கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு
சென்ற பதிவின் தொடர்ச்சி,,,,,,,,,,,,
இப்பாடலின் பொருள்- உள்ளுறை,
கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு.
என் கருத்தும், இதனை ஏற்றுக்கொள்கிறது.
இப்ப ஏன் இந்த சந்தேகம் என்றால், சில நாட்களுக்கு முன்
என் சக பேராசிரியர் ஒருவர், இவர் அறிவியல் துறை. பேசிக்கொண்டு இருக்கும் போது ’பீரோமோன்ஸ்’ (Pheromones) என்ற
வேதிப்பொருட்கள் மயிர்கால்களில் இருக்கும் என்றார்.
அப்போ நான் அதனைச் சரியாக கவனிக்கவில்லை, ஏதோ நினைவில் இருந்த
நான் அவர்களிடம் இப்ப என்ன சொன்னீங்க திரும்ப ச்சொல்லுங்கள் என்றேன், அவர் திரும்பச் சொன்னார்கள்.
ஆமா, இது என் இலக்கியத்தில், சங்கஇலக்கியத்தில் இருக்கு
என்றேன்.
உடனே அவர்கள்,
ஆரம்பிச்சுட்டா,,,,,,,,,, அய்யோடா ,,, என்று
கிண்டல்
ஆனால், நான்,
உண்மையா
இப்படி ஒரு வேதிப்பொருள் இருப்பது, எப்ப நடந்த ஆராய்ச்சி என்றேன்,
ஆம். உண்மைதான். மயிர்கால்களில் சுரக்கும்
சுரப்பிகள் பாலின அடையாளம் காட்டவும், நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன
என்றார்.
அப்படியாயின் கூந்தலுக்கு இயற்கை மணம் என்பது சரிதானே
என்ற நினைவில்,
அவர்களுக்குப் பழய திருவிளையாடல் படத்தை
நினைவூட்டினேன்.
மன்னன் சந்தேகம், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா?
செயற்கை மணமா? என்ற கேள்விக்கு விடைக்குப் பரிசு உண்டு,என மன்னன் அறிவிக்க, ஆசையால்
தருமி புலம்ப,
தருமிக்காகச் சிவன் பாடல் எழுதி கொடுக்க, அதனைக் கொண்டு
வந்த தருமியிடம் நக்கீரர் அதில் பொருட்குற்றம் உண்டு, பாடல் சரியில்லை என்று
பரிசில் மறுக்க, எழுதியவரே வந்து வாதிட்டு நெற்றிக்கண் திறப்பது குற்றம் என்ற
கதையை,,,,,,,,,,,,
அவர்களும் ஆர்வமுடன் ஆம் அப்படித்தான், அட என
ஆச்சரியப்பட்டனர்,
சரி,
நம் முன்னோன் மன்னனுக்கு வந்தது அறிவியல் சந்தேகம்
தான் என்பதும்,
அதற்கு நடந்த வாதங்களும் சரியே,
ஆனால் இறைவன் பெயர் சொல்லி,
அதனை வேறு விதமாகத் திரித்து,
நம் சிந்தனையை மழுங்கடிக்கும் செயல் தான் பின் வந்த
காலக்கட்டங்கள்,
இது மட்டும் அன்று இன்னும் ஏராளம் இருக்கு,
கணினிக்கு முன் வந்த அறிவியல் தமிழ் என்னவாயிற்று,
இன்னும் ஆரம்பித்த நிலையிலேயே,
ஆனால் கணிணியோ இன்று,,,,,,,,,,,,
தகவல் தொழில்நுட்பத்தைக் கண்டு பூரித்துப் போகிறோம்,
உலகைச் சுருக்கும் போக்குவரத்து என்று வியந்து போகிறோம், அன்று ஆங்கிலேயரின் அஞ்சல்
சேவையும், இரயில் பாதையும் எதற்குப் பயன்பட்டன என்பது மறந்து விட்டது. பரந்து பட்ட
உலகைச் சுருக்குவது சுருட்டத்தான் என்றுணர்ந்தும் சுருண்டு கொடுக்கிறோம்.
எந்த
வராக அவதாரம் வந்து நம்மைக் காப்பாற்றப் போகிறது,,,,,,,,,,,,,
அவ்வை என்ற விஞ்ஞானி அடுத்த பதிவில்
எதையோ சொல்லி, எப்படியோ ஒருவழியாக இந்த விவாதத்தை முடிச்சுட்டீங்க ! பாராட்டுகள்.
ReplyDeleteவிஞ்ஞானி ஒளவை வந்து என்ன சொல்லப்போகிறார்களோ?
சுட்ட பழமா சுடாத பழமாவா?????
வாருங்கள் வணக்கம்,அப்ப சரியா சொல்லலையா?
Deleteசுட்ட பழம் சுடாத பழம்
பார்ப்போம் என்ன என்று,,,
தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
இவைகள் மட்டுமே மறந்து போயிற்று...? / மறக்கடிக்கப்பட்டது...
