Monday 14 September 2015

சரியா சொல்லுங்கள் ,,,,,,,,,



                          girl phone photo க்கான பட முடிவு
ஹலோ 

வணக்கம்,

நான் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்,

ம்ம்

சரி சரி

இந்த சமாளிப்பெல்லாம் வேண்டாம்,,,

சரியா சொல்லுங்கள் என் பெயருடன்,

அய்யோ எப்படிம்மா இனியாம்மா இவ்வளவு சரியா,,

ஆச்சிரியம் தான், என்னால் நம்பவே முடியல?

போங்க, நீங்க சரியா சொல்ல மாட்டீங்க, நான் கொஞ்ச நேரம் சுத்தலாம் என்று நினைத்தேன்,,,,,,,,

ஆமாம் இனியாம்மா,,

நான் பாலமகிபக்கங்கள் மகேசுவரிபாலச்சந்திரன் தான்,

எப்படி இருக்கீங்க, நலமா?

நானா? 

நல்லா இருக்கேன், 

ம்ம்,,,,,,,,,, 

குட்டீஸ் இருவரும் நலம்,

ம்ம்ம், 

என்னம்மா,

அவரா? வீட்டில் அனைவரும் நலம்.

அங்கு அனைவரும் நலம் தானே??

சரிமா?

நான் தங்களுக்கு ஒரு தகவல் சொல்லத்தான் போன் செய்தேன்.

அதாம்மா,,,
            
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழா, தாங்கள் அறிந்ததே,,,

இப்போ
                

இன்னொரு விழாவும் அங்கே,

போட்டி வச்சிருக்காங்க


“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!


ஆமாம் 

கட்டுரை 

கவிதை

என,,,,,,,,, 

போட்டிக்கு வெகுமதியும் உண்டு.

 நீங்க இன்னும் விவரமாக அறிந்துக்கொள்ள.

 blogersmeet2015@gmail.com   பாருங்கள்.

நீங்கள் கலந்துக்கொள்ளத்தான் போன் செய்தேன்.

அம்மா அப்புறம் மறந்துட்டேன், தங்கள் தோழி இளமதியார் அவர்களிடமும் சொல்லுங்கள்.

ம்ம் ,,,,,,, ஆமாம்,

எல்லோருக்கும் போன் அடிக்க வேண்டியது தான்,,

முக்கியமான செய்தியைச் சொல்லாமல் விட்டேன் பாருங்கள்,

 தங்களிடம் பேசிய மகிழ்ச்சியில்,

என் சகோ,திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
                     [Jayakumar+1.jpg]
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு விழாவில் தம் 
                     
நூல் ஒன்றினை வெளியிட இருக்கிறார்கள்.

தெரியுமா? 

இருந்தாலும் நான் சொல்ல வேண்டும் இல்லையா?

இன்னும் பலர் நூல் வெளியிட உள்ளார்கள்.

சரிம்மா,,,,, 

என்னது? 

போனை வைச்சிடவா? 

கவிதை எழுதப்போறீங்களா?

அய்யோடா போங்க உங்களோட ’கா,,,,,,,,,,, 

(இதாங்க, யார் எனத் தெரியாமல் பதிவுகளின் வழி உறவாகி பேசியது போல் கற்பனையில் பேசி,,,,,,,,,,,

நல்ல உறவுகளைத் தந்த இப்பதிவர்களின் சந்திப்புக்கு போக,

 நான் ரெடி,,,,,,,, 

நீங்க ரெடிதானே!
                                               flower images க்கான பட முடிவு


                                            நன்றி புகைப்படங்கள் கூகுள்

55 comments:

  1. வித்தியாசமாச் சொல்லிட்டீங்க! அருமை

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா வருகைக்கு நன்றிகள்.

