திருச்சி செல்வோம்,,
நான் கல்லூரியில் என்
இருக்கையில் ஏதோ நினைவுகளுடன் அமர்ந்து இருந்தேன்.
முதல்வர் (ஆசிரியர் பயிற்சி
நிறுவனத்தின்) அழைப்பதாய் உதவியாளர் சொன்னவுடன், அவர்களைத் தேடிச் சென்றேன்.
அம்மா அழைத்தீர்களா? என்றேன்.
ஏன் இன்னும் மாணவ மாணவிகளுக்குச் சீருடை வாங்கவில்லை என்றார்.
இனி தான் வாங்க வேண்டும்மா
என்றேன்.
சுதந்திர தினத்திற்குள் முடிக்க
வேண்டும் என்றார்கள்.
சரிம்மா எப்பவும் ஆகஸ்ட்
மாதத்தில் முதல் வாரத்தில் தான் தருவோம், இன்னும் சேர்க்கையே முடியவில்லையே
என்றேன்.
பரவாயில்லை இன்று அல்லது
நாளைக்குள் வாங்கி கொடுத்து விடுங்கள் என்றார்.
இன்று வேண்டுமானாலும் செல்கிறேன் என்று கூறி புறப்பட
ஆயத்தமானேன்.
துணைக்கு மற்றொருவர் வந்தால் நலம்
என்றேன்.
சரி ராஜி மேடத்தை அழைத்துக்கொள்
என்றார். அவர்களிடம் சொல்லி சீருடை வாங்க சொல்வோம் வாருங்கள் என்றேன்.
அவர்கள் மகி, தஞ்சை வேண்டாம்
திருச்சி செல்வோம், அங்கு ஆடி தள்ளுபடி இருக்கு, விலையும் குறைவு என்றார்,
நான் உடன் இங்கேயும் தள்ளுபடி
உண்டே என்றேன். அங்கு இன்னும் குறைவு என்றார்கள். எனக்கு திருச்சி என்றதும்
மகிழ்வு தான்,,,,,,,,
சரி திருச்சி செல்வது என முடிவு
செய்து முதல்வர் அவர்களிடமும் தெரிவித்து அனுமதிப்பெற்று 12.50 க்கு ஒரு புகைவண்டி
தஞ்சை திருச்சி வழியாக செல்கிறது என்றதால் விரைவாக கிளம்ப ஆயத்தமானேன்.புகைவண்டி பிடித்து ஏறி அமர்ந்து திருச்சி வந்தது கூட தெரியவில்லை,, என்ன மகி விழித்துக்கொண்டே கனவா என்றதும் தான் நினைவிற்கு வந்தேன். ஏதோ பல நினைவுகள். இறங்க வேண்டிய இடம் வந்தது.
புகைவண்டி விட்டு இறங்கியதும், விரிவுரையாளர் உங்களை ஒரு இடத்திற்கு
அழைத்து செல்கிறேன் ஒரு பத்து நிமிடங்கள் தான் ஆகும் போகலமா? என கேட்டார். சரி
என்றவுடன் அங்கு சென்றோம்.
இன்று வெள்ளிக்கிழமை, பரணி
நட்சித்தரம் என்றார், நான் சிறு கோபத்துடன் உங்க வேலையை ஆரம்பித்து விட்டீர்களா?
என்றேன்.
இல்லடி,,,,,,, பத்து நிமிடம்
தான்,,,,,,
சரி வாங்க என நானும் பின்
தொடர்ந்தேன்.
அவர் எங்களை அழைத்துச் சென்றது
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள
மகிழ மரத்தடி
ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்திகள் திருக்கோயில்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சரி
வந்தாகிவிட்டது, அவர்களின் நம்பிக்கைக்காக நாமும் சுற்றிவோம் என சுற்றினேன்.
என்னுடன் வந்த விரிவுரையாளர் ராஜேஸ்வரி அவர்கள் சுவாமிகள் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
சுவாமிகள் வரலாறு, கேட்க நன்றாக
இருந்தது.
முன்பு திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில்
குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.
ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்
பிள்ளை என்பவர், குருநாதரிடம்
தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே
தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம்
பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு
நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு
கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி
ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை
ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை
சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கைக் கால்கள்
இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளைத் தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி
வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட்
வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.
இப்படி நிறைய இருக்கு என்றார்கள்.
குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை
பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு
திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று
ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம்
அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து
வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர்
மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர்,
புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி,
நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி
ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது.
வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும்
குருபூஜையும் நடந்து வருகிறது.