ReplyDeleteஅவ 'தாரம்' காப்பாற்றினால் போதும்... அச்சச்சோ... நம்ம ஜோக்காளியின் கருத்துரை போல் ஆகி விட்டதே... ஹா... ஹா....
என்ன டிடி சார் நீங்களுமா?, தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஅவ தாரத்துக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை :)
Deleteஎன் தாரத்தை தவிர வேறெந்த தாரத்துக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை :)
Deleteஅந்த பயம் இருக்கட்டும்,,,,,,
Deleteநன்றி ஜீ.
ஒருவழியா....உண்மை தெரிந்து விட்டது.....
ReplyDeleteஒளவைக்கு.....காத்திருக்கிறோம்.....
ஏற்றுக்கொள்கிறீர்களா? உமையாள், தங்கள் வருகைக்கு நன்றிகள்.
Deleteஆஹா! அப்போ நான் சொன்னது சரி தானே மயிர் கால்கள் உடல் முழு வதும் தானே இருக்கிறது. ஹா ஹா அடுத்து ஔவை என்ன சொல்லப் போகிறார்களோ பார்க்கலாம். நன்றி!ம்மா !
ReplyDeleteவாங்க இனியா, ஆம், ஆனா அதிகம் தலைதானே, வருகைக்கு நன்றிம்மா.
Deleteஅடுத்து ஔவையாராா்“...???? அய்யோ..அவருக்கு கூந்தல் நரைத்து அல்லவா இருக்கும்...!!!!!
ReplyDeleteவலிப்போக்கருக்கு என்ன கவலை, கூந்தல் நரைப் பற்றி,
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள்.
முன்பு எதையும் கவிதையால் மட்டுமே
ReplyDeleteசொல்லக் கூடியச் சூழலும்
அறிஞர்கள் அனைவரும்
இறைப்பற்று உள்ளவர்களாக இருந்ததால்
இப்படி இருந்திருக்கக் கூடும்
அதுவும் இல்லையெனில் இன்று இந்தத்
தகவல் நமக்குக் கிடைக்கக் கூட சாத்தியமின்றிப்
போயிருக்கும் என நினைக்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் அன்பின் வருகைக்கும், விளக்கத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
Deleteஔவைக்குக் காத்திருக்கிறேன்!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்.
Deleteஔவையின் கூற்றுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன் சகோதரியாரே
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி, சகோ,
Deleteஅடுத்த பதிவில் வரப்போகும் ஔவையாருக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி,
Deleteநீங்களுமா!?..
ReplyDelete>>> நம் சிந்தனையை மழுங்கடிக்கும் செயல்.. <<<
உங்களை சிந்திக்க வேண்டாம் என்று சொன்னவர் யார்?...
வள்ளுவப் பெருமானே - மெய்ப்பொருள் காணச் சொல்லி விட்டார்.. அப்படியிருக்க - கண்ணையும் கருத்தையும் மூடிக் கொண்டது பிறர் குற்றம் அல்ல!..
நிச்சயம் அங்கே - இறைவன் வந்திருக்கத் தான் வேண்டும்.. இல்லையெனில் ஏழை ஒருவனின் பாடு வீணாகப் போயிருக்கும்!..
தருமி கொண்டு வந்த பாட்டை நக்கீரர் எதிர்த்தது எதனால்?..
வாருங்கள் வணக்கம்.
ReplyDeleteநீங்களுமா?
உண்மைச்சொல்ல என்ன செய்ய,
சிந்திக்க யாரும் சொல்ல வேண்டாம், ஆனால் கட்டுப்பாடு என்பது, இறைவன் என்றால் பயம் என்பது தானாக வருகிறது தானே,
அது தான் வேண்டும், பிறரின் சிந்தனையை முடக்க,
எல்லாம் அறிந்த தாங்கள் இப்படி சொல்வது,,,,,,,,,,
வாருங்கள் வணக்கம்.
நீங்களுமா?
உண்மைச்சொல்ல என்ன செய்ய,
சிந்திக்க யாரும் சொல்ல வேண்டாம்,
ஆனால் கட்டுப்பாடு என்பது,
இறைவன் என்றால் பயம் என்பது தானாக வருகிறது தானே,
அது தான் வேண்டும்,
பிறரின் சிந்தனையை முடக்க,
எல்லாம் அறிந்த தாங்கள் இப்படி சொல்வது,,,,,,,,,,
சரி தங்கள் வழிக்கே வருகிறேன், உங்கள் இறைவன் சொன்னது சரி தானே, அவை ஏன் …… இயற்கை வாசம் என்பது சரி, தமிழன் சிந்தனை சரிதானே, பின் ஏன் அந்த விவாதம்,
>> தருமி கொண்டு வந்த பாட்டை நக்கீரர் எதிர்த்தது எதனால்?.<<
Deleteஇதற்கு விடை கண்டால் விவாதத்திற்கான விளக்கம் கிடைத்து விடும்..
