Thursday 11 June 2015

இதயமில்லாதவனின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

கவலை கவிதை க்கான பட முடிவு
                                                                     படம் நன்றி கூகுல்


இதயமில்லாதவனின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

வருகிறேன் என்ற உன்
வார்த்தைகளினால்
உன்
வருகை வேண்டி
என் இரு விழிகள்
வழிவதை நிறுத்தவேயில்லை
வரும் பாதை
பார்வையில் மறையும் என
துடைப்பதைக்
கைகள் நிறுத்தவேயில்லை
வாராயோ,
மாட்டாயோ
மனம் கலங்குவதை
நிறுத்தவேயில்லை
பசித்தலும்
புசித்தலும் இயற்கையா
நான் மட்டும் விதிவிலக்கோ
சிந்தனையும் சொல்லும் செயலும்
நீயாகிப் போனாய்
உன் வார்த்தைத் தந்த
வசந்தத்தில்
உன் வரவையே பார்த்தபடி
வாழும் காலம்வரை
காக்க வைப்பாயோ
பிறரின் நகைப்புக்கு
நானே காரணமாகிப்போனேன்
காத்திருப்பே என் கவலையாகிப் போனது
இதயமில்லாதவனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,






44 comments:

  1. கவிதையில் வேதனைத்துளிகள்
    தங்களது தமிழ் மணம் இணைக்க முடியவில்லையே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ, தமிழ் மணம் இன்னும் சரியாகல போல, நன்றி.

      Delete
  2. //காத்திருப்பே என் கவலையாகிப் போனது
    இதயமில்லாதவனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,//

    பாவம் ..... அவரவர்கள் மனவேதனை அவரவர்களுக்கு .....

    அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பல.

      Delete
  3. இதை படித்த பின்பும் வரவில்லை என்றால் உணமையில் அவன் இதயம் இல்லாதவன்தான் !

    ReplyDelete
    Replies
    1. வரவாயிப்பே இல்லை, சும்மா, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  4. ஏக்கம் தொனிக்கும் கவிதை. அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி SPS சார், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  5. நல்லவேளை நான் இதயம் இல்லாதவனாக இல்லை...எனக்காக யாரும் காத்திருக்கவில்லை....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா,, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  6. கற்பனை தான் என்றாலும் - காரிகையின் கண்ணீர் கண்டு கசிகின்றன கண்கள்!..

    கண்டு மனங்கொள்ள - காசினியில் காட்சிகள் பல உண்டு!.. ஆனாலும், கள்வன் அவன் முகம் போலாகுமா!..

    ReplyDelete
    Replies
    1. ஆம்,,,, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  7. "இருத்தலும், இருத்தல் நிமித்தமும்"

    உணர்வின் வெளிப்பாடு வெள்ளமாய் பெருக்கெடுக்க
    புணர்ச்சி விகிதம் அங்கே புயலாய் அடிக்கிறது
    இதயமில்லாதவனின் தடயத்தை தடவியபடி!
    கவிதை ஊற்று! மனிதா நீ போற்று!
    (கவிதையின் பாடு பொருளினின் பதங்களை ரசித்தபடி)
    வரிகள் ஆஹா ரகம்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  8. மனதை பிழியும் கவிதை... இதயமில்லாதவன் என அறிந்த பின்னும் காத்திருக்கத்தான் வேண்டுமா ? நகைப்புக்கு ஆளாக வேண்டியவன் அவனல்லவோ ?....

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  9. வணக்கம்
    கவிதையில் வார்த்தைகள்... விளையாடுகிறது.. கற்பனை நன்று பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  10. கவிதையில் வேதனையின் உச்சத்தை உணரமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  11. கண்ணிரண்டும் நீர்வழிய காத்திருப்பு காதலிலே
    தன்னிறைவு கண்டு தவித்தும் தனியிருப்பார்
    விண்ணானம் பேசுபவர் வார்த்தைக் அளவில்லை
    என்றறிந்தும் சட்டைசெய் யாது!

