Wednesday 1 July 2015

அண்ணே கொஞ்சம் சீக்கிரம் போங்க,

                                             ஆட்டோ க்கான பட முடிவு
அண்ணே கொஞ்சம் சீக்கிரம் போங்க,
   அண்ணே கொஞ்சம் சீக்கிரம் போங்க, ம்ம் சீக்கிரம் ,,,,,,,,,,,, இன்னும் விரைவாக போங்க,

   இப்படி, தான் செல்லும் 3 சக்கர வாகனத்தை (ஆட்டோ) விரைவாக ஓட்டச் சொல்கிறான்,,,,,,,,,

   என்ன செய்வது, எவ்வளவு விரைந்து சென்றாலும் ஆட்டோ போகும் விரைவு அவன் மனத்தின் ஒட்டத்தை விட ரொம்பபபபபபபபப குறைவு

இது சங்க காலம்

கார்காலம் தொடங்கிவிட்டது. அவன் காதலியிடம் திரும்பவேண்டிய நேரமும் வந்துவிட்டது. காட்டில் பெய்யும் மழையும் குளிரும் தண்ணீரில் கத்துகின்ற தவளைகளும் செம்மண்ணும் அதில் கிடக்கும் பூக்களும் காற்றில் மிதக்கும் வாசனையும் மான்களும் சகலமும் அவனுக்கு அவளை நினைவுபடுத்துகின்றன. அவளும் இதேபோல் ஏங்கிக் காத்திருப்பாள் என்பதற்காகவும், ‘கார்காலத்தில் திரும்புவேன்என்று அவளுக்குக் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் டிரைவரிடம் ஆட்டேவை, ச்சே, தேரை ஓவர் ஸ்பீடில்ஓட்டச் சொல்கிறான்.

 வேலை முடிந்து திரும்புகிற காதலன் தன்னுடைய தேர்ப்பாகனை விரட்டுகிறான்
தலைவன் தன் தலைவியைக் காண வரும் பாடல்,
பாடல் இதோ,

படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல்லியத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும் புதல் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
வெம்சின அரவின் பை அணந்தன்ன
தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்
திரிமருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்
காடு கவின் பெற்ற தண்பதப் பெருவழி
ஓடு பரி மெலியாக் கொய்சுவல் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு
நம்வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே!
நூல்: அகநானூறு (154)
பாடியவர்: பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்

தேர்ப் பாகனே,
   பலத்த மழை பொழிகிறது. பயனுள்ள முல்லை நிலத்தின் ஆழமான பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. அவற்றில் தங்கியிருக்கும் பிளந்த வாய்த் தேரைகள் சத்தமிடும், ஒலி பல வாத்தியங்கள் கலந்த இசையைப்போல வழி நெடுகிலும் கேட்கிறது.
  சிறிய புதர்களில் இருந்து உதிர்கின்ற நீண்ட காம்புகளைக் கொண்ட பிடவப் பூக்கள் செம்மண் நிலமெங்கும் உதிர்ந்து கோலம் போடுகின்றன. கொடூரமான கோபத்தைக் கொண்ட பாம்பின் படம் போல காந்தள் மலர்கள் மலர்ந்து விரிந்து மணக்கின்றன.
    முறுக்கிய கொம்பைக் கொண்ட ஆண் மான், தெளிவான நீரைக் குடிக்கிறது. பின்னர் தன் மனத்துக்குப் பிடித்த துணை மானுடன் சென்று தங்குகிறது.
   இப்படியாக, மழையும் குளுமையும் இந்தக் காடுமுழுவதையும் அழகு செய்திருக்கின்றன. காட்டின் நடுவே உள்ள பெரிய பாதையில் வேகமான குதிரைகளை ஓட்டிச் செல்கிறாய் நீ.

    உன்னுடைய குதிரைகளின் பிடரி மயிர் அளவாகக் கத்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றின் கழுத்தில் உள்ள மாலைகள் கால்வரை தழைந்து தொங்குகின்றன, அந்த மாலைகளில் உள்ள மணி கம்பீரமாகச் சத்தமிடுகிறது.

