Monday 28 September 2015

வானம் பாடியாய் பறந்தாலும்..........

                 வானம் பாடியாய் பறந்தாலும்..........
                                                                                     
                                                  student community க்கான பட முடிவு

வளரும் எனது இளைய சமூகமே
வருங்கா லதூண்களே வணங்கி வாழ்த்தி
சொல்வதைச் சிந்தைக் கொண்டு
சிந்திப்பீர் கொஞ்சம் இளைஞர் களே

புறம்பே சுவோரை பறம்தள் ளிடுங்கள்
புதிய புவியைப் உருவாக்கு  புன்னகை
சிந்தி சுற்றம் காத்தால்
தந்தையாய் யாவருந் தலைவனாய் நீங்களே

 சாதி மதவெ றியினை வளர்க்காத
சந்ததி வளர்ந்திட சபதம் செய்து
அறிவை வளர்த்திடும் நேரம்
அலைந் துதிரியா தீர்கள் வீணே

தீமைச் செய்யாமல் தீயோர் ஒதுக்கி
திரையரங்  குவாயிலே  தினம்நில் லாது
முன்னோர் பாதைச் சென்று
முதியோர்க் குநாளும் உதவிடுங் களே

பெற்ற வரைஇறு திவரைக் காத்து
பெரியோர் மகிழ நடந்தி டுங்கள்
முடிந்திட்ட காலமும் திரும்பா
முடிந்த பருவமும் இனிவா ராதே

வானம் பாடியாய் பறந்தாலும் நீங்கள்
வாழ்க்கைப் பாதை அறிந்து  வாய்மையோடு
வாழ்ந்தால் என்றும் உங்கள்
வாழ்வில் வசந்தம் வீசி டுமே
                         (ஆசிரியப்பா) 


    இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.

     
            வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-   
இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 

   என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.

37 comments:

  1. பரபரவென்று, சுறுசுறுப்பாக அனைத்து வகைப் போட்டிகளிலும் கலந்து கொள்கிறீர்கள். வெற்றிக் கனியைப் பறித்திட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீ வணக்கம்,
      போட்டி மட்டும் தான், ,,,,,,,,,
      தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  2. வணக்கம் பேராசிரியரே!

    இலக்கணத்தை அதிகமாகப் பார்த்திருக்கிறீர்கள்.

    போட்டியில் வெற்றிபெற எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியரே என்றதாலோ,,,,
      கடைசி வரி சும்மா பேச்சுக்கு தானே,,,,,,,,
      போட்டியெல்லாம் இல்லை ஐயா,,, எழுதி பார்த்தேன்,,,
      தங்கள் வருகைக்கும் (பல பதிவுகள் விட்டு) வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா,,,,,,,,,,,

      Delete
  3. படிக்கும் போதே - வசந்தம் வீசுகின்றது!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தாங்கள் தரும் ஊக்கம் தான்,
      தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றிகள்.

      Delete
  4. அன்புள்ள சகோதரி,

    பேராசிரியரே ஆசிரியப்பாவில் பாடி அசத்தி விட்டீர். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    த.ம.1.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  5. முடிந்திட்ட காலமும் திரும்பா
    முடிந்த பருவமும் இனிவா ராதே எத்தனை உண்மை

    அருமையான கவிதைம்மா வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்களம்மா, நலமா?
      இப்போ தலைவலி பரவாயில்லையா? உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு மெதுவாக படிக்கலாம்.
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  6. அருமை முனைவரே போட்டியில் வெற்று உறுதி வாழ்த்துகளுடன்
    சகோ ஐந்தாவது வரியின் தொடக்கம் பறம் பேசுவோரை சரிதானா கவனிக்க...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      தாங்கள் சொன்வுடன் சரிசெய்து விட்டேன் சகோ,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  7. போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மதுரைக்காரரே

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தளீர்,,,,,

      Delete
  9. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  10. வானம் பாடியாய் பறந்தாலும் நீங்கள்
    வாழ்க்கைப் பாதை அறிந்து வாய்மையோடு
    வாழ்ந்தால் என்றும் உங்கள்
    வாழ்வில் வசந்தம் வீசி டுமே ஆஹா! கவிதையிலும் வசந்தத்தின் வாசனை வீசுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மகி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்களம்மா, தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  11. அருமை... அருமை...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ,

      Delete
  12. அருமை.....தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வலிப்போக்கரே
      நலமா?

      Delete
  13. மனதில் வசந்தம் வீசச் செய்தது உங்கள் கவிதை :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜீ,,,,,,

      Delete
  14. நம்பிக்கையூட்டும் கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா,,

      Delete
  15. வாருங்கள் டி டி சார்,
    அம்மாடியோ எம்புட்டு வேகம்,,,
    நன்றி நன்றி ,,,,,,,,

    ReplyDelete
  16. வாழ்ந்தால் என்றும் உங்கள்
    வாழ்வில் வசந்தம் வீசி டுமே
    அருமையான கவிதை, வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  17. அருமையான கவிதை, வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழி,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ,

      Delete
  18. வசந்த வாழ்விற்கு வழிகாட்டும் வரிகள் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா

      Delete
  19. நல்ல கவிதை, திறமைகள் நிறைந்து இருக்கிறது உங்களிடம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வாழ்த்திற்கு நன்றிகள் பல

      Delete