Wednesday, 4 November 2015

பெண்களின் நட்பு
கல்லூரி மாணவிகள் படம் க்கான பட முடிவு
   நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்களின் சந்திப்பு என்பது ஏதோ ஒரு திருமணம், காதுகுத்து, விழாக்கள் இப்படித்தானே, (நகைக் கடை, புடவைக்கடை என்று சொல்லாதீர்கள்) நானும் ஒரு திருமணத்தில் தான் அவளைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள், நாட்கள் கூட அல்ல மாதங்கள்,,,,,, அல்ல அல்ல வருடங்கள், ஆம் 10 ஆண்டுகள் இருக்கலாம்,,,,, என்னை அடையாளம் கண்டு என்னருகில் வந்து நலமா? என்றாள்,,,, ம்ம் என்றேன் சிரிப்புடன். 

   எனக்கு ஒரு பழக்கம் உண்டுங்க. மறந்து இருந்தாலும் அப்படியே நினைவில் இருப்பது போல் பேசிச்சமாளித்து விடுவேன். யார் என்று சொல் பார்க்கலாம் என்றாள் விடாப்பிடியாக,,, நானும் என்னப்பா இது உன்னை மறப்பேனா?????? என்றேன். வேற என்ன சொல்ல முடியும், ஆனால்,
அவள்,  
ஆமா உன்னைத் தெரியாதா?
நகமும் சதையும் போல்,,,,,,,
ஈர் உடல் ஓர் உயிர் போல்,,,,,,,,
இன்னும் என்னெல்லாமோ சொல்லிக்கொண்டே போனாள்,,
எனக்கு விளங்கிவிட்டது இவள் எங்கு வருகிறாள் என்று,,, 

  இவள் யார் என்பதில் இருந்து தப்பித்த மகிழ்ச்சி மறைந்து, அவள் முகத்தைப் பார்க்கும் தைரியம் அற்றுத் தலைகவிழ்ந்து அமர்ந்தேன். சிறிது நேர அமைதிக்குப் பின் நானே தொடர்ந்தேன். உன்னவர் என்ன செய்கிறார், குழந்தைகள் எத்தனை? என்ன படிக்கிறார்கள் என்று கேட்டுப் பதில் பெற்றேன். அவளும் என்னை விசாரித்தாள். ஆனாலும் அவளின் பார்வை என் மனதைப் படித்தவாறு இருந்தது. உன்னால் எப்படி  இப்படி இருக்க முடிகிறது. நீயா இது, எனக்கு ஆச்சிரியமா இருக்கு, உங்களைப் பார்த்து,,,,,,
என்று பேசிக்கொண்டே போனாள்,,,,,,,

  சரி சரி உன் கோபத்தை விட்டு விட்டு அவளிடம் பேசப் பாரு,, எப்படி இருந்தவர்கள் நீங்கள்,,
கல்லூரி காலத்தில் நம் வகுப்புப் பேராசிரியர்களே உங்களின் நட்பினைச் சிலாகித்தது மறந்து போனதா? என்று பழய சம்பவங்களைப் பேசியபடியே போனாள்,
என்ன தான் பிரச்சனை????
ஏன் இருவரும் பேசாமல் இருக்கிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டாள், பதில் பேசாமல் அவளையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். 

    ஆம் எங்களுக்குள் என்ன பிரச்சினை,,, எதுவும் இல்லையே, பிறகு ஏன் தொடர்பில்லாமல், அதற்குள் அவளின் கணவர் வந்துவிட, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் பழங்கதைகளை,,, சரி நாங்கள் கிளம்பனும் வருகிறோம் என்று அவர்கள் கிளம்பிவிட்டார்கள்,,,

    என் மனதை எழுப்பி விட்டு விட்டு. நான் இருக்கும் இடம் மறந்து போனது, பக்கத்தில் இருப்பவர்கள் மறந்து மறைந்துப் போனார்கள், என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஆம் அவள் சொல்வது உண்மைதானே, எப்படியெல்லாம் இருந்தோம். நீங்கள் ஒருவரையே இருவரும் திருமணம் செய்துகொள்வீர்களா? என்று உறவுகளே கிண்டல் பேசும் அளவிற்கு அல்லவா இருந்தோம். இன்று,,,, 
எத்தனை ஆண்டுகள் நட்பு. மனம் பலவாறு அவளை நினைத்து அசைப்போட்டது.

