Monday, 9 November 2015

என்னளவில் தீபாவளி
தீபாவளி பண்டிகைப் படம் க்கான பட முடிவு
                                              நன்றி படம் கூகுல்
    தீபாவளி பண்டிகை ஒரு நீதிப்பண்டிகையாகத் தான் பார்க்கிறேன். யார் தவறு செய்தாலும் தண்டைனை அடைந்தே தீரவேண்டும். இது உலக நியதி என்பதை உணர்த்தும் பண்டிகை. இந்த உலகத்தையே நடுங்க வைத்து கொடுமைப் படுத்திய நரகாசுரன் இறப்பும், நீதி வரலாறைத் தானே நமக்கு கூறுகிறது.

பூமாதேவியை காப்பாற்ற, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சன் என்ற அரக்கனை அழித்தார். அப்போது பூமாதேவியும், விஷ்ணுவும் மகிழ்ந்த போது பிறந்தவன் தான் நரகாசுரன் (வேறு கேள்வியியெல்லாம் இங்கு கேட்கப்படக்கூடாது,,,,, சரியா) என்பது வரலாறு.

   அவன் தவம் இருந்து எண்ணற்ற வரங்களை இறைவனிடம் பெற்றான். வரம் கிடைத்ததால் வழி தவறினான். தேவர்களையும் நடுங்க வைத்தான். என்ன செய்கிறோம் என்று அறியாமல் கொடுமைகள் செய்தான். கொடுமைகள் அதிகரித்ததால் கதறிய மக்கள், தேவர்கள் குறைகளை, களையும் நிலை விஷ்ணுவுக்கு ஏற்பட்டது. நரகாசுரனை வதம் செய்து காப்பாற்றுவதாக மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உறுதி அறித்தார். நரகாசுரன் வதம் செய்யப்படும் வேளை வந்ததும் இறைவன் சத்தியபாமாவுடன் சேர்ந்து போருக்குச் சென்றார். போரில் பூமா தேவி அம்சமான சத்தியபாமா கைகளாலேயே நரகாசுரன் அழிந்தான்.

    பெற்ற பிள்ளையையே அழிக்க வேண்டிய நிலை சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. நீதிக்கு முன்பு மகனா முக்கியம்? கொடுமைகள் புரிபவன் மகனே ஆனாலும் அவன் அழிந்தே தீருவான் என்பதை நரகாசுரன் வதம் மூலம் உலகுக்கு இறைவன் உணர்த்தினார். போரில் தன் முன்னே நிற்பது மகன் என்று சத்தியபாமா பார்க்கவில்லை.உலகத்தையே நடுங்க வைக்கும் ராட்சசன் என்றுதான் பார்த்தாள். வில்லாள் அவனை அழித்தார் அந்த தாய், உலகில் நீதியை நிலைநாட்டினார். கொடுமைகளுக்கு விடிவு, நீதியின் வெளிச்சம். உலகோர் மகிழ்வோடு கொண்டாட இறைவனே ஆணையிட்டார். அந்த திருநாள், தீப நாள்தான் தீபாவளி என்கிறது புராணம்.

           அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

                     தீபாவளி பண்டிகைப் படம் க்கான பட முடிவு

(என்னவர் சுகமில்லையாகையால் மருத்துவமனையில் இருப்பதால்,இவ்வாண்டு தீபாவளி மருத்துவமனையில், தங்கள் பதிவுகளுக்கோ, என் பதிவு பின்னூட்டத்திற்கோ உடன் பதில் அளிக்க முடியாது உறவுகளே,,,,  ஓய்வில் பதிவுகளைப் படிக்கிறேன்.இங்கும் நம்மைப் போல் எவ்வளவு பேர்,,,, இவர்களும் தீபாவளியில் இங்கு இருக்கிறோமே என்று தானே,,,,, அனைவரும் விரைவில் நலம் பெறவேண்டும்.
விரைவில் வந்து விடுவோம், மீண்டும் வலைப்பக்கம் வரும் வரை,,, பாலமகி.)

37 comments:

  1. தங்களின் அன்புக் கணவர் விரைவில் குணம் பெறுவார்
    கவலை வேண்டாம்
    தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் சகோ,

      Delete
  2. தங்களின் கணவர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் சகோ நலமே விளையும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் சகோ,

      Delete
  3. கவலை வேண்டாம்... அவர் விரைவில் நலமடைவார்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் டிடி...

      Delete
  4. தங்கள் கணவர் விரைவில் நலம் பெறுவார்..
    கவலை வேண்டாம்..
    இறைவனை வேண்டுகிறேன்..

    நலமே விளைக..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள்.
      வேண்டுதல்கள் கிடைக்காமல் போகுமோ,,,

      Delete
  5. தங்களின் கணவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள்

      Delete
  6. தங்களின் கணவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் சகோ,

      Delete
  7. நல்ல மனங்களுக்கு நாளும் துயரில்லை
    வெல்லவினை உண்டு வருந்தாதீர் - பொல்லாத
    இன்னல் தொலையட்டும்! இன்பம் விளையட்டும்!
    கன்னல் சுவையினிக்காண் க!


    அனைத்தும் நலமாகும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      வினைத் தொலைந்தது என்று தான் இருக்கிறேன். அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள்.

      Delete
  8. உங்களவர்.சீக்கிரமே குணமாகி வருவார். அனைவரும் விரைவில் நலம் பெறுவீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் வலிப்போக்கரே,

      Delete
  9. வணக்கம் பேராசிரியரே !

    விரைவில் குணமடைந்து வீடு சேர வேண்டுகிறேன் என்றும் போல் மகிழ்வான தருணங்கள் உருவாகும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் சீராளரே

      Delete
  10. என்னாச்சு தொடர்? நட்புத் தொடர்?

    விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். தங்களுக்கும் தங்க்ள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் ஐயா,,,

      Delete
  11. வணக்கம் சகோதரி.

    என்னவாயிற்று.? தங்களவர் பூரண நலத்துடன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். கவலை வேண்டாம் சகோதரி. யாவரும் நலமே வாழ அன்புடன் இறைவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் பல.

      Delete
  12. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    கணவர் சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் ஸ்ரீ...

      Delete
  13. தாங்கள் வலைப்பக்கம் வராததன் காரணத்தை இப்போதுதான் அறிந்தேன். தங்கள் கணவர் பூரண சுகம்பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் ஐயா,,,

      Delete
  14. தங்களின் கணவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் தளீர்,,,,

      Delete
  15. விரைவில் குணமடைய அன்னை
    மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் ஐயா

      Delete
  16. நல்லதை நினையும் நெஞ்சே
    தொல் வினை பறக்கும் பஞ்சே
    அல்லல் நீங்கி அன்பர் வருவார்
    வல்ல அன்பினை என்றும் தருவார்.

    வாழ்த்துகள் வளத்தினை வளர்க்க
    நலத்தினை தரட்டும்.

    இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரி
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் புதுவையாரே

      Delete
  17. தங்கள் கணவர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

    தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,
      அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் சகோ,

      Delete
  18. வணக்கம்,
    அவர் குணமடைந்து, நலமுடன் இருக்கிறார்,,, இப்போ பிரச்சனை ஒன்றும் இல்லை. தங்கள் அன்பிற்கு நன்றிகள் சகோ,

    ReplyDelete
  19. பேராசிரியர் அவர்கட்க்கு,

    தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    அவர் பரிபூரண சுகம் அடையவும் உங்கள் இல்லத்தில் குதூகலம் நிறைந்து வழியவும் என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அரசே,

      தங்களின் மனமார்ந்த பிராத்தனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அரசே.

      Delete