Tuesday, 9 February 2016

யாந்துஞ் சலமே,,,,,


                          மயிலின் கால்கள் க்கான பட முடிவு
 இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலோடு இயைந்த ஒன்று, சங்க இலக்கிய குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது,,

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
         
                                         குறுந்தொகை
                                         பாடல் எண் 138
                                         கொல்லன் அழிசி
                                         மருதத்திணை


         கொன்னூர் துஞ்சனும் யாந்துஞ் சலமே
         எம் இல் அயலது ஏழில் உம்பர்
         மயிலடி இலைய மா குரல் நொச்சி
         அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
         மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 (இப்படியும் பிரித்து பார்க்கலாம் என,,)

  முதல்நாள் உரிய இடத்தே தலைவன் வருவான் என எதிர்பார்த்து அவன் அன்று வரவில்லை. அடுத்த நாள் அவன் வரும்  போது, நேற்று வருவீர் என்று எதிர்பார்த்து தலைவி தூங்கவில்லை என்பதைத் தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்வதைப்போல் தோழி சொன்னது,,,

    ஊர் முழுக்க தூங்கியது. நான் மட்டும் தூங்கவில்லை. என் வீட்டிற்கு அருகில் உள்ள உயர்ந்த ஏழில் குன்றத்தின் அருகில் உள்ள, மயிலின் கால்களைப் போன்ற இலைகளையுடைய நொச்சி மரத்தின் பெரிய கொத்துக்களாக உள்ள, நீலமணியின் நிறத்தை ஒத்த மலர்கள், மென்மையாகக் கிளைகளில் இருந்து உதிர்வதைக் கேட்டபடியே படுத்திருந்தேன்.
   
சொல் விளக்கம் -

கொன்னூர் - (பரிய ஊர் ) ஊர் முழுக்க

துஞ்சினும் - தூங்கினாலும்

யாந்துஞ்சலமே - நான் தூங்கவில்லை

எம் இல் அயலது - என் வீட்டிற்கு அருகில்

ஏழில் உம்பர் - உயர்ந்த ஏழில் மலையில் மேலுள்ள

( ஏழில் என்பது ஒரு மலை. இது மன்னன் நன்னன் என்பவனுக்குரியது)

மயிலடி இலைய - மயிலின் அடியைப் (கால்களைப்) போன்ற இலைகளை உடைய

மா குரல் - கருமையான அல்லது பெரிய குலைகள்

நொச்சி - நொச்சி

அணிமிகு - மிகவும் அழகான 

மென் கொம்பு - மெல்லிய கிளைகள்

ஊழ்த்த - உதிர்த்த 

மணி மருள் - நீலமணியைப் போன்ற

பூவின் பாடு - பூக்கள் விழுவதைக்

நனி கேட்டே -  மிகக் கேட்டவாறு 


                                                              நொச்சி பூ க்கான பட முடிவு
மயிலின் கால்கள் க்கான பட முடிவு

படங்கள் இணையத்திலிருந்து,,


31 comments:

  1. சங்க இலக்கியங்களைப் படிக்கவேண்டும் என்ற எனது ஆவலை மேம்படுத்திவிட்டது இப்பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா படிக்க படிக்க புது புது சிந்தனைகள் தோன்றும் பகுதிகள் அவை,,

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  2. அருமையான பாடலும் விளக்கமும்...சகோ கீதாமதிவாணன் அவர்களும் இந்தப் பாடலைப் பற்றி கீதமஞ்சரி தளத்தில் எழுதியதை நாங்கள் வாசித்த நினைவு. அருமை சகோ தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, இப்போ தான்ன பார்த்து வருகிறேன். ஏற்கனவே படித்துள்ளேன். இப்பதிவினை எழுதும் போது நினைவில் இல்லை. இல்லையென்றால் அதனையும் குறித்து இருப்பேன். தாங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி,,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ

      Delete
  3. என் தமிழ் அறிவு மிகவும் குறைவு. நல்லகாலம் பொருள் கொடுத்து விளக்கி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா இது என்ன விளையாட்டு,, வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்

      Delete
  4. //முதல்நாள் உரிய இடத்தே தலைவன் வருவான் என எதிர்பார்த்து அவன் அன்று வரவில்லை. அடுத்த நாள் அவன் வரும் போது, நேற்று வருவீர் என்று எதிர்பார்த்து தலைவி தூங்கவில்லை என்பதைத் தலைவன் கேட்குமாறு, தலைவி சொல்வதைப்போல் தோழி சொன்னது...//