சம்ஹாரம் என்பது முருகன் செயல்,
இவரும் அந்நிலை தான், இவர் சொல்வது, ஒரு
மனிதன். பண்பட்ட மனிதனாக வாழ்வதற்குத் தனக்குள் இருக்கும் சத்ருக்களை (எதிரிகளை) முதலில் அவன்
சம்ஹாரம் செய்ய (கொல்ல) வேண்டும். நமக்குள் இருக்கும் காம, குரோத, லோப மோக, மத, மாச்சர்யங்களை
அழிக்கவேண்டும். இதுதான் நிஜமான சம்ஹாரம் என்று சொன்னவர் என்றார்.
உண்மை தானே,,,,,,,,
இன்று பரணி நடச்சத்திரம் சுடச்சுடச் அன்னதானம்
நடந்துக் கொண்டு இருந்தது, அங்கு வரும் அத்துனைப் பேருக்கும் உணவு அளித்தார்கள். நாங்களும் அமர்ந்து உண்டு, எங்கள் வேலையைத் தொடரக்
கிளம்பினோம்.
ஆஹா, நானும் இது போல் பதிவு எழுத
ஆரம்பித்துவிட்டேனோ,,,
என் சக விரிவுரையாளர்
கேட்டுக்கொண்டதற்காகப் பதிவிட்டேன்.
நம் பதிவர் தஞ்யைம்பதி அவர்களுக்கும்
நன்றி.
திருச்சியில் இந்த இடம் கேள்விப்பட்டதில்லை. உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.. அது சரி மாணவர்களுக்கு சீருடை வாங்கினீர்களா இல்லையா! :)
ReplyDeleteவாருங்கள் வணக்கம்,
Deleteதங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சியே, கடைசி வரியில் எங்கள் வேலையை தொடர சென்றோம் என்றேனே,
வருகைக்கு நன்றி.
ஆகா..
ReplyDeleteகம்புக்குக் களை எடுத்த மாதிரியும் ஆயிற்று...
அத்தோடு தம்பிக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆயிற்று!..
சீருடையோடு நல்லபடியாக ஊர் வந்த சேர்ந்ததற்கு குருநாதருக்கு நன்றி சொல்லியாயிற்றா!..
வணக்கம்,
Deleteவாருங்கள் எல்லாம் உங்களால் தான், பழமொழி அருமையாக இருக்கு,
என்னை முழுவதுமாக மாற்றாமல் விடமாட்டீர்கள் போல் இருக்கே,,,,
தங்கள் பதிவுகளைப் படித்ததால் வந்த விளைவு இது. அதனால் தான் பதிவில் தங்களுக்கு நன்றி சொன்னேன்.
தாங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அந்த இடத்தை.
வருகைக்கு நன்றிகள் பல
ஆன்மீகம் ஒன்றும் அருவெறுப்பான விஷயம் அல்ல! அதனுள் மூழ்கையில் முத்துக்கள் கிடைக்கும்.நாத்திகர்களும் அதன் அருமையை உணர்ந்துள்ளனர். இந்த ஆலயம் இதுவரை கேள்விப்பட்டது இல்லை! திருச்சி வரும் சமயம் சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteவாருங்கள் தளீர்,
ReplyDeleteநான் எப்பவும் ஆன்மீகம் அருவெருப்பானது என்று சொல்லவில்லையே,,,,,,
நான் சரியாக சொல்லாமல் விடுவேனோ,,, என்று தான்,
சரி,,,,,,, நானும் போவேன் கோயிலுக்கு,,,,,,
திருச்சி வரும்போது சென்று பாருங்கள். நன்றி.
This comment has been removed by the author.
ReplyDeleteபக்கம் தான்... சென்று வர வேண்டும்... நன்றி...
ReplyDeleteவருகைக்கு நன்றி டிடி சார்,
Deleteஇந்த கோயிலுக்கு போயிட்டு துணி வாங்க போகும் போது ஏதும் எக்ஸ்ட் ரா டிஸ்கவுண்ட் கிடைக்க கடவுள் ஆசி ஏதும் வழங்கினாரா அது பற்றிய விபரம் இல்லையே
ReplyDeleteவாருங்கள் மதுரையாரே,
Deleteஅது ஒரு பெரிய கதை, அடுத்த பதிவாக்கனும். வருகைக்கு நன்றி.
vanakkam madam!
ReplyDeletepala naatkalaaka ungal pathivil pinnoottam ida ninaithum ida mudiyaamal poochu kaaranam enna enakku pathivukal purinjaa thaane:)
naan paartha varai ungal tamil thuya tamilil irupppathalum kavithaiyaaka iruppathalum enakkum athukkum rompa thuram:)
hahaha ini thodarkiren madam.
வாருங்கள் மகேஷ்,
Deleteஎன் பெயரை இப்படி எழுதியதில்லை, உங்களுக்கும் அதற்கும் ரொம்ப தூரமா?????
தொடருங்கள், வருகைக்கு நன்றி.
