நானும் என் ஒற்றைச்,,,,,,,,,,,,,,
படம் கூகுள் நன்றி
இலையுதிர்ந்த மரங்களின்
மீதும்
என் மனப்பட்சியின் மீதும்
மலரிதழ்கள் தூகிறது வானம்.
பாழ்பட்ட வீட்டின்
பிளவுகளுக்குள் நானும்
என் ஒற்றைச் செடியும்,,,,,,,,
ஊன்றிப் பார்த்தால்
அதன் இலைத்தாண்டி
சிறு மொட்டு,
மலரும் நாள் நோக்கிய
என் அசைவற்ற முகத்தில்
வந்து அமர்ந்தது ஓர்
வண்ணத்துப்பூச்சி.
கூடிழைக்கப் புல்லிதழ்
பொறுக்கும்
சிறுகுருவியைப் போல்
வருவதும் போவதுமாய்
பட்டென்று
வெடித்து மலர்ந்த
மலர் மேல்
தன் மூக்கு நுழைத்து
பூ நெய் அருந்தி
மகிழ்ந்து
மகிழ்வூடிய மறுகணமே
சடுதியில் விலகிடும்
சூக்குமம் எனக்குப்
பிடிபடவேயில்லை
சிறிதொரு கவிதையாவது
முடைந்திடும் முயற்சியில்
தோற்றேன் பல பொழுது
வண்ணத்துப்பூச்சிடமும்
தான்
S U P E R Sako.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ,
Deleteஅழகான கவிதை... ரசித்தேன்...
ReplyDeleteவருகைக்கு நன்றி டிடி சார்.
Deleteஇயற்கையில் தோல்வி என்பதே இல்லை!..
ReplyDeleteமலர்களிடம் கேட்டுப் பாருங்கள்!..
வாருங்கள்,
Deleteமலர்களிடம் கேட்டேன்,,,,,,,,,,,,
வருகைக்கு நன்றி .
அருமை.
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ,
Deleteஅருமை! இயற்கை இப்படி இனிய கவிதைகளை தரும்!
ReplyDeleteவருகைக்கு நன்றி தளீர்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteவருகைக்கு நன்றிம்மா........
Deleteஅட அட அட ரொம்ப அழகாக வந்துள்ளது. அருமை அருமை ! மிகவும் ரசித்தேன். நன்றி வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇனியாவிற்கு நன்றாக இருந்தது எனில் மகிழ்ச்சியே,
Deleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல.
தோற்கவில்லை. வெற்றியே. அருமையான கவிதை.
ReplyDeleteநன்றிங்கய்யா,,,,,,
Deleteஅழகிய வார்த்தைகள், அற்புத சிந்தனை.
ReplyDeleteபூவின் மொழிகேட்க்க செய்தமைக்கு மிக்க நன்றி.
கோ
அரசருக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,
Deleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்,,,,,,
Deleteதோற்றேன் பல பொழுது
ReplyDeleteவண்ணத்துப்பூச்சிடமும்---அருமை...
வாருங்கள் வலிப்போக்கரே.
Deleteஅருமை,,,,,,,,,,, எது?
தோற்றதா?
வருகைக்கு நன்றி.
காட்சியை கண்முன் கொண்டு வந்தது வரிகள்.
ReplyDeleteவாருங்கள் தோழி வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஅருமையா இருக்கு..
ReplyDeleteஎன்ங்க இவ்வளவு அழகா கவிதை எழுதிட்டு வரலை நு சொல்லிக்கிட்டு.சூக்குமம் எனக்குப் பிடிபடவேயில்லை
சிறிதொரு கவிதையாவது
முடைந்திடும் முயற்சியில்
தோற்றேன் பல பொழுது/// அப்ப நாங்க என்ன சொல்றது...!!?? அஹ்ஹ...
வாருங்கள் அய்யா,
ReplyDeleteவணக்கம்
தாங்கள் சொல்வது ,,,,,,,,,,
அப்ப அறுக்கலாம் என்கிறீர்கள்,,,,,,,,,,
ஆனா ,,,,
தங்கள் வாழ்த்து என்னை வளப்படுத்தும்,
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
அற்புதம்
ReplyDeleteமிகச் சிறந்த நிறைவான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல
ReplyDeleteபுதுக்கவிதையின் ராஜபாட்டைகள் உங்கள் பாதம் படக் காத்திருக்கின்றன.
ReplyDeleteசிகரம் தொட வாழ்த்துகள்.
நன்றி
வாருங்கள் என் ஆசானே,
ReplyDeleteதங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தும்,
வருகைக்கு நன்றி.
அருமை சகோ
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ, ஆளைக் காணவில்லையே என்று நினைத்தேன்,,,,,,,,,
Deleteவண்ணத்துப் பூச்சியின் இறகுகள் மின்னல் கணத்தில் கண்ணைப் பறித்து நெஞ்சைப் பறிப்பதுபோல் உங்கள் கவிதையும் மெருகேறிவருகிறது. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா
ReplyDeleteவாருங்கள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,
Deleteகூடிழைக்கப் புல்லிதழ் பொறுக்கும் சிறுகுருவி, பட்டென்று வெடித்து மலர்ந்த மலர்.. கவிதை முடைதல் என வரிக்குவரி ரசனை தூவிய கவிதை. பாராட்டுகள் மகேஸ்வரி.
ReplyDeleteவாருங்கள் தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல,
ReplyDeleteரசித்துப் படித்தேன்;படித்து ரசித்தேன்
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteவணக்கம். தாங்கள் ரசிக்கும்படி இருந்தது குறித்து மகிழ்ச்சியே,
நன்றி.
வணக்கம் சகோதரி.
ReplyDeleteவரிக்கு வரி இதமான சொற்களுடன் இணைந்து மனதை பரவசப்படுத்திய கவிதை அருமையாக இருந்தது.. படிக்கும் போதே நானும் மெல்லிய இறக்கைகளை கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் பறப்பது போன்ற உணர்வுடன் மிகவும் ரசித்துப் படித்தேன் சகோதரி. பாராட்டுடன் வாழ்த்துக்கள்.
என் தளம் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் சகோ,
ReplyDeleteதாங்களும் வண்ணத்துப்பூச்சியாய் பறந்தது மகிர்ழச்சியே, வருகைக்கும் வாழ்ததுக்கம் நன்றிகள்,
ஓரிரு சொறொடர்கள் ரசிக்க வைக்கின்றன. கூடிழைக்க புல்லிதழ் பொர்க்கும் சிறு குருவி, கவிதை முடைதல் போன்றவற்றில் கற்பனை வளம் தெரிகிறது ஆனால் ...... இவை போதுமா கவிதையைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் வாசிப்பவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டீர்களா? எனக்கென்னவோ கவிதை முடையும் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்தத் தோன்றுகிறது
ReplyDeleteவாருங்கள் அய்யா வணக்கம்,
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு நன்றிகள் பல, முயற்சிக்கிறேன் முடியுமா என்று?????,