முதல்
பட்டி மன்றம்
முதல் பட்டி மன்றம் எங்கு நடந்தது என்று தானே
கேட்கிறீர்கள்?
மதுரையில் தான்,
கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம் தான்.
அறிவியலை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன்
முதலில் நடைபெற்ற பட்டிமன்றம். புலமைக்குத் தலைமை தந்த பெருமை.
ஆம்
சிறப்புடன்,,,,,
அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம்.
எல்லோரும் அறிந்த கதைதான்,
திருவிளையாடல் படத்தில் வருமே தருமி கதை அது தான்,
மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா?
முக்கண்ணன் தருமிக்கு தந்துதவிய பாட்டு,
பாட்டு இது தான்,
"கொங்கு
தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !
மலர்கள்
தோறும் சென்று பூந்தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை நோக்கித்
தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல்,
நீ
கண்டுள்ள மலர்களில் எல்லாம் தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டா என வினவும்
பாடல்.
இப்பாடல் சொல்வது, கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு.
இது தான் உண்மை என்று நானும் சொல்கிறேன்.
இறைவனே சொன்னது பொய்யாகுமா?
எனவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு.
உங்கள் கருத்து????????????,
(மணம்
வீசும்)
(படம் கூகுல்)
(படம் கூகுல்)
சிக்கலில் மாட்டிக்கொள்ள விருப்(ம்)பவி(me)ல்லை...! ஹா.... ஹா....
ReplyDeleteவாங்க டிடி, எப்படி இவ்வளவு விரைவாக, சிக்கலில் மாட்ட விரும்பலையா? தங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDeleteதெரியவில்லை என உண்மையை ஒப்புக் கொள்கிறேன் சகோ....வேறு யார் என்ன கூறுகிறார்கள் என அறிய ஆவல்.........
ReplyDeleteவாங்க சகோ, வணக்கம். பிறகு சொல்கிறேன், தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஹா ஹா ஹா நல்ல கேள்விதான் பதில் நான் சொல்லவா ?
ReplyDeleteவாங்க சகோ, என்ன சிரிப்பு, பதில் சொல்ல வேண்டியது தானே, தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteசந்தேகம் இன்னும் தீரவில்லையா?..
ReplyDeleteநக்கீரர் சொன்ன மாதிரி - சந்தேகம் சரீரத்தோடு பிறந்தது..
ஆகவே, சர்ச்சையை விடுத்து -
கூந்தலின் மணம் நுகர்ந்து வாழ்க வளமுடன்!..
வாங்க, வணக்கம், ஆம், சந்தேகம் என்பது பல விளக்கங்களுக்கு தொடக்கம் தானே, தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஇயற்கையிலே மணம் உண்டு..என்றால்..... வித..விதமான வாசனை திரவியங்கள். ஷாம்புகள், மற்றும் பூக்களை வாங்கி தலையில் சூடிக் கொள்கிறார்கள் இதைக்கண்டால் இயற்கையிலே மணம் இல்லை என்றுதானே அர்த்தம்.....
ReplyDeleteஏன் உங்களுக்கு பெறாமை ஷாம்பு நீங்களும் போட்டுக்கொள்ளலாம், தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteவணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteபெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு.
துளசிதரன் தில்லையகத்து ஆசானின் பதிவொன்றின் பின்னூட்டத்தில், அந்த மணம் எப்படி இருக்கும் என்பதற்கான பதிலைக் கொடுத்திருக்கிறேன்.
அப்போதுதான், ஆசானின் பதிவுகளை நான் முதன்முதல் பார்த்தது,, அவர் தளத்தில் நான் முதன்முதல் இட்ட பின்னூட்டமும் அதுதான்.
விடை...?
அங்கிருக்கிறது.
நன்றி.
வாருங்கள் என் ஆசானே,
Deleteவணக்கம்.
இப்படி எல்லாவற்றையும் எழுதினால் நானெல்லாம் என்ன செய்வேன்,
கவிதை, இலக்கியம், இலக்கணம் இவைகளை எழுத விடுத்து, சரி இப்படி எழுதலாம் என்று நினைத்தால், இங்கேயுமா?
தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
மீண்டும் திருவிளையாடலா
ReplyDeleteநடத்துங்கள் உங்கள் நாடகத்தை
வாருங்கள் சகோ, இல்லை இது அறிவியல் என்று,,,,
Deleteதங்கள் வருகைக்கு நன்றி சகோ,
உண்டு என்பதே என் கருத்து.
ReplyDeleteவாருங்கள் அய்யா, அப்படியா, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Deleteசரியாக தெரியவில்லை. நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள்.
ReplyDeleteவாங்கம்மா, காதோடு உங்களுக்கு மட்டும்,,,,,,,,,,,,,, கேட்டுதா?
Deleteதங்கள் வருகைக்கு நன்றி.
"ஷாம்பூ, ஹேர் ஆயில் போன்ற பொருட்களால் பெண்களின் கூந்தலுக்கு வாசனை வருமே ஒழிய...."
ReplyDeleteநான் நக்கீரன் கட்சி! இறைவனே அந்தக் கட்சிதானே!
வாங்க வணக்கம், தாங்கள் நக்கீரன் கட்சியா? சரி நான் இறைவன் கட்சி,
Deleteதங்கள் வருகைக்கு நன்றி.
கூந்தல் என்றாலே ..... எப்போதுமே சிக்கல்தான் !
