பணிந்தோம் பதமலர் யாம்
எழுத்தறி வித்தவன் எமக்கு
இறைவன்
எழுதினர் முன்னோர்
ஏற்றோம் – எழுத்தை
மட்டுமா? அல்லவே,
மண்ணில் நல்ல
மனிதம் மலரவும் தான்.
ஆசிரி யர்பணி யேஅறப்
பணியாம்
ஆதலால் தம்மை
அர்ப்பணி – அப்பணிக்கே
அர்ப்பணித் தஆல
யம்வாழ் மனிதமே
அடிபணிந் தோம்நாங்
கள்
உலகின் வெளிச்சம்
உயர்வான் பரிதியால்
உண்மை இதுதான்
உணர்ந்தோம்-உயர்ந்த
பணியால் உலகின்
நலன்உயர் தினீர்கள்
பணிந்தோம் பதமலர் யாம்.
உளியின் வலிதாங்
கியஉயர் கற்கள்
உலகில் புகழ்பெறும்
சிலையாகி – உங்கள்
பயன்மிகு நல்சொல்
தாங்கினால் நாங்கள்
பாரில் புகழ்பெறு
வோம்.
அரியப லவிடயங் களைஅ
றியத்தரும்
அவர்கள் பெறுவது ஏதுமில்லை
– ஆசிரியர்
பயன்கள் கருதா மழைப்போல்
அவர்கள்
புகழ்ப்போற் றுவோம்பா
ரில்
அரிதான செய்திகள்
அனைத்தையும் அறியத் தரும் அனைவரும் ஆசிரியர்களே, அந்தவகையில் அனைவருக்கும்
ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.
நன்றி புகைப்படங்கள் கூகுள்
அருமை சகோ ரசித்தேன் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
Deleteஆசிரியர் தின கவிதை அருமை மகேஸ்வரி. தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா
Deleteஅட! அப்புறம் என்ன வெண்பா வில் இப்படிக் கலக்குகிறீர்களே wow இனியென்ன கவிஞரே அசத்துங்கள் அசத்துங்கள் வாழ்த்துக்கள் மா ....!
ReplyDeleteஎன் உளங்கனிந்த ஆசிரியர் வாழ்த்துக்கள் ...!
வாங்க இனியா
Deleteநலமா? நீங்கள் வியக்கும் அளவுக்கு இருக்கா? அது உங்க குணம், தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிமா
சரி எப்படி இருக்கு சரியா இருக்கா? என்னமா சொல்லுங்கம்மா,,,,
Deleteஅரியாத செய்திகள் அனைத்தையும் அறியத் தரும் அனைவரும் ஆசிரியர்களே, அந்தவகையில் அனைவருக்கும் தங்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே, வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
Deleteஆசிரியப்பா(அதாவது ஆசிரயர் தின வெண்பா:) அருமையோ அருமை மேடம்:)
ReplyDeleteஅப்படியா?, தங்களுக்கும் வாழ்த்துக்கள்,
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள். மரபுக்காக வார்த்தைகளை வெட்டி ஒட்டி எழுதியதை இப்பாவில் காண்கிறேன் சொன்னது தவறானால் நீக்கி விடுங்கள்.
ReplyDeleteநன்றிங்கய்யா,
Deleteஉண்மைதான் வெட்டித்தான் ஒட்டியுள்ளேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கய்யா.
தெரிந்ததை மறைக்காமல் சொல்வோர் ஆசிரியர் ,சொல்லாமல் விடுவோர் சிரியர்களே :)
ReplyDeleteவாங்க ஜீ,,
Deleteதங்கள் விளக்கம் அருமை, வருகைக்கு நன்றிகள் பல,
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!..
ReplyDeleteநன்றி, தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Deleteபதிவு அருமை.. வாழ்க நலம்!..
ReplyDeleteதாங்கள் தரும் ஊக்கம் என்னை வளப்படுத்தும். நன்றிகள் பல.
Deleteஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருங்கவி பாடியே ஆசிரியர் மாண்பைத்
தருமுன்றன் சீரே சிறப்பு!
அழகிய கவி பாடக் கண்டு உளம் மகிழ்கின்றேன் சகோதரி!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தோழி,
Deleteதங்களிடம் இருந்து பாராட்டுப் பெற்றது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சரியா? இருக்கா?
