Tuesday 22 September 2015

சலுகை மட்டும் வாழ்க்கையில்லை




சலுகை மட்டும் வாழ்க்கையில்லை

புதுமைப் பெண் படங்கள் க்கான பட முடிவு 
 

   மக்கள் தொகையில் ஒரு பாதியாக இருக்கும் பெண்களை அடிமையாக நடத்தும் எந்த ஒரு நாடும் உரிமை பெற்றதில்லை.பெண்களுக்கு சம உரிமையும் மதிப்பும் கொடுக்க வேண்டும் என்றார் பாரதியார்.

   என்ன இது? பேத்தல், எல்லா துறைகளிலும் பெண்கள் சாதனைப் புரியும் இந்நிலையில், இது தேவையில்லாத கட்டுரை  என்று நினையாமல், நம்மை விட்டு, சற்று எட்டி நின்று இக்கட்டுரையைப் படியுங்கள்.

. இந்திய கலாசாரத்தில் பெண்கள் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். ஆனால் நிஜவாழ்க்கையில் இங்குள்ள பெண்களின் நிலமை மிகமோசமாக உள்ளது. ஏன் சில சமயம் மிதிக்கப் படுகின்றனர் என்று கூட சொல்லலாம். மிதிக்கவும் வேண்டாம், மதிக்கவும் வேண்டாம். இங்கு ஆண் சத்தி உயர்ந்தது என்றோ பெண் சத்தி உயர்ந்தது என்றோ எதுவும் இல்லை. பெண்கள் சிந்திக்கத் தொடங்கினர். சிந்திக்கத் தொடங்கிய இப்பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பெண்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஆண்களின் மூளை ஏற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுகிறது.

                  அறிவு கொண்ட மனித வுயிர்களை
                  அடிமையாக்க முயல்பவர் பித்தராம்,,
என்றார் பாரதி,,,,,,,

     ஆண் பெண் இருபாலரும் உணர்ந்து செயற்படும் பட்சத்தில் இந்தப் பெண்ணடிமை, பெண் அடக்குமுறை, பெண்ணை இரண்டாந்தரமாக நினைக்கும் தன்மை எல்லாமே அர்த்தமற்ற செயல்கள் என்பது நன்கு புலப்படும்.

     உண்மையில் பெண்ணுக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை. வெறும் சலுகை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை பெண்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.

    உரிமைப் போராட்டங்கள் மூலம் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து, பல துறைகளில் பெருமை சேர்த்திருந்தாலும், உலகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். ஒரு சில நாடுகளில் இதன் கொடுமை சொல்லவே முடிவதில்லை. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் ஆதிக்க சக்திகளால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை மறைக்கவும் மறுக்கவும் கூடுமோ,? சாதிய ரீதியாக தான் உயர்ந்தவன் என கொக்கரிக்கும் குள்ளநரிக்கு கூட தாழ்ந்த சாதி என சொல்லும் பெண்ணும் சந்தனம் அந்நேரத்திற்கு மட்டும்.

      தலைநகரில் ஒரு பெண்ணை ஆறு மிருகங்கள் கடித்து குதறியதும் ஏனோ,,,
 காவல் துறை அனைவரையும் காக்கும் துறை, அங்கே இருக்கும் பெண் காவலர்கள் தங்களைக் காக்க முடிகிறதா? முடியும் எனின் ஏன் இத்தனை தற்கொலைகள்,,,,,,,
                   
     பெண்கள் வெளியில் வந்துவிட்டார்கள், வேலைக்கு போகிறார்கள் என்று சொல்லும் நாம் அங்கு அவர்கள் படும் வேதனை யாருக்குத் தெரியும்? அவள் மனம் மட்டும் அறிந்த உண்மைகள் ஏராளம். நடக்கும் குற்றங்களில் 50 சதவீதம் பணியிடங்கள் சம்பந்தப்பட்டவை, வெற்றுச் சதையென பெண்மையை நினைப்பவர்களால்,அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள், அதிகம் அரங்கேறுகின்ற இடத்தில் தான், அதனை எதிர்த்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வருகிறாள். எல்லா துறைகளிலும் உண்டு. ஒரு பெண் தன் திறமையால் முன்னேறும் போது நாம் அவளை என்ன சொல்கிறோம். சாதிக்க நினைக்கும் பெண்மையை போற்றவில்லை என்றாலும் தூற்ற வேண்டாமே.

