என்னவனே
என் இதய சிம்மாசனத்தில்
சுகமாய் வாழ்பவனே
என் சோகத்தைக் கேட்டு
சோகமே அழுகிறதடா,,,
உன் நினைவுகள் தந்த
கற்பனைக் கனவுகளில் திரையிட்டு
காலங்கள் கடத்துகின்றேன்
நம் காதலை வாழ வைக்க,,
நிமிர்ந்து பார்க்க
இருளில் தெரிகிறது உன் உருவம்.
அறை முழுவதும் உன் குரல்கள்
எப்பவும் போல் ஓங்கி ஒலிக்கின்றன.
இமைகள் மூடினால்
இமையோரம் உன் நினைவு பிசுபிசுப்பு
உறங்கிடவும் முடியவில்லை
கனவிலும் உன் நினைவுகள்.
உதறி எழுந்தேன்
கதறி அழ,,
கட்டிலில் ஆழ்ந்து உறங்கும்
உன் சாயலைக் கண்டதும்
கசக்கி எரிந்தேன் கனவையும்
எதிர்பாரா இடைவெளி
உனக்கும் எனக்குமாய்,,,,,,
கரம் பிடித்து வந்தவளின்
காவலனே
உன்னைவிடவும் வேறொருவன்
இவ்வுலகத்தில் எனக்குண்டோ
என்னைப் பற்றி நான் என்ன நினைத்தாலும்
உனக்காக இறங்கிவந்தேன்
உன்னையே பற்றியதால்
காரணங்கள் பல
நீ
கூறியும் கூறாமலும்
என்னை மறுத்துவிட்டு போனாலும்
உந்தன் கபட உணர்வுகளால்
உன்னால் ஒதுக்கப்பட்ட இவள்
காத்திருக்கிறாள்
உன்னை வரவேற்க
இல்லத்திலும்
உள்ளத்திலும்,,,
சரி, பொங்கல் விடுமுறை முடிந்து பதிவு வெளியிட முடியாத படி பல வேலைகள், இப்போ எல்லாம் முடிந்தது, இது உங்களுக்காக பொங்கல் பதிவாக வெளியிட சேகரித்தவை,,,,
நான் பணிபுரியும் கல்வி நிறுவனத்தில் பொங்கல் வைத்தபோது,,
மாணவிகள் கை வண்ணக் காவியங்கள்,,
முயற்சித்தேன் டீ வடிகட்டியில் கோலம் போட
நல்லா இருக்கா,,,
உங்களுக்கு தேரிந்தவர் தான் ,,,,,,,
பள்ளியில் பொங்கல் கொண்டாடத் தான் இப்படி
இவங்களும் தான்,,,,
தயவு செய்து - இப்படியெல்லாம் தலைப்பு வைக்காதீர்கள்..
ReplyDeleteமனம் மிகவும் வருந்துகின்றது..
வாருங்கள் வணக்கம்,
Deleteதலைப்பை மாற்றிவிட்டேன். அப்படியா இருக்கு??
வருகைக்கு நன்றிகள்.
அன்புச் செல்வங்களுக்கு நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கள் அவர்கள் நலம் காக்கும்,,,
Deleteவாழ்த்திற்கும்,வருகைக்கும் நன்றிகள்,
முதல் படத்தின் நடுவில் இருக்கும் வெள்ளை மயில்கள் அருமை ,கோலம்தானா :)
ReplyDeleteஅது அச்சு,, அதைச்சுற்றி இருப்பது தான் நான் போட்ட கோலம்,,
Deleteவருகைக்கு நன்றி ஜீ,
நண்பர் துரை செல்வராஜ் கருத்தை ஆமோதிக்கிறேன். கோலங்கள் அருமை. குழந்தைகள் உங்கள் செல்வங்களா?
ReplyDeleteதலைப்பை மாற்றி விட்டேன் ஸ்ரீ,, ஆம் என் செல்வங்கள் தான்,
Deleteதங்கள் வருகைக்கு நன்றிகள்
நன்றி. நல்லது. செல்லங்களுக்கு வாழ்த்துகள்.
Deleteமீள் வருகைக்கு நன்றி ஸ்ரீ
Deleteபொங்கல் படங்களும், கோலங்களும் மிக அழகு மகேஸ்வரி. குழந்தைகள் இருவரும் உங்கள் செல்வங்களா? அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் !
ReplyDeleteஆம் அம்மா என் குழந்தைகள் தான், மகன்,மகள்,,,
Deleteதங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
எழுத்தும், சித்திரங்களும் நல்லா இருக்கு.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடருங்கள்.
Deleteபுகைப்படங்கள் நன்று உங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteசகோ கவிதையில் சோகம் ஏன் ?
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் சகோ
Deleteஒட்டிக்கோ கட்டிக்கோ ஸூப்பர் சகோ
ReplyDeleteஅப்படியா சகோ
Deleteகவிதையும், கைவண்ணங்களும் அழகு....குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். அழகா இருக்காங்க...சுத்தி போடுங்க....
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ
Deleteஎன் இதய சிம்மாசனத்தில்..... என்ற சோகக்கவிதையை நல்லாவே கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteகோலங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.
குழந்தைகள் இருவரும் ஜோர் ஜோர். மனம் நிறைந்த வாழ்த்துகள்.:)
என் கற்பனைக் கவிதையை வாழ்த்தியதற்கும், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கள் ஐயா,
Deleteநன்றி நன்றி
கவிதையும் கோலமும் தங்களின் அன்புச் செல்வங்களும் அருமை. ரசிக்க வைத்த பதிவு!
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
Deleteபதிவின் தலைப்பினை மாற்றியமைத்ததற்கு மகிழ்ச்சி..
ReplyDeleteஆஹா, தாங்கள் சொல்,,,,, நன்றி, தங்கள் வருகைக்கு நன்றிகள்
Deleteநல்லதோர் பகிர்வு. படங்கள் அழகு.
ReplyDeleteவருங்கால தலைவர்கள் இருவருக்கும் எனது பொங்களல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஆஹா தாங்கள் அப்படிச் சொல்கிறீர்களா?
Deleteவருகைக்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே
கவிதை,கோலங்கள், அழகு. குழந்தைச் செல்வங்களுக்கு எங்கள் மனமார்ந்த அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லுங்கள் சகோ...
ReplyDeleteஅன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ
Deleteசோக கீதம் எதற்கு சகோதரியாரே
ReplyDeleteயாருக்கு இல்லை சோகம்
நல்லதையே நினைத்திருப்போம்
படங்கள் அருமை
குழந்தைகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ஆம், நல்லதையே நினைத்திருப்போம், நன்றி சகோ,
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல
பேராசிரியரே,
ReplyDeleteநீங்கள் வடித்திருக்கும் மா(வு)கோலங்களும் மழலை கோலங்களும் அற்புதம்.
வாழ்த்துக்கள்.
கோ