பெண்களின் நட்பு என்பது திருமணம் வரைதானே,,

    அவளை நான் முதன் முதலில் சந்தித்தது ஒரு பேச்சுப் போட்டியில் தான். என் துறைச் சார்ந்தவள் அல்ல, ஆனால் தமிழ்ப் பேச்சு போட்டி. யாரோ மகி யாமே அவர்கள் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டால், அவர்கள் தான் முதல் பரிசாமே என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். பக்கத்தில் இருப்பவர்களிடம் நான் தான் என்று சொல்ல வேண்டாம் என்று சைகையில் சொல்லிவிட்டு அவர்களையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர்கள் இன்னும் வரவில்லை என்று சொல்லி சமாளித்து, என் துறைமாணவிகளும் அவர்களுடன் சேர்ந்துப் பேசிக்கொண்டு இருந்தோம். போட்டி ஆரம்பித்தது. அவர் முறை வந்தது,,, சரி என்ன தான் இவர் பேசப் போகிறார் என்று மிக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்,, 

    இந்த பேச்சு தான் என்னை அவருடன் நட்பு பாராட்ட வைத்தது. இயற்கை வருணனை, சங்க இலக்கியப் பாடல், ஆஹா என்ன ஒர் அழகான விளக்கம், அருமையான சொற்பிரயோகம், அழகிய அபிநயம், சங்க இலக்கியப் அப்பாடல் எனக்கு அன்று தான் தெரிவது போல் இருந்தது. ஒத்த ரசனையுடையவர்களைப் பார்க்கும் போது மனம் அவர்கள் பால் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது மெய்தானே,,, அப்படித்தான் இருந்தது என நிலை, கைத்தட்டல் ஓசை கேட்டுச் சுயநினைவு பெற்றேன். என் முறைவந்தது எனக்குப் பேச ஆர்வம் இல்லை. பேசவும் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசிவரை நான் பேசவேயில்லை. போட்டி முடிந்து வெற்றியாளர்களை அறிவித்தார்கள். 

  தோழிகள் உனக்குத் தான் முதல்பரிசு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அவர் தமக்கு இரண்டாம் மூன்றாம் இடமாவது கிடைக்கும். இல்ல அதுவும் இல்லாமலும் போகலாம் என்று தன் தோழியர்களிடம் பேசிக்கொள்வதும்,,,,,, இடையிடையே என்னைக் கேட்பதும் என் செவிகளில் விழந்தபடி இருந்தது. 

   போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் இடம் அவர் பெயர் இல்லை, இரண்டாம் இடம் அவர் பெயர் இல்லை, முதல் இடம், பெயர் அறிவித்தார்கள், அவர் பெயர் தான் மகிழ்ச்சியில் இருக்கும் இடம் மறந்து கைத்தட்டினேன். அனைவரின் கைத்தட்டலும் நின்றபின்னும் என் கைத்தட்டல் தொடர்ந்ததால் எழுந்த சத்தத்தில் மகேசுவரி ஏன் நீ பேசல என்று பேராசிரியர் அழைக்கவும், நான் பதறிப்போனேன். அய்யையோ, நாம் இருப்பது அவருக்கு தெரிந்து போச்சே என்று நினைத்து அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்க்க,,,, எது அந்த சங்க இலக்கியப் பாடல், எங்களை நட்பாக்க வைத்தப்பாடல், உறவுகளுக்குள் உறவாட வைத்தப் பாடல், வசந்தகால வாழ்க்கையாக்கியப் பாடல் நாளைச் சொல்கிறேன்.


46 comments:

  1. நல்ல நட்பில் ஏன் இடைவெளி? தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் சூழல் தான்,,,,,
      வருகைக்கு நன்றி ஸ்ரீ,,,,,,

      Delete

  2. நல்ல நட்புக்குள் என்னாச்சு........நல்ல பதிவு சொல்லி சென்ற விதம் மிக அருமை உங்களின் எழுத்தை பார்க்கும் போது எனக்கு வெட்கமாக இருக்கிறது எப்படி இவ்வளவு அழகாக எழுதுகின்றீர்கள் என்பதை நினைத்துதான் வார்த்தை அளவாக அதே சமயத்தில் அழமாகவும் மனதை தழுவி செல்லும் விதமாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றிகள் மதுரைக்காரரே,
      வருகைக்கும்.

      Delete
  3. ஹஹஹஹ் நாங்களும் இது போன்று சமாளித்தது உண்டு....சில சயமங்களில் மனம் திறந்து சொல்லிவிடுவது உண்டு...யாரென்று சொல்லி விடுங்களேன் மன்னிக்கவும் என்று சொல்லி...

    ஆஹா! அருமையான நட்பின் அனுபவ விவரணம்..காத்திருக்கின்றோம் அடுத்து வரும் அந்தப் பாடல் அறிய...உங்களைத் தோழமை கொள்ள வைத்த அந்தப்பாடல்....

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் உண்டு,
      வருகைக்க்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  4. அது சரி கேட்க மறந்துவிட்டோம்...ஏன் நட்பில் என்ன ஆச்சு? ஏன் பிரிவினை அப்படிப்பட்ட நட்பில்?!!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்,,, தங்கள் மீள்வருகைக்கு நன்றி.

      Delete
  5. அருமையான நட்பு! தொடர்கிறேன்! இடைவெளி எதற்காகவென்று நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  6. வணக்கம் பேராசிரியரே!

    பசுமை நிறைந்த நினைவுகள்தான்.

    ஆறொலிக்கும் படித்துறைகளின் அருகே உள்ள புராதன கட்டிடங்கள் இதுபோல் எத்தனை எத்தனையோ தோழமையின் இனிய நினைவுகளை நினைவு கூர்ந்து சலசலத்தோடும் வெள்ளத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றன.
    இரவு பகல் பாராமல்.