     வரதட்சணை தடுப்புச் சட்டம் 1985இல் அமலாக்கப்பட்டது. ஆனாலும்  ஒவ்வொரு வருடமும் 5000 பெண்கள் வரதட்சணை காரணமாக எரிக்கப்படுகின்றனர்.கொலைச் செய்யப்படுகிற கொடுமையை நாம் படிக்க வில்லையா?பெண்களின் கொடுமைகள் இன்னமும் இந்திய கிராமங்களில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றன. தவறு செய்யும் ஆண்களுக்கு சட்டம் தண்டனை அளிக்கிறது, எப்போது, காலம் கடந்து, எல்லாம் முடிந்த பிறகு,, நாங்கள் பெண்மையைப் போற்றுபவர்கள் என்றால் ஏன் இத்துனை வன்கொடுமைகள்?.

       பெண்கள் வேலைக்கு செல்வதால் ஆண்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது என்ற ஒரு சிலரின் வாதம் ஏற்புடையது அல்ல. வெளிநாடுகளில் எல்லாம் குடும்பத்தில் உள்ள இருவருமே வேலைக்கு செல்கிறார்கள் சம்பாதித்து குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் . ஆண்களைவிட பெண்கள் 20 சதவீதம் அதிகமாகவே தன் உழைப்பை வெளிப்படுத்தியும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர்.

       இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் பெண்களை வெறும் காட்சிப் பொருளாக காட்டவே செய்கின்றன. அரை குறை ஆடைகள் ஒருபுறம் இருக்க, விளம்பரங்களில் வாசனைத் திரவியங்கள் பற்பசை, இன்னும்,,,,. இது போன்ற விளம்பரங்கள் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றன.

    ஆண் பெண் இணைந்தால் தான் சமுதாயம். இந்தச் சமுதாயம் பெண்ணை ஒரு தனி நபராக மதித்துப் பெருமை தரவேண்டும். பத்திரிக்கையில் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாகச் சித்தரிக்கப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெண்ணுக்கு ஆண் என்பது எதிர்பதமே தவிர, எதிரி அல்ல. இதனை அனைவரும் உணர்ந்துகொண்டால் பெண்கள் தங்களுக்காகப் போராட வேண்டிய அவசியம் இல்லை. விஞ்ஞானத்தின் வளர்ச்சி பலவாறாக இருந்தாலும், பெண் தன் குடும்ப தேவைகளை முன்னிலைப்படுத்தியே வாழ்கிறாள். அவள் தான் இந்தியத் தாய், பெண்ணியத்தின் உள்மூச்சு இங்கு தான் இன்னமும் சுவாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

   ஆண் மனதின் மிருகத்தின் வெளிப்பாடு தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் ஏராளம், எடுத்துக்காட்டுக்கு சொல்லனும் என்றாலே பல நூறு இருக்கிறது. பெண்மையைப் போற்றுவோம் என்று பேசும் பெரியவர்கள் கூட, பெண் பிள்ளைகளிடம் நடந்துக்கொள்ளும் முறையைக் கண்டு மனம் பதைக்கிறோமே

      இத்தனைப் போராட்டங்களுக்கு இடையிலும் நாடாளுமன்ற சட்டப் பேரவையில் 09.03.2010 அன்று பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதம் என்ற மசோதா பலத்த எதிர்ப்புகளின் இடையில் நிறைவேற்றப்பட்டது.
சமையல் செய்யும் பெண்ணால் சரித்திரம் படைக்க முடியும். இமயம் தன்னை இடுப்பில் ஏந்தி இலக்கணம் உடைக்க முடியும், என்று இந்த காலப் பெண்கள் சாதித்துள்ளனர். பெண்கள் வெறும் பிரசவங்களை மட்டுமல்ல, பூமியைப் புரட்டிப்போடும் நெம்புகோல் அவர்கள். நேசிக்க தெரிந்தால் அவளும் ஒரு கவிதைத்தான். நாம் அனைவரும் பெண் மனத்தை யாசித்து, அது பற்றி யோசித்து, சமுதாய நன்மைகளை நேசித்து வாழ முற்பட்டால், பெண்ணியம் என்பது உரிமைப் போராட்டமல்ல, உண்மை வாழ்வியல் என்பது புரியும். 

