யாதுமாகி நின்றாய்,,,
பெண் என்பவள் பூப் பொன்றவள் என்று பெருமைப் படும் நாம், அவளை இப்படியெல்லாம் ,,, பொறுமையாக, பொறுப்பாக, அமைதியாக, அன்பாக, அடங்கி நடப்பவளாக இருக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் ஆசைகளும்.
ஆனால் அவளுள்ளும் ஆசைகள் இருக்கும் என்பதை நாம் ஏனோ அறிவதில்லை. இல்லை உணர்வதும் இல்லை.
எனக்கு தெரிந்த ஒருவர் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாகி, கணவரின் பாராமுகத்தால் ,,,,,,,,,, சரி சரி இந்நேரத்தில் அந்த சோக கதை வேண்டாம். (இக் கதையை பின்னொரு நாள் அவசியம் சொல்கிறேன்.)
பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் சமுத்திரம் என்பதும் நாம் அறிந்ததே,
சரி சரி ஏன் இவ்வளவு சுத்தி வலைக்கிறீங்க, இப்ப என்ன சொல்ல வறீங்க, என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
காயங்களும் வடுக்களும் ஏராளம்
பெண்ணுக்குச் சுதந்திரம்
பெண்ணுக்கு விடுதலை
பேச்சளவில் தான்,,,,,
தன் வாழ்வில், இவ்வளவு தான் துன்பம் என்றில்லை, அவ்வளவு இன்னல்களையும் கடந்து, தன் பாதையில் ஏற்பட்ட, தடைக்கற்களைப் படிகற்களாய் மாற்றி, இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் முதல்வராக, ( எங்களின் செயலாளர் அய்யா அவர்களுக்கு நன்றி சொல்வது,,, கடமை, நன்றி என்ற வார்த்தை மிகக் குறைவே, அவரின் நல்மனதால் கிடைத்த பணியே இது.) தன் வாழ்க்கை எனும் பாடத்தை மாணவர்களுக்கு முன்மாதிரியாக சொல்லிக்கொடுக்கும் சிறந்த முதல்வராக இருக்கும் என் போற்றுதலுக்குரிய,,,,,
முதல்வர் இவர்,,,,
தன் இரு பெண் பிள்ளைகளையும் நன்முறையில் வளர்த்து, சமூகம் மதிக்கும் ஒழுக்கமானவர்களாக வளர்த்தது இவரின் தனிமை வாழ்க்கையின் சாதனையே,,,
ஒரு பெண் பொறியியல் துறையில் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.
சின்ன பெண் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்,,,,,,,,,,,
இன்று தன் கணவரையும் தன் குழந்தைப் போலவே பேணி வருகிறார்.(வாழும் வயதில் வாழ்க்கையைத் தொலைத்த இவர்,,,,,,,,,)
பெண்
எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள்.
பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் எனும் வரிகள் இவருக்கு பொருத்தமாய்,,,
தன் மகள், தன் ஊதியத்தில் ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொண்டு, இனிப்புகளுடன் இரவு 12,00 மணி போல் தன்னை எழுப்பி வாழ்த்துச் சொல்லி தன் தந்தை மற்றும் உறவுகளுடன் சேர்ந்து இனிப்பு கொடுத்து மகிழ்ந்ததைச் சொல்லும் போது அவரின் கண்கள் பனித்ததை உணர முடிந்தது,,,,
நான் பெண்ணாய் பிறந்ததின் பயனடைந்தேன் என்று,
தன் துனிச்சல் எல்லாம் மறந்து சிறு குழந்தையாகிப் போனார் மகிழ்ச்சியில்,
மனம் துவளும் நேரத்தில் தோளோடு அணைத்து ஆறுதல் சொன்ன இவரின் அன்புத் தோழியிவர். 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நட்பு இவர்களுடையது. ( ஏற்கனவே என் திருச்சி பதிவில் இவரைப் பற்றி சொல்லியுள்ளேனே அவர் தான். திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.).
பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளடைய கண்களில் இருக்கிறது.
இன்று இவரின் 50 வது பிறந்தநாள்,,,
இனி என்றும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தொடர வாழ்த்துகிறோம்.
