Wednesday 8 July 2015

ஸ்டெப்னி



ஸ்டெப்னி 

  அழகிய மாலை நேரம், சீறற்ற சாலையில் சீரான வேகத்தில் ஒரு மகிழூந்து,(நான்கு சக்கர வாகனம் கார் ) சென்றுக்கொண்டு உள்ளது, சாலையின் இருபுறமும் பசுமையான வயல்வெளி, மனதைக் கவரும் இந்த காட்சியைக் கண்டுகொண்டே காரில் பயணிக்கும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் செல்கிறார்கள், அளவான சத்தத்தில் இசையும் உள்ளே பரவி மனதை மயக்கித் தூக்கத்திற்கு அழைக்கிறது,

திடீர் என்று மகிழுந்து சாலையில் அலைபாய்கிறது,

ஓட்டுநனர் சாமார்த்தியமாக எந்த அசம்பாவிதமும் நிகழாமல் மகிழூந்தை நிறுத்துகிறார்,
என்னவாயிற்று என்று பதறும் உறவுகளுக்குத் தைரியம் சொல்லிக் கீழே இறங்கிப் பார்க்கிறார்,
 
car puncher க்கான பட முடிவு 
சக்கரம் தன் நிலை இழந்து, அதன் உள் இருந்த காற்றெல்லாம் வற்றிச் சப்பையாக,(டயர் பஞ்சர்)

சரி சரி பரவாயில்லை,

 car stepney க்கான பட முடிவு

அதான் (ஸ்டெப்னி) மாற்றுச் சக்கரம் இருக்கே, உடனே கழற்றி மாட்ட வேண்டியது தானே,
 என்றவுடன் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள்,
ஸ்டெப்னி என்றால் என்ன?
  
  ஸ்டெப்னி என்றவுடன் சிலருக்கு வேறு ஞாபகம் வருவது இயற்கை.



சரி சரி,,,,,,,,

இது ,
டயர் பஞ்சராகும்போதும் மற்றும் சமயங்களில் வெடித்துவிடும் போதும் ஆபத்பாந்தவனாக ஸ்டெப்னி பயன்படுகிறது. மேலும், ஸ்பேர் வீலை பெரும்பாலும் ஸ்டெப்னி என்றே நம்மூரில் அழைக்கிறோம்.
சரி இது எப்ப கண்டுபிடிக்கப்பட்டது?
ஊர்திகளுக்கான மாற்றுச்சக்கரத்தை ஸ்டெப்னி (stepney) என்கிறோம். ஆனால்,இச்சொல் தெருவின் பெயராகும். இங்கிலாந்திலுள்ள ஸ்டெப்னி (stepney)தெருவில், 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மாற்றுச்சக்கரம் ஒன்றை வால்டர் தேவீசு(Walter Davies)என்பவரும் தாம்(Tom) என்பவரும்  ஏற்பாடு செய்து தந்தனர். இத் தெருவில் கண்டறியப்பட்ட இம்முறைக்கு ஸ்டெப்னி (stepney ) என்னும் பெயர் நிலைத்து விட்டது.
  வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் ஸ்டெப்னி வீலை தனியாக உரிமையாளர்களிடம் விற்பனை செய்தனர். அவர்களது ஸ்பேர் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான்            ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்
அது சரி நாம் நினைப்பது போல் இப்ப
இல்ல
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
அய்யோ ஆரம்பித்துவிட்டாயா?
யார் கிட்ட கதை விடற ஏதோ சில தகவல்கள் தருகிறாய் என்பதற்காக,,,,,,,,,,,,
இல்லை, உண்மை உண்மை உண்மை ,,,,,,,,,,,
ஆம் 
ஔவையார் 
சொல்கிறார்,
ஆம் 
இது சங்க காலம்,
அவரின் சங்கப்பாடல் அதனைச் சொல்கிறது
பாடல் இதோ,

எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்

கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன 

இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே
                                ஔவையார்
(புறநானூறு  )

