அந்நியமான அரங்கேற்றுகாதை
அரங்கேற்றுகாதை – தமிழ்ப்பல்கலைக்கழகம் 2
அந்நியமான அரங்கேற்றுகாதை தொடர்ச்சி,,,,,,,,,,,,,
அரங்கேற்றுகாதையைப்
பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது படிக்கிற காலத்தில் சுமைக்குறைந்த சுகமாக
இருக்கும். ஆனால் பின்னர் அரங்கேற்றுகாதையைப் படித்துப் புரிந்துக்கொள்ள முயலும்
போது தான் அதன் பாதிப்பு உறைக்கும்.உண்மையில் அரங்கேற்றுகாதையை மட்டும் தான்
பாடமாக வைத்திருக்க வேண்டும். அது நீங்கலாக ஏனைய காதைகளை ஆசிரியர் துணையின்றியே
யாரும் கற்றுக் கொள்ள முடியும். உரைநூல்கள் இருந்தும் அரங்கேற்றுகாதையைப்
புரிந்துக்கொள்ள வேண்டுமானால் இசை, நாடக வல்லுநர் துணையும் கருத்தரங் விவாதங்களும்
அவசியம் வேண்டும்.
பழந்தமிழ் நாடக வழக்காறுகளை அறிய முனைவார்க்கு
அரங்கேற்றுகாதை ஓர் அரிய தரவாக தகவல் சுரங்கமாக இருப்பதைத் தமிழறிஞர்கள்
ஒத்துக்கொள்வார்கள். பின் ஏன் அதைக் கற்றுக்கொடுக்கப் பல்கலைக்கழகங்கள்
முன்வரவில்லை? எவ்வளவு பெரிய இருட்டடிப்பு? முத்தமிழ் என்று பெருமைப்படும் நாம்,
இசையையும், நாடகத்தையும் மாற்றாந்தாய் மக்களைப் போலவே நடத்திவருகிறோம் என்ற
உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்
.
.
இப்படி வேதனைப் பட்டு ஆகக்கூடியது எதுமில்லை,
செயல்பாடு ஒன்றேச் சிறந்த வழி என உணர்ந்த அறிஞர் பெருமக்கள் 1998 ல் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றுகாதை புரிதலுக்கான ஒரு மறு வாசிப்பு என்னும் தலைப்பில் கருத்தரங்கை நடத்தினார்கள்.
மனந்திறந்த கலந்துரையாடலாக அமைந்த அந்தக் கருத்தரங்கில், அதன் அமைப்பாளரான
பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி அவர்களுடன் பாவலரேறு.ச.பாலசுந்தரம் அவர்கள், பத்மா சுப்பிரமணியம் அவர்கள்
இன்னும் தமிழின் மிகப்பெரிய ஆளுமைகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இம்மாபெரும் விதையை என்னுள் தூவிய அந்நாள்
நாடகத்துறைத் தலைவர் மு.இராமசுவாமி அவர்களின் பெரும் முனைப்பால் அது நடந்தது.
அக்கருத்தரங்கில் 175 அடிகள் கொண்ட அரங்கேற்றுகாதையின் முதல் 25 அடிகளுக்கு
மட்டுமே விவாதங்கள் நிகழ்ந்ததோடு இரண்டு நாள் பொழுது நிறைவுற்றதால், முழுமைப்
பெறாத சிறுமுயற்சியாகவே அது முடிந்தது.
அந்த அரிய கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்து, அவர்கள்
வெளியிட்ட கருத்துக்களை அப்படியே தட்டச்சுப்படியாக நாடகக் கலைவிழா – 2000 என்ற நிகழ்ச்சியில் 173
பக்க அளவில் வெளியிட்டார்கள்.பாராட்டப் பட வேண்டிய மிகப்பெரிய முயற்சி அது.
