலவின் சோகம்
படர்கின்ற ஒற்றையடிப் பாதையினுடே
பாரிமகளிர் நடந்தனர்.
அப்போ,
பாரி மகளிர்,
“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”.
இதன் பொருள் அன்று இந்த நிலவும் இருந்தது, எங்கள் குன்றும் இருந்தது, எம் தந்தையும் இருந்தார். இன்று எம் குன்றும் இல்லை, எம் தந்தையும் இல்லை. ஆனால் இந்த நிலவு மட்டும் இருக்கிறது.
“மூவேந்தரும் முற்றுகை
இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம்.
எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை, எங்களிடமே இருந்தது.
இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள்
எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”.
மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி
முரசின் வேந்தர் என
இகழ்ச்சியாற் குறித்தனர்.
இந்த பாடலைப் படிக்கும் போது ஒவ்வொரு மனதிலும் தம்
தந்தையைப் பற்றிய நினைவுகள் தோன்றும். அது எப்படிப்பட்டதாகவும் இருக்கும்.
நானும் என் தந்தையை நினைக்கிறேன்.
எல்லாமும்மாக இருந்த அவர் போன பின் எதுவும் இல்லாமல்
அவரின் அந்த இடம் இன்றும் வெற்றிடமாக,,,,,,,,,,,,,,,,,,,
அன்றும் இழந்தோம் இன்றும் இழந்தோம். கையறுநிலையே வாழ்க்கையாகி
கவிப்பொருளாகி காலங்காலமாக
தொடர்கின்றது.
தொடர்கின்றது.
நேற்றிருந் தாரின் றிலரென்னு மெவ்வத்தை
ReplyDeleteயாற்றிக் கடக்கு முலகத்தில் - பெற்றவரின்
இன்மை எடுத்துரைக்கு முங்கள் தமிழ்ப்பதிவின்
தன்மைக் கழுதிடுமென் கண்!
இடம் நிரப்பப்படா வெறுமை எனக்கும் உண்டு.
நினைவுகளை மீட்டளிக்கிறது உங்கள் பதிவு..!
என்ன சொல்ல..!
தங்கள் நினைவுகள் மீட்க என் பதிவென்றால் மகிழ்ச்சியே. வருகைக்கு, பா இட்டு வாழ்த்தியதற்கு நன்றி.
Deleteதந்தையின் முகம் கண்டதால் நிணைக்கிறீர்கள். அந்த வகையில் தாங்கள் பாக்கியசாலி......
ReplyDeleteகண்டதால் என்பது சரியா தெரியல, ஆறுவயதில் நடந்த சம்பவங்கள் அப்படி ஒன்னும் பெரிதாக நினைவில்லை, எனவே தான் என் மனம் வெற்றிடம் ஆனாது. பிறர் என் தந்தைப் பற்றி சொல்லும் பொது நான் பாக்கியசாலி தான். அவருடன் இல்லையென்றாலும், வருகைக்கு நன்றிகள் பல.
Deleteசங்கப்பாடல்கள் அருமை! விளக்கமும் சிறப்பு! இலக்கிய பாடல்களின் ஊடே தந்தையை நினைவுகூர்ந்த விதமும் அருமை!
ReplyDeleteதாங்கள் தரும் ஊக்கம் தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்குகிறது. தங்கள் பாராட்டிற்கு நன்றி.வணக்கம்.
Deleteசங்கப் பாடல்களின் சிறப்பை அறிந்தேன். என் தந்தையையும் நினைவு கூற வைத்த பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இனியா,,,,,,,,
Deletesorry நினைவு கூர வைத்த என்று வாசியுங்கள்
ReplyDeleteபிழை தட்டுவதில் தானே, வருத்தம் வேண்டாம். தொடர்ந்து வாருங்கள். நன்றி.
Deleteஎம் தந்தையின் நினைவும் வந்தது ,இதுவே உங்கள் பதிவின் வெற்றி !
ReplyDeleteவாருங்கள் ஜி, அப்படியானால் மகிழ்ச்சியே,,,,,,,,,,,,,,,,,,, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஎன் தந்தையின் நினைவுகளும் வந்து போனது...
ReplyDeleteதந்தையின் நினைவுகள் வந்தது தங்களால் தான். வருகைக்கு நன்றி.
Delete’பாரி’ பற்றிய இலக்கிய அலசல்கள் அருமை.
ReplyDelete//இந்த பாடலைப் படிக்கும் போது ஒவ்வொரு மனதிலும் தம் தந்தையைப் பற்றிய நினைவுகள் தோன்றும். அது எப்படிப்பட்டதாகவும் இருக்கும்.//
ஆம் உண்மைதான்.
//நானும் என் தந்தையை நினைக்கிறேன். எல்லாமும்மாக இருந்த அவர் போன பின் எதுவும் இல்லாமல் அவரின் அந்த இடம் இன்றும் வெற்றிடமாக,,,,,,,,,,,,,,,,,,,//
காலம் மாற மாற இந்தக்கவலைகளும், அவரின் இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் தீவிரங்களும் கொஞ்சம் கொஞ்சமாகதான் நம் மனதிலிருந்து நீங்கும். இது உலக யதார்த்தம். எனவே கவலை வேண்டாம். மனதை ஆறுதல் படுத்துக்கொள்ளவும்.
30 வருடங்களாக மாறாத கவலை,வெற்றிடம் மாற்றுவார் இல்லை அய்யா, தங்கள் அன்பின் வருகைக்கும், ஆற்றியதற்கும் நன்றிகள் பல.
