Saturday, 2 April 2016

நினைத்துப் பாருங்கள்

                                                  நினைத்துப் பாருங்கள்

      நினைத்துப் பார்க்கிறேன்,, பள்ளியின் விடுதியில் ரேங்க்கார்டு கொடுத்தார்களா? என்ற விடுதி பொறுப்பாளரிடம், பதிலே சொல்லாமல் மெதுவாக மிக மெதுவாக பையில் இருந்து எடுத்துக்கொடுத்தேன், பயத்துடன் நின்றேன்,,,

அந்த நினைவுகள் இன்று, 

பையன் வந்து அம்மா, மேம், கார்டு கொடுத்தார்கள் என்றான்,, சரிப்பா கொடு என்று வாங்கி என்ன கிரேடு என்றேன்,, 

அவன், அம்மா,  அப்பாகிட்ட சொல்லி எப்படியாவது எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுக்க சொல்லுங்கள் என்றான்,,

சரியாக அதே நேரம் சின்னவளும் வந்துவிட்டாள்,, அம்மா இந்தாங்க என்னுடையது.நான் அனைத்திலும் O  கிரேடு என்றாள், எனக்கு கண்டிப்பாக டேப் (Tablet) வேண்டும் என்றாள்,, அப்பாவிடம் சொல்கிறேன் என்றேன்.

என்னவரும் வந்த பின் என் பையன் என் பின்னால், சின்னவளோ தந்தையின் தோளில் தொங்கிக்கொண்டு, அப்பா இந்தாங்க கிரேடு அட்டை, எனக்கு டேப் கட்டாயம் வேண்டும் என்றாள். சரி என்றார்.

பையனின் அட்டையை பார்வைக்கு தந்தேன்,, பார்த்தவர் நிமிர்ந்து அவனைப் பார்த்தார். அவன் என் பின்னால் இருந்துக்கொண்டே அம்மா சொல்லும்மா எனக்கு சைக்கிள் என்றான்,, இரண்டில் A+ இல்லை, எனவே சைக்கிள் இல்லை என்றதும் அவன் அழ ஆரம்பித்து விட்டான்,,,, 

நான் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவன் சமாதானம் ஆகல,,,,

இதில் இவள் வேற இப்படி செய்தால் அவன் என்ன ஆவான்,,,,

பையன் 2 ஆம் வகுப்பில் இருந்து 3 ஆம் வகுப்பு,


இவுங்க LKG  இருந்து UKG



நினைத்துப் பாருங்கள் அத்தருணங்களை ,,,,,,

எத்தனை முறை அப்பாவிடம் பொய் சொல்லி இருப்பீர்கள் ?

நீங்கள் பெற்ற மதிப்பெண்களை மறைப்பதற்காக ;

பள்ளியில் முட்டி போட்டிருக்கிறீர்களா?



37 comments:

  1. காலத்திற்கேற்ற, குழந்தைகளின் கச்சிதமான கோரிக்கைகள். பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை. ரசித்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம், தங்களின் வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றிகள் தொடருங்கள்,,

      Delete
  2. //இதில் இவள் வேற இப்படி செய்தால் அவன் என்ன ஆவான்//
    ஹாஹாஹ எரியிற நெருப்பில் டால்டா ஊற்றலாமா ?

    ReplyDelete
    Replies
    1. டால்டாவா???? அதற்கும் மேல் சகோ,, இருவரையும் பிரித்து எடுக்க அவர் பட்ட பாடு,, அப்பப்பா,,, ஹாஹாஹாஹா,, வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  3. என் தந்தையிடமும் சரி..
    வேறு யாரிடமும் சரி - நான் பொய் சொன்னதில்லை..

    பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பவன் ஆதலால் பிரச்னையே இல்லை!..

    பதினொன்றாம் ( இப்போது +1)வகுப்பு படிக்கும் போது -
    பழக்க வழக்கம் சரியில்லாத மாணவர்களுடன் அமர்ந்திருந்ததற்காக ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றேன்...

    பழைய நினைவுகளத் தூண்டி விட்ட பதிவு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் பழைய நினைவுகளைத் தூண்டும் பதிவாக அமைந்தது மகிழ்ச்சி,,, நல்ல பிள்ளைக்கு வாழ்த்துக்கள்,, நன்றி வருகைக்கு,,

      Delete
  4. குழந்தைகளின் ஆசையை பூர்த்தி செய்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. பூர்த்தி செய்கிறோம் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது,, வருகைக்கு நன்றி மா,,

      Delete
  5. எனக்கு இந்தப் பிரச்சனை இருந்ததில்லை ஓரிரு முறை என் மக்களுக்காக அவர்கள் ஆசிரியர்களிடம் நின்றிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா தங்கள் நினைவுகள் பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் நன்றிகள் ஐயா,,

      Delete
    2. ஆஹா தங்கள் நினைவுகள் பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் நன்றிகள் ஐயா,,

      Delete
  6. கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளியில் 1960களின் இடையில் நான் கொக்கு போட்ட நாள்களை இப்பதிவு நினைவுபடுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. கொக்கு போட்ட நினைவுகள்,, நான் கிளறிவிட்டேனா,, ஆனாலும் மறக்க முடியா நினைவுகள் அவை,,, வருகைக்கு நன்றி,,

      Delete
  7. நான் மதிப்பெண்களை அப்பாவிடம் மறைத்ததில்லை...
    முட்டி போட்டிருக்கிறேன் காலை 10 மணி முதல்
    4 மணிவரை அன்றுதான் நான் பள்ளிக்கூடத்தில்
    போன கடைசி நாள்....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஏன்,,?????? வருகைக்கு நன்றி

      Delete
  8. நினைவுகள்..... மீட்டெடுக்க உதவியது.

    ReplyDelete
    Replies
    1. ஆஹஹா தங்கள் நினைவுகள் மீட்க,,, நன்றி சகோ,,

      Delete
  9. ஆஹா.... என்னென்னவோ செஞ்சிருக்கோம்ல... சொல்ல முடியுமா அவற்றை!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஸ்ரீ,, சொல்லுங்கள் பதிவாக,,

      வருகைக்கு நன்றிகள்

      Delete
  10. பழைய நினைவுகள் எங்களுக்கும். ஆனால் பொய் சொன்னதில்லை..சிவப்பு நிறக் கோடுகள் கிடைத்திருந்தாலும் பொய் சொன்னதில்லை அடி வாங்கியதுண்டு...நிறையவே..

    ReplyDelete
    Replies
    1. சிவப்பு நிறக்கோடுகள் வரக்கூடாதே என்று பயந்தது உண்டு,,,

      உண்மைதான்,, வருகைக்கு நன்றிகள் சகோ,,

      Delete
  11. நாமெல்லாம் கல்லூரி வரை ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை... அதனால் அப்பா அம்மா கூட வந்து நின்றதில்லை... நானும் நின்றதில்லை...

    மதிப்பெண்களை மறைப்பதும் இல்லை... வீட்டில் படி படி என்ற திட்டலும் இல்லை... ரொம்ப நல்ல பிள்ளையாக்கும் நான்...

    ReplyDelete
    Replies
    1. நானும் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை சகோ,

      வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  12. அது ஒரு காலம் அழகிய காலம் ...........பாடசாலைப் பருவத்தில் ஆசிரியர்களிடம் தண்டனையே பெறவில்லை நான் எந்த வகுப்பிலும் நல்ல பேரோடு படித்தேன் பட்டதாரி ஆனேன் இப்போ இப்படி ஆகிட்டேன் ஹா ஹா ஹா தங்கள் பிள்ளைகள் இருவரும் எல்லாச் செல்வங்களும் பெற்று இனிதே வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பாவலரே

      Delete
  13. தஎருமை மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லை என்று சொன்ன என் வாத்தி....வாத்தியாருக்கோ...... என்னை படிக்க வைக்க பெரும் முயற்சி எடுத்த என் தாயாருக்கோ... என் தாயாரின் நண்பியான ஆச்சிக்கோ... தங்களின் வாண்டுகளைப்போல.. நான் எந்த உபத்திரமுமம் கொடுத்ததில்லை என்பதையே நினைத்துப் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. எந்த உபத்திரமும் கொடுத்ததில்லை ,,நம்புகிறோம் வலிப்போக்கரே,,

      வருகைக்கு நன்றிகள்

      Delete
  14. வணக்கம்
    கடந்த கால நினைவுகள் ஒரு சுகந்தான் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  15. வணக்கம்

    இன்று என் பிள்ளைகளும் இப்படித்தான் !...

    அனைத்து வகுப்புகளிலுமே முன்னணி மாணவனாக இருந்ததால் சிறுவயதில் எனக்கு ரேங்க் கார்டு பயம் இருந்ததில்லை... கணக்கு மட்டும் சுனக்கம்... அதில் மதிப்பெண் சற்று குறையும் போது கூட " அடுத்த முறை சரியா படிப்பான் ! " என நம்பிக்கை வைக்கும் பெற்றோர்...

    மிக இளம் வயதிலேயே பொறுப்புணர்ச்சியுடன் முதிர்ச்சியுடையவனாய் வளர்ந்ததற்கு என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையே காரணாம் என தோன்றுகிறது...

    பால்ய நினைவுகளை மீட்டிய பதிவு !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  16. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் சகோதரியாரே

    ReplyDelete
  17. தொடர் பதிவினைத் தொடர உங்களை அழைத்திருக்கிறேன் மகி! http://unjal.blogspot.com/2016/04/3.html நேரமிருப்பின் தொடருங்கள்.

    ReplyDelete
  18. பேராசிரியரே,

    தங்களின் இந்த பகிர்பு ஓ ஹோ என இருப்பதால் உங்களுக்கு double "O"

    பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் அரசே

      Delete