அரங்கேற்றுகாதையின் தொடக்கம் முதல் ஒவ்வோர் அடியாக அவர்கள் விவாதித்ததை, ஒரு நாடக உரையாடலைப் போலத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த 25 அடிகளுக்கும் அவரவர் கருத்துக்களை நிரல்படத் தந்திருக்கிறார்கள்.அரங்கேற்றகாதைப்பற்றி அறிய முயல்வாருக்கு அத்தொகுப்புரை அந்த 25 அடிகளுக்காவது ஒரு வெளிச்சத்தைத் தரும் என்று நம்பலாம். அது ஒரு நல்ல தொடக்கம். அதில் நாம் தள்ளுவன தள்ளிக் கொள்வன கொள்ளலாம்.
அரங்கேற்றுகாதையின் தொடக்கம் முதல் ஒவ்வோர் அடியாக அவர்கள் விவாதித்ததை, ஒரு நாடக உரையாடலைப் போலத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த 25 அடிகளுக்கும் அவரவர் கருத்துக்களை நிரல்படத் தந்திருக்கிறார்கள்.அரங்கேற்றகாதைப்பற்றி அறிய முயல்வாருக்கு அத்தொகுப்புரை அந்த 25 அடிகளுக்காவது ஒரு வெளிச்சத்தைத் தரும் என்று நம்பலாம். அது ஒரு நல்ல தொடக்கம். அதில் நாம் தள்ளுவன தள்ளிக் கொள்வன கொள்ளலாம்.
மதுரைப் பல்கலைக்கழகத்திலும், புதுவைப் பல்கலைக்கழகத்திலும் சில ஆய்வேடுகள் (M.phil)
காணப்பட்டன, அவையும் நேரடியாக அரங்கேற்றுகாதையில் செய்யப்பட்டவை அல்ல. தவறோ, சரியோ, இது தான் அரங்கேற்றுகாதையின் விளக்கம்
என்று யாரேனும் ஒருவர் முழுவதுமாய் முன்மொழிய வேண்டும். பிறகு அதிலுள்ள தவறுகளை விவாதித்துப்
பின் வருவார் சரிசெய்துக் கொள்ளலாம். அத்தகைய சிறு முயற்சியாகவே இதனை இங்கு
குறித்துப் பதிந்துப் போகிறேன். ( என் ஆய்வில் கண்ட முடிவுகள், முடிவானது அல்ல,,,,,,) விவாதிப்போம்,,,,,,,,,
சிலம்பின் அரங்கேற்றுகாதையை முன்னிறுத்தி
தமிழ்நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்தல்.
தொடர்வோம்,,,,,,
பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி அவர்களுக்கும் நன்றி
ReplyDeleteவிவாதத்தை தொடர்கிறேன் சகோ...
வருகைக்கு நன்றி சகோ,
Deleteநாடகம் எழுதுவோர் கற்கவேண்டிய தொடர்
ReplyDeleteதொடருங்கள்
வாருங்கள் அய்யா,
Deleteஇல்லை,,,, இன்றைய திரைப்படத்துறையின் அத்துனை நுனுக்கங்களையும் சொல்லும் அக்கால பகுதி இது.
வருகைக்கு நன்றிகள் பல.
தமிழ் நாடகக் கலையை மீட்டெடுக்க வேண்டும்..
ReplyDeleteஅரிய முயற்சி.. வெற்றியடைய நல்வாழ்த்துகள்!..
வாருங்கள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
Deleteஅருமையான ஒரு முயற்சி சகோதரி!
ReplyDeleteவெற்றிகிடைக்கடும்!..
