Friday 29 April 2016

மெய்ப்பொருள் காண்ப தறிவு

  மெய்ப்பொருள் காண்ப தறிவு     

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
                          மெய்ப்பொருள் காண்ப தறிவு

 திருக்குறள் பதிவு இல்லீங்க,,,,

  எனக்கு வாட்ஸ்அப்பில் வந்த தகவல்,, தகவல் நல்லா இருக்கே என்று சரிபார்க்காமல் நான் சிலருக்கு அனுப்பிவிட்டேன். அதில் நம் வலைப்பூ பதிவர் சகோதரர் திரு கரந்தை ஜெய்குமார் அவர்களுக்கும் தான். அவர்கள் தவறான தகவல் சகோதிரியாரே என்று சொன்னதும்,, ஆஹா இப்படி பன்னிட்டோமே என்று மனம் வருந்தியது. உடனே ஆம் சகோ நான் இப்போ தான் சரிபார்த்தேன். தங்கள் தகவலுக்கு நன்றி என்று பதில் அனுப்பினேன். பிறகு தான் இந்த பதிவு,,, எழுத நினைத்தேன்.

  சரி, தகவல் இது தாங்க
                                                 
       நோட்டா ஓட்டு 35% க்கும் மேல்  பதிவாகி இருந்தால் போதுங்க நீங்க நினைக்கிறது நடக்குங்க, அதாங்க அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன்.  எப்படி எனில் நோட்டா ஓட்டு 35% க்கும் மேல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது,,

   மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,அதுமட்டும் இன்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட முடியாது,,,,,,,,,,

      அதன்பின்னர் ஆறு மாதக்காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படும்,,,,,,,,, பிறகு தேர்தல் வரும் அதில் புதிய நல்லவர்கள் வருவார்கள்,, பின் நல்லாட்சி நடைப்பெறும் என்று,,,

   இதுதாங்க செய்தி,, இந்த செய்தி எனக்கு பிடித்திருந்ததால் உடனே பலருக்கும் அனுப்பிட்டேன். நோட்டா என்றால் என்ன? என்று கூட யோசிக்காமல்,,,
அப்புறம் என்னங்க செய்தி நல்லா இருக்கா இல்லையா???

   சரி விசயத்திற்கு வருவோம். நோட்டா என்பது 100% வாக்கு பதிவாகனும் என்பதற்கு மட்டுமே,,

     எனக்கு யாரையும் பிடிக்கல ஓட்டுப்போட மாட்டேன். அன்று ஒரு நாள் விடுமுறையயை நல்லா கழிப்பேன் என்று வீட்டுக்குள்ளே இருக்காமல்,, வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கனும் என்பதற்கு தான்,,, இந்த நோட்டா.

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

                                                                    வணக்கம் படம் க்கான பட முடிவு


           


28 comments:

  1. மெய்ப்பொருள் எங்களுக்கும் காண்பித்ததால் நன்றி சகோ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  2. சரி சகோ நோட்டு வாங்கிட்டு நோட்டாவுக்கு வாக்களிக்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சகோ, எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்லாம், எவ்வளவு பேர் கொடுத்தாலும் வாங்கிக்கலாம், ஆனா ஓட்டு நோட்டாவுக்கே,,
      வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  3. இது உண்மையாய் இருந்தால் நானும் மகிழ்ந்து இருப்பேனே ,ஐயோ பழம் போச்சே :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் பகவானே,, அந்த ஆசையில் தான் அவசரமாக அனுப்பிவிட்டேன். வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  4. இந்த மெய்ப்பொருள் காணும் அறிவு சிலருக்கு தாமதமாவது இயற்கைதான்.

    கோ

    ReplyDelete
    Replies
    1. ஆம் அரசே, தாமதம் தான்,, வருகைக்கு நன்றிகள் அரசே,,,

      Delete
  5. அனைவரும் ஓட்டுப் போடா வேண்டும் என்று சொல்வது நல்ல விஷயம். எல்லாருமே நோட்டாவுக்கே போட்டு விட்டால் எப்படி இருக்கும்? பொதுவில் வைத்திருக்கும் அண்டாவில் ஆளுக்கு ஒரு டம்ளர் பால் ஊற்றச் சொன்னான் மன்னன் ஒருவன். எல்லோரும் பால் கலப்பாங்க, நாம மட்டும் ஒரு டம்ளர் தண்ணிதானே கலக்கப் போறோம், யாருக்குத் தெரியப் போகிறது என்றெண்ணி, என்று நினைத்து ஒரு ஊரே ஒரு பெரிய அண்டாவில் தண்ணீர் ஊற்றியது போல!

    ReplyDelete
    Replies
    1. //ஓட்டுப் போடா வேண்டும்//

      போடவேண்டும் என்று படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்!

      Delete
    2. எல்லோரும் நோட்டாவுக்கே போட்டாலும் நல்ல விடயம் தானே,, ஒரு ஓட்டுக்கு கதையா?? அதுசரி அப்படியே நடந்தாலும் நல்லது தானே ஸ்ரீ,,,
      மன்னிப்பெல்லாம் ,,, பெரிய வார்த்தை,,
      வருகைக்கு நன்றி ஸ்ரீ.

      Delete
  6. நோட்டா பற்றித் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி மகி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ,

      Delete
  7. தேவை. அனைவரும் உணரும் வண்ணம் பகிர்ந்த முறை நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  8. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்!..

    ReplyDelete
    Replies
    1. காப்பாற்ற முடியுமா? வருகைக்கு நன்றிகள்.

      Delete
  9. 'நோட்டா' இற்கு ஓட்டுப் போட்டு
    நாட்டில் மாற்றம் விதைத்து
    நன்மை ஈட்டலாம் வாங்க!

    ReplyDelete
    Replies
    1. மாறுமா? தெரியல,, வருகைக்கு நன்றிகள்

      Delete
  10. பல தடவைஓட்டு போட்டே மாற்றம் வராதப்போ...நோட்டோவில் போட்டா மட்டும் மாற்றம் வந்துவிடுமா???... ஒரு வேளை யாருக்குமே ஓட்டு போடாமல் இருந்தால் கண்டிப்பா...மாற்றம்.. வரும் என்று எதிர்பார்க்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் வலிப்போக்கரே,, யாருக்கும் போடாமல் இருந்தால் வரும்,, இப்படி நான் சொன்னேன் என்று எங்கள் வீட்டில் போட்டு கொடுத்துடாதீங்க , வருகைக்கு நன்றி.

      Delete
  11. நோட்டோ பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தந்த பதில் தான் சகோ, வருகைக்கு நன்றி.

      Delete
  12. Replies
    1. ஏன் இவ்வளவு சலிப்பு டிடி சார்,,, வருகைக்கு நன்றி

      Delete
  13. நோட்டோ பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  14. இது உண்மையாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!!! ஆனால் இன்னும் நோட்டாவிற்கு பவர் வரவில்லையே....

    ReplyDelete