    பாகனே, தேரை இன்னும் வேகமாக ஓட்டு. அழகிய மாமை நிறம் கொண்ட என் காதலி, என்மீது ஆசை வைத்திருக்கும் அந்த அரிவையைச் சீக்கிரமாகச் சென்று சேர்வோம்.

எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல் அல்லவா,,
,
  

67 comments:

  1. வணக்கம்,
    வாருங்கள் தங்கள் முதல் வருகை அதுவும் இவ்வளவு விரைவாக, நன்றி ரூபன்,
    தங்கள் வருகைக்கு நன்றி,

    ReplyDelete
  2. வணக்கம்
    நல்ல வர்ணனை.. அகநானூறு பாடலுக்கு சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்....யார்.?

    superb.

    ko

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அரசருக்கு புலவர் யார் என தெரியாதா?
      வருகைக்கு நன்றி.

      Delete
    2. படித்தவர்களின் சகவாசம் எல்லா ம் நமக்கு (உங்க அளவிற்கு)கிடையாதே?

      அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் நீங்கள் தானோ அவர்? புலமையில் சளைத்தவரல்லவே அதனால் இந்த சந்தேகம்.

      கோ

      Delete
  4. வணக்கம் பேராசிரியரே !

    எக்கால மும்பொருந்தும் ஏக்கங்கள் காதலென
    முக்கால மும்உணர்த்தும் மூச்சு !

    அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே,
      குறள் வெண்பாவில் என் பதிவு வாழ்த்தப்பட்டது,
      மகிழ்ச்சியே,
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  5. அருமை. "வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே.." என்ற ஒரு பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      தங்கள் நினைவுகளை மீட்டியது எனின் மகிழ்ச்சியே,
      வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  6. மன மீட்டர் தாறுமாறாய் எகுறுகிறது...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டிடி,
      தவிப்பு தங்களுக்கு என்ன சிரிப்பு,
      வருகைக்கு நன்றி.

      Delete
  7. அருமை அருமை .இந்தக் காலத்துக்கும் பொருந்தும்வண்ணம் கொடுத்த விளக்கம் சிறப்பு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  8. ஆக்கப் பொருத்தவர்கள் ஆறப் பொருக்காமல் தவியாய் தவிப்பது மாதிரி, கதாலித்தவர்களுக்குத்தான் உடனே .என்ற அதன் தவிப்பும் படபடப்பும் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே,
      ஏன் தங்களுக்கு என்ன?
      ஆக்கப் பொருத்தவர்கள் ஆறப் பொருக்காமல் தவியாய் தவிப்பது மாதிரி,
      நல்லா இருக்கே,
      வருகைக்கு நன்றி.

      Delete
  9. அகநானூறு பாடல் விளக்கம் அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் உமையாள், தங்கள் வாழ்த்துக்கு நன்றி,

      Delete
  10. சங்க காலப் பாடல்களுக்கு அடிக்கிறது யோகம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்அய்யா, அவைகளுக்கு எப்பவும் யோகம் தான், தங்கள் வாழ்த்துக்கு நன்றி,

      Delete
  11. அருமையான பாடல்! இதே போல் கொன்றைமரத்தில் தேனெடுக்கும் வண்டுகளை கலையாமல் இருக்க தேரில் ஒலிக்கும் மணியின் நாவை கட்ட சொல்லுவான் தலைவன். அகநானூறில் வரும் அந்த பாடலை ரொம்ப நாளாய் தேடிக்கொண்டிருக்கிறேன்! ப்ளஸ் டூவில் படித்ததாக ஞாபகம். அழகான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தளிர் சுரேஷ் சார்,

      நீங்கள் வெகுநாட்களாக தேடிய பாடலில் , நீங்கள் குறிப்பிடும் வரிகள்,

      “ தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
      மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்“

      என்பதாக இருப்பின்,

      அகநானூற்றின் நான்காம் பாடலாய் அமைந்த குறுங்குடி மருதனாரின் அப்பாடல் இதோ,

      ''முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
      பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
      இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
      பரலவல் அடைய இரலை தெறிப்ப
      மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
      கருவி வானம் கதழுறை சிதறிக்
      கார்செய் தன்றே கவின்பெறு கானம்
      குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
      நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
      பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
      தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
      மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
      உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
      கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
      நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
      போதவிழ் அலரின் நாறும்
      ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே."


