Thursday 31 March 2016

இனி தொடர்வோம்,,,,,,,,,,


                                                  இனி தொடர்வோம்,,,,,,,,,,

    வலை உறவுகளே வணக்கம், நலம் தானே, மீண்டும் வந்தாச்சு,

 பிள்ளைகளின் தேர்வுகாலம் என்பதால் தான் தொடர்ந்து எழுத படிக்க

இயலவில்லை. இனி தொடர்வோம்,,,,,,,,,,   இது உங்களுக்காக,,

                                                    மனம்

பெண்களின் காதல்

பூவில் உள்ள

பனித்துளி போன்றது

இது அழகானது,,,,,

ஆண்களின் காதல்

செடியின் வேரில் உள்ள

நீரைப் போன்றது

இது ஆழமானது,,,,

உன் முகம் பாத்ததில்லை

உன் முகவரியும் தெரிந்ததில்லை

இருந்தும் உன் குரலுக்காய்

காத்திருக்கிறேன்

நாளும்,,,,

யாரும் வந்து

நம்மை காயப்படுத்தும் வரை

நம் வலிமை

நமக்கு தெரிவதில்லை ,,,,,,

வாழ்க்கையில்

நம்பிக்கை வைக்கனும்

யாரையும்

நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,

                                                                            நன்றி,,,,
                                                           

32 comments:

  1. யதார்த்த வார்த்தைகளை கவிதையாக மாலை வேளையில் கோர்த்த மாலை அழகு வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் போல் தங்கள் முதல் வருகை,, நன்றி நன்றி சகோ, தாங்கள் அழைத்த பதிவுகளுக்கு இனி தான் வரனும். நன்றி சகோ,,

      Delete
  2. கடைசி வரி ,உண்மையான வரி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி பகவானே,, இனி தான் தங்கள் பதிகளைப் படிக்கனும்,,

      Delete
  3. அருமையான கவிதையுடன்..
    மீண்டும் பொலிவு!..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நலம் தானே, வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  4. சந்திரமுகி மாதிரி பாலமகி வந்துட்டாங்க....வந்துட்டாங்க...வந்துட்டாங்க...கவிதை எழுதி கொன்னுட்டாங்க....(அசத்தீட்டீங்க என்பதைதான் கொன்னுட்டாங்கன்னு சொல்லி இருக்கிறேன்) ஹீஹீ

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க பூரிக்கட்டை வேலைக் கொஞ்சம் குறைஞ்சிப்போச்சோ,,, ஹீ ஹீ ஹீ,,,
      வருகைக்கு நன்றிகள் மதுரைக்காரரே,,,

      Delete
  5. வாழ்க்கையில்

    நம்பிக்கை வைக்கனும்

    யாரையும்

    நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,//

    அருமையாகச் சொன்னீங்க... சகோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க,

      நலம் தானே, ஆகா தாங்கள் புரிந்துக்கொண்டீர்களா சகோ,,

      நன்றி நன்றி சகோ

      Delete
  6. அழகானதை ரசித்ததுமில்லை...ஆழமானதை பார்த்ததுமில்லை...இனி தொடர்வோம்,,,,,,,, கவிதை அருமை யாக இருக்கிறது...கடைசி வரி உதைககிறது..யாரையும் நம்பாமல் எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பது...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே, நலம் தானே, என்னது பார்த்ததுமில்லை, ரசித்ததுமில்லையா,,,,
      உதைக்காதே,,,
      வருகைக்கு நன்றிகள்

      Delete
  7. கவிதை அருமையாக இருக்கிறது...ஆனால் இறுதி வரிகள்????

    வாழ்க்கையில்

    நம்பிக்கை வைக்கனும்

    யாரையும்

    நம்பித்தான் இருக்கக்கூடாது,,,,,,,,,,

    வாழ்க்கையில் நம்பிக்கை வைக்கணும் எந்பதற்குள் அடுத்த வரி முரணாக உள்ளதே...ஒருவேளை நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டோமோ??!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நம்மை நம்பனும் பிறரை எதிர்பார்க்கக் கூடாது என்ற பொருளில்,,,
      முரண்கள் தானே,,,
      வருகைக்கு நன்றிகள்,,

      Delete
  8. //பெண்களின் காதல் பூவில் உள்ள பனித்துளி போன்றது
    இது அழகானது,,,,,

    ஆண்களின் காதல் செடியின் வேரில் உள்ள நீரைப் போன்றது
    இது ஆழமானது,,,,//

    அழகான கவிதை
    மனதில் ஆழமாகத்
    தைத்துவிட்டது.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தளத்தில் மீண்டும் பதிவுகளைப் பார்த்தது,, மகிழ்ச்சி, இனி தான் படிக்கனும்,, வருகைக்கு நன்றிகள்,

      Delete
  9. அருமையான வரிகள். குறிப்பாய்க் கடைசி வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் ஸ்ரீ,,

      Delete
  10. கவிதையே அழகுதான்
    அழகே கவிதைதான்...
    கடைசி வரிகளை
    அருமையாகவும் அழகாகவும்
    சொல்லியிருக்கீங்க....

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொன்னால் அது அழகாகத் தான் இருக்கும் ,,
      வருகைக்கு நன்றி

      Delete
  11. ஆம் ..

    கடைசி வரி ..அற்புதம் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி,, வருகைக்கு நன்றிகள்,

      Delete
  12. வணக்கம் பேராசிரியரே !

    ஆண்பெண் இருமனத்தை ஆழும் கனவுகளைக்
    காண்போர் எவருமில்லை !காதலுளம் - தீண்டும்
    வகையுணரார் தேக வலியுணரார் ! எம்மைப்
    பகைத்தும் வளர்ப்பார் பரிவு !

    அருமையான கவிதை வாழ்த்துகள் !

    பலமாதங்கள் கடந்து இப்போதான் நானும் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன் நன்றி பேராசிரியரே !

    ReplyDelete
    Replies
    1. ஆழம் கனவுகளைக் காண்போர் எவருமில்லை,,,

      தங்கள் கவி வரிகள் மயக்கம் தருபவை,,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்,,

      Delete
    2. ஆழும் கனவுகளை,,,,

      Delete
    3. ஹா ஹா ஹா மன்னிக்கவேண்டும் பேராசிரியரே எழுத்துப் பிழை சுட்டியமைக்கு நன்றிகள் ஆளும் என்று வாசிக்கவும் நன்றி !

      Delete
  13. கவிதை அருமை... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ, தொடருங்கள்

      Delete
  14. இடைவெளிக்குப் பின்வந்தமையறிந்து மகிழ்ச்சி. தொடர்வோம் பதிவுகள் மூலமாக.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா,,

      Delete
  15. உன் முகம் பாத்ததில்லை

    உன் முகவரியும் தெரிந்ததில்லை

    இருந்தும் உன் குரலுக்காய்

    காத்திருக்கிறேன்/ இது என்ன முகநூல் காதலா?

    ReplyDelete
  16. ஒஒ அப்படிமா? வருகைக்கு நன்றிகள் ஐயா

    ReplyDelete