Wednesday 15 July 2015

நானும் என் ஒற்றைச்,,,,,,,,,,,,,,

                                                   
           நானும் என் ஒற்றைச்,,,,,,,,,,,,,,        
                                                    
                                          வண்ணத்துப்பூச்சி க்கான பட முடிவு


                  படம் கூகுள் நன்றி


இலையுதிர்ந்த மரங்களின் மீதும்

என் மனப்பட்சியின் மீதும்

மலரிதழ்கள் தூகிறது வானம்.

பாழ்பட்ட வீட்டின் 

பிளவுகளுக்குள் நானும்

என் ஒற்றைச் செடியும்,,,,,,,,

ஊன்றிப் பார்த்தால்

அதன் இலைத்தாண்டி

சிறு மொட்டு,

மலரும் நாள் நோக்கிய 

என் அசைவற்ற முகத்தில்

வந்து அமர்ந்தது ஓர் 

வண்ணத்துப்பூச்சி.

கூடிழைக்கப் புல்லிதழ் 

பொறுக்கும் 

சிறுகுருவியைப் போல்

வருவதும் போவதுமாய்

பட்டென்று 

வெடித்து மலர்ந்த 

மலர் மேல்

தன் மூக்கு நுழைத்து

பூ நெய் அருந்தி

மகிழ்ந்து

மகிழ்வூடிய மறுகணமே

சடுதியில் விலகிடும்

சூக்குமம் எனக்குப் பிடிபடவேயில்லை

சிறிதொரு கவிதையாவது

முடைந்திடும் முயற்சியில்

தோற்றேன் பல பொழுது

வண்ணத்துப்பூச்சிடமும் தான்

42 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  2. அழகான கவிதை... ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி டிடி சார்.

      Delete
  3. இயற்கையில் தோல்வி என்பதே இல்லை!..

    மலர்களிடம் கேட்டுப் பாருங்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      மலர்களிடம் கேட்டேன்,,,,,,,,,,,,
      வருகைக்கு நன்றி .

      Delete
  4. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  5. அருமை! இயற்கை இப்படி இனிய கவிதைகளை தரும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளீர்.

      Delete
  6. Replies
    1. வருகைக்கு நன்றிம்மா........

      Delete
  7. அட அட அட ரொம்ப அழகாக வந்துள்ளது. அருமை அருமை ! மிகவும் ரசித்தேன். நன்றி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. இனியாவிற்கு நன்றாக இருந்தது எனில் மகிழ்ச்சியே,
      வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் பல.

      Delete
  8. தோற்கவில்லை. வெற்றியே. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கய்யா,,,,,,

      Delete
  9. அழகிய வார்த்தைகள், அற்புத சிந்தனை.

    பூவின் மொழிகேட்க்க செய்தமைக்கு மிக்க நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அரசருக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,

      Delete
  10. அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம்,,,,,,

      Delete
  11. தோற்றேன் பல பொழுது

    வண்ணத்துப்பூச்சிடமும்---அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே.
      அருமை,,,,,,,,,,, எது?
      தோற்றதா?
      வருகைக்கு நன்றி.

      Delete
  12. காட்சியை கண்முன் கொண்டு வந்தது வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  13. அருமையா இருக்கு..

    என்ங்க இவ்வளவு அழகா கவிதை எழுதிட்டு வரலை நு சொல்லிக்கிட்டு.சூக்குமம் எனக்குப் பிடிபடவேயில்லை

    சிறிதொரு கவிதையாவது

    முடைந்திடும் முயற்சியில்

    தோற்றேன் பல பொழுது/// அப்ப நாங்க என்ன சொல்றது...!!?? அஹ்ஹ...

    ReplyDelete
  14. வாருங்கள் அய்யா,
    வணக்கம்
    தாங்கள் சொல்வது ,,,,,,,,,,
    அப்ப அறுக்கலாம் என்கிறீர்கள்,,,,,,,,,,
    ஆனா ,,,,
    தங்கள் வாழ்த்து என்னை வளப்படுத்தும்,
    தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  15. அற்புதம்
    மிகச் சிறந்த நிறைவான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  17. புதுக்கவிதையின் ராஜபாட்டைகள் உங்கள் பாதம் படக் காத்திருக்கின்றன.

    சிகரம் தொட வாழ்த்துகள்.

    நன்றி

    ReplyDelete
  18. வாருங்கள் என் ஆசானே,
    தங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தும்,
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ, ஆளைக் காணவில்லையே என்று நினைத்தேன்,,,,,,,,,

      Delete
  20. வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் மின்னல் கணத்தில் கண்ணைப் பறித்து நெஞ்சைப் பறிப்பதுபோல் உங்கள் கவிதையும் மெருகேறிவருகிறது. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

      Delete
  21. கூடிழைக்கப் புல்லிதழ் பொறுக்கும் சிறுகுருவி, பட்டென்று வெடித்து மலர்ந்த மலர்.. கவிதை முடைதல் என வரிக்குவரி ரசனை தூவிய கவிதை. பாராட்டுகள் மகேஸ்வரி.

    ReplyDelete
  22. வாருங்கள் தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல,

    ReplyDelete
  23. ரசித்துப் படித்தேன்;படித்து ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      வணக்கம். தாங்கள் ரசிக்கும்படி இருந்தது குறித்து மகிழ்ச்சியே,
      நன்றி.

      Delete
  24. வணக்கம் சகோதரி.

    வரிக்கு வரி இதமான சொற்களுடன் இணைந்து மனதை பரவசப்படுத்திய கவிதை அருமையாக இருந்தது.. படிக்கும் போதே நானும் மெல்லிய இறக்கைகளை கொண்ட வண்ணத்துப் பூச்சியாய் பறப்பது போன்ற உணர்வுடன் மிகவும் ரசித்துப் படித்தேன் சகோதரி. பாராட்டுடன் வாழ்த்துக்கள்.

    என் தளம் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்.
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  25. வாருங்கள் சகோ,
    தாங்களும் வண்ணத்துப்பூச்சியாய் பறந்தது மகிர்ழச்சியே, வருகைக்கும் வாழ்ததுக்கம் நன்றிகள்,

    ReplyDelete
  26. ஓரிரு சொறொடர்கள் ரசிக்க வைக்கின்றன. கூடிழைக்க புல்லிதழ் பொர்க்கும் சிறு குருவி, கவிதை முடைதல் போன்றவற்றில் கற்பனை வளம் தெரிகிறது ஆனால் ...... இவை போதுமா கவிதையைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் வாசிப்பவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டீர்களா? எனக்கென்னவோ கவிதை முடையும் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்தத் தோன்றுகிறது

    ReplyDelete
  27. வாருங்கள் அய்யா வணக்கம்,
    தங்கள் கருத்துரைக்கு நன்றிகள் பல, முயற்சிக்கிறேன் முடியுமா என்று?????,

    ReplyDelete