மன்னிப்பு
சில நாட்களுக்கு முன் என் வகுப்பு
மாணவர் ஒருவர் தன் கையில் வைத்திருந்த நூலைப் பார்த்து, அந்த நூலைப் படிக்கனும்
எனும் ஆவலில் அதைக் கொடுங்கள் படித்து தருகிறேன் என்றேன். எந்த நூலைப்பார்த்தாலும்
படிக்கும் ஆவர்வம் உண்டு. படித்ததில் பிடித்த பகுதி இது, உங்களுக்காக,
ஓர் ஊரிலே பெரியவர் ஒருவர் இருந்தார். ஒரு
நாள் அவருக்கும் அவர் பங்குத்தந்தைக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது. அது முதல்
அவர் கோவிலுக்கு போவதில்லை. பங்குத் தந்தையையும் பார்ப்பதில்லை. ஆண்டுகள்
உருண்டோடின. அந்தப் பெரியவர் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையானார். அந்த ஊர்
உபதேசியார் அந்தப் பரியவரைப் பார்த்து, ஐயா, நம் பங்குச் சாமியாரை அழைத்து
வருகிறேன். ஒரு நல்ல பாவசங்கீர்தனம் செய்யுங்கள். நம் பங்குத்தங்தையோடு சமாதானம்
ஆகுங்கள், என்று சொல்லிப்பார்த்தார். ஆனால்அந்தப்பெரியவர் முடியாது என்று சொல்லி
விட்டார்.
அந்தப் பெரியவர் உடல்நிலை மோசமாகிக்
கொண்டிருந்தது. மரணத்தை நெருங்க்கொண்டிருங்தார். மீண்டும் உபதேசியார் அவரைச்
சந்தித்து இப்போதாவது சாமியாரை அழைத்து வருகிறேன். என்று கேட்டார். அந்தப்
பெரியவரும் சரி என்று தலையாட்டினார். உபதேசியார் மகிழ்ச்சியோட பங்குச் சாமியாரிடம்
தெரிவித்தார். பங்குச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. சின்ன சாமியாரையும்
அழைத்துக் கொண்டு அந்தப் பெரியவர் வீட்டிற்கு விரைந்தார். இரண்டு சாமியார்களும்
பெரியவன் இரண்டு பக்கங்களில் நின்று கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு
இருந்தனர்.
அப்போது அந்தப் பெரியவர் கூடி இருந்த
மக்களைப் பார்த்து சத்தமாக நான் இப்போதுதான் இயேசுநாதர் சுவாமியைப் போல்
சாகப்போகிறேன். என் இருபக்கமும் இரண்டு கள்வர்கள் நிற்கிறார்கள் என்று
சாமியார்களைச் சாடிக் கொண்டே உயிர்விட்டார்.
மரிக்கும் போதும் கூட மன்னிக்க மனம் இல்லாத
மனிதர். விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்துவது மன்னிப்பு. அந்த மன்னிப்பை
வழங்குவதற்கு நம் உள்ளம் எவ்வளவு தயங்குகிறது?
50 ஆவது பதிவு- எண்ணிக்கைக்கு,,,,,,,,,,,,,,,,,
மகத்தான ஐம்பதாவது பதிவு!..
ReplyDeleteமேலும் பல நூறு பதிவுகளை வழங்கிட வேண்டும்..
நல்வாழ்த்துகள்!..
வாருங்கள்,வணக்கம்.
Deleteநலமா?
தங்கள் அதிவிரைவான முதல் வருகைக்கு தலைவணங்குகிறேன்.
தங்கள் வாழ்த்துக்கள் என்னை வளப்படுத்தும்,
வாழ்த்துக்கும் வருகைக்கும் என் நன்றிகள் பல,
மன்னிக்க மனம் இல்லாத மாக்கள்.
ReplyDelete50 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
வாங்க ஸ்ரீராம் வணக்கம்,
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
மன்னிக்கவும் ஓர் மனம் வேண்டும்! அதில்லாத இவர் கல்லிற்கு சமம் என சொல்லலாமா? 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆம் தளீர் மன்னிப்பு என்பது அவர் மனம் சார்ந்தது, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteமன்னிக்க முதலில் மறக்க வேண்டும் . மறக்க முடியாததால் மன்னிக்க முடியவில்லை போலும் இது இருவருக்கும் பொருந்தும்தானே.
ReplyDeleteஆம் அய்யா, மறந்தால் தான் மன்னிக்க முடியும்,
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
அரை சதம்!
