Tuesday 30 December 2014

புது வருட வரவேற்பு



   என் வருங்காலமே இது வெறும் கனவல்லவே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 கதிரவனின் கடைக்கண் பார்வையில் மலர்ந்து இருக்கிறது
புது நாள்
புன்னகையுடன் தொடங்குவோம்
பூக்களாக நிறையட்டும்
இன்று
நாம் நினைப்போமே
நாம் மறந்த உண்மையை
பணம் சம்பாதிக் ஆயிரம் தொழில் இருக்கு
ஆனால்
உணவு சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான இருக்கு
ஒரு விவசாயி துணை என்ற திமிர் எனக்கும் உண்டு
நாங்கள் வயற்காட்டில் குனிந்து நின்றால் தான்
உங்களால் நிமிர்ந்து நிற்கமுடியும்,
பெற்ற சம்பளம் போதவில்லை
என்பதோடு மட்டுமே
நின்றுப்போனது
கற்றறிந்தோர் போராட்டம்.
கவலை இல்லை நமக்கு
விவசாயிகளின்
மனப்போராட்டம்.
இதே நிலை
நீடிக்குமாயின்
படித்தவன்
தன் நிலத்தை
பிளாட்டா போடுவான்
நாம் பிளாட் வாங்கி தினம்
சாப்பிடுவோம்.
இன்று
விவசாய விளை நிலம்
வெடித்து விட்டது
நாம் வேடிக்கைப் பார்ப்போம்
அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி
வருடத்திற்கு 17500 விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்
நாம் உண்ண வளையும்
அவர்கள் நிமிராத வரை
நாடும் நிமிரப்போவது இல்லை
சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத
சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

11 comments:

  1. ஆஹா சமூக நலன் வேண்டி தாங்கள் சொல்லடி ஒவ்வொன்றும் சவுக்கடியாய் வலிக்கிறது காரணம் நான் மனிதநேயம் உள்ளவனாக பிறந்து விட்டதாலோ ? என்னவோ ? ஒவ்வொரு இந்தியனும் இதற்க்கு பதில் சொல்லியே தீரவேண்டும்
    அருமை மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள்
    எமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்,

      Delete
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தொடர்வோம்,,,,,,,,,,,,,,,

      Delete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்,

      Delete
  4. தங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்திருக்கிறேன்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்,

      Delete
  5. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2015/01/5.html

    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
  6. புதிய பதிவு ஜென்டில்மேன் இன் ஜெர்மனி காண்க.....

    ReplyDelete
  7. உங்கள் பதிவில் சமூக நலனும் அக்கறையும் கரைபுரள்கிறது.

    வாழ்த்துக்கள்,

    கோ

    ReplyDelete