      Delete
  2. அனைத்து போட்டியிலும் தாங்கள் பங்கு பெற வேண்டும் என்று விரும்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் டிடி சார், முயற்சிக்கிறேன், தங்கள் அன்பின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  3. கற்பனையிலா பேசுனீங்க ? அய்யோ அய்யோ நான் கூட நெசமோனு நெனைச்சிட்டேன் இதுவும் ஸூப்பருங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ, கற்பனைதான்,,, என்னை இது ஒன்றும் கிண்டல் இல்லையே,,, தங்கள் அளவுக்கெல்லாம் எமக்கு வராது,,,,,
      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  4. ஹை!!! இத இப்படியும் சொல்லலாமா!!! சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்களம்மா, நல்லா இருக்கா? நீங்க சொன்னால் சரி,
      வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  5. நானும் ரெடி ,சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. அப்படியா, மகிழ்ச்சி,
      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  6. Replies
    1. தங்கள் பக்கத்தை விடவா?,
      வருகைக்கு நன்றி.

      Delete
  7. ஆஹா!! இப்போவே களை கட்டுதே போட்டிகள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?,,,
      தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  8. ஆஹா..! வித்தியாசமாக போட்டியை பற்றி அனைவரும் அறிய அறிவித்துவிட்டீர்கள்.
    அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோ,

      Delete
  9. அட! வித்தியாசமாகப் போட்டியைச் சொல்லிட்டீங்க! அருமை! நீங்க பேசி முடிக்கறதுக்குள்ள இனியா கவிதை எழுதப் போயிருப்பாங்க இல்லை இல்லை எழுதியே முடிச்சு அனுப்பியும் இருப்பாங்க....

    கவிதைக்களம் செம போட்டியா இருக்கும்.....அதுவும் மரபுக் கவிதைக்களம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா,
      ஆமாம் அப்படியும் இருக்கும், என்னுடன் பேசிக்கொண்டே எழுதியிருப்பார்கள், ஊமைக்கனவுகள் தான் ஆளையேக் காணோம்,
      அனைவரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  10. வித்தியாசமான அணுகுமுறை
    பிரமாதம் சகோதரியாரே
    என் நூலினையும் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகோதரியாரே
    போட்டிகளில் கலந்து கொள்ளவும்,
    வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ,
      அது என் கடமை,
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றிகள் பல.

      Delete
  11. இவங்கள் எல்லாமே இப்படித்தான்!..
    எதுவும் பிடி கொடுக்க மாட்டாங்கள்!..

    அடுத்து எந்த மாதிரி பதிவு போடப் போறாங்க..ங்குறதை யூகம் பண்ணவே முடியாது!..

    உரையாடல் மூலமாவே உறவுகள் எல்லாத்தையும் அசத்திட்டாங்க!..

    சொல்லும் போல, இந்நேரம் - அந்தப் பக்கம் இனியா அவர்கள் கவிதை எழுதி முடிச்சிருப்பாங்க!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வாருங்கள்,
      அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,,,,,,,,
      இதனை வேறு மாதிரி வடிவமைத்திருந்தேன், ஆனால் நல்லா இருக்குமா? ரொம்ப பெரிதாக போர் அடிக்குமோ படிக்க என்றெல்லாம் நினைத்து, மாற்றி விட்டேன்,
      அதில் ஒட்டகம் எல்லாம் வாங்கிய உங்களையும்,,,,,,
      போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  12. ஓ.. தோழி இனியாவோடு தொலைபேசியில்
    பேசினிங்களோ சகோதரி!..:)

    அருமை! அருமை!.. ஆனா எங்கே அவங்கள இன்னும்
    இங்கே காணோம்!..
    நல்ல சிந்தனையும் செயற்பாடும் சகோதரி! கற்பனை அற்புதம்!
    என்னையும் உங்கள் பதிவில் இணைத்து கொண்டமைக்கு
    உளமார்ந்த நன்றி சகோதரி!

    போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்களம்மா, நலமா?
      ஆம் கற்பனையில்,,,,,, உங்களோடும், வடிவம் மாற்றிவிட்டேன்.
      தாங்களும் போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்,
      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகளம்மா,,,

      Delete
  13. வணக்கம் பேராசிரியரே !