வருகைக்கும் வாழ்த்துககு நன்றிமா
ஆசிரியர் பா எழுதி ஆசிரியர் தின வாழ்த்து பகிர்ந்த தங்களுக்கும் எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களைப் போன்ற எண்ணமே எங்களுக்கும். கற்றுத்தருபவர் அது தெருவில் செல்லும் யாசகராக இருந்தாலும் ஆசிரியரே...அனைவருக்குமெ எங்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
வாங்க சகோ,
Deleteவாழ்த்துக்கள், தங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மைதான். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் அன்பின் நன்றிகள் பல.
Deleteவணக்கம்
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள், வருகைக்கு நன்றிகள் பல.
Deleteவணக்கம் !
ReplyDeleteஅருமையான வாழ்த்து இனிய ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாருங்கள், வணக்கம் பாவலரே,
Deleteவாழ்த்துக்கள், வருகைக்கு நன்றி.
'உளியின் வலிபொறுக்கும் உயர்கற்கள்'
ReplyDeleteதெய்வத்தினும் மேலானவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்!
தங்களுக்கும் வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.
Deleteஅருமை
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரியாரே
வாழ்த்துக்கள் சகோ, வருகைக்கு நன்றிகள் பல.
Deleteஅரியாத செய்திகள் அனைத்தையும்.... அவை அறியாத செய்திகள் அனைத்தையும்...என்றிருக்கவேண்டும் அல்லவா?
ReplyDeleteநல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் அய்யா,
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றிகள் அய்யா,
அரிய- மதிப்புடைய, அருமை,உயர்ந்த பொருளுடைய எனும் பொருளில் அரியாத செய்திகள் என்று சொல்லவந்தேன் அய்யா.
வாழ்த்துக்கள், தங்கள் அன்பின் கருத்துக்கு நன்றிகள் பல.
அரிய- மதிப்புடைய, அருமை,உயர்ந்த பொருளுடைய எனும் பொருளை அறிவேன். ஆனால் அரியாத என்பது எதிர்மறைப் பொருளைத் தருமோ என ஐயப்படுகிறேன். அரிதான என்பது இங்கு பொருந்தும் என நினைக்கிறேன். நன்றி.
Deleteவாருங்கள் அய்யா,
Deleteதங்கள் அன்பின் மீள் வருகைக்கு நன்றிகள் பல, அரிதான ,,,,,,, சரிங்கய்யா,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.
தாமத வருகைக்கு மன்னிக்கவும் தோழி.
ReplyDeleteதங்களுக்கு என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
வாருங்கள் தங்கள் வருகையே மகிழ்ச்சி தான், தங்களுக்கும் வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றிகள் பல.பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே,,,,,,
ReplyDeleteஎன் வலைத்தளத்துக்கு அழைக்கிறேன் வாருங்கள். போட்டியில் வெல்லுங்கள்
ReplyDeleteவருகிறேன் அய்யா, பங்கேற்க, நன்றி.
ReplyDeleteவணக்கம் பேராசிரியரே,
ReplyDeleteஇது வெண்பா எனின்,
“““““வித்தவன் எமக்கு இறைவன்““““
என்பது போல வரும் இடங்களிற் கவனம் வேண்டும்.
வித்தவன் எமக்கு எனும் வருமிடம், நேர் நிரை - நிரை நேர்
என வந்து விளம் முன் நிரையாய் நிரையொன்று ஆசிரியத்தளையாகும். வெண்பாவில் வெண்டளையன்றிப் பிறதளைகள் வருதல் இல்லை.
“எமக்கு இறைவன்“ என்பதும் குற்றியலுகரப் புணர்ச்சியுட்பட்டு, எமக் கிறைவன் “ என்று புணரும்.
“ எமக்“ என்பது ஓரசைச் சீராய்ப் புணர்ச்சியுட் கெட்டு நிற்கும்.
வெண்பாவில் ஈற்றடி ஈற்றிலன்றி வேறெங்கும் ஓரசைச்சீர் வருதல் இல்லை.
இதுபோல் தளைப்பிறழ்ச்சியுட் பட்ட இடங்கள் இன்னும் தங்கள் பாடலில் உள்ளன.
ஒருவேளை நீங்கள் இதனை வெண்பாவாக எழுத வில்லை எனில் என் கருத்தை விட்டுத்தள்ளுங்கள்.
பாடல்கள் அருமை.
நன்றி.
வணக்கம் ஐயா,
ReplyDeleteவெண்பா முயற்சித்தேன், தளைத் தட்டியதால் அப்படியே கவியாக எழுதிப்பேபானேன்.
தங்கள் வருகைக்கும்,,,, இது போன்ற தெளிவுறுத்தலுக்கும் என்றும் நன்றியுடையேன் நான்,
நன்றிகள் ஐயா,,,