எண்ணங்கள் தெளித்த
வண்ணக்கோலங்கள்
வண்ணமயிலே
ஏன் இந்த அழகிய நடனம்,
இருட்டை கார்மேகம் என்று
நினைத்தாயா
இல்லையா
பின்னே
மகியின் கை வண்ணத்தில்
வாசலில் துளிர்த்ததனால்
வந்த துள்ளல் நடனமே,,,,,,,
(இது கொஞ்சம் ஓவரா இல்ல)
வண்ணக் கலவையில்
வரைந்த
வண்ணமலர்களே
வாசல் நிறைக்கும்
அழகு கோடுகளே
வசந்தம் வளரட்டும்
நாளும்,,,,,,,,,
இழைகளுக்குள் கண்சிமிட்டுவது
வானத்து நட்சத்திரங்கள் தூவிய
வெண்மலர்கள்
கபிலன்
சொன்ன பூக்களையும்
விஞ்சிவிடுகின்றன
கோலத்தில் காணகிடக்கும்
பூக்களின் வடிவங்கள்
எந்த கவிஞன்
கவிகள் சொல்வான்
இவ்வடிவங்களுக்குரிய
பெயர்களைத் தன் கவியில்,,,,,,,
எண்ணங்கள் தெளித்த
வண்ணக்கோலங்கள்
விடியலின் இருட்டில்
விழித்த கோலம்
புத்தாண்டில்,,,,,,,,
அழியப்போவது தெரிந்தும்
அழகாய் சிரிக்கிறாய்
ஒஒஒ
நீயும்
விட்டில் பூச்சா
சிதறா கவனத்தில்
சிதறும் வெண்துளிகள்
கோல மழையாய்
என் வீட்டு வாசலில்,,,,,,,
தொடரும்,,,,,,,,,,
கோலங்கள் அத்தனையும் அழகோ அழகு ! ஒவ்வொரு கோலத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களோ அதைவிட அழகு.
ReplyDelete>>>>>
வாருங்கள் வணக்கம்,
Deleteகோலங்களையும் வாசகங்களையும் வாழ்த்தியதற்கு நன்றிகள்.
//மகியின் கை வண்ணத்தில், வாசலில் துளிர்த்ததனால், வந்த துள்ளல் நடனமே.......//
ReplyDeleteகரெக்டூஊஊஊஊ. ரொம்பக் கரெக்டூஊஊஊஊ.
//(இது கொஞ்சம் ஓவரா இல்ல)//
இல்லை. ஓவரா இல்லை. அண்டராகத்தான் உள்ளது. :)
அதாவது கோலத்திற்குக் கீழ் அண்டராக அடக்கமாகத்தான் உள்ளது. :)
பாராட்டுகள். வாழ்த்துகள்.
கரெக்டா,,,,,
Deleteஅடக்கமாக தான் இருக்கா
நன்றிங்கோ,,,,
கோலங்களும்,அதற்குப் பொருத்தமான கவிதைகளும் சூப்பர் மேடம்!!!!!
ReplyDeleteவருகைக்கும் சூப்பருக்கும் நன்றிகள் மா
Deleteகோலக்கவிதை அருமை சகோ வாழ்த்துகள்
ReplyDeleteகோலக்கவிதை ------------ நன்றி நன்றி சகோ
Deleteஆஹா...வண்ணக் கோலங்களும்...அதற்கேற்ற கவித்துளிகளும் அழகாய் இருக்கிறது...
ReplyDeleteகவித்துளிகள் அழகாய் இருக்கிறதா? வருகைக்கு நன்றிமா
Deleteவணக்கம் பேராசிரியரே!
ReplyDeleteகோலமும் கவியும் கண்டபின்,
“இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்தாள் ” என்னத் தோன்றுகிறது.
தொடர்கிறேன்.
நன்றி.
“வண்ணச் சீரடி” எனலும் ஒன்று.
Deleteவாருங்கள் ஐயா,
Deleteஎன்ன பதிவு கோலம் ? என்று ? எனப் பயந்தேன் ,,,,
வண்ணச்சீறடி சீரடி ம்ம்
நன்றி நன்றி ஐயா
ஆஹா... கோலங்கள் அருமை சகோதரி...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் மனையாள் கோலங்கள் இதைவிட அழகு சகோ,,
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
வண்ணங்கள் கண்ணைப் பறித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன.
ReplyDeleteநன்றி நன்றி ஸ்ரீ
Deleteஅழகில் கரைந்தேன்
ReplyDeleteகரைந்தமைக்கு நன்றிகள் ஐயா
Deleteஅருமை...
ReplyDeleteஅருமை...
அருமை...
நன்றி நன்றி டிடி சார்
Deleteகோலப்போட்டியில் உங்களுத்தான் முதல் பரிசு......முதல் கோலத்தி்ல்வண்ணமயில்கள் கால்கள் இல்லாமல் ஆடுவது தங்கள் கோலத்தில்தான்......
ReplyDeleteஇதற்கு பெயர் தான் வஞ்சபுகழ்ந்ச்சியோ?,,
Deleteகால்கள் அதன் உடலுக்குள் மறைந்து இருக்குங்க வலிப்போக்கரே,,
கோலங்கள் அழகோ அழகு..... கவிதைகளும் தான்!
ReplyDeleteநன்றிங்க வெங்கட் சார்
Deleteகோலங்களும் அதற்கேற்ற கவிகளும் அருமை அருமை !
ReplyDeleteவருகைக்கு நன்றி மா
Deleteசெம கோலங்கள். அழகுனா அழகு!! அதற்கான வரிகளையும் ரசித்தோம் சகோ....
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅனைத்து கோலங்களும் ரொம்ப அழகு.
ReplyDeleteபள்ளி நாட்களில் கோலங்களை பார்த்து ரசித்தது நினைவு வருகிறது.
நன்றி சகோ
Deleteகோலங்களும் அழகு..
ReplyDeleteஇந்தப் பதிவும் அழகு..
ஆனால் -
எனது தகவல் பலகையில் வரவில்லையே!..
எப்படியோ கண்டுபிடித்து வந்து விட்டேன்!..
வாழ்க நலம்!..
ஒஒஒ ஒரு வேளை என் கோலமயில்கள் தகவல் பலகையை மறைத்துவிட்டதோ,,
Deleteவருகைக்கு நன்றிகள்
மயில்களை சிறகு இல்லாமல் கூட ஆட சொல்லலாம் ஆனால் கால்கள் இல்லாமல் எப்படி. ஒ... கோல மாவு தீர்ந்து விட்டதா? இதில துள்ளல் நடனம் வேறு.
ReplyDeleteகவிதைகள் கோலங்களுக்கான மகுடமாக திகழ்கின்றது.
வாழ்த்துக்கள்.
கோ
கால்கள் இல்லையா, நன்றாக பாருங்கள் அரசே, அவை அதன் உடலுக்குள் அமர்ந்த நிலையில் மயில் உள்ளன.
Deleteகோலமாவு தீர்ந்து போனது?????
பின்னே அதன் துள்ளல் போஸ் பிறகு பதிகிறேன்.
அப்பாடா பாராட்டா??
வருகைக்கு நன்றிகள் அரசே
மயில்கள் உள்ளன.
Delete