      இன்று அறிவியில் தொழில் நுட்ப வளர்ச்சி, ஊடகப்பெருக்கம் என்றும், மனித விடுதலை, சமத்துவம் என்றும் பல கருத்தாடல்கள் வந்த போதும் கூட்டுக்குடும்ப சூழலில் இருந்து, அதிலும் மரபுகளில் இருந்து தன்னை விடிவித்துக்கொள்ளாத கிராமியச் சூழலில் இவைகள் பெருமளவு சாத்தியமற்றதாகவே இருக்கின்றன. 

    வாசக நெஞ்சங்களே, எத்துனையோ வளர்ச்சி இருக்க,,,, இது குறையா என்று குமிழ் சிரிப்பு வேண்டாம், எல்லாம் சில சலுகைகள் பெறுவது போலத்தான், அவளின் சாதனையும். முழுமை எப்போது?. பெண்மை என்பது மகத்துவம் மிக்கது, யாரும் சலுகைக் காட்ட வேண்டாம். பெண்மையே நீ கடக்க வேண்டிய தூரம் அதிகம்தான், எவ்வளவோ கடந்தாச்சு,,,,,, இன்னும் கடப்போம்முல்ல,,, 


      இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
 
      வகை- (3) பெண்கள் முன்னேற்றம்-கட்டுரைப் போட்டி-

      பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த 
 
   என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.


38 comments:

  1. கனல் தெறிக்கின்றது!..

    >>> பெண் பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல்!..<<<

    மகாகவி நிச்சயம் மகிழ்ந்திருப்பார்!..

    வெற்றி பெறுதற்கு நல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ஆஹா வாருங்கள், வணக்கம்.
    உங்கள் வருகையும் அது தரும் ஊக்கமும் இன்னும் எழுத தூண்டுகிறது. தங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. அனல் வசனங்கள் சூடு பறக்கிறது சகோ வெற்றி நிச்சயம் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      வாழ்த்துக்கு நன்றிகள் சகோ,
      நன்றி.

      Delete
  4. சலுகை மட்டும் வாழ்க்கையில்லை. சம உரிமைதான் வேண்டும் அதை பெண்கள் வேண்டி பெறுதல் கூடாது.



    கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.....வெற்றி பெற வாழ்த்துக்கள். நானும் கட்டுரையை எழுத தொடங்கை பாதியிலே நிற்கிறது. அது முடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த அரசியல் வாதிகளின் சதிதான் காரணம். அவர்கள் ஏதாவது சொல்லி காமெடிபண்ணுவதால் அதை கிண்டல் பண்ணி எழுதவதற்கே நேரம் கிடைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள் மதுரையாரே,
      வேண்டி பெறும் எதுவும் மரியாதையுடன் ,,,,,,,,,,
      அதற்கு இந்நிலையே பரவாயில்லை.
      அரசியல் வாதிகளின் சதிவலையில் நீங்களுமா?
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்,,,,,,,,,
      தொடருங்கள்,,,,, மதுரையாரே,

      Delete
  5. ஓவ்வொரு வரியும் வலிக்கும் நிஜம். ஆணித்தரமாய் கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள் சகோ!!! மிக மிக அருமை. சலுகைகள் மட்டுமே வாழ்கை அல்ல.....அது பெறுவது மட்டுமே வெற்றியும் அல்ல!!! நெடுநேரம் யோசிக்கவைக்கிறது பதிவு!! போட்டியில் வெற்றி பெற பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ, அதைப் பெறுவது மட்டும் வெற்றியும் அல்ல தான்,,,,
      மாற்றம் என்பது இருவரின் மனம் சார்ந்த விடயம்,அன்பு பெறவும் செலுத்தவும் தெரிந்த உள்ளங்கள் இது குறித்து யோசித்தால் மட்டும் போதுமே, ,இவ்வூலகம் பூங்காவாக மாறும்,,,,,,,,,,,
      தங்கள் அன்பின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  6. அருமையான கட்டுரை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  7. நெருப்பாய் சுடும் வார்த்தைகள்
    ஆனாலும் உண்மையான வார்த்தைகள்
    போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      தங்கள் அன்பின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  8. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

      Delete
  9. சமையல் செய்யும் பெண்ணால் சரித்திரம் படைக்க முடியும். இமயம் தன்னை இடுப்பில் ஏந்தி இலக்கணம் உடைக்க முடியும், என்று இந்த காலப் பெண்கள் சாதித்துள்ளனர். பெண்கள் வெறும் பிரசவங்களை மட்டுமல்ல, பூமியைப் புரட்டிப்போடும் நெம்புகோல் அவர்கள்.