      வகுப்பில் எனக்கு முந்திரிக் கொட்டை என்று பெயர்.

      இப்பொழுதும் கூடப் பேராசிரியர் பதில் சொல்லும்முன் முந்திக் கொண்டேன்.

      பொறுத்தருள்க.


      நன்றி

      Delete
    2. முந்திக்கொண்டு உரைத்தாலும் என் நீண்ட நாள் தேடலை தேடிக்கொடுத்துவிட்டீர்கள்! என் தமிழாசிரியர் நடத்தி மனதில் பதிந்த அந்த காட்சி நினைவில் நின்றது. பாடல் நிற்கவில்லை! என்னுடைய தித்திக்கும் தமிழ் பகுதியில் வெளியிட ஆசை! மிக்க நன்றி!

      Delete
    3. முந்திக்கொண்டு உரைத்தாலும் என் நீண்ட நாள் தேடலை தேடிக்கொடுத்துவிட்டீர்கள்! என் தமிழாசிரியர் நடத்தி மனதில் பதிந்த அந்த காட்சி நினைவில் நின்றது. பாடல் நிற்கவில்லை! என்னுடைய தித்திக்கும் தமிழ் பகுதியில் வெளியிட ஆசை! மிக்க நன்றி!

      Delete
    4. வாருங்கள் தளிர்,
      வணக்கம்.
      தங்கள் ஆசை நிறைவேற்றியது என் பதிவு எனும் போது மகிழ்ச்சியே,
      வருகைக்கு நன்றி.

      Delete
    5. ஆமா எதற்கு?
      நன்றி.

      Delete
  12. விரைவாகச் சென்று சேர்ந்தால் சரி!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      தாங்கள் சொல்வதில் மகிழ்ச்சி இருப்பதாக தெரியவில்லை,
      வருகைக்கு நன்றி.

      Delete
  13. அருமையான விளக்கத்துடன் கூடிய பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      வருகைக்கு நன்றிம்மா,

      Delete
  14. உங்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என்ன ஆனது? சரி செய்யவும்! வலைச்சித்தரை டி.டி நாடவும்.

    ReplyDelete
    Replies
    1. டிடி சார் இன்னும் மனது வைக்கல என்று இல்லை, வலைச்சரம் இன்னும் அனுமதிக்கல போல,
      தங்கள் அன்பிற்கு நன்றி.

      Delete
  15. ஆட்டோ பயணத்துடன் ஒப்பிட்டுச் சொல்லியுள்ள அகநானூறு பாடல் + விளக்கம் அருமை. பாராட்டுகள்.

    எனக்கும் நம் ஸ்ரீராம் சொல்லியுள்ள ‘ "வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே.." என்ற ஒரு பழைய சினிமாப் பாடல்தான் உடனே என் நினைவுக்கும் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      தங்கள் விளக்கத்திற்கு நன்றி,
      பாடல் பாடிக்கொள்ளவும்,
      வருகைக்கு நன்றி அய்யா,

      Delete
  16. அருமையான பகிர்வு.காதலன் என்றுமே ஒன்றுதான்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      வணக்க்ம்,
      காதல் ஒன்று தான் ஆம்,
      வருகைக்கு நன்றி,

      Delete
  17. தலைவனுக்காக தலைவி காத்திருப்பதும் தலைவன் அதை எண்ணி உருகி ஓடி வருவதும் இன்பம் தான் அதை இப்படி வர்ணித்து எழுதியது எத்தனை அழகு. அதை எமக்கும் பகிர்ந்து புரியும் படி அழகான விளக்கமும் தந்தமைக்கு மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் இனியா,
      வணக்கம்,
      தாங்கள் சொன்ன வேலையை நான் இப்பவும் செய்யல,
      பொருள் விளக்கம் தான்,
      இனி சரியாகச் செய்கிறேன்,
      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  18. புரிதற்குக் கடினம் என்று ஒதுக்கப்பட்ட சங்க இலக்கியங்களை உங்களைப் போன்ற தமிழப்பேராசிரியர்கள் இதுபோன்று எளிமையாக விளக்குவது என்பது உண்மையில் மாபெரும் தமிழ்ச்சேவை.