எனக்கு இதை படித்தபோது ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு வினாடிகள் என்று கேட்கத் தோன்று கிறது. பத்து நிமிடத்தில் சென்று கதை கேட்டு உண்டு திரும்ப முடிந்ததா.?வாழ்த்துக்கள். நான் பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே அவர் இயற்கை எய்தி இருக்கிறார். செவி வழி கேட்டு வரும் செய்திகள் நிறையவே சிதைபட வாய்ப்பிருக்கிறது.
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteஅப்படித் தான் போகும் வரை தான் நேரம் எல்லாம், பிறகு நாம் தான் கிளம்பும் நேரத்தை யோசிக்கனும்.
உண்மை தான் ஐயா, செவி வழி செய்தி சிதைப்பட வாய்ப்பு அதிகம் தான். ஆனால் அவர்களின் நம்பிக்கை என்று ஒன்று இருக்கும் வரை,,,,,,,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
வணக்கம் சகோ போலீஸ் அதிகாரி குருநாதரை மீண்டும் கோர்ட் வளாகத்துக்கு கொண்டு வந்து வைத்தது எந்த வகையில் நியாயம் தனக்கு கை கால் விளங்காமல் போனதால்தானே சட்டம் இப்பொழுது மட்டும் அனுமதி கொடுத்து விட்டதா தனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா இருங்க நான் போயி நண்பர் வலிப்போக்கரை அனுப்பி வைக்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் சகோ,
Deleteஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்? நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு,
வருகைக்கு நன்றிகள்.
காணும் காட்சிகளை எல்லாம் பதிவுக் கண் கண்டு நோக்குவது என்பது இதுதானோ,
ReplyDelete///ஒரு மனிதன். பண்பட்ட மனிதனாக வாழ்வதற்குத் தனக்குள் இருக்கும் சத்ருக்களை (எதிரிகளை) முதலில் அவன் சம்ஹாரம் செய்ய (கொல்ல) வேண்டும். நமக்குள் இருக்கும் காம, குரோத, லோப மோக, மத, மாச்சர்யங்களை அழிக்கவேண்டும். இதுதான் நிஜமான சம்ஹாரம் என்று சொன்னவர் என்றார்.///
அருமை
நன்றிசகோதரியாரே
வாருங்கள் சகோ,
Delete///காணும் காட்சிகளை எல்லாம் பதிவுக் கண் கண்டு நோக்குவது என்பது இதுதானோ///,
இப்பெல்லாம் அப்படித்தான் தோன்றுகிறது.
வருகைக்கு நன்றி சகோ,
பணியாற்றத் தொடங்கிய காலம் முதற்கொண்டு (1980களின் ஆரம்பம்) இன்றுவரை எங்கு சென்றாலும் அங்கு அருகிலுள்ள கோயிலோ அல்லது புகழ் பெற்ற இடங்களோ இருப்பின் தெரிந்துகொண்டு அங்கு சென்று பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதன் பயன் பெரும்பாலான தேவாரத்தலங்களை தரிசித்த நிறைவு. நன்றி.
ReplyDeleteவாருங்கள் ஐயா,
Deleteஆம். ஐயா, இது கூட நல்லாதான் இருக்கு,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா.
இது மாதிரியெல்லாம் நடந்து இருக்குமா :)
ReplyDeleteதெரியலையே பகவானே,
Deleteவருகைக்கு நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteபள்ளி பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் குருவே சென்ற வேலையை மறந்து குருநாதரை தரிசிக்க சென்றார்களா...??? நல்லா இருக்கிறது .ஞாயம் குருவாக பதவி வகிப்பவர்கள்தான் முதலில் மத, மாச்சர்யங்களை அழிக்கவேண்டும்
ReplyDeleteவாருங்கள் வலிப்போக்கரே,
Deleteஎமக்கு ஒன்றும் தெரியாதுப்பா,,,,,
வருகைக்கு நன்றி.
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடி
ReplyDeleteஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்திகள் திருக்கோயில். தரிசனம் கிடைத்தது.
பார்த்தது இல்லை. பார்க்க வேண்டும்.
வாருங்கள் வணக்கம்,
Deleteவாய்ப்பு கிடைக்கும் போது பாருங்கள்.
வருகைக்கு நன்றி.
புதிய தகவல்....இதுவரை அறிந்ததில்லை...நன்றி சகோதரி!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா
Deleteவணக்கம்
ReplyDeleteதகவலை மிக அருமையாக பதிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ,
Deleteஎனக்கும் புதிய தகவல். கேள்விப் பட்டதில.லை.
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
Deleteஇப்படியான விடயங்கள் இறைபக்தியை நிச்சயம் கூட்டும். அதுவுமில்லாமல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இவை. அளவாகவும் இருக்கிறது பதிவு. வசிப்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் அதிகம் என்றால் அப்புறம் வருவோம் என்று போனால் திரும்ப வர சில சமயம் முடியாமல் தவற விட வேண்டியதாகி விடும் அல்லவா. ரொம்ப அழகான நடையில் எழுதியுளீர்கள். நன்றிம்மா !