ReplyDeleteஅதை நன்கு வாரி வாரித்தான் சிக்கு சிடுக்கு ஏதும் இல்லாமல் படிய வைக்க வேண்டியுள்ளது.
இருப்பினும் அதற்கு ஒருவித மணம் உண்டுதான் .... ஆ னா ல் .......
அது நறுமணமா இல்லையா என்பது அவரவர்கள் தங்கள் கூந்தலைப் பராமரிப்பதைப் பொறுத்துத்தான் அமையும்.
நறுமணம் கமழ உதவுபவைகளே பூக்கள், வாசனைத் தைலங்கள் முதலியன என நான் நினைக்கிறேன். :)
வாருங்கள் அய்யா, வணக்கம்.
Deleteகூந்தல் பற்றிய தங்கள் கூர்மையான விளக்கத்திற்கு நன்றி,
தங்கள் வருகைக்கு நன்றி.
ok ......இப்படி வருவோமா ஒவ்வொருவர் உடலிலும் ஒருவித மணம்/வாசம் இருக்கும் தானே. அப்படி இருக்குமானால் அது நிச்சயம் கூந்தலில் இருக்கத் தானே செய்யும். அதை இயற்கை என்பதா செயற்கை என்பதா. சரி அப்போ ஏன் வாசனைத் திரவியங்கள் பாவிக்கிறோமே அது ஏன் இது எப்படி...... நானில்லப்பா எஸ்கேப் .........
ReplyDeleteதெரியலை பதிலை நீங்களே சொல்லிடுங்க ok வா ..... இதெல்லாம் என் சந்தேகம் தான். நன்றி பதிவுக்கு.வாழ்த்துக்கள் ..!
வாங்க இனியா, வணக்கம். எங்க எஸ்கேப் ஆகறது. கேள்விக்கே கேள்வியா? தங்கள் சந்தேகம் சூப்பர். வருகைக்கு நன்றிம்மா.
Deleteவணக்கம்
ReplyDeleteநளவெண்பாவில் ஒரு இடத்தில் புகழேந்தி சொல்லுகிறார் தமயந்தியின் முடி பற்றி.. மதுவுண்டு கழிக்கும் வண்டுகள்.. அவளின் கூந்தல் என்று சொல்லியுள்ளார்... நிச்சயம் பெண்களின் கூந்தலுக்கு ஒரு வித மணம் உண்டு...இல்லாவிட்டால் வண்டுகள் வந்திருக்கமாட்டாது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் சார், வணக்கம். ஆம், தாங்கள் சொல்வது சரிதான். ஆனால் அவள் கூந்தலில் மலர் சூடியிருப்பாள் தானே, வண்டுகள் வர அதுவும் காரணமாக இருக்குமோ, ஆனாலும் தாங்கள் சொல்வது சரியே, வருகைக்கு நன்றி சகோ,
Deleteஆஹா இந்த சந்தேகம் இன்னுமா தீர்ந்த பாடில்லை! நான் வரலை இந்த விளையாட்டுக்கு.
ReplyDeleteவாங்க சகோ,
Deleteஇன்று தீர்ந்துவிடும் என்று,,,,,,,,,,,,,,
தங்கள் வருகைக்கு நன்றி.
இயற்கையிலேயே மணம் உண்டு என்றுதான் தோன்றுகிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவாருங்கள் தளிர், வணக்கம். அப்படியா அடுத்த பதிவில் பார்த்துட்டா போச்சு, நன்றி.
Deleteநானும் நக்கீரர் பக்கம் தான். ஆனாலும், நம் பதிவர்கள் எல்லோரும் அடித்துச் சொல்லும் போது ஒரு வேலை மணம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteவாருங்கள், பார்ப்போம், வருகைக்கு நன்றி.
ReplyDeleteஒவ்வோர் உடலுக்கும் ஒரு வாசம் உண்டு என்றால் அது தலையிலும் இருக்கும் கூந்தலுக்கா தலைக்கா என்பது விவாதத்துக்கு உரியது நறு மணம் இருக்காது என்பது ஓரளவு நிச்சயம்
ReplyDeleteஅய்யா வணக்கம்,
Deleteஅப்படியா, சரி பார்ப்போம், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம் பேராசிரியரே !
ReplyDelete// எனவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு.
உங்கள் கருத்து????????????,///
ஆம் என்றால் அனுபவமா என்று கேட்பீங்க இல்லை என்றால் இதுகூடத் தெரியாமல் கவிஞனா என்று கேட்பீங்க ஒரே குழப்பமா இருக்கே பதிலைச் சொல்ல .....ம்ம் சொல்லிடுறேன் கடவுளே சொன்னபிறகு கன்பியூசன் எதுக்கு ஆமா ஆமா இருக்கு ( நான் சொல்லவில்லை கடவுள்தான் சாட்சி )
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாருங்கள் கவிஞரே,
Deleteசரியா சொல்லீட்டிங்க, பதில் இல்ல,
தங்களுக்கு குழப்பம் என்றதனை,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே,
அருமை தொடர்கின்றோம்...நாங்களும் இதை எங்கள் தளத்தில் கொஞ்சம் நகைச்சுவையுடன் எழுதி இருந்தோம்....ஒரு ஆய்வின் அடிப்படையில் ....தொடர்கின்றோம்...நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்று பார்க்க...
ReplyDeleteவாருங்கள் வணக்கம், தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.
Delete