Saturday, 23 April 2016

மனதோடு ,,,

   மனதோடு ,,,
பூக்கள் க்கான பட முடிவு

    தொடர்பதிவு ,, எனக்கு புதுசு,,  புதுகை அய்யா திரு முத்துநிலவன் அவர்கள் ஆரம்பித்த இந்த தொடர் ஓட்டத்தில் என் தளத்தினை அறிமுகப்படுத்தியவர் நம்ம  தேவகோட்டை கில்லர் தான், அன்றே நானும் இத் தொடர்பதிவினை எழுதனும் என்று நினைத்தேன். பல வேலைகளால் எழுத இயலவில்லை,, ஆனால் இன்று தம் பதிவினில் என்னை, மனம் கவர்ந்த பதிவர்கள் எனும் தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளார், http://unjal.blogspot.com/  ஞா.கலையரசி அவர்கள்,,, நன்றியுடன்,, 
இதோஅவர்களுக்காக 

  நான் விரும்பும் பதிவர்கள் என் தளத்தின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும்,,,, 

கரந்தைஜெயக்குமார்
    http://karanthaijayakumar.blogspot.com/ அவர்கள் ஆரம்பித்து தான் என் வலைப்பூ,, இவரின் எழுத்துநடை எனக்கு வரலாற்று நாவல் வாசித்த உணர்வை ஏற்படுத்தும்,, நல்ல நடை,,பயணங்கள் பற்றிய பதிவுகள் மிக அருமை, அதனினும் இவரின் நூல் விமர்சனம் வெகு அருமை, எந்நிலையிலும் மாறா புன்னகைக்கு சொந்தக்காரர்,,பதிவுலகில் எனக்கு முகம் தெரிந்த ஒரே மனிதர்,,,

தஞ்சையம்பதி
    நான் வலைதளம் ஆரம்பித்த தொடக்க நிலையில், அனைவரும் Followers List வைங்க வைங்க என்று சொன்னார்கள்,, ( நாம என்ன வைச்சிக்கிட்டா, வைக்காம வஞ்சனம் பன்னுறோம்,, ஹா ஹா ஹா,,,) நான் கேட்டுக் கொண்டதால் Followers List தொடர்பவர்கள் எப்படி வைப்பது என்று சொல்லிக் கொடுத்தவர்,, நம் தஞ்சையம்பதி http://thanjavur14.blogspot.in அவர்கள்.  அவருக்கு நன்றி இப்போ தான்,,, இங்கே தான்,,, நன்றி சொல்கிறேன். தங்கள் உதவிக்கு நன்றிகள் பல. எங்கள் ஊர்காரர் தான். இம்முறை இங்கு வந்தும் எங்களைச் சந்திக்க வந்த நேரத்தில் நான்  இல்லை. ஆனால் தொலைப் பேசியில் பேசியது மகிழ்வான நிமிடங்கள். ஆன்மீக எழுத்தில் நாட்டம் ஏற்பட்டதும் இவரின் பதிவுகளை வாசித்த பிறகு தான். எல்லா நிகழ்வுகள் பற்றியும் இவர் தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
  
கோயில் பிள்ளை
   வணக்கம் அரசே, என நான் விளிக்கும் திரு http://koilpillaiyin.blogspot.in/   கோயில்பிள்ளை அவர்கள் என் பதிவுகள் அனைத்திற்கும் வெளிப்படையான பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்தக் கூடியவர்.இவர் பதிவுகளின் தலைப்புகள் அனைத்தும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாத கிண்டல் இல்லாத எழுத்து, நாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழய மரபிற்கு சொந்தக்காரர்,,  நான் காப்பியங்கள் குறித்து எழுத வேண்டும் என்றார். இன்னும் எழுதாமல் இருக்கிறேன். விரைவில் எழுதனும், இவர் இப்பவும் குழந்தையாம்முங்கோ, உப்பிட்ட இங்கிலீஷ் மண்ணிற்கு பிறகு பதிவுகள் இவர் தளத்தில் காணோம்,,                        
இப்போ நீ எங்கேப்பா?  என்ற அவரின் பதிவுகள் படியே,, 
 இப்போ நீங்கள் எங்கேப்பா?????????????