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
வாருங்களம்மா,,
Deleteவாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றிகள்
மிக அருமை.. தொடருங்கள்.. நானும் தொடர் தொடர்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகளம்மா
Deleteபெரிய முயற்சி. வெற்றி கிடைக்கட்டும். தொடர்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள் பல
Deleteபதிவுகளை அடுத்தடுத்து வெளியிட்டால் பயன் பெருகும் என்று நினைக்கிறேன்
ReplyDeleteமுயற்சிக்கிறேன் அய்யா, வருகைக்கு நன்றிகள் பல
Deleteநீண்ட நாட்களின் பின் அருமையான தலைப்போடு வந்துள்ளீர்கள் . வெற்றிக்கு வாழ்த்துக்கள் ....! நன்றிமா
ReplyDeleteவாருங்களம்மா,
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல
வெற்றியே...
ReplyDeleteஇனி தொடர்கிறேன்...
வருகைக்கு நன்றி டிடி சார்.
Delete“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” - தங்களின் தளத்தையும் அதில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... நன்றி...
ReplyDeleteபுதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
அனுப்புகிறேன் டிடி சார்,
Deleteதங்கள் அன்பின் தகவலுக்கு நன்றிகள் பல.
அற்புதமான முயற்சி தொடருங்கள் தொடர்கிறோம் தோழி.
ReplyDeleteநன்றிமா வருகைக்கு, தொடருங்கள்.
Deleteதொடரட்டும் விவாதம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா
Deleteஅரங்கேற்றக்காதை குறித்து பேசுகிறீர்கள்... தொடருங்கள்... தொடர்கிறோம்...
ReplyDeleteபேராசிரியர். முனைவர். மு. இராமசாமி அவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது....
வாருங்கள், தாங்கள் தொடர்ந்திட வேண்டுகிறேன். வருகைக்கு நன்றிகள்.
Deleteபோற்றுதற்குரிய முயற்சி
ReplyDeleteதொடருங்கள் சகோதரியாரே
தொடர்கிறேன்
எல்லாம் தங்கள் வழிகாட்டல் சகோ,
Deleteவருகைக்கு நன்றிகள் பல.
அரங்கேற்றக்காதை பற்றிய விவாதத்தின் உண்மைக் கதை இதுதானோ :)
ReplyDeleteஎன்ன பகவானே,,,,,,,,
Deleteவருகைக்கு நன்றிகள் பல.
அருமை..... தொடருங்கள்..... தொடர்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் தங்கள் பயணத்தின் நடுவிலும் வருகைக்தந்து தொடர்வதற்கு நன்றிகள் பல,,,
Deleteஇவ்வாறான ஒரு முயற்சி பாராட்டத்தக்கதாகும். அரங்கேற்றுக்காதை பற்றி நாள் கேள்விப்பட்டுள்ளேன். முயற்சிகள் என்பதானவை ஆரம்பித்து விட்டுவிடப்படக்கூடாதது. தொடர்ந்து எடுத்துச்செல்லப்படவேண்டியது. தங்களது ஆதங்கம் எங்களின் ஆதங்கமே. நன்றி.
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteதமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த அம் மாபெரும் முயற்சியை அறிவீர்கள் என நினைக்கிறேன்.
நான் அப்ப அங்கு இல்லை, என் வழிகாட்டி அய்யா மரியாதைக்குரிய பேராசிரியர்,மு,இராமசாமி அவர்கள் சொன்னது.
அன்று அங்கு தூவிய விதைகள் பல இடங்களில் வளர்ந்துள்ளதை இன்று அறிகிறேன். என் முனைவர் பட்டப்பேற்றிர்க்கான ஆய்வினை முடிக்கும் போது அது இவ்வளவு வளர்ந்தில்லை,,,,,,,
எனவே தான் கொஞ்சம் நிமிர்ந்து இருக்கும் அரங்கேற்றுக்காதையின் விளக்கங்களை நாம் தொடங்கினால், இந்த இணைய வானில் நிறைய நட்சத்திரங்கள் ஒன்று கூடும் என்று,,,,,,,
எப்படியும் இது ஒரு நல்ல முயற்சியாக அமையும் என்ற நம்பிக்கையில்,,,
இன்றைய திரைப்படத் துறையின் முன்னோடி தான் அரங்கேற்றுக் காதை எனில் வியப்பில்லை, அவ்வளவு தகவல்கள் அதனுள்,,,,,,
உரையாசிரியர்கள், உரையோடு நம் புரிதலையும் சேர்த்துப்பார்த்தால் என்ன?