வண்டியில் பூட்டப் பட்ட காளைகள் இளயவை, இதுகாறும் வண்டி நுகத்தை அறியாதவை. அவை பூட்டப்பட்ட வண்டியில் ஏற்றப்பட்ட பொருளும் மிகவும் அதிகம், அது பள்ளத்தில் இறங்கினாலும், மேட்டில் ஏறினாலும் அப்போது வரும் இடையூற்றை அறிபவர் யார் என்று எண்ணி உப்பு வணிகர் அச்சு மரத்தை அடுத்துச் சேம அச்சுக் கட்டுவர். அத்தகைய அச்சைப் போன்றவனே புகழ் விளங்கிய கொடுப்பதற்குக் கவிந்த கையை உடைய உயர்ந்தவனே நீ பதினாறு கலைகளும் ( நாள் நிறைந்த) நிரம்பப்பெற்ற முழுமதியை ஒத்தவன்.எனவே உன் நிழலில் வாழ்பவர்க்குத் துன்பமான      இருள் எங்கே உள்ளது.

    ஊர்திச் சக்கரங்களில் ஏதும் பழுது ஏற்பட்டால் பயணம் நிற்காமல் தொடருவது பற்றிச் சிந்தித்துள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள். அப்பொழுது உருவாக்கப்பட்டதுதான் சேம அச்சு. சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில் சேமத்திற்காக பாதுகாப்பிற்காக-இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என இப்பாடல் அடி மூலம் ஔவைப்பிராட்டியார் விளக்குகிறார்.
மன்னரைப் பாராட்டப் பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப் பழந்தமிழரின் அறிவியல் உண்மை ஒன்று கிடைத்துள்ளது.
நம் தமிழ் முன்னோர்கள் மாற்றுச் சக்கரங்களின் தேவை உணர்ந்து அதை உருவாக்கி உள்ளனர் என்னும் பொழுது அவர்களின் அறிவியல் அறிவு வியப்பளிப்பதாக உள்ளது.
எல்லா அறிவியலும் மேனாட்டிற்குரியனவே என்னும் அறியாமை நீங்கி நடுநிலையுடன் ஆராய்ந்தால் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நம் தமிழர் அறிவியல் வளத்தில் சிறந்திருந்ததை உணரலாம். 

ஸ்டெப்னி-சேம அச்சு
(பூக்கும் ,,,,,,,,,,)

48 comments:

  1. அட..

    சுவாரஸ்யமான தகவல்கள். ஸ்டெப்னி பற்றிய மூல விவரத்தை இன்றுதான் அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்,
      தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  2. உண்மையிலேயே இது தெரியாதுங்க... விளக்கத்திற்கு நன்றி...

    ஆமாம் ஏன் எழுத்துகள் நடுவில் செங்கல்கள்...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி சார், வணக்கம்,
      உண்மையிலே எனக்கும் எப்படி என்று தெரியலப்பா இது போல் சொங்கல் அடுக்காமல் இருக்க,,,,,,
      என் தமிழ்மணம் என்னாயிற்று,
      செங்கலைச் சரிசெய்து அடுக்க கற்றுத் தரவும்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      இனிய பதிவு என வாழ்த்தியதற்கும் நன்றிகள் பல.

      Delete
  4. இலக்கியத்தையும் இங்கிலாந்து தெருப் பெயரை, (stephney) கருப் பொருளாக்கி இலக்கியச் சுவை மணக்க மணம் வீசும் பதிவை தந்துள்ளீர்கள் சகோதரி! வாழ்த்துகள்!
    இதோ பக்கத்தில் இருக்கும் இங்கிலாந்துக்கு செல்கிறேன் (stephney) தேடி!!
    தவறாக எண்ணிக் கொண்டால் நான் பொறுப்பு அல்ல சகோ!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வணக்கம்,
      இங்கிலாந்து போறதுக்கு இது வேறயா,,,,,,,,
      நம்பிட்டேன்,,,,,,,,,,,,
      ஸ்டெப்பினியைத் தேடி தான்
      பொறுப்பு அல்ல தான் சகோ,
      வருகைக்கு நன்றிகள் பல,
      நன்றி.

      Delete
  5. Replies
    1. வாங்க சகோ,
      புதுக்கோட்டைச் சந்திப்பு நல்லபடியாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி,
      ரசித்தமைக்கு நன்றி,
      நல்லா ஊர் சுற்றுங்கள் சுற்றத்துடன், வாழ்த்துக்கள்.
      நன்றி.