 தேவகோட்டை கில்லர்ஜி
        இவர் எழுதாத துறைகளே இல்லை, பாராளுமன்றத்தின் மீது தனியாத தாகம் போலும்,,  நல்ல ஆசைதான்,, நியாம் தான்,  என் பதிவுகள் அனைத்திலும் இவரின் பின்னூட்டம் இருக்கும். பதிவு வெளியிட்டவுடன் பின்னூட்டம் வரும்,, எனக்கு மட்டும் அல்ல, பதிவுலகில் பலருக்கும் இவர் இப்படித்தான். சிவசம்போ சொன்னா சரியாகத் தான்  இருக்கும். 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டியவர்,, இந்த சமூகத்தின் மீது கவலைக் கொண்டதால்,  கோபம் கொண்டு, கொட்டும் எழுத்துக்கள் இவர் தளத்தில் ஏராளம்.

உண்மையானவன்
   http://unmaiyanavan.blogspot.in/ இவர் தொடக்கத்தில் என் பதிவுகளுக்கு உற்சாகம் தரும் பின்னூட்டம் பல அளித்தவர்., இப்போ வீட்டிற்கு புதியவர் வருகையால் இவர் கொஞ்சம் பிஸிபோல,,, ஓவியாவின் ஆசையை நிறைவேற்றியதால் ஏற்பட்ட மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லைப் போலும்,,,, அவர் வருகையை எதிர்பார்த்து சிட்னியில் நாரதர் வெயிட்டிங்,,,,,

ஊமைக்கனவுகள்
  என் துறைச்சார்ந்த, இல்ல இல்ல இவர் துறை ஆங்கிலமாம். ஆனால் தமிழ் தான் இவரின் மூச்சு பேச்சு எல்லாம். தமிழ் ஆர்வலர், நான் ஆசான் என அன்புடன் அழைக்கும் திரு http://oomaikkanavugal.blogspot.com தான். இவரின் எழுத்துக்களைக் கண்டு நான் வியந்தது உண்டு. என் கல்லூரிக் காலத்தில் பேராசிரியர்கள் தரும் விளக்கத்திற்கு நான் பட்டிமன்றம் நடாத்தியதுண்டு. இவர் எழுத்துக்களை நான் பல முறை வாசித்து வாசித்து அதனுள்ளே சென்று என்னை மறந்த பொழுதுகள் ஏராளம்,,. பழந்தமிழ் இலக்கியங்கள் இவரின் எழுத்தில் புத்தொளிப்பெறும், கவிதையில் வார்த்தைகள் இவர் கரங்களில் தவழ ஏங்கித் தவிக்கும், சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு, இவரின் சொல்லுக்கும் பொருள் உண்டு,, வலிமிகுந்ததாலா இல்லை வேலைமிகுந்ததாலா அவரை இன்னும் இங்கு காணவில்லை. பதிவுலகில்,,, உங்களை அனைரும் எதிர்பார்க்கிறோம் ஐயா, தொடர்ந்து எழுதுங்கள்,,

வலிப்போக்கன்
  சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளைப் பதிவிடும் தமிழ்பதிவராம். ஆம் அவரின் பதிவுகள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும். சமூக அவலங்கள் கண்டு மனம் கொதிக்கும் சமூக ஆர்வலர் இவர். சாதிய கொடுமைக்கண்டு தம் எழுத்துக்கள் வழி சீற்றம் காட்டுவார். இதனைப் படித்துப்பாருங்கள்,,, 
சாதி பெருமை பேசிய நடிகன்........... 

அவர்கள் உண்மைகள்

  உண்மைகளை மட்டுமே பேசும் இவர், தன்னைப் பார்த்தார்கள் என்ற உண்மையை மட்டும் ஒத்துக்கொள்ள மாட்டார்,, பூரிக்கட்டை அடி இவர் மண்டையைக் கலக்கிவிட்டிருக்குமோ,,, அரசியல் கட்சிகளை விளாசுவதில் இருந்து தெரிந்துக்கொள்ளுங்கள் இவர் இங்குள்ள ஆள் இல்லை என்று,,   பொழுதுபோக்கு அவ்வளவு தான் வேறு எதையும் எதிர்பார்த்து இவர் எழுதலையாம்முங்கோ,, நீங்க யாரும் பூரிக்கட்டை அனுப்பிடாதீங்கோ,, 
http://avargal-unmaigal.blogspot.com/2016/04/blog-post.html