என்னால் ஆய்வு மாணவியாக அதனைச் செய்ய அன்று இயலவில்லை,,,,,,,,,,, ஆனால் இன்று துணிந்து விவாதிக்கலாம் இல்லையா?
முயற்சிக்கிறேன் அய்யா, தொடருங்கள், நன்றி.
நிஜ நாடக இயக்க...பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி...அவர்கள் ..திரைப்படததில் அல்லவா கோலோச்சிக் கொண்டு வருகிறார்.
ReplyDeleteதென்னிந்திய திரைப்பட சங்கத்தில் நாடக நடிகர்தான் அதிகளவில் உறுப்பினர்களாக உளளதாக ஒரு செய்தி...அரங்கேற்றுக்காதையின் விளக்கங்களை நாம் தொடங்கினால், இந்த இணைய வானில் நிறைய நட்சத்திரங்கள் ஒன்று கூடும் .முயற்சியுங்கள்.. தொடருங்கள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்.!!
ஆஹா வாருங்கள் வலிப்போக்கரே,
ReplyDeleteநலமா?
ஆம் அவர் தான்,,,,,,,, தாங்கள் அவரை அறிவீர்களா? நல்ல படைப்பாளி,,,, நல்ல மனிதர், திரைப்படம் அப்ப அப்ப என்று நினைக்கிறேன்.
சந்தித்து பல ஆண்டுகள் ஆகியது. என் படிப்பிற்கு பின்னர் பார்க்கல,
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
மிகப்பெரிய பொருப்பொன்றை செய்யப்போகிறீர்கள் என்பதை தான் என் சின்ன மூளை எனக்குச்சொல்கிறது மேடம்!! இந்த தொடரை தொடர்ந்து படித்து பயன்பெற விரும்புகிறேன். பிரபஞ்சனின் "துறவாடைக்குள் தொலைந்த காதல் மனம்" எனும் புத்தகத்தில் இப்படி சிலப்பதிகாரத்தில் பரமரர்கள் அறியாத சில தகவல்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அதுபோலும் சுவாரஸ்யமான அனுபவம் உங்கள் பதிவிலும் கிடைக்கும் என நம்புகிறேன்:)
ReplyDeleteவணக்கம், வாருங்கள்,
ReplyDeleteதங்கள் எதிர்பார்ப்பிற்கு தக்க அமையனுமே,,,,,,,,,
தொடர்ந்து வாருங்கள், வருகைக்கும் கருத்திற்கும் மனம் நிறை நன்றிகள் பல.
நாடகப் பயிற்ச்சிக்கு உங்களின் பகிர்வும் ஆரோக்கியமான உந்து சக்திநூலாக இருக்கும் தொடருங்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பல
ReplyDeleteஆராய்ச்சி குறித்த பகிர்வு தொடரட்டும்.
ReplyDeleteநன்றி.
வணக்கம் ஐயா,
Deleteதங்களைக் குறித்து தான் நான் இக்கட்டுரைத் தொடங்கினேன். அரங்கேற்றுகாதையின் உரையினைச் சற்று தள்ளி ( அடியார்க்கு நல்லார், அரும்பதவுரையாசிரியர் ) உரைப் பார்த்தால் என்ன என்று,,,, அவர்கள் உரையை தவிர்க்க அல்ல,,,
தாங்கள் வருவீர்கள் என நினைத்தேன் வரவில்லை,,,,
ஒஒஒஒஒஒ குறையுள்ள பதிவிர்க்கு தாங்கள் பின்னூட்டம் இடமாட்டுரோ என்று,,,,,,
வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா.