Tuesday 12 January 2016

அளவுக்கதிமான அன்பு



அளவுக்கதிமாக அன்பை 
பிறருக்கு கொடுக்கவும் கூடாது
பிறரிடமிருந்து பெறவும் கூடாது
இரண்டுமே வேதனையைத் தான் தரும்.



         
அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,


   




சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல
கவலையை ம(றை)றக்க
கற்றுக்கொண்டவர்கள்.






சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்
சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்
சிலர் அன்பு எப்போதும் புரியாது
அதை
காலம் உணர்த்தும் போது தான்
கண்கள் கலங்கும்



                                                                                                                                      

52 comments:

  1. கோலங்கள் அனைத்தும் அழகு.

    அதைவிட அழகோ அழகு, அன்பைப் பற்றிய அன்புடன் கூடிய தங்களின் அன்பான உண்மையான வார்த்தைகள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், தாங்கள் பதிவினை ரசித்து படித்துள்ளீர்கள்,,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. //அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
    அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
    இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,//

    ஏற்கனவே வலி தாங்க முடியவில்லை. :)

    ReplyDelete
    Replies
    1. ஆம், அதனால் தான் சொன்னேன். தாங்க முடியல என்று,,
      நன்றி ஐயா,,,

      Delete
  3. //சிரிப்பவர்கள் எல்லோரும்
    கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல
    கவலையை ம(றை)றக்க
    கற்றுக்கொண்டவர்கள்.//


    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மையே.

    ReplyDelete
    Replies
    1. உண்மை என்று என் கருத்திற்கு வலு சேர்த்ததற்கு நன்றிகள் ஐயா,,

      Delete
  4. //சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம்
    சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம்
    சிலர் அன்பு எப்போதும் புரியாது
    அதை
    காலம் உணர்த்தும் போது தான்
    கண்கள் கலங்கும்//

    படித்ததும் கலங்கியது ..... என் கண்களும். !!!!! மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கண்களும் கலங்கியதா? ம்ம் ஆம் காலம் உணர்த்தும், ஒவ்வொன்றினையும் தனித் தனியாக குறிப்பிட்டு பாராட்டிய உங்கள் உள்ளம்,, நன்றி நன்றி நன்றி ஐயா,,

      Delete
  5. என்னாச்சி...? ஏதோ நடந்திருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் ஆகல, எதுவும் நடக்கல டிடி, ஏதோ தத்துவம் சொல்லனும் என்று தோனியது, அவ்வளவே சரியா டிடி சார், வருகைக்கு நன்றி.

      Delete
  6. வண்ணக் கோலங்கள் அழகு..

    அத்துடன் -

    வார்த்தைக் கோலங்களும் அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைக் கோலங்களும் ம்ம்,,,,,,
      வருகைக்கு நன்றிகள்.

      Delete
  7. எதிர்பார்ப்புடன் அன்பைக் கொடுத்தால் நிச்சயம் ஏமாற்றமும் வேதனையும் மிஞ்சும் அழகு கோலங்கள் அழகு வரிகள் அருமைஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சின்ன எதிர்பார்ப்புக் கூட இல்லாமல் இருக்க இயலாதே ஐயா, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,

      Delete
  8. அழகிய கோலங்களுடன் வார்த்தைகளும் அழகு துன்பம் விரைவில் நீங்கிடும் சகோ பொங்கல் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  9. கோலத்துடன் இணைந்த கவிதைகள் அருமை சகோ...சும்மா நச்சுன்னு இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா, வருகைக்கும்

      Delete
  10. வணக்கம்
    கோலங்கள் அழகு.. சொல்லிய கருத்தும் உண்மைதான்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அன்பும் நெருப்பு மாதிரி ,நெருங்கவும் கூடாது ,விலகவும் கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. எப்படி பகவானே, நன்றி.

      Delete
  12. அன்பும் நெருப்பு மாதிரி ,நெருங்கவும் கூடாது ,விலகவும் கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. நெருங்கிய பின் தான் விலகத் தோன்றும் போல் பகவானே

      Delete
  13. கோலங்களும் வார்த்தைகளும் அர்த்தமானவை, அழகானவை.ஆழமானவை.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ரசித்தமைக்கு நன்றிமா

      Delete
  14. சில பெரிய அனுபவங்கள் இந்தத் தத்துவங்களை / உண்மைகளை நமக்கு உணர்த்தும். கோலங்கள் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீ வருகைக்கு நன்றி.