    அரும்பதங்களின் பொருளை அறியத்தந்தால், அடுத்தடுத்து அச்சொற்கள் வருமிடங்களில் வாசிப்பவர்கள் பாடலைப் பார்த்தே பொருள் உணர உதவும் என நினைக்கிறேன்.

    தங்கள் பணி தொடரவேண்டும்.

    என் முந்திரிக்கொட்டைத்தனத்தை மன்னியுங்கள்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் என் ஆசானே,
      தாங்கள் சொல்வதற்கு நான் தகுதியுடையேனா எனும் போது, எனக்கு உறுத்தல் தான்,
      ஆம் தங்கள் தங்கை இனியாவும் சென்ற பதிவில் சொன்னார்கள் பொருள் சொல்லுங்கள் என்று,
      நீண்ட பதிவாக மலைப்பாக படிப்போருக்கு இருக்குமோ என்ற ஐயம், இனி முயல்கிறேன்,
      தாங்கள் வழிகாட்ட என் பணி தொடரும்,
      தாங்கள் இது போன்ற பெரியவார்த்தைகள் எல்லாம் பேச வேண்டாம்,
      என் வேலையைத் தாங்கள் செய்ததற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்,
      நன்றி.

      Delete
  19. காலம் மாறினாலும் காதலின் வேகம் மாறவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார், அதன் என்றும் மாறாது, வருகைக்கு நன்றி.

      Delete
  20. உண்மையாக சொல்கிறேன் மகேஸ்வரி அவர்களே... மீண்டும் மீண்டும் அந்த பாடலை படித்து வார்த்தைக்கு வார்த்தை தம் ஆக்கத்தையும் படித்து அர்த்தங்களை பெருகின்றேன்.
    அட்டகாசமான பதிவு. நம்மால் இப்படி எழுத முடியவில்லையே என்ற தாழ்மை மனபான்மைக்கு தள்ளி விட்டீர்கள் :(

    தொடர்ந்து எழுதி தள்ளுங்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நூல் ஆசிரியரே,
      இது வஞ்சப் புகழ்ச்சி என்பது அறிவேன், தாங்கள் எழுதும் அசத்தல் பதிவுகளுக்கு மத்தியில் இவையெல்லாம் சும்மா,,,,,,,,,,,,
      தாங்கள் பல முறை படித்து பொருள் அறிகிறேன் எனும் பொதே எனக்கு புரிகிறது,
      நான் சொன்ன நடை சரியில்லை என்று,
      தொடருங்கள், நன்றி.

      Delete
    2. வஞ்ச புகழ்ச்சி அல்ல மகேஸ்வரி அவர்களே... இது நெஞ்சி புகழந்து சொன்னது.மிகவும் நல்ல பதிவு.நான் மீண்டும் மீண்டும் படித்தது, பிடித்ததினால் ...

      Delete
    3. வணக்கம், தங்கள் மீள் வருகைக் கண்டு மகிழ்ச்சி, தங்களுக்கு பிடித்ததினால் எனும் போது உற்சாகமே,
      இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் எனும் பயம்,
      தங்கள் நெஞ்சம் புகழ்ந்து சொன்னதற்கு நன்றி.

      Delete
  21. அருமையான பாடல் விளக்கமும்...

    அது சரி இப்படி எல்லாம் எழுதினா ஆட்டோ மீட்டர் எகிரி எங்க ஹார்ட் பீட்டும் எகிறுதுப்பா...ஒண்ணு புரியுது....காதல் எப்போதும் அதே அதே...அப்போது தேர் இப்போது ஆட்டோ....கார் அவ்வளவே....உணர்வுகள் ஒன்றே...அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      வணக்கம்,
      உங்கள் ஹார்ட் பீட் எகிறியது எனின்,,,,,,,,,,,
      ஆம் எல்லா நிலையும் காதல் ஒன்று தான்,
      வருகைக்கு நன்றி.