      Delete
  6. ஆக..

    அந்தக் காலத்திலேயே - ஔவையின் காலத்திலேயே - சேம அச்சு -
    ஸ்டெப்னி இருந்தது உறுதியாகின்றது!..

    இனிய பயணத்தின் போது கூடவே வந்தாலும் -
    அதுவும் ஒரு பாதுகாப்புக்குத் தான்!..

    ஆனாலும், இன்றைக்கு (4 + 1) சக்கரங்களில் எது எப்போது ஸ்டெப்னியாகும் எனக் கூற முடியாது அல்லவா?..

    வாகனத்திற்கு மட்டுமே - உடன் வரு சக்கரமும்.. உபரிச் சக்கரமும்!..

    அரிய செய்தி.. பழந்தமிழ்ப் பாடலுடன் கூடிய பதிவு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      ஆம் உறுதி தான்,
      பாதுகாப்புக்குத் தான்,
      வாகனத்திற்கு மட்டும் தான் நான் ஸ்டெப்னி சொன்னேன்,
      தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல.

      Delete
  7. எனக்கு தெரிந்துவிட்டது.. கல்தோன்றி..மண் தோனறா காலத்தே தோன்றியது தமிழ் மூத்த குடி..என்று....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே,,,,,,,
      என்ன தெரிந்தது குடி யா?
      தங்களுக்கு தெரிந்ததற்கு நன்றி.

      Delete
  8. அருமையான பதிவு,

    இந்த வார்த்தையை, இந்திய, வங்காள தேசம், மால்டா போன்ற ஆங்கிலேயர்கள் காலத்து காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகள் இன்னமும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கிலாந்தில் ஸ்பேர் டயர் என்றுதான் அழைக்கின்றனர்.

    சங்க இலக்கியத்தோடு இணைத்து ஓட்டிச்சென்ற உங்கள் எழுத்து மகிழூந்து, மகிழ் ஊர் பயணத்திற்கு சுகமாக இருந்தது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாஙகள் அரசே,
      அருமையான பதிவு என்று சொல்லிவிட்டு பொற்கிழி இல்லையா?
      தாங்கள் சொன்ன தகவல் நான் அறியாதது,
      அறியத்தந்தமைக்கு நன்றிகள்,
      வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல,

      Delete
    2. பொற்கிழியை புறா கழுத்தில் கட்டி அனுப்பி விட்டேனே , இன்னும் வந்து சேரவில்லையா?

      யார் அங்கே , அந்த புறா எங்கே?

      மன்னா,

      அந்த புறாவின் சிறகுகளுக்கு ஸ்டெப்னி இல்லாததால் பொற்கிழியின் பாரம் தாங்காமல் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.

      அடடா சரி அந்த ஆயாவை, அதாவது, பாட்டியை, அதாம்பா அந்த மகேஸ்வரி அவ்வையை உடனே நம் கற்கோட்டைக்கு அந்தபுறம் இருக்கும் அரண்மனைக்கு வந்து பொற்கிழியை பெற்று செல்லுமாறு ஒரு ஓலை அனுப்பிவிடு. அப்படியே வரும்போது நேற்று மன்னனின் கனவில் வந்த மருத நாட்டு இளவரசியின் கூந்தலுக்கு மணம் உண்டா என்பதை ஏதேனும் சங்ககால பாட்டில் சொல்லி இருக்கின்றார்களா இல்லை இந்த கால சயின்ஸ் புத்தகத்தில் சொல்லி இருக்கின்றார்களானு என்றும் பார்த்து வரச்சொல்லுங்கள்.

      ஆகட்டும் மன்னா அப்படியே செய்கிறேன்.

      அவங்க வரும்போது என்னை எங்கேனு கேட்ட , மன்னர் மான் வேட்டைக்கு போய் இருக்கின்றார் என்று சொல்லுங்கள், நான் அவர்களுக்கு பயந்து மறைந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டாம்.

      அப்படியே ஆகட்டும் மன்னா.