Deleteதந்தையை எண்ணி ஆக்கிய
ReplyDeleteஎந்தன் உள்ளத்தில் தாக்கிய
சிறந்த பதிவிது!
இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்
உங்கள் உள்ளம் தாக்கிய பதிவு இது எனின் மகிழ்ச்சியே, தங்கள் தொடர் வருகைக்கு நன்றி.
Deleteமேகம் போல... உண்மை...
ReplyDeleteஉண்மைதான் சகோ, தங்கள் தொடர்வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி.
Deleteபேற்றோர்களின் இடத்தை நிரப்ப யாரால் இயலும்
ReplyDeleteபெற்றோர்களும் மேகம் போலத்தான்
அருமை சகோதரியாரே
நன்றி
ஆம் சகோ, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
Deleteபதிவின் வரிகள் - பசுமையான நினைவுகளை மீட்டுகின்றன..
ReplyDeleteவாழ்க நலம்!..
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல
Deleteஉங்களுடைய பதிவின் மூலம் என்னுடைய அப்பாவின் நினைவுகள் வந்தது. நான் எனது வலைப்பூவில் அப்பாவின் நினைவுகள் பற்றிய பதிவு கொடுத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து கருத்து சொல்லுங்கள்.
ReplyDeleteதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல, தங்கள் தளம் வந்து அப்பாவின் நினைவுகளை பார்க்கிறேன்.
Deleteவணக்கம்
ReplyDeleteதந்தை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... மேகம் ..போலதான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஎல்லா பெண்களுக்கும் முதல் hero அவங்க அப்பாவா தான் இருப்பாங்க இல்லையா மேம்:) இப்படி ஒரு உருக்கமான போஸ்ட்ல உங்களை முதல்முதலா பார்க்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு :)
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள் தோழி,,,,,,,,,,,,
Deleteநான் பிறந்ததால் தந்தையை தூக்கி முழுங்கியவன் என்று எனது சிறவயதில் எனக்கு பேருண்டு... அதனால்தான் தாங்கள் தந்தையைப் பற்றி சொன்னதும் தாங்கள் பாக்கியசாலி என்றேன் நண்பரே.......
ReplyDeleteஎனக்கும் அந்த பெயர் உண்டு, அண்ணனை முழுங்கியவள் என்று, ஆனால் நான் என் தந்தையுடன் இருந்தது ஆறு ஆண்டுகள் தான்.பிறர் சொல்ல கேட்டு மகிழ்ந்தேன். நன்றி அய்யா தங்கள் மீள் வருகைக்கு.
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteபாரியை பற்றியும் பாரிமகளிர் பற்றியும் நன்கு தொகுத்து எழுதியுள்ளீகள்.
தந்தையின் நினைவை பற்றி ௬றி அதனூடே வருந்தியதும்,மனதை வேதனைக்குள்ளாக்கியது. இழப்பு என்றுமே ஆறா புண்கள்தாம். வலியும் வேதனையும் எனக்கும் புரிகிறது. ஆறுதல் படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் அன்புக்கும் நன்றிகள் பல.
Deleteதந்தையைப் பற்றிய தங்களின் பகிர்வு மனதில் பதிந்துவிட்டது. பாரி, பாரி மகளிர் என்ற நிலையில் ஆரம்பித்து தற்காலத் தங்களின் நிலையை மிகவும் யதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள். இது தங்களுக்குமல்ல, அனைத்து மகன்களுக்கும், மகள்களுக்கும் பொருந்தும்.
ReplyDeleteதந்தையைப் பற்றிய தங்களின் பகிர்வு மனதில் பதிந்துவிட்டது. பாரி, பாரி மகளிர் என்ற நிலையில் ஆரம்பித்து தற்காலத் தங்களின் நிலையை மிகவும் யதார்த்தமாகக் கூறியுள்ளீர்கள். இது தங்களுக்குமல்ல, அனைத்து மகன்களுக்கும், மகள்களுக்கும் பொருந்தும்.
ReplyDeleteவாருங்கள் அய்யா, தங்கள் வருகைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி.
Deleteதந்தையின் நினைவு வந்து நிழலாடியது சகோ. சங்ககாலப்படல் அழகு. அழகாய் விளக்கியுள்ளீர்கள்.சகோ நன்றி
ReplyDeleteசகோ, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்.
Deleteதனை உருக்கி எனை உயர்த்தி உயர் வானம் சென்று வாழும் என் தந்தையின் நினைவுகளை என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து கொஞ்சம் மேல் நோக்கி உந்தித்தள்ளிய உங்கள் பதிவிற்கு என் நன்றிகளும் உங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்களும்.
ReplyDeleteநமதிருவரின் நட்பைபோல நமதிருவரின் தந்தையர்களின் நட்பும் வானில் கைகோர்த்திருக்கும் என நம்புகின்றேன்.
நட்புடன்
கோ
தந்தை
ReplyDeleteதமிழ்ப் புலவர்களை
வாழ வைத்தார்.
எளிய மகள்களின் எளிய வரிகளின் கண்ணீர் தீராநதியாய் தலைமுறைகளினூடே தவழ்ந்து
தமிழை ஈரமுடன்
வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
வென்றெறி முரசின் வஞ்சகர்களை
வரலாறு காரித் துப்பிக் கொண்டிருப்பதால்
பேர் சொல்லவும் நாதியற்றுப்
பேயாய் அலைகிறார்கள்.