விவாதம் எல்லாம் APN ல் வந்தது :)
ReplyDeleteஅப்படி என்றால் ,,,,,,,,,,,,,
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
pheromones என்னும் வேதியல் பொருளின் வாசம் நறுமணமா துர்நாற்றமா. ?வியர்வை வாசமா துர்நாற்றமா. ? இல்லை கேள்வி கூந்தலுக்கு ஏதாவது நாற்றம் / மணம் இருக்கிறதாஎன்பதா.?
ReplyDeleteவாருங்கள் அய்யா, வணக்கம்.
Deleteஆராய்ச்சியில் மயிர்க்கால்களில் சுரக்கப்படும் வேதிப்போருட்கள் பாலின அடையாளம் காட்டவும், நடத்தைகளை நிர்ணயிக்கவும் உதவுகின்றன என்றகிறார்கள்.
அப்படியாயின் இயற்கை மணம் தானே, நாற்றம் என்பது மணம். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.
வணக்கம் பேராசிரியரே !
ReplyDeleteஅறிவியல் வானசாஸ்திரம் எல்லாமே நம் முன்னோர்கள் காட்டிய வழிகள் தான் இப்போ எதோ கண்டுபிடிப்பு என்று விஞ்ஞான விளக்கத்துடன் தருகிறார்கள் நம்மவன் குரல் ஓங்கி இருந்தால் இதெல்லாம் நமது கண்டுபிடிப்பு என்று உலகமே கொண்டாடி இருக்கும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
வாருங்கள் கவிஞரே,
Deleteஉண்மைதான், இதைத் சொல்லத்தான் நான் இதைப் பேசினேன்.நம்மவன் குரல் ஓங்கி இருந்தால் இதெல்லாம் நமது கண்டுபிடிப்பு என்று உலகமே கொண்டாடி இருக்கும்.
எங்கு நாம் நம் இடத்தை விட்டோம் ,,,,,,,,,,,,
நன்றி கவிஞரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
இலக்கியத்தையும், இயற்கையையும் இணைக்கும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்ம்ம்.. இன்னும் என்னென்ன சொல்ல போறீங்களோ?
எப்படி உங்கள் சக தோழிகள் உங்களோடு....?
கோ
வாருங்கள்,
Deleteகோ,
அந்த கோ வுக்கு வந்த சந்தேகம் விஞ்ஞானம் என்று இந்த விஞ்ஞான உலக மக்களுக்கு சொல்ல,,
அவ்வளவு தான்
கோ,
என் தோழிகள் எப்படி என்னோடு காலம் கடத்துகிறார்கள் என்று தானே, நான் ரொம்ப அமைதிப்பா,,
அரசனின் வருகைக்கு நன்றி,
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
வாருங்கள் புதுவையாரெ,
Deleteவணக்கம், தங்கள் தகவலுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்புள்ள சகோதரி திருமதி.மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன். நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
ReplyDeleteதங்களின் வலைத்தளத்தினை இன்று (28.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 28ம் திருநாள் http://gopu1949.blogspot.in/2015/06/28.html
வாருங்கள் அய்யா, வணக்கம்,
Deleteஎன் எழுத்துக்களை தாங்கள் வாசிப்பது மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிக்கிறது, அதற்கு முதலில் என் பணிவான நன்றிகள்,
தகவல் அளித்ததற்கும், வாழ்த்திற்கும் நன்றிகள்,
தொடர்கிறேன், தொடருங்கள் அய்யா,
http://thillaiakathuchronicles.blogspot.com/2014/07/Nakeerar-Eesanargument-Pheromonesinwomenhair.html
ReplyDeleteசகோதரி முடிந்தால் இதை வாசித்துப் பாருங்கள்....முடிவு எப்படி என்று...ஹஹஹஹ்
நல்ல அருமையாக எழுதி இருக்கின்றீர்கள்..
ஔவைக்கு காத்திருக்கின்றோம்...தொடர்கின்றோம்....
வணக்கம் அய்யா,
Deleteநான் ஏற்கனவே படித்துவிட்டேன், என் பதிவின் பின்னூட்டத்தில், என் ஆசான் திரு ஊமைக்கனவுகள் சொன்னதின் பேரில் சென்று படித்துவிட்டேன், அருமையாக இருந்தது,
நான் லேட்,
தங்கள் வருகைக்கு நன்றி.
கொங்கு தேர் வாழ்க்கை ... என்ன ஓர் அற்புதமான கவிதை. என்னை பொறுத்தவரை... பெண்களின் கூந்தலில் இயற்கையிலேயே மனம் உண்டு.மறுப்பே இல்லை.
ReplyDeleteபசித்து விட்டது.. புசிக்க காத்து கொண்டு இருகின்றோம்..
வாருங்கள், வணக்கம்.
ReplyDeleteதாங்கள் என் தளம் வந்து படித்து கருத்திடுவது மகிழ்ச்சியே,
இயற்கையிலே மணம் உண்டு என்று ஒத்துக்கொண்டது ,,,,,,,,,,,
இறைவன் சொன்னான் என்று தானே,,,,,,,,,,,,,
நன்றி,
தொடருங்கள், தொடர்கிறேன்.