      Delete
  15. அழகிய கோலங்களுடன் அந்தத் தத்துவப் பொன்மொழிகள் அனைத்தும் அருமை மட்டுமல்ல அனுபவமும் உணர்த்திவிடுபவைதான். இரண்டுமே மனதைக் கவர்ந்தன...

    ReplyDelete
  16. ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.

    மேடும் பள்ளமும் நிறைந்ததுதானே வாழ்க்கை
    தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, மேடு பள்ளங்கள் தான்,, வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  17. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. அன்பினும் இனிய சகோதரி/

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நன்றி புதுவையாரே

      Delete
  19. அளவுக்கதிமாக அன்பை
    பிறருக்கு கொடுக்கவும் கூடாது
    பிறரிடமிருந்து பெறவும் கூடாது
    இரண்டுமே வேதனையைத் தான் தரும். ஒவ்வொன்றும் தங்களின் அனுபவமா...?? அல்லது தத்துவமா ...??? என்று புரியவில்லை நண்பரே....

    முனைவர் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் முனைவரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. அனுபவமா? தத்துவமா? தெரியலையே,, நன்றி நண்பரே

      Delete
  20. அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
    அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
    இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,ஒவ்வொரு கருத்தும் தங்களின் அனுபவமா...?? தத்துவமா...??? என்று புரியவில்லை நண்பரே...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தங்களின் அன்பு நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே......

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு இது தத்துவமாக தெரியலையா நண்பரே

      Delete
  21. அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்,,,,,,,,,
    அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்,,,,,,,,,,
    இரண்டிற்கும் வலி அதிகம்,,,,,,,,ஒவ்வொரு கருத்தும் தங்களின் அனுபவமா...?? தத்துவமா...??? என்று புரியவில்லை நண்பரே...

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தங்களின் அன்பு நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே......

    ReplyDelete
  22. ஒருவாசகம் என்றாலும் திருவாசகம். நான்றாக சொன்னீர்கள். பொங்கலோ பொங்கல்.

    ReplyDelete
    Replies
    1. என்னது திருவாசகமா? நான் இல்லப்பா, நன்றி சார் வருகைக்கு,

      Delete
  23. அழகு.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. பேராசிரியர் அவர்களுக்கு,

    அழகிய கோலங்களுக்கு இடையிடையே அற்புத தத்துவங்கள்.

    அன்பாயிருந்தாலும் அன்னமாயிருந்தாலும் பாத்திரம் அறிந்து இடவேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும். அமுதமானாலும் அளவுக்கு மிஞ்சக்கூடாது என்று பெரியோர்கள் சொல் உங்கள் பதிவில் பிரதிபலிக்கின்றது.

    வரையறைகளுக்குள் அடங்கி இருந்தால்தான் அழகிய கோலங்கள் இல்லையேல் அலங்கோலங்கள், அழகிய கோலமிடும் உங்களுக்கு இது தெரிந்திருக்குமே.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. இப்ப என்ன சொல்ல வறீங்க,, எனக்கு கோலம் போடத் தெரிய என்றா? வரையறை சரியா இல்லையா அரசே,
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் நன்றி அரசே.

      Delete
  25. கோலங்கள் போலவே அன்புத் தத்துவங்களும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், தங்கள் வருகைக்கு,,

      Delete
  26. அட எல்லாம் ரொம்ப அழகா இருக்கு தோழி... அன்பை பற்றி சொன்னது என் நினைவுகளை கிளறுகிறது. வாழ்த்துக்கள்

    இவ்ளோ போஸ்ட் இருக்கே இங்கே , எல்லாம் சேர்த்து வச்சு படிக்கணும்.

    உங்களை தொடர்ந்தாச்சு இனி தொடர்ந்து வருவேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாங்கம்மா, என்னைப் பார்த்தாச்சா? ஒன்னும் பிரச்சனை இல்லை, மெதுவா படிங்க,
      நல்லதுமா தொடருங்கள்.

      Delete