ஜோக்காளி

   தமிழ்மணம் வரிசையில் முதல் இடம்,, நம்மை சிரிக்க மட்டும் அல்லாமல் சிந்திக்கவும்  வைக்கும் பதிவுகள். பூருசனைத் தாக்க மட்டுமா பூரிக்கட்டை,, பதிவு படித்து குழப்பம் வேண்டாம்,, அவரு இல்லங்க இவரு,, சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா,,,,,  சப்பாத்தி போடுமா? சாப்ட்வேர்,,, படித்துப் பாருங்கள்,,,

திண்டுக்கல் தனபாலன்

    
 தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் எனும் வரிகள்,,,, அனைவ்ருக்கும், கணிணியில் அனைத்து தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி தருபவர். தற்போது பிற பணிகள் இவரைச் சூழ்ந்து இருப்பதால் வலைக்குள் வரும் வருகைக் குறைந்துள்ளது போலும்,,,, திருக்குறள் இவர் விரும்பும் இலக்கியம் போலும். அதனோடு தொடர்புபடுத்திய குறள் வரிகள் இவர் பதிவுகளில் ஏராளம்.



                     பூக்கள் க்கான பட முடிவு
                             விரும்பும் பதிவர்கள் இன்னும்,,,,
படங்கள் இணையத்தில் இருந்து,,,,                                                  

26 comments:

  1. வருக.. வருக.. தங்களுக்கு நல்வரவு!..

    இத்தனை நாளும் தங்களுடைய பதிவுகள் எதையும் காணாததால் மனதிற்கு மிகவும் வருத்தம்..

    எப்படியோ - சித்திரை நிலவைப் போல முத்திரை பதித்திட மீண்டும் பதிவுகள் தொடங்கியதில் மகிழ்ச்சி..

    அதிலும் மனதோடு மனதாக என்று எனது தளத்தையும் குறித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    இனியதொரு தொகுப்பு.. அன்பின் நல்வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை நோக்க மகிழ்ச்சியே, தங்கள் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
  2. மனம் கவர்ந்த பதிவர்கள் அருமை சகோ...
    நான் காதல் கவிதைகள் விரும்பி படிப்பவன்...
    A.P.Dinesh Kumar தளத்தில்
    எனது முதல் காதல் கவிதையை
    வெளியிடப்பட்டது....
    அத்தளத்தின் மூலமாய் அறிமுகம்
    ஆனவர்தான் திண்டுக்கல் தனபாலன்...
    திண்டுக்கல் தனபாலன்
    பயணங்கள் பற்றிய பதிவு
    வெளியிட்டார்...
    அங்கே அறிமுகமானவர் தான்
    கில்லர்ஜி...
    பின்பு நான் தொடரும் தங்கள் தளம்,
    மற்றும் பிற தளங்கள்...
    தாங்கள் இதோ அறிமுகம் செய்த
    தளங்கள் எல்லாம் என்னையும் கவர்ந்தன....
    வாழ்த்துகள் சகோ தொடர்ந்து
    அறிமுகம் தாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் இப்படித் தான் அறிமுகம் அனைவருக்கும் இருக்கும் போல,,,, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,,

      Delete
  3. அடடே வாங்க பேராசிரியரே... வணக்கம் அனைவரும் நான் தொடரும் நல்ல பதிவர்களே... இந்த மலைகளின் நடுவே மடுவான என்னையும் நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கு 1000 நன்றிகள்

    இருப்பினும் மனதுக்கு வருத்தமானது என்னவென்றால் எனது பெயரில் எழுத்தைக் குறைத்து எழுதியதே.... இதனால் தெய்வகுற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றேன் மீண்டும் நன்றி கூறி.....
    கில்லர்ஜி

    ஆஹா அன்பின் ஜி முந்திக் கொண்டாரே..... என்னைப்பற்றி குறிப்பிட்டதை தவறாக்கி விட்டாரே....

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் மடுவா,, இது நல்லா இருக்கே,,

      ஆம் சகோ தங்கள் பெயருக்கு முன்னால் சில வார்த்தைகள் எழுதியிருந்தேன், அதனை நீக்கியதால் பெயர் மட்டும்,, ஆமா ஜி விட்டுட்டேன்,, தெய்வக்குற்றத்திற்கு பரிகாரம் செய்தா போச்சு ஒரு 1001 தேங்காய்,, 1001 பணம்,,இன்னும்,,, பரிகாரம் முக்கியம் சகோ,,
      ஹாஹா நன்றிகள் சகோ தங்கள் வருகைக்கு,,