    இந்தக்காலம் போல காதலர்கள் நேருக்கு நேர் சந்தித்தோ, அலைபேசியில் பேசியோ, தனது ஏக்கங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் போலிருக்குது. தலைவன் தலைவிக்கு நடுவில் தோழி ஒருத்தி வேறு. சிரிப்பாகத்தான் உள்ளது. எனினும் சிறப்பாகவே உள்ளது தங்களின் இயல்பான தமிழ் அறிவும் இதில் சேர்ந்துள்ளதால். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. காதலர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் வேலையெல்லாம் உண்டு ஐயா,, ஆனாலும் தோழியும் கூடவே,

      ஒஒ தோழி கூடவே என்பது தான் சிரிப்பா,, ஆனால் அவள் தலைவியின் நலன் விரும்புபவள்,, இன்றைய தோழிகள் போல் இல்லை,,,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,

      Delete
  5. அருமையான பாடல்
    விளக்கத்துடன் கொடுத்து இரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,

      Delete
  6. பாடலும் விளக்கமும் அருமை மகேஸ்வரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிமா வருகைக்கு

      Delete
  7. வணக்கம் சகோ விளக்கவுரை கொடுத்ததனால் எனது மூளைக்குகூட விளங்கியது தொடருங்கள் நானும் பயில வாய்ப்பு கிட்டும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. இது கொஞ்சம் ஒவரா இல்ல சகோ, உங்கள மூளை,,,

      வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  8. இலக்கியத் தேன்.. சுவைக்குக் கேட்கவா வேண்டும்!.. கூடவே -

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை..
    மான் உறங்க்குது மயிலும் உறங்குது
    மனம் உறங்கவில்லை
    வழி உறங்குது மொழியும் உறங்குது
    விழி உறங்கவில்லை

    - என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது..

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இன்றைய பாடல் வரிகள்,,

      நினைவினை கிளறிய என் பதிவோ,,

      வருகைக்கும் அன்பின் வாழ்த்திற்கும் நன்றிகள்

      Delete
  9. கல்லூரி தமிழ் வகுப்பில் அமர்ந்த உணர்வு! அழகான இலக்கிய நயம்.! அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. வகுப்பிற்கு சென்ற காலங்கள் தங்கள் நினைவில்,,

      நன்றி சகோ,

      Delete
  10. பூ விழும் ஓசை கேட்குமளவு இரவின் அமைதியில் இன்னும் உறங்காத தோழி! அருமை. துரை செல்வராஜூ ஸார் ஒரு பாடலைச் சொன்னது போல எனக்கு நினைவு வரும் பாடல் "ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊதக் காத்தும் அடிச்சுடுச்சு.. பாவி மக தூங்கலையே... அதுவும் ஏனோ தெரியலையே.." பாடல் நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீ,, இப்பாடல் ஆசிரியர் நிச்சயம் இவ்விலக்கியத்தின் தாக்கத்தால் தான் எழுதி இருக்க வேண்டும்,,, யார் பாடல் என்று எனக்கு தெரியாது,, அதே வரிகள்,, ஊரு சனம் தூங்கிடுச்சி,,, ஊத காத்து அடிக்குது,, காற்றின் அசைவால் மலர்கள் விழும் ஓசை,,,

      இல்லையா,, இப்பாடல் தானே,,

      தங்கள் நினைவில் இந்த பாடல்,,

      வருகைக்கு நன்றிகள்

      Delete
  11. அருமை சகோதரியாரே
    அருமை
    பாடலும் விளக்கமும் அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

      Delete
  12. ஆஹா.. அருமை.. என்னுடைய கடந்த பதிவிலும் இப்பாடலைக் குறிப்பிட்டுள்ளேன். என்னவொரு அழகான கவிநயம்.. பகிர்வுக்குப் பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, நான் தங்கள் பதிவினைப் படித்திருந்தேன், பதிவினை வெளியிடும் போது நினைவில் இல்லை,, இல்லையென்றால் குறிப்பிட்டு இருப்பேன். தவறாக நினையற்க,,

      நான் வேறு பாடல் வெளியிட இருந்தேன். இது தயாராக இருந்ததால் உடன் வெளியிட வேண்டியதாகிற்று,,

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் தோழி,,

      Delete
  13. எமக்கு சங்கமும் தெரியாது..இலக்கியமும் புரியாது..தங்கள் மூலம் சங்க இலக்கியங்களை தெரிந்து புரிந்து கொள்கிறேன் நண்பரே.....

    ReplyDelete
  14. வலிப்போக்கரே இது கொஞ்சம் அதிகம் தான்,,,

    வருகைக்கு நன்றிகள்

    ReplyDelete
  15. இன்னொரு காதலி ,பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்று சொன்னதும் தலைவியின் நிலை கண்டுதானா :)

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தான் இருக்கும் பகவானே,,

      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  16. பாடலும் விளக்கமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. அரசரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல

      Delete
  17. பாடலும் விளக்கமும் அருமை சகோதரி.

    ReplyDelete