ReplyDeleteபதிவில் நிறையக் கண்டேன்
திரைக் கடல்கடந்து வந்து
வாழ்த்தி நின்றேன்!
கரந்தையார் வாழ்த்து
வரம் பெற்றே!
முழு சதம் முழு நிலவாய்
விரைவில் காண்பேன்!
வாழ்த்துகள் சகோதரி!
மன்னிப்பு மகத்தானது!
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் புதுவையாரே,
Deleteஎன்ன ஸ்டெப்னி பார்த்தீர்களா? அய்யோ, நான் மாற்றுச்சக்கரம் தான் பார்த்துர்களா?
கடல் கடந்து வந்து வாழ்த்துகிறேன்என்றவுடன் நினைவில் வந்தது தாங்கள் இங்கிலாந்து சென்றது,
தங்கள் வரகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிவிற்கு வாழ்த்துரைக்கும் முன் உங்களின் ஐம்பதாவது படைப்பிற்கு என் நெஞ்சார வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிஉலகில் தங்களுக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, வெற்றி நடைபோடும் உங்கள் எழுத்துப்பயணம், பல நூறு மைகல்களை தாண்டி வீறு நடைபோட வாழ்த்துகின்றேன்.
மன்னிக்காத அந்த மனிதர் இயேசு நாதரைபோல் மரிக்க நேர்வதாய் சொன்னாலும் பரமேறுவாரா என்பது சந்தேகமே.
கடன் வாங்கி படித்து அதை கடனின்றி பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் தொடர் ஓட்டம்.
கோ
வாருங்கள் அரசே,
Deleteஎன் ஓட்டம் தொடர் ஓட்டமாக வாழ்த்தியதற்கு நன்றிகள் பல.
சிலுவையில் தொங்கிய இயேசு பிரான் மரிப்பதற்கு முன் திருவாய் மலர்ந்த ஏழு பூக்களில்முதல் பூவே மன்னிப்பு(பூ) தானே?
ReplyDelete"பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்" என்று தன்னை கொடுமைபடுத்தி முற்கரீடம் சூட்டி , சாட்டையால் அடித்து, ஏளனம் செய்து, முகத்தில் துப்பி ,விலாவில் குத்தி,தமது ஆடையையும் கூறு போட்டு பங்கிட்டுக்கொண்ட அந்த யூதர்களை பார்த்து சொன்ன அந்த மகானை மேற்கோள்காட்டி அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் ஏற்புடையவை அல்ல.
அவருக்காய், நாம் பிதாவிடம், "பிதாவே அந்த பெரியவரை மன்னியும் தாம் சொல்லியது இன்னதென்று அறியாமல் சொல்லிவிட்டார்" என பிரார்த்திப்போம்.
நல்ல பதிவு.
கோ
வாருங்கள் அரசே,
Deleteதங்கள் மீள் வருகைக்கும் நன்றிகள்,
ஆம் அவரின் போதனைகளைப் பின்பற்றினால் சமூகம் நலம் பெறும் தான், நல்லது,
நன்றி.
கேப்டனுக்கு சொந்தக்காரரோ...? ஹிஹி...
ReplyDelete50 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
வாங்க டிடி,
Deleteஎந்த கேப்டன்,,,,,,,,,,
வாழ்த்துக்கும் ,வருகைக்கும் நன்றிகள் பல.
100 th Toda V A Z T H U K A L
ReplyDeleteவாருங்கள் சகோ,
Deleteசொந்த மண்ணில் நலமாய் இருப்பீர்கள்,
வாழ்த்துக்கு நன்றிகள் பல,
தொடருங்கள். நன்றி.
வணக்கம்.
ReplyDeleteஎனக்கென்னமோ அவர் சாகும் தருவாயிலும், பங்குத் தந்தையரின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் துடிப்போடு இருந்திருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.
பொதுவாக இதுபோன்று சமூக, சமயப் பணியில் ஈடுபடுபவர்கள் ஒருவேளை கள்ளர்களாக இருந்தால் அவர்களை மன்னிப்பது என்பது தனிமனிதர் சம்பந்தப்பட்ட தல்ல.
அன்றியும் அது போன்ற களைகள் சமுதாயத்தில் இருந்தும் செய்யும் புனிதப் பணியில் இருந்தும் அப்புறப்படுத்தப்படவும் வேண்டும்.
பெரியவருக்கு மனவருத்தம் எதனால் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
அதே நேரம் அவர் மரணத் தருவாயில் இவர்களைக் கள்ளர் என அடையாளப்படுத்துவது நோக்க பங்குத்தந்தையர் சரியானவர் இல்லை என்றும், நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மக்கள் அவர்களின் பின்சென்று ஏமாந்துவிடக் கூடாது என்றும் அவர் நினைத்ததாகவே எனக்குப் படுகிறது.