      Delete
  4. நண்பர்களின் தளங்களைப் பற்றிப் பகிர்ந்த விதம் நன்று. கோயில்பிள்ளை தளத்தினை இதுவரை படித்ததில்லை. இன்று தங்கள் பதிவின்மூலமாக அறிமுகமாகி, படித்தேன். நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் ஒரு தளத்தினை அளிமுகப்படுத்த முடியும் என்பது குறித்து மகிழ்ச்சியே. தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் ஐயா,,,

      Delete
  5. ஆஹா! தொடர் துவங்கியாயிற்றா? என் வேண்டுகோளை ஏற்றுத் தொடர் பதிவைத் துவங்கியதற்கு நன்றி மகி! கோயில்பிள்ளை & உண்மையானவன் இரு தளங்களும் எனக்குப் புதியவை. மற்றவர்கள் எனக்கு அறிமுகமானவர்களே. தொடருங்கள் மகி! தொடர்கிறேன்! மீண்டும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு தொடர் எழுத அழைத்தமைக்கு நன்றி சகோ,, என் தொடரால் தங்களுக்கு புதியவர்களை அறிமுகப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியே,, நன்றி,,, தங்கள் வருகைக்கு நன்றிகள்மா,,

      Delete
  6. வணக்கம் பேராசிரியரே !


    தோரணம் கட்டிக் கோவில்
    .....தொழுதிடும் மாந்தர் வாழ்வில்
    வாரணம் கொடுத்து மாயோன்
    ......வழித்துணை ஆதல் போல
    ஆரணம் கற்றே நாளும்
    ......அடுத்தவர் நன்மை வேண்டும்
    பூரணம் கொண்டார் போற்றிப்
    .......புகழ்மழை சொரிந்தீர் நன்றே !

    மிகவும் அருமையான அறிமுகங்கள் எனக்கும் பிடித்த பதிவர்கள்
    தொடர வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

    ReplyDelete
    Replies
    1. பாவலரே, பா மாலைத் தொடுத்து தோரணம் கட்டிய உங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல,,

      Delete
  7. அருமையான பதிவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீர்கள். நாங்கள் தொடர்பவர்கள் அனைவருமே....

    அட! இப்படி உண்மையை போட்டு உடைச்சுட்டீங்களே....அதான் நம்ம மதுரைத் தமிழனைப் பற்றிய உண்மை...//உண்மைகளை மட்டுமே பேசும் இவர், தன்னைப் பார்த்தார்கள் என்ற உண்மையை மட்டும் ஒத்துக்கொள்ள மாட்டார்,, பூரிக்கட்டை அடி இவர் மண்டையைக் கலக்கிவிட்டிருக்குமோ,,,// ஹஹஹஹ்ஹ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதானே சகோ,, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  8. தொடர் பதிவினில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  9. அருமையான பதிவர்கள் அழகான அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளீர்

      Delete
  10. அட, நம்ம நண்பர்கள் எல்லோரும்! வாழ்த்துகள் Friends..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  11. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள்... அந்த முத்துக்களை தங்கள் பார்வையில் கோர்த்து அழகு கூட்டி விட்டீர்கள் நன்றியும் வாழ்த்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி வலிப்போக்கரே

      Delete
  12. என் பதிவுகளின் மூலம் என்னை இந்த அளவிற்கு அறிந்ததை உங்களுக்கு தெரிந்தவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்தீர்கள் போல் தெரிகிறது.

    விட்டில் பூச்சி எனக்கெதற்கு இத்தனை விளம்பர விளக்குகள் ? உங்களுக்கு மகிழ்வென்றால் சரி. பதிவில் என் பெயரில் ஒரு சிறு எழுத்துபிழை சரி செய்ய முடித்தால் செய்துவிடவும்.

    தமிழறிஞர் உங்களால் அறிமுகபடுத்தபடுவதற்கு நாங்கள் அனைவரும் என்ன தவம் செய்தோமோ??

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அரசே,

      பதிவுலகில் அனைவரும் பதிவு வழி எனக்கு அறிமுகம் ஆனவர்களே,, தாங்கள் விட்டில் பூச்சி??????? எழுத்துபிழையா ??????????
      வருகைக்கு நன்றி அரசே,,

      Delete
  13. முயற்சிக்கிறேன் சகோ,, வருகைக்கு நன்றிகள் பல,,

    ReplyDelete
  14. மனம் கவரும் பதிவர்கள்..... நல்ல அறிமுகம். நன்றி.

    ReplyDelete