    இதயத்தை பிழியும் கவிதை இதயமில்லாதவர்களை எண்ணி. அருமை அருமை ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா, ஆனாலும் தங்கள் கவிதை முன் இது எல்லாம் சும்மா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  12. Replies
    1. வாங்க டிடி சார், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  13. கலங்க வைக்கும் கலக்கல் கவிதை! தலைப்பும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  14. மனதை கனக்கச் செய்யும் கவிதை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  15. இருத்தல் நிமித்தமும்
    கூறும் வரிகளில்
    இதயமில்லாதவனின் இருத்தலும்
    தெரிகிறது

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  16. தலைப்பே ஆயிரம் வேதனையைச் சொல்கிறது...
    வலிமிகுந்த வரிகள் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  17. அருமையான வரிகள் ஆனால் மனம் வேதனிக்கின்றது சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா, வணக்கம், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  18. வரமாட்டேன் என அடம் பிடித்த கண்ணீரை வர வழைக்கும் வலியும் வலிமையுமான கவிதை படையலுக்கு வாழ்த்துக்கள்.

    இதயம் இல்லாதவன் என்று எப்படி சொல்லமுடியும், இதயத்தில் நமக்கு இடம் இல்லாதவன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    இது யாரின் வேதனை?, வருவதாக சொல்லி சென்ற தலைவனின் வலி என்னவோ யார் அறிவார்?

    கோ

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்,,,,,,,,,, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  19. காத்திருக்கும் காதலிலே கண்ணீர் தொல்லை
    ......களவாடிப் போகுமிடம் இதயத் தெல்லை
    பூத்திருக்கும் மலருக்குப் புயலும் தொல்லை
    ......புரியாத உறவுக்கும் சிரித்தல் தொல்லை
    நேத்திரத்தை நம்பிவிட்டால் நினைவுத் தொல்லை
    ......நெஞ்சுள்ளே கருக்கூட்டும் ஏக்கத் தொல்லை
    மாத்திரைகள் உண்டாலும் மறதித் தொல்லை
    .....மறுசென்மம் போம்வரைக்கும் மயக்கத் தொல்லை !

    கண்ணீர் கானங்கள் அருமை தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா என் கவிதையை விட இது அல்லவா அருமையான வரிகள், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
    2. வணக்கம் பேராசிரியரே !

      பூக்கூடைக்கும் பூவனத்துக்கும் முடிச்சுப் போடுறீங்களே இது நியாயமா ? என்கவிதை ஒரு கூடைக்குள் அடங்கிய சில பூக்கள் உங்கள் கவிதையோ பல்லாயிரம் பூக்கள் சேர்ந்த பூவனம் ,,,,!


      Delete
    3. தங்கள் அன்பின் மீள் வருகைக்கு நன்றிகள் பல,ஆனால் இதனை ஏற்க முடியாது, நன்றி.

      Delete
  20. வணக்கம் சகோதரி.

    காத்தருத்தலின், வேதனையை அழகாக ௬றும் கவி. அதன் வேதனை வலி சொல்லில் அடங்காது. காத்திருப்பவர்களால் மட்டுமே உணர முடியும். நன்றி.

    தாமதத்திற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  21. வாருங்கள் தங்களின் வருகையும் வாழ்த்துமே என்னை வளப்படுத்தும், வருத்தம் வேண்டாம். நன்றி. தொடரவும்.

    ReplyDelete
  22. கண்ணீர் வலைபடியக் கை‘துடைக்கும்! எப்போதும்
    பெண்ணீர்மை ஈதென்றால் பேரவலம்! - உண்ணா(து)
    உறங்கா தவன்நினைவில் உள்ளந் தணலாய்
    விறகாம் உயிர்சாம் விதி!

    கலங்கச் செய்யும் கவிதை !

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் ஆசானே,
      வணக்கம்.
      தாங்கள் வந்து கருத்திட்டது மிக்க மகிழ்ச்சி,
      அவலம? அது சரி ,
      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete