Wednesday, 17 June 2015

இது சங்ககாலம் அன்று

பெண் முன்னேற்றம் கவிதை க்கான பட முடிவு
இது சங்ககாலம் அன்று
சங்க இலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
சித்தர் இலக்கியங்கள்
சமய இலக்கியங்கள்
முக்தி நெறி
இறைக்கோட்பாடு
அறம்
இவை

  பெண்
  அழகில் சிறந்தவள்
  அன்னம் ஒத்த நடையினள்
  மென்மையானவள்
  வில்லொத்த புருவம் உடையவள்
  தலைவனின் வருகைக்காக
  ஏங்கிக் கிடப்பவள்
  பிரிவுத்துயரில் வருந்திப்
  புலம்புபவள்
  சுயம் இழந்து தன்
  வாழ்க்கை பற்றிய சிந்தனையற்றுத்
  தலைவனைச் சார்ந்து
  வாழுகிற சார்புத்தன்மை
  பொருந்தியவள்
  ஆண் கற்பு குறித்து
  கேள்விகளற்றவள்
  இப்படித்தானே
  படைக்கப்பட்டாள்
  ஆண் பெண் மீது
  கட்டமைத்துள்ள இவைகளை
 தகர்த்தல் என்பது
அதிகம் என்றா?????????
தலைமுறைகள் கடந்தோட
இன்றும் நாங்கள் சிறையில் தான்
ஆணுக்கு அடிமையாய்
கிடந்த பெண்
இனி
அவனுக்கு நிகராய் வளரும்
பெண்ணாயின்
வரவேற்போமே,


43 comments:

 1. வணக்கம் பேராசிரியரே!

  தங்களின் உணர்வினோடு ஒத்த என் படைப்பொன்றை என் பதிவொன்றில் இருந்து இங்குப் பகிரத்தோன்றுகிறது.


        வெடிப் புறுங்கவிச் சூரியன்.

  கால முண்ட கண்மணிப் பூக்களின்
  கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
  ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
  ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!


  கள்ளிப் பாலிலும் நெல்மணி யூட்டியும்
  கரைந்த பெண்சிசு கண்ணீர் பெருகிட
  முள்ளாய் முகிழ்த்த ஆண்மரத் தோப்பினை
  மூட்டி யழித்துதீ முகிழ்த்திடக் காண்கிறேன்!

  வேட்டை யாடும் விலங்குக ளாகியே
  வெற்றுச் சதையெனப் பெண்மை நினைந்தவர்
  ஓட்ட மெடுத்திட ஓங்கு மறிவினில்
  ஒளிநு தலினள் வளருதல் காண்கிறேன்!

  அச்சத் தளைகளில் அடிமைக ளாக்கியே
  ஆயி ரம்பல வாயிர மாண்டுகள்
  துச்ச மென்றே தூற்றியோர் சிந்தனை
  தூக்கி லேற்றுவோர் துடித்தெழக் காண்கிறேன்!

  அடுப்புக் கரிமுகம் ஆணினச் சாட்டையில்
  அடிப டத்துடித் தடங்கிய பெண்மையுள்
  வெடிப்பு றுங்கவிச் சூரியன் தோன்றியே
  விடியல் காட்டவோர் விழிசெயக் காண்கிறேன்!

  உள்ளக் கல்லறை உலரவோர் மூலையை
  உலக மென்று காட்டுவார் ஊமையாய்த்
  தள்ளி வைத்துநீ தகவிலாள் என்றதைத்
  தகர்த்தெ ழுந்துபெண் முகிழ்த்திடக் காண்கிறேன்!

  வீட்டு வேலையில் வெந்து கருகுதல்
  விதியெ னத்தமை விற்ற வாழ்க்கையை
  ஓட்டுங் கல்வியால் ஓங்கு வாளெனெ
  ஒளிந்த பெண்ணினம் ஒளிருதல் காண்கிறேன்!

  http://manamkondapuram.blogspot.com/2014/10/blog-post.html

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஆசானே,
   இவை பழய கிறுக்கல்கள்,
   இதன் தொடராய்,
   பாரதியின் லட்சிய கனவே
   முட்டிகளுக்குள் புதைத்தக்கொள்வா
   உன் பட்டுமுகம் படைக்கப்பட்டது
   நெல் மணிக்கு தப்பிய நீ
   சொல்மணியாய் சுடர்விடத்தான்
   கோழி குழம்புக்கு தப்பிய நீ
   கோல்களை மாற்றியமைக்கத் தான்,,,,,,,,,,,
   இப்படி நீளும் அதன் வரிகள்,,,,,,,
   தங்கள் அன்பின் வருகைக்கும், தங்கள் பதிவிற்கும் நன்றிகள் பல, வழிகாட்டுங்கள் வளர்கிறேன்.

   Delete
  2. வாருங்கள், வணக்கம். அப்ப என் எழுத்து நல்லா இல்லை, ஊமையார் கவிதைகள் அருமை என்றால்,,,,,,,,
   தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 2. புறப்படுங்கள் இது புதுமைப்பெண்கள் காலமே....
  இனி வரும் காலங்களில் அவசியம் இந்த புரட்சி.
  தமிழ் மணம் இணைய மறுக்கிறதே...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ,
   புரட்சி எல்லாம் இல்லை, தமிழ் மணம் இன்னும் சரியாகல போல, டிடி சார் தான் சரிசெய்து தருகிறேன் என்று சொன்னார்கள். தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 3. உண்மை, இது சங்க காலம் அன்று. நன்று உணர்த்தியது கவிதை.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா வணக்கம். தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல.

   Delete
 4. அருமை... வரவேற்கப்பட வேண்டியது... என்றும் போற்றப்பட வேண்டியது...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் டிடி, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 5. இது சங்க..காலம் அன்று...டீவிக்களின் தொடர்களின் முன்கட்டுண்டு கிடக்கும் காலம்

  ReplyDelete
  Replies
  1. அய்யா வலிப்போக்கரே, அது ஒன்று தான்,,,,,,,,,,,,,, அதையும் அவர்களின் உரிமை என எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 6. காலம் மாறிக்கொண்டே வருகிறது. இன்னும் மேலும் மேலும் மாறத்தான் செய்யும். நிச்சயமாக மாற்றங்களை நாமும் வரவேற்போம்.

  //இது சங்ககாலம் அன்று//

  நன்று :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம், நிச்சயமாக மாற்றங்களை நாமும் வரவேற்போம்.
   தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

   Delete
 7. வணக்கம் சகோதரி.

  அருமையான பாடல். வாழ்த்துக்கள். மாறி வரும் காலத்திற்கு ஏற்ப பெண்ணினத்தின் பெருமைகள் பறைசாற்றபடத்தான் வேண்டும். எனினும் யாருக்கும் யாரும் (ஆண் பெண் இரு பாலாருமே) அடிமையில்லை எனும் மனோ பாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்..பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   யாருக்கும் யாரும் (ஆண் பெண் இரு பாலாருமே) அடிமையில்லை எனும் மனோ பாவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்..
   உண்மைதான் இந்நிலை விரைவில் வர வேண்டும் என உணர்வோம்,
   தங்கள் வருகைக்கு நன்றி.

   Delete
 8. சிறப்பாக சொல்கின்றீர்கள்!..

  ஆனாலும், சில ஒட்டடை அழுக்குகளைக் கண்டு விட்டு -
  வீட்டைக் குற்றம் சொல்வதென்பது ஆகாது!..

  தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
  சொற்காத்து சோர்விலாள் பெண்!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், தாங்கள் சொல்வது தாங்கள் சொல்வது எப்படி தகும், அந்த சில தானே மன வருத்ததைத் தருகிறது,
   ஆமா, எல்லாவற்றையும் காக்கும் பெண் எனத் தெரிந்தும் அவளின் மரியாதை எப்படி இருக்கிறது?
   தங்கள் அன்பின் வருகைக்கு நன்றி.

   Delete

 9. அதிகம் என்றா?????????
  என்பதற்குப் பதிலாக
  ஆதிக்கம் என்றா?????????
  என வருமே!

  சங்க கால இலக்கியங்களில்
  தலைவி
  தலைவன் மீது காட்டுகின்ற
  அன்பை போல
  தலைவன்
  தலைவி மீது காட்டுவதாக
  காண்பிக்கப்படாமையால் தான்
  இந்த நிலை...
  ஆண், பெண் சரிநிகர் நிலையை
  வரவேற்கிறேன்


  தங்கள் தளத்தை
  http://tamilsites.doomby.com/ இல்
  இணைக்காது இருப்பின்
  இணைத்துக்கொள்ளுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வணக்கம்,
   அதிகம் தான், கட்டுப்பாடுகளைத் தகர்த்தல் என்பது அதிகமான செயலா? என கேட்டேன்,
   அது எங்கோ மறைக்கப்பட்ட செயலாக இருக்குமோ?
   தமிழ்மணம் இன்னும் சரியாகல,
   தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 10. சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் பெண்களுக்கான முழு சுதந்திரம் கிடைக்கும். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாக சொல்லியிருக்கிறேன் என்றா? வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

   Delete
 11. காலம் மாறட்டும் வரவேற்போம்! சிறப்பான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க, வணக்கம், தங்களை நீண்ட நாட்களாக காணவில்லை, வருகைக்கு நன்றிகள்.

   Delete
 12. சகித்துப் போவதும் தவறு.
  சண்டையிடுவதும் தவறு.
  ஆண் பெண் பாகுபாடின்றி அவரவர் நற்பண்புகளுடன் வளர்தல் சிறப்பு. இது என் கருத்து.
  கருத்துள்ள பகிர்வுக்கு நன்றிங்க தோழி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி, தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழி,,

   Delete
 13. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்து விட்டார்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா, வணக்கம்,அப்படியாயின் சரியே, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

   Delete
 14. காலங்கள் மாறிக்கொண்டிருக்கும் போது இனி வரும் காலங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா,, வணக்கம், தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

   Delete
 15. அருமை
  அருமை
  வரவேற்போம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

   Delete
 16. கவிதை மிக அற்புதம். வலிமையையும் கூட..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க SPS, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

   Delete
 17. வணக்கம் பேராசிரியரே !

  அவரவர் கடமைகளை அவரவர் சரியாய்ச் செய்திட அடிமைத்தனம் என்னும் வார்த்தைக்கே இடமில்லாமல் போகுமே !
  ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எவர் பதிவுகள் போட்டாலும் எனக்கு அம்மா அப்பா நினைவுதான் வரும் எந்த ஆதிக்கமும் இல்லாமல் இவர்களால் எப்படி என்னை அன்போடு வளர்க்க முடிந்தது என்று ! ம்ம்ம்ம் இப்போ பெண்கள் அடிவாங்கும் வீடுகளும் உண்டு ஆண்கள் உதைவாங்கும் வீடுகளும் உண்டு ஆங் ,,,,!  படித்துப் பட்டம் பெற்றாலும்
  .......பாசம் பரீட்சை கண்டதில்லை
  அடிமைத் தனத்தை வெறுத்தாலும்
  .......அகிலம் காதில் கொள்வதில்லை
  வெடித்துச் சிதறும் பஞ்சாக
  .......வேதனை நெஞ்சில் படர்ந்தாலும்
  நடிக்கத் தெரிந்த மிருகங்கள்
  ........நாமே அன்றி வேறில்லை !

  தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கவிஞரே, வணக்கம். இங்கு எல்லாம் அவரவர் மனநிலைப்பொறுத்ததே,
   தங்கள் கவி வரிகள் அருமை,
   ஆனாலும் அந்த பாட்டியின் பாடல் ஏனோ மனதில் வந்து போகிறது,
   நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ,
   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
   எவ்வழி நல்லவர் ஆடவர்
   ,,,,,,,,,,,,,,,,,,, வாழிய நிலனே
   நன்றி கவிஞரே, தங்கள் வருகைக்கும், கவிக்கும்.

   Delete
 18. அற்புதமான அவசியமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாருங்கள், வணக்கம், தங்கள் நல்வாழ்த்துக்கு நன்றிகள் பல,

  ReplyDelete
 20. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பது உண்மைதான் ,ஆனால் ,இப்போதே சில பெண்கள் சுதந்திரமாய் திரியும் கோலத்தைப் பார்த்தால் கோபம்தான் வருகிறது !

  ReplyDelete
 21. வாங்க ஜீ,,,,,,,,,, அதானே இன்னும் ஒன்னும் கானோமே என்று, விதிகள் இருக்க,விதிவிலக்கு இல்லையா? அப்படித்தான்,,,,,,,,,,
  தங்கள் வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete

 22. இருபாலரும் சமம் என்ற
  மனநிலை வரவேண்டு....
  சுதந்திரம் என்பது
  பிறப்புரிமை...
  அது-
  யாருக்கும் யாரும்
  கொடுக்க வேண்டிய அவசியமில்லை தான்...
  ஆனால் -
  ஆணின் ஆதிக்கவுணர்வால்
  பெண் சுதந்திரமென...வந்து விட்டது
  பெண் சக்தி
  முடிந்தால் முடியாததில்லை...
  சிலர்
  முயலாமையிலே..யே...
  விட்டு விடுகிறார்கள்.....
  ஆனால்...
  வரும் காலங்களில்...
  முற்றிலும் மாறிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள், தங்கள் வருகைக்கு நன்றிகள்.

   Delete
 23. அழகான கருவுடைக் கவி வரிகள். பாராட்டுகள் மகி.

  ReplyDelete