    அட நானும் உண்மையாப் பேசினீங்களோ அப்படின்னு நெனச்சுட்டு வந்தா கடைசியில் கற்பனை ... ம்ம் அருமை அருமை வலைப்பதிவர் சந்திப்பு அர்ப்புதமாய் அமையட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீர் ஆளன் ஐயா,
      வணக்கம், ஆம், தங்கள் அன்பின் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  14. அடேங்கப்பா! உங்களுக்கு நூறு வயது மகிம்மா உங்களை நினைச்சிட்டே இருந்தேன். உடனும் கோல் பண்ணிட்டீங்களே...கில்லாடி ... உங்களோடு பேசியதில எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்திச்சு தெரியுமா ....என்ன ஒரு கற்பனை wow பேராசிரியர் இல்ல மீன்குஞ்சுக்கு யாரும் நீன்ஹ்டக் கத்துக் கொடுப்பாங்களா என்ன ? உண்மையில் அற்புதம் கொஞ்சம் busyம்மா உடல் நிலையும் கொஞ்சம் சரியில்லையா அதான் என்னை மன்னிச்சுக்க தாயே ...... ஆமா இப்போ இன்னும் வருத்தமாக உள்ளது இந்த அன்புள்ளங்களை எல்லாம் சந்தித்து மகிழ இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியலையே என்று ... எல்லோரும் எமையும் நினைவில் வைத்து கலந்து கொண்டு சிறப்பியுங்கள் காணொளியில் நாமும் கண்டு மகிழ்கிறோம்.
    ம்..ம் கவிதைப் போட்டியில் பாவலர்கள் தான் கலக்கணும் அந்தக் கடலில் நான் கலந்தால் காணமல் போய்விடுவேன் ஹா ஹா .....பாவலர்களே என் சார்பாகவும் நீங்களே கலந்து சிறப்பியுங்கள் முடிந்தால் எழுதி அனுப்புகிறேன். போட்டிகள் நிகழ்சிகள் அனைத்தும் சிறப்புற நடந்தேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! இத்தனை வலைபதிவர்களுள் என்னையும் பொருட்டாக எண்ணி அழைத்த அன்பிற்கு ஈடு இணை இல்லைம்மா தலை வணங்குகிறேன்மா.நன்றி !....... அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றி நன்றி ! தாமதத்திற்கு மன்னிக்கவும் ...! அதான் வந்திட்டேன்ல ...ஹா ஹா ....

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா, வணக்கம், நலந்தானே,
      உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள், உள்ளத்தின் கற்பனையின் வெளிப்பாடு தான்,,,,
      வருத்தம் ஒருநாள் தீருமே,,,,,,,நம்புவோம்.
      தாங்கள் எப்ப வந்தாலும் மகிழ்ச்சியே, மன்னிப்பெல்லாம் வேண்டாம்மா,, உடல்நனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.
      போட்டியில் வெற்றிப்பெற என் வாழ்த்துக்கள், நன்றி.

      Delete
  15. வித்தியாசமான பாணி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்.
      தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  16. வித்தியாசமாக போட்டி பற்றிய அறிவிப்பு. பாராட்டுகள்.

    போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்.
      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  17. அழகான அறிவிப்பு
    அருமையான அறிமுகம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், வணக்கம்.
      வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  18. சூப்பரான அறிவிப்பு...
    தங்களைக் காணும் ஆவலில் காத்திருக்கிறோம் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா, நானும்,,, வருகைக்கு நன்றிமா,

      Delete
  19. வித்தியாசமான ..அசத்தல் அறிவிப்பு... இது கற்பனை அல்லவே அல்ல... பதிவர் விழாவும்..இலக்கிய போட்டியும் நடப்பது நிஜமாக இருக்கும்போது அழைப்பது மட்டும் எப்படி கற்பனை ஆகும்...

    ReplyDelete
  20. வாருங்கள் வலிப்போக்கரே,
    நிகழ்வுகள் நிஜத்தின் போக்கைச் சொன்னது நிழல்,,,,,,,,,
    நலமா? தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  21. அடடா! தாமதமாய் வந்துவிட்டேன்! புதுமையான முறையில் விழா பற்றிய தகவல் சொன்னதற்கு சபாஷ் மகி! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  22. வாருங்கள்,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிமா,

    ReplyDelete
  23. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க,,,
      வருகைக்கும் நன்றிகள்.

      Delete
  24. இத்தனை கற்பனை வளம் உள்ளவர்கள் என் சிறு கதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி ஐயா,
    முயற்சிக்கிறேன் ஐயா,,,,

    ReplyDelete
  26. புதிய பாணியில் ஒரு கற்பனைத் தொலைபேசி உரையாடலில