    நாம் தான் மனிதர்களாகிப் போனோம்.
    காலங்களாலும் சூழல்களாலும் அந்நியமாகிப் போய்.....

    நாளைக்காய்க் காத்திருக்கிறேன்.


    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,
      ஆம்,,, சலசலத்தோடும் நீரோட்டத்தில் எங்கள் சலசலப்பும் சேர்ந்தே போனதுண்டு,,
      தாங்கள் சொன்னது போல் இரவு பகல் பாராமல் என்ன தான் பேசினோம் அன்று, என்று இன்று நினைத்தாலும் சிரிப்பு சிலிர்ப்பு,,,,,,
      தங்கள் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  7. அருமை!.. அருமை! மிக இனிமையான நட்பெனத் தெரிகிறது.
    சமாளிப்புக் கண்டு சிரித்தேவிட்டேன்!

    தொடருங்கள் சகோதரி!
    ஆவலுடன் நானும்...

    ReplyDelete
    Replies
    1. சிரித்தீர்களாம்மா,,,,, மகிழ்ச்சி,
      வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றிமா

      Delete
  8. Replies
    1. தொடர்வதற்கு நன்றி டிடி சார்.

      Delete
  9. நட்பு மிக அருமை. தொடர்கிறேன். எனது வலைப்பூ பக்கம் உங்களை காணோமே நலம் தானே.

    ReplyDelete
    Replies
    1. வருகிறேனம்மா, தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  10. நீண்ட இடைவெளி விட்டு சந்திக்கும் பொழுது பேசுவதற்க்கே நேரமாகும் சகோ பழைய நினைவுகள் நினைத்துப்பார்ப்பது நன்று தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  11. இழையோடும் நட்பின் சாரல் இனிக்கவைக்கும் நினைவுகள் அருமை பேராசிரியரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சீராளரே,

      Delete
  12. அந்தப் பாடலைக் கேட்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  13. காத்திருக்கிறேன் சகோதரியாரே
    ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  14. நினைவலைகளில் மூழ்கடித்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளீர்,

      Delete
  15. நல்ல நட்பு என்றென்றும் பசுமையானது..

    இனிய பதிவு..

    ReplyDelete
    Replies
    1. ஆம்,,,,,,, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  16. பெண்களின் நட்பு பல நேரங்களில் இப்படிதான் முடிகிறது. அருமையான பதிவு! அழகான நடை!

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள், ஓஓ தாங்கள் பத்திரிக்கையாளரா,,,,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  17. அருமையான பகிர்வு...
    நட்பு பெரும்பாலும் திருமணத்திற்குப் பின் ஏனோ மாறித்தான் போகிறது...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே சகோ,
      வருகைக்கு நன்றி

      Delete
  18. சிறப்பான பகிர்வு... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி சகோ,

      Delete
  19. பெண்களின் நட்பு என்பது திருமணம் வரைதான் இருக்குமா...
    ,..ஏன்??? ஆண் நட்பு அப்படி இருப்பதில்லையா...??? வசந்தகால வாழ்க்கைப் பாடலுடன் இதையும் சொல்வீர்கள் என்று எண்ணுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலிப்போக்கரே,
      தங்களுக்கு தெரியாது தான் ,, திருமணத்திற்கு பின் பெண் தன் குடும்பம் மட்டும் தான் என்று வாழ முற்பட வேண்டுமாம். அப்ப தான் அவள் நல்ல பெண்,,,
      வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  20. "மறந்து இருந்தாலும் அப்படியே நினைவில் இருப்பது போல் பேசிச்சமாளித்து விடுவேன்."
    உங்களுக்குத்தான் எத்தனை வெள்ளை மனசு, இப்படி போட்டு உடைத்து விட்டீர்களே,
    உங்க நல்ல மனசுக்கு நட்புகள் தானாக வந்து சேரும் அவை தேனாக இனிமை சேர்க்கும்.

    வாழ்த்துக்கள் அம்மா.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அரசே,
      ஆமா இல்ல சொல்லி,,,,,,, போட்டு உடைத்தேனா,,,,, அவளும் அப்படித் தான் சொல்வாள் எப்பவாவது மறந்து உளறிக் கொட்டாதே என்று,,,,, நனும் ம்ம்ம் என்று சொல்லி உளறிவிடுவேன்.
      தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி.

      Delete
  21. ஏம்மா ...... இப்படி பன்றீங்கலேம்மா ....

    கோ

    ReplyDelete
  22. சிலசமயம் நானும் இதை அனுபவித்தது உண்டு.காரணம் காணாஅவலாக
    உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,

      நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வரவு,

      நல்வரவு,,,,,,
      ஆம்,,,,, வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  23. கில்லர்ஜியின் கடவுளைக்கண்டேன் பதிவில் தோழி கீதா எனைத்தொடுக்க
    நான் தங்களைத் தொடுத்துள்ளேன் எனதுவலைப்பூவில்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நான் மாட்டினேனா,,,,,,

      அவரைப் பார்த்தால் கேட்கிறேன் சகோ,

      தங்கள் நினைவில் நானு எனும் போது மகிழ்ச்சி, நன்றி சகோ,

      Delete