    சுப்பர் மா மேடயில் நின்று ஆவேசமாக நீங்கள் பேசுவது போன்றே நான் உணர்ந்தேன். ரொம்ப நிதானமாக நேர்த்தியாக எழுதியுளீர்கள். நன்றி! வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ அது எப்படி என் செயல் அப்படியே,,,,,,,
      பேசி பேசி இன்னும்,,,,,,,,,,
      நிறைய பேசியாச்சுமா, அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா,

      Delete
  10. //சிந்திக்கத் தொடங்கிய இப்பெண்களின் விழிப்பு நிலையே இன்று சில ஆண்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. // உண்மை! இதை ஏற்கவே முடியவில்லையே பல ஆண்களால்!

    அருமையான கட்டுரை சகோதரி..வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்களம்மா, வணக்கம்.
      ஆம் ஏற்கும் மனம் இருந்தால் எல்லாம் நலமே,,,,
      வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றிகள் பல.

      Delete
  11. சலுகை மட்டுமே வாழ்க்கையல்ல என்ற தலைப்பே இன்றைய பெண்களின் மனமுதிர்ச்சியை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. ஆனால் பெண்களின் முழுமையான முன்னேற்றம் என்பது ஆண்கள் மீது பழிபோடுவது, குற்றம் சொல்வது போன்றவற்றை விட்டு விலகும் போதுதான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்,
      இல்லை ஐயா, யாரும் யார் மீதும் பழிபோடுவது அல்ல வாழ்க்கை,
      தங்களுக்கு தெரியாதது இல்லை,, தங்களின் ஒரு கட்டுரையின் தாக்கமே என் மனதை விட்டு நீங்க பல நாட்கள் ஆனது.
      இந்த பூமியில் தன் பலகீனத்தை மறைக்க நினைத்த ஆண் பெண் மேல் எழுதிய சட்டங்கள் தான் இன்று இன்னும் தொடர்கதையாக,,,
      வருகைக்கு நன்றிகள் சகோ,

      Delete
  12. பெண்கள்
    வெறும் பிரசவங்களை மட்டுமல்ல,
    பூமியைப் புரட்டிப்போடும் நெம்புகோல்கள்
    என்பதை
    இந்த ஆண்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே ஐயா,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  13. கோபக்கனல் தெறிக்கும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  14. மிக மிக அற்புதமான பதிவு
    தார்மீகக் கோபத்தை நேர்த்தியாகப் பதிவு செய்த விதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  15. பெண்மனதையாசித்து,யோசித்துநேசித்தால்அவளும்ஓர்கவிதை.
    அடடாசகோதரிசடசடவெனபெருமழைபெய்ததே...
    வெற்றிபெறவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  17. பெண்களின் கொடுமைகள் இன்னமும் இந்திய கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றன. -----வகை- (3) பெண்கள் முன்னேற்றம்-கட்டுரைப் போட்டி-யில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!.....

    ReplyDelete
  18. ஆம் உண்மையே,
    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  19. பெண்கலின் பிரச்சனைகளை ஆழ்ந்து நோக்கிய விதம் அருமை...சரியான பார்வையில் கட்டுரை அமைந்துள்ளது வெற்றி பெற வாழ்த்துகள்மா..

    ReplyDelete
  20. தங்கள் அன்பின் வருகைககும் வாழ்த்திற்கும் நன்றிகளம்மா

    ReplyDelete
  21. மிக மிக அருமை. மலிவான சலுகைகளால் ,அடிமைகளாய் மூளை விலங்கு போடப்பட்டு மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் இலட்சபோ இலட்சம் கிராமத்துச் சகோதரிகளிடையே தங்களைப் போல கிராமத்திற்கொரு அக்னிக் குஞ்சு பிரவேசித்தால் பெண்ணினம் மேன்மையுறும். பொருண்மை நிறைந்த கட்டுரை. வென்றிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. வருங்கள் ஐயா, வணக்கம்,
    தங்களின் மனம் திறந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா,,,,,,

    ReplyDelete




  23. நேசிக்க தெரிந்தால் அவளும் ஒரு கவிதைத்தான்...

    அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மனம் திறந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

      Delete
  24. வணக்கம் பேராசிரியரே!

    “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
    நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்கிறேன்.“


    வெற்றி பெற வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  25. நன்றி ஐயா,
    பாரதியின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாய்,,,,,,,,
    மகிழச்சி,,,,,,,

    ReplyDelete