வேறானவள்
பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பெண் முன்னேற்றம் குறித்த கவிதை, இன்றும் அப்படியே, கவியும் கவிப்பொருளும்,,,,
பாரதியின்
இலட்சிய கனவே
முட்டிகளுக்குள்
புதைத்துக்கொள்ளவா
உன்
பட்டுமுகம் படைக்கப்பட்டது,
நெல்மணிக்கு
தப்பிய நீ
சொல்மணியாய்
சுடர்விடத்தான்
கோழிக்குழம்புக்குத்
தப்பிய நீ
கோள்களின்
போக்கிற்கே
புதுக்கவிதை
விளக்கம் கூறத்தான்,
கள்ளிபாலுக்கு
தப்பிய நீ
காலங்களையே
மாற்றி அமைக்கத்தான்,
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ
அடிமைத்தளை
களையத்தான்
இப்படித் தான் பல கவிகள்
புரட்சி கவிகள் எழுதினேன்,,
ஆனால் இன்றும்
நான் காண்பது என்னவோ
மெத்த படித்த அவள்
படித்த
பதறாக ,,,,,,,,,,,
அடிமையாய்,,,,,,
போகப்பொருளாய்,,,
காட்சிப்பொருளாய்,,,
அடங்காப்பிடாரி
எனும் பட்டத்துடன்
அலங்கோளமாக,,,,,
இன்னும் இன்னும்,,,,,,
ஆணுக்குப்
பெண் கீழானவளும் அல்ல
மேலானவளும்
அல்ல
வேறானவள்
பாரதியே,,,,,,,,,,,
பெண்
முன்னேற்றம்
உன் எழுத்தின்
சாதனைதான்
ஆனாலும்
நடக்கும்
அநியாயம்
கண்டு
கலங்கியிருப்பாய்,
இன்று நீ
இருந்திருந்தால்,,,,,,,,,,,,
பெண்கள் தினம்,,,,,,,
கொண்டாட்டம்,,,
மனம் வலிக்கிறது
பெண்ணாய் பிறந்ததற்கு,,,,,
மகத்துவம்
மிக்க
என் இனிய
சமூகமே
என்று நீ
அவளை
மனுசியாய்
பார்க்கப்போகிறாய்???
பெண்ணை
நல்ல தோழியாய்,,,,
நல்ல மாணவியாய்,,,,
நல்ல அகத்தவளாய்,,,,,
இதுவே போதும்
அவள் நலமுடன் வளமுடன் வாழ,,,
வாழவிடு ,
வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில்,,
நிஜத்தில்,,
//ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
ReplyDeleteமேலானவளும் அல்ல
வேறானவள்//
உணர்சியும், எழுச்சியும் கொள்ளும் வரிகள் அருமை சகோ வாழ்த்துகள்.
ஆஹா, அது எப்படி சகோ, இவ்வளவு விரைவாக,,, அம்மாடியோ,, தங்கள் அன்பிற்கு நன்றி சகோ, தங்களைப் போன்றோர் தரும் ஊக்கம் தான்,,,,,
ReplyDeleteநன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்,,,
கனல் வீசும் கவிதை!..
ReplyDelete>>> வாழவிடு ,
வார்த்தையில் அல்ல
வாழ்க்கையில்,,<<<
அருமை.. வாழ்க நலம்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல,,,
Deleteஅருமை.
ReplyDeleteதமிழ்மணம் சப்மிட் ஆகவில்லையே...
வருகைக்கு நன்றி ஸ்ரீ,
Deleteதமிழ்மணம் இணைப்பே இல்லை,,
வரிகள் அனைத்து அருமை படிக்க சுவையாகவே இருக்கின்றன. உங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்,,,
Delete///மகத்துவம் மிக்க என் இனிய சமூகமே என்று நீ அவளை மனுசியாய்பார்க்கப்போகிறாய்???
ReplyDeleteபெண்ணை நல்ல தோழியாய்,,,,நல்ல மாணவியாய்,,,,நல்ல அகத்தவளாய்,,,,,இதுவே போதும்
அவள் நலமுடன் வளமுடன் வாழ,,,வாழவிடு ,வார்த்தையில் அல்ல வாழ்க்கையில்,,நிஜத்தில்,, ///
இந்த வரிகள் மிகவும் அருமையாகவே இருக்கின்றன. சகோ இதைப்படித்த பின் என் மனதில் எழும் கேள்வி இதுதான் இந்த சமுகம் மாறனும் என்றால் ஒவ்வொரு ஆணின் மனநிலையும் மாறனும் அப்பதான் இந்த சமுகம் மாறும். எனது கேள்வி இதுதான் உங்களின் வாழ்க்கை துணை இப்படிதானே உங்களை நடத்துகிறார் இல்லையா?முந்தைய கால ஆண்களோடு ஒப்பிடும் போது இந்த கால ஆண்கள் நிறையவே மாறி பெண்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறார்கள் அல்லவா?ஒட்டு மொத்த சமுதாயமும் மாறவில்லைதான் ஆனால் மாற்றம் சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பது சரிதானே. நீங்கள் சொன்ன இந்த வரிகள் உங்களின் பிள்ளைகள் அல்லது பேரன்களின் காலத்தில் நிஜமாகவே மாறிவிடும்...
This comment has been removed by the author.
Deleteஆம் தமிழா! இது அடுத்த தலைமுறையில் நிறைய மாறிவிடும். இப்போது இந்தத் தலைமுறையில் சிறிது ஏற்பட்ட்டுள்ளது. ஆனால் 40, 50வயதான பெண்களைக் கேட்டால் கணவன் மனைவியைத் தோழியாக நடத்துவது என்பது அபூர்வம் அந்தத் தலைமுறையில். நான் எப்போதும் சொல்லுவது ஒரு கணவன் முதலில் நல்ல தோழனாக இருக்க வேண்டும்...கணவன் என்பது அடுத்துதான். அப்போதுதான் அந்த உறவு வலுவுடன் நன்றாக இருக்கும்...தோழமை உணர்வுடன்...
Deleteநல்ல பின்னூட்டம் தமிழா...
கீதா
வருக மதுரைக்காரரே,,
Deleteமாற்றம் சிறிது சிறிதாக ஏற்பட்டுக்கொண்டு இருப்பது என்னவோ உண்மை,,,
ஆனால் அந்த மாற்றம் எங்கோ சிறு புள்ளி,,,
என்னளவில் நான் நலம் என்று என்னால் போக முடியல, படித்தவர்களிடம் தான் நிறைய வேதனைத் தரும் செயல்கள் இங்கு இருக்கிறது.
ஆணிடம் இருந்து மட்டுமே விடுதலையா? அதுமட்டும் அல்ல,,,
ஒட்டுமொத்த மாற்றம் வரும், தலைமுறைத் தாண்டிய மாற்றம்,, கடைசிவரிகள் ,,,, மகிழ்ச்சி,,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ,,
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா,,
Deleteவரிகள் அனைத்தும் அருமை மகேஸ்வரி.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா,,
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
வருகைக்கு நன்றி சகோ
Deleteநல்ல கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ
Deleteகவிதை அருமை... இருந்தாலும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது...பெண்கள்தினம்,,,,,,,கொண்டாட்டம்,,,இல்லை..இல்லவேயில்லை.
ReplyDeleteம்ம் ஆம் வலிப்போக்கரே, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
Deleteபளீர்...பளீர்...
ReplyDeleteநன்றி டிடி சார்,,,
Deleteநல்ல சிந்தனை, கவிதை வரிகளில்.
ReplyDeleteவருகைக்கு நன்றிகள் ஐயா
Deleteஅருமை அருமை சகோ
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா,,
Deleteபெண்கள் முன்னேற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. காலங்காலமாய் அடிமையாய் நடத்தப்பட்டு வந்தது பெண்கள் மட்டுமல்ல. மக்களின் மனம் ஒரு மாதிரி வடிவமைக்கப் பட்டு விட்டது மாற்றம் நிகழ நாட்கள் ஆகலாம் ஆணும் பெண்ணும் சமம் என்று நம் வழித்தோன்றல்களுக்குக் கற்பிப்போம்
ReplyDeleteஆம் ஐயா மாற்றம் நிகழ நாட்கள் ஆகலாம்,, தங்கள் வருகைக்கு நன்றிகள் ஐயா
Deleteநல்ல கவிதை சகோ. இந்த மாற்றங்கள் அடுத்தத் தலைமுறையில் வந்துவிடும். மதுரைத் தமிழனின் பதிலுக்கு கீதா கொடுத்திருப்பதைப் பாருங்கள். அதுவே எங்கள் இருவரின் பதிலும்...
ReplyDeleteஆம் சகோ, எதிர்பார்ப்போம்,, நன்றி சகோ
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteபடித்தேன் ரசித்தேன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ
Deleteஉண்மைதான்மா நீங்கள் கூறுவது அருமையான கவிதை...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் பேராசிரியரே !
ReplyDeleteஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
மேலானவளும் அல்ல
வேறானவள் !
வேறான பெண்ணென்றீர் வேகத் தாலா
விரட்டிவரும் விஞ்ஞானம் வேன்ற தாலா
ஆறான கண்ணுள்ளும் அன்பைச் சேர்த்து
அன்னையெனும் சிறப்பெல்லாம் பெற்ற தாலா
பேறான பிறப்பென்று பெருமை கொள்ளப்
பெண்ணடிமை அடக்குமுறை வென்ற தாலா
நீறான மனத்துள்ளே நெருடும் கேள்வி
நினைவுருக்கிப் போகிறதே கோபம் கொள்ளீர் !
மிகவும் அருமை பேராசிரியரே தொடர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் !
முதலில் காட்டியுள்ள படத்தினை மட்டும் எனக்குக் காண சகிக்கவில்லை. :(
ReplyDeleteதங்களின் ஆக்கமும் ஆதங்கமும் மிகவும் அருமை. உண்மை. பாராட்டுகள். :)