      Delete
  22. ம்ம்ம் விஜு ஆசானின் தளம், சுரேஷ் தளம், தங்கள் தளம், யாழ்பாவாணன் தளம், மணவை ஜேம்ஸ் தளம் என்று எல்லாம் இப்படித் தமிழ் பாடல்களைச் சொல்லி விளக்கம் அளித்து பா எழுதுவது பற்றி வகுப்பெடுத்து....அதில் பல விளக்கங்களுடன் விஜு ஆசானும் வந்து பதில் அளிக்க தமிழ் சங்கமோ என்று வியக்க வைத்து....

    நாங்கள் பின் சீட்டில் இருந்து கொள்கின்றோம்பா.....ஹஹஹ் ஏனா கேள்வி கேட்டா ஒண்ணும் தெரியாது ஹஹஹ்..அதான்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      தங்கள் மீள் வருகைக்கு நன்றி,
      தாங்கள் சொன்ன அனைத்துதளங்களும் சரி, இங்கே நான் எங்கே?
      ஏதோ நான் அறிந்ததை புரிந்ததை தங்கள் போன்றோருடன் பகிர்ந்து செல்கிறேன், தங்கள் ஆசான் அளவுக்கெல்லாம் ,,,,,,,,,,,,,,
      விவாதங்களுக்கு உதவும் எனில் இதவும் சங்கமே,
      நானும் இப்பவெல்லாம் கடைசி பெஞ்சதான்ப்பா,
      வாருங்கள் வளர்கிறேன்,
      நன்றி.

      Delete
  23. ஆகா அருமையான விளக்கம் சகோதரியாரே
    பள்ளிப் பாட புத்தகங்களில் இதுபோன்ற விளக்கங்களை வைத்தால்
    தமிழின் இன்றைய நிலையே மாறியிருக்கும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,
      தாங்கள் சொல்வது போல் இருந்தால் நலமே, இனி நாமாவது முயற்சிப்போம் என்று தான் ஊன்றி படிக்க விளக்க முயற்சிக்கிறேன்,
      என்னளவில் சிறப்பாக சரியாக செய்ய முயல்வேன்,
      தாங்கள் தரும் ஊக்கம் தான்,
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ,

      Delete
  24. எக்காலத்திற்கும் பொருந்தும் சிறப்பான பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  25. வணக்கம், தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  26. சங்க காலப் பாடல் இன்றும் பொருந்துகிறதே. சூழலுக்கேற்ற நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. Sorry.... Sorry.... Sorry
      Vanduttan.......Tan.... Tan.....

      Delete
    2. வாருங்கள் அய்யா வணக்கம்,
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  27. வாருங்கள் சகோ,
    தாய்மண் பார்த்த மகிழ்ச்சியில் இதெல்லாம் சகஜமப்பா,
    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  28. மன்னிக்கவும் சகோ. அற்புதமாக அழகான சங்கப்பாடலை பகிர்ந்திருக்கிங்க நான் கவனிக்காமல் இருந்து விட்டேனே...
    அழகான வர்ணனை வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி, மன்னிப்பெல்லாம் என்ன?
      வந்து படிப்பதே போதும், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தோழி.

      Delete
  29. அழகான ரசனைமிகு பாடல்.. தெளிவான எளிமையான விளக்கம். நன்றி மகேஸ்வரி.

    ReplyDelete
  30. வணக்கம், வாருங்கள் தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  31. இன்றைய வலைச்சரத்தில் - நண்பர் திரு தளிர் சுரேஷ் அவர்களால் தங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது..

    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வணக்கம்,
      தங்கள் தகவலுக்கு நன்றி,
      வெளியூர் சென்றதால் உடன் பார்க்கமுடியவில்லை.
      நன்றி.

      Delete
  32. வணக்கம் தளீர்,
    நேற்று வெளியூர் சென்றதால் பார்க்க முடியல,
    மனம் மகிழ்ந்தேன், என்னையும் நினைவில் இருத்தி அறிமுகப்படுத்தியதற்கு முதலில் நன்றி,
    இன்னும் சிறப்பாக எழுதனும் என்ற ஊக்கம் தங்கள் செயலால்,
    நன்றி தளீர்.

    ReplyDelete