ReplyDeleteவாங்கம்மா இனியா,
Deleteதங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ, அப்படியானால் சில சமயங்களில் தெரிந்ததைப் பகிர்கிறேன்.
நானும் கொஞ்சமாகத் தான் எழுதனும் என்று நினைக்கிறேன்.
அப்புறம் அது என்ன அழகான நடை? அதான வேனாம் என்கிறது,
என் நடை (எழுத்து) சரியில்லை, வாக்கியம் சரியில்லை, மொத்தத்தில் எதுவும் சரியில்லை என்று நானே கொட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் நல்லதிற்கு தானே,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா.
This comment has been removed by the author.
Deleteவாங்க இனியா,
Deleteதங்கள் மீள் வருகைக்கு நன்றிம்மா,,,
புதிய தகவல்,இந்தப்பதிவு வெளியான அன்று வந்த செய்தி....திருச்சி இந்தியாவிலேயே இரண்டாவது சுத்தமான நகரம்
ReplyDeleteவாருங்கள் அய்யா,
Deleteஅப்படியா மகிழ்ச்சி தான்.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் பல.
மிகவும் அழகான இடம்....தீயணைப்பு வண்டிகளுக்கு நடுவே உள்ள கோவில்...
ReplyDeleteவாருங்கள் தாங்கள் பார்த்தது மகிழ்ச்சியே,
Deleteவருகைக்கும் தகவலுக்கும் நன்றிகள் பல.
திருச்சி பற்றிய தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றிம்மா.
Deleteவணக்கம் பேராசிரியரே,
ReplyDeleteஇந்தக் கோயிலில் இருந்து உங்கள் கல்லூரிக்கும் கொடிமரத்து மூலைக்கும் உள்ள தூரம்தான் என் வீடு.
கல்லூரிக்கும் அரண்மனைக்கும் இடையே உள்ள தூரம்தான் நான் பணியாற்றும் இடம்.
( அரண்மனையிலும் ஒரு தீயணைப்பு நிலையம் இருக்கிறது என நினைக்கிறேன் )
என் ஊர்க்கு என்றும் வரவேற்பு.
நன்றி.
வணக்கம் அய்யா,
Deleteதங்கள் வருகைக் கண்டு உளம் மகிழ்ந்தேன்.தகவலும்,,,,,,
தங்கள் ஊர் என்றும் மக்களால் வரவேற்கப்படும் ஊர் தான். இப்போ 2 வது சுத்தமான நகரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி அய்யா.
நீண்ட நாட்களாகவே திருச்சியில் உள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்திகள் திருக்கோயில். போக வேண்டும் என்பது எனது ஆசை. உள்ளூரில் இருந்தும் போக இயலவில்லை. உங்கள் பதிவு அந்த ஆசையை இன்னும் தீவிரப் படுத்தி உள்ளது.
ReplyDeleteவணக்கம் அய்யா,
Deleteசென்று வாருங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
சை வநெறியைச்சேர்ந்தவர்,தாண்றீஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தவர் சிரிதுகாலம்வாதிரிப்பட்டிகிராமத்தில் வாழ்ந்தார்இருதியாக
ReplyDeleteதிருச்செந்தூர்சென்று அங்குசமாதியானார் என்பது நான் அறிந்தது, சுருக்கமாகவும் விளக்கமாகவும் செய்திகள்தந்தீர் சகோதரி என்வலைப்பக்கம்வந்துகருத்திட்டமைக்கு நன்றிமேலும்வாதிரிப்பட்டியிலும் தான்றீஸ்வரத்திலும் கோவில் உள்ளதுஒவ்வொரு பரணியிலும் அன்னதானமும் நடைபெறுகிறது.
வாருங்கள்,
Deleteகூடுதல் தகவலுக்கு நன்றிகள்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
இது என்ன .. கடை பிள்ளையார் .. வழி தேங்காய் கதை போல் உள்ளதே..திருச்சியை நினைவு படுத்தியதற்கு நன்றி..
ReplyDeleteவாருங்கள், வணக்கம்,
Deleteவழிபிள்ளையார், கடைத்தேங்காய்,,,,,,,, நல்லா இருக்கே,
வருகைக்கு நன்றிகள்,,
Nice info...I will visit the places when i go trichy..Thank you.l
ReplyDeleteவாருங்கள்,வணக்கம்,
Deleteஆஹா அப்படியா, மிக்க மகிழ்ச்சி,
நன்றிகள் பல.
புதிய தகவல் திருச்சி போகும் போது தரிசிக்க வேண்டியதுதான் .
ReplyDeleteவருகைக்கு நன்றி திரு தனிமரம் அவர்களே
ReplyDelete