மன்னிப்பு என்கிற மனமில்லாதவர் என்பதை விட சாகும் தருவாயிலும் சமூக அக்கறையோடு செயல்பட்டவர் என்பதற்காக அவரைப் பாராட்டத் தோன்றுகிறது.
தங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
தங்களின் தமிழ்ச்சேவை வலையுலகில் தொடரட்டும்.
பயன்பெறக் காத்திருக்கிறோம்.
நன்றி.
நான் சொல்ல வந்ததை ஊமைக்கனவு பதிவர் மிக அழகாக சொல்லிவிட்டதால் அதுதான் எனது கருத்து என வழிமொழிகிறேன்
Deleteவாருங்கள் என் ஆசானே,
Deleteவணக்கம்,
இப்ப தான் மனம் நிம்மதியாய் உள்ளது,
என்ன????????????
புரியலையா?
தங்கள் பேராசிரியரே என்று விளிக்கும் கிண்டல் இல்லைப் பாருங்கள்,
தாங்கள் தங்கள் பணிகளுக்கு மத்தியில் என் தளம் வருவது படிப்பது கருத்துச் சொல்வது நான் பெற்ற பேறு,
பெரியவருக்கு மனவருத்தம் எதனால் ஏற்பட்டது என்பது எல்லாம் கடந்தும், சாகும் தருவாயில் கூட மன்னிக்க மனம் இல்லையே என்பது தான்,,,,,,,,,,,
யேசுநாதரிடம் எத்துனை முறை மன்னிக்க வேண்டும் என்று கேட்டதற்கு 7 முறையல்ல 70 முறைகூட மன்னிக்கலாம் என்று சொன்னதாக படித்துள்ளேன்,
சரி அவர் பாதிரியார் அல்லவே,
ஆனாலும் பாருங்கள் ஆசானே, அவர் இருவரில் ஒருவரை நல்லக்கள்ளன் என்று பொருள் கொண்டிருப்பார் என்பது சரியா? ஆசானே,
தங்களிடம் தான் நான் கற்க காத்திருக்கிறேன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா.
வாருங்கள் மதுரைக்காரரே,
Deleteவணக்கம்.
தங்களின் வழிமொழிதலுக்கு நன்றிகள் பல,
வருகைக்கும்,,,,,,,,,
தங்களின் 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாருங்கள் அம்மா வாழ்த்துக்கு நன்றிம்மா
Deleteமன்னிக்கத்தெரிந்தவன் மனிதன்,
ReplyDeleteமன்னிப்புக்கேட்கத்தெரிந்தவன் மாமனிதன் என்கிறார்கள்.
ஆம் அய்யா,
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.
தங்களின் 50வது பதிவிற்குப் பாராட்டுக்கள் சகோதரியாரே
ReplyDeleteமன்னிப்பு என்பது உயர்ந்த செயல்தான்
சாகும்போது கூட மன்னிக்க மனம்இல்லையெனில்
அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் தன்மை அப்படிப் பட்டதாக இருக்கலாம் அல்லவா,
தெரியாமல் தவறு செய்தோரை மன்னிக்கலாம்
தெரிந்தே தவறுகளைத் தொடர்ந்து செய்வோரை
என் செய்வது
வாருங்கள் சகோ,
Deleteஇருக்கலாம்,
ஆனால் இது உண்மைதான்,,,,,,,,
தொடர்ந்து செய்பவரை மன்னிக்க முடியாது தான்,,,,,,
ஆனாலும் மன்னிப்பு என்பது மிகப்பெரிய செயல் இல்லையா?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ, தாங்கள் உருவாக்கிய பாதைக்கு மீண்டும் நன்றிகள்.நல்லா எழுதறேனா???
ஐம்பதாவது பதிவுக்கு என் வாழத்துக்கள் அம்மணி. மேலும் பலவாயிரம் பதிவுகள் இட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! மன்னிப்பு மனிதர்களுக்குரிய பண்பு தான்.மன்னித்து மறந்து தான் ஆகணும் இல்லையேல் உறவுகளே இருக்காதே ஆனாலும் எல்லோரையும் எல்லாநேரமும் மன்னிக்க முடியாதே ரொம்ப தப்பு செய்தால் விலகி இருப்பது தானே சிறந்தது. இல்லாவிட்டால் நமக்கே நாம் குழி தோண்டுவது போல் ஆகிவிடுமே. இதற்குத் தான் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்றும், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் என்றும் சொல்கிறாரே . அட ரொம்பக் குழப்புகிறேனோ. ஹா ஹா நானே குழம்பி தானே இருக்கிறேன்மா. நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாங்கம்மா இனியா,
Deleteவணக்கம்,
ஆம் எல்லா நேரமும் எல்லோரையும் மன்னிக்க முடியாது தான்,
உறவுகளே இல்லாமல் போய்விடும் தான்,
விலகி இருப்பது தான் நல்லது,
இப்படி விலகியே ,,,,,,,,,,,,
ஏன் குழப்பம்மா,,,,,,,,
என் பதிவு தந்த குழப்பமா?
தொடருங்கள் அம்மா,
நன்றி.
முத்தாய்ப்பான 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.!50திலிருந்து 100வது பதிவுக்கு தொடரவும் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே,
Deleteவணக்கம்,
பதிவைப் பத்தி ஒன்னும் சொல்லல,,,,,,,,,,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்,
சில பேர் அகராதியில் இல்லாத வார்த்தை ..மன்னிப்பு :)
ReplyDeleteஹஹஹ்ஹ்பகவானே யாரைக் குத்துறீங்க??!!!!!
Deleteபகவானே அந்த அகராதியை நான் பார்த்தது இல்லை,,,,
Deleteவருகைக்கு நன்றி.
50ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இவ்வாறான நற்குணங்கள் இல்லாத நிலையில் வாழ்வில் சோதனையே.
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteஆம் உண்மைதான்.
தங்கள் கருத்துக்கு நன்றிகள் பல.
50க்கு வாழ்த்துகள்! அருமையான கதை! மன்னிப்பு என்பது மிக மிக அருமையான ஒரு உயரிய குணம் மனிதர்க்கு அவ்வளவு எளிதாக வராத குணம்....அது அன் கண்டிஷனல் அன்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்...
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteவணக்கம்,
வாழ்த்துக்கு நன்றி,
ஆம் உண்மை தான் அதிக அன்பு இருந்தால் தான் மன்னிக்க மனம் வரும்.
ஒரு பழமொழி சொல்வார்கள்,
மாமியார் உடைத்தால் மண்சட்டி,
மருமகள் உடைத்தால் பொன் சட்டி,,,,,,,
எல்லாம் மனம் இருந்தால் நடக்கும்,
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல
ஹ்ம்ம்..... இந்த புத்தகத்தை படிக்க நேரம் இருக்கு.. ஆனால்... (பேரு மூச்சு)
ReplyDelete50 க்கு வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள்.
வாருங்கள், வணக்கம்,
Deleteபுரியலையே,,,,,,,
ஏன் பெருமூச்சு,,,,,,,,,,,
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
ஆஹா நினைவு வந்தது,,,,,,,,
Deleteஅய்யோ,,,,,,, மன்னிக்கனும்,
எனக்கு தங்கள் நூலை அனுப்பவும்,
நான் கொஞ்சம் டியூளேட்
நன்றிப்பா
மனித உருவில் இருக்கும் மனித விலங்கிற்கு எதற்கு மன்னிப்பு.....!!!
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே,
Deleteஇப்படி வேண்டாம் என்ற தான் அமைதியாக போனீர்களோ,
நான் தான் எடுத்துக்கொடுத்தேனா?
தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள்.
வணக்கம் சகோதரி.
ReplyDeleteநல்ல கதை. தவறிழைத்தவர்களானாலும் மன்னித்து அவர்களோடு அன்பை பரிமாறி அவர்களை மகிழ்விப்பதே ஒரு மனிதனின் பண்பு. ஆனால் உயிர் மரிக்கும் தருணத்திலும், சிலேடையாக சொற்களை பிரயோகித்து மன்னிக்காத தம் மனதை காட்டிச்செல்ல அப்பெரியவரால் எப்படித்தான் முடித்ததோ.?
தங்களது 50 தாவது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பதிவுகள் பல பெருகி சாதனை பலவும் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தாமதமாக வந்து படித்து வாழ்த்துரைத்தமைக்கு மன்னிக்கவும். என் சூழல் அவ்வாறாக அமைந்து விட்டது. நன்றி.
நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.
வாருங்கள் சகோ,
Deleteதாங்கள் வந்து படித்து கருத்திடவதே போதும், அது மிகப்பெரிய வார்த்தை, வேண்டாமே, தங்கள் சூழல் அறிந்ததே,,,,,,,,,,
தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிக்ள் பல.