      Delete
    3. வாருங்கள் அரசே,
      அநியாயமா ஒரு உயிரைப் பலிக்கொடுத்து விட்டதே என் பதிவு,
      வாசம் ஏற்கனவே வீசியாயிற்றே,,,,,,,,,
      வருகைக்கு நன்றி.

      Delete
  9. ஸ்டெப்னி பற்றி இன்று தான் பெயர் விளக்கம் கண்டேன்.
    அட அன்றே தமிழர்கள் கண்டு இருக்கிறார்கள்....நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் உமையாள்,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  10. ஸ்டெப்னி பற்றிய விபரத்தை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்களம்மா, வருகைக்கு நன்றி.

      Delete
  11. சேம அச்சு பற்றிய செய்திகள் செம :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பகவானே,
      இதிலுமா???????
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  12. நாம் முன்னோர்கள் அறிவிற் சிறந்தவர் என்பதில் ஐயம் இருக்குமா என்ன. எதை அவர்கள் சொல்லவில்லை செய்யவில்லை எல்லாத் துறைகளையும் நன்றாக அலசி ஆராய்ந்து சொல்லிவிட்டார்கள் நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டு கிடப்பதாக எண்ணுகிறோம். இல்லையா தோழி மிக்க நன்றிம்மா சேம அச்சு செம
    நன்றி !வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இனியா,
      தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிம்மா,

      Delete
  13. ஸ்டெப்னி பற்றிய புதிய தகவல். மற்றும் அவ்வை பாதிக்கு விளக்கம். உங்கள் வழி தனி வழி தான் போங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்,
      என் வழி தனி வழி தான்
      அப்படியா??
      வருகைக்கு நன்றிகள் பல
      நன்றி.

      Delete
  14. அருமையான தகவலோடு அவ்வையின் பாடலும் அதற்கான விளக்கமும்...
    எதிலும் நாம்தான் முன்னோடி போலும்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்,
      ஆம் நாம் தான் முன்னோடி என்பதை நாம் உணர வேண்டும், நம் மொழி வளரும்,
      வருகைக்கும் வாழ்த்துக்கும்,
      நன்றிகள்.

      Delete
  15. ஒன்றுக்கு மாற்று ஸ்டெப்னீ என்று பொருள்கொள்ளலாமா. வண்டிக்கு வேண்டுமானால் சேம அச்சு என்று கூறுவோமே. ரசிக்க வைக்கும் எழுத்து, பழம்பெருமை பாடும் பதிவு. ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      தாங்கள் சொல்ல வருவது,,,,,,,,,,
      எது பாதுகாப்போ அதற்கு மட்டும் தான் இது பொருள்,
      அற்றவைக்கு சேம அச்சு என்று அல்ல,,,,,,,
      வருகைக்கு நன்றிய்யா,,

      Delete
  16. நம் தமிழர்களின் அறிவே அறிவு! சேம அச்சு! புதிய தகவலொன்று அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தளீர் வணக்கம்,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  17. சேம அச்சு
    ஆகா தமிழரின் சங்க காலப் பாடல் அறிந்து வியந்து போனேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  18. ஆகா!புறநானூற்றிலேயே ’ஸ்டெப்னி’ பற்றிச் சொல்லியாச்சா?! நான் சக்கரத்தைச் சொன்னேன்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      சக்கரத்தைத்தான்,,,,,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  19. ஸ்டெப்னி’ என்றதும் ஏதோ ஒரு குளு குளூ மேட்டர் பற்றிதான் சொல்லுறீங்க என்று ஒடோடி வந்த எனக்கு ஏமாற்றம்தான் இருந்தாலும் பரவாயில்லை வந்ததற்கு ஏதோ பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டேன்... பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், என் தளம் வந்ததது மகிழ்ச்சியே,
      மேட்டர் சரியில்லையோ, சரி சரி ஏதோ இப்போதைக்கு இதைப் படித்துச் செல்லுங்கள்,
      பாராட்டிற்கும், வருகைக்கும் நன்றிகள் பல.