ஏனோ எனக்கு இப்படியாக என் வாழ்த்தைச் சொல்லத் தோன்றியது,,,,
யாதுமாகி நின்றாய் எனும் பாடல் வரிகள் எனக்கு இவராய்த் தெரிகிறது.
தன் பிள்ளைகளுக்கு மட்டும் யாதும் ஆகியவர் இல்லை, எனக்கும் தான்.
வாழ்த்துக்களம்மா,,,,
உங்கள் வாழ்த்துக்களும் அவருக்காகட்டுமே என் வலை உறவுகளே,
நன்றி.
அன்பின் வழி வாழ்க!..
ReplyDeleteஎன்றென்றும் நலமுடன் திகழ நல்வாழ்த்துகள்!..
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
Deleteவணக்கம்
ReplyDeleteவாழ்க வளமுடன்... சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி சகோ
Deleteதங்களது தோழியர்க்கு எமது வாழ்த்துகளும் தங்களுக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteதோழிகள் அல்ல சகோ, தங்களுக்கும் வாழ்த்துக்கள், வருகைக்கு நன்றி சகோ,
Deleteபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
ReplyDeleteபலகோடி நூறாயிரம் வாழ்க...
நன்றி டிடி சார்.
Deleteசாதனை செய்யும் பெண்கள் பலர் இருக்கிற்ர்ர்கள் நமக்குத் தெரிந்தவர்களிடம் மதிப்புக் கூடும் சாதனைப் பெண்மணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா,
Deleteநலமுடன் வாழ வாழ்த்துக்கள் !
ReplyDeleteவருகைக்கு நன்றிமா
Deleteமிகப்பெரிய சாதனை தான். மேலும் மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தொடர வாழ்த்துகிறோம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா
Deleteஉங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் .
ReplyDeleteஇறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ,அவர் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தையும் கொடுக்கட்டும்.
இனிய பிறந்ததநாள் வாழ்த்துக்கள்.
வாருங்கள் சகோ, என்ன நீண்ட நாட்களாக காணோம்,,
Deleteவாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி, தொடருங்கள்.
எங்கள் நல் வாழ்த்துகளும் சொல்லி விடுங்கள்.
ReplyDeleteசொல்லிட்டேன் மா வருகைக்கு நன்றிமா
Deleteஇனிய பிறந்ததநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி மதுரைக் காரரே
Deleteசாதனைப் பெண்மணியின் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும். வாழ்க பல்லாண்டு.
ReplyDeleteநன்றி ஸ்ரீ
Deleteசாதனை படைத்தவரைப் பற்றி, பதிவுலகில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் நன்று. அவருக்கு வாழ்த்துகள். தங்களுக்கு நன்றி.
ReplyDeleteதங்கள் வாக்கிற்கு நன்றி ஐயா,
Deleteவருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
தங்களின் போற்றுதலுக்குரிய, முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....நன்றி!
ReplyDeleteநன்றி வலிப்போக்கரே,,
Deleteஆகா
ReplyDeleteஐம்பதாவது பிறந்த நாளா
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எனது வாழ்த்துக்களையும்
எடுத்துச் சென்று
வழங்கிவிடுங்கள்
சகோதரியாரே
திருமதி ராஜேஸ்வரி அவர்கள். மேலும் பல சாதனைகள் படைத்து மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteதாமதமான இனிய பிறந்த நாள்வாழ்த்துகள்! அருமை! அவர்கள் பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்! ...
ReplyDeleteஎங்களுடைய இனிய வாழ்த்துகளும் தோழி.
ReplyDeleteவணக்கம் பேராசிரியரே !
ReplyDeleteஒரு தாயின் மாண்பு எந்தளவு சிறப்புருகின்றது என்பதை தங்கள் பதிவும் வெளிக்காட்டி நிற்கின்றன எண்கள் வாழ்த்தும் சேரட்டும் அவர்களுக்கு வாழ்க வளமுடன் !
பேராசிரியரே,
ReplyDeleteசாதனை படைத்திடும் பெண்களோடு உங்களுக்கு இருக்கும் உறவுகள், நீங்களும் சாதனைகள் படைக்க உதவுவது அதி நிச்சயம்.
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்,
கோ