      Delete
  20. சேம அச்சு தமிழரின் சங்க காலப் பாடல் அறிந்து வியந்து போனேன்.
    புதிய தகவலொன்று அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!.
    மிக அருமை.
    ரசித்தேன் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல,

      Delete
  21. மகிழுந்தில் அழைத்துச் சென்று பஞ்சர் ஆக்கி, ஸ்டெப்னி பற்றி சங்க இலக்கியத்துடன் நயமாய் உரைத்து ஔவை வழி விளக்கி பல நல்ல தகவல் கொடுத்து மகிழ வைத்துவிட்டீர்கள் சகோதரி. ஔவையார் இருந்திருந்தால் இப்போது மகிழுந்தில் அழைத்துச் சென்று இதுதான் நீங்கள் அன்றே பாடியது இப்போது ஸ்டெப்னி என்று சொல்லப்படுகிறது என்று சொன்னால் பாட்டி "முருகா தமிழுக்கு வந்த சோதனையைப் பார்...ஞானப்பழத்தைப் பிழிந்து தமிழை அள்ளி அள்ளி வழங்கினாலும் இந்தத் தமிழ் மக்கள் நான் அன்று சொன்ன வார்த்தைகளை விட்டு இன்று ஏதேதோ பிற மொழி கலந்து பேசுகின்றனரே! முருகா! நான் இதை தமிழ் கடவுளாகிய உன்னிடம் தானே சொல்ல முடியும்.." என்று சொல்லி இருப்பாரோ...

    அது சரி சேம என்ற வார்த்தை வட மொழியில் இருந்து பெறப்பட்டதா இல்லை தமிழ் சொல்தானா? ஏனென்றால் ஷேமம் என்று வடமொழிச் சொல்லிற்கு இதே அர்த்தம் தானே அதனால்தான் கேட்கின்றோம் தகவல் தெரிந்து கொள்ளத்தான் சகோதரி...

    இங்கிலாந்து தகவல் பற்றி அறிந்திருக்கின்றோம் சகோதரி...மிக்க நன்றி பகிர்விற்கு...

    ReplyDelete
    Replies
    1. அய்யா வாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றி.
      சேம - சேமித்து வைக்கும்
      என்று பொருள் படும்,
      தமிழ் சொல்.
      நன்றி.

      Delete
    2. வணக்கம்,
      சேமரம்- அழிஞ்சில்
      சேமம்- அடக்கம், அரண், இன்பம், காவல், நல்வாழ்வு
      சேமத்தேர்- உதவித்தேர்
      சேமக்கலம்- எறிமணி
      சேமக்காரன்- பொருளைக் காப்பாற்றுவோன், நம்பிக்கையிள்ளவன்,சிக்கனமுள்ளவன்
      சேமக்காலம்- செழிப்புக்காலம்
      இச்சொற்கள் வரும் இடங்கள் பிறகு சொல்கிறேன்.
      நன்றி.

      Delete
    3. மிக்க நன்றி சகோதரி! இந்த வார்த்தைக்கான அர்த்தங்களைப் பார்க்கும் போது ஷேமம் என்ற வடமொழிச்சொல்லும் ஒத்துப் போகின்றது. பண்டு கடிதப் போக்குவரத்து இருந்த சமயத்தில் க்ஷேமம். க்ஷேமத்திற்குப் பதில். என்று கடிதம் எழுதுவார்கள் ஒரு பிரிவினர்.

      Delete
  22. வணக்கம் மேடம் ..
    முதல் வருகை என்று நினைக்கிறன் ..

    ஒரு விசயத்தை அப்படியே சொல்லாமல் அதனுடன் சுவராசியமாக ஒரு செய்தியை சொல்லுகையில் மனதில் சற்று அழுத்தமாக பதியும் என்பதில் மிக தீவிரமாக நம்புகிறவன், ஆகையால் இந்த பதிவு என் மனதுக்கு நெருக்கமான ஒன்று! நிச்சயம் இந்த மாதிரி பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள், ஒரு புதிய பாடலை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  23. வாருங்கள் வணக்கம்,
    முதலில் தங்கள் வருகைக்கு என் நன்றிகள்,
    என் இலக்கியங்களை பகிர்ந்து போதல் என்பது மட்டும் அல்லாமல், அவர்கள் மனதில் பதியும்படியும் அமைத்தல் என்பதே இதன் தொடர்ச்சியாக, நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும், தொடருங்கள்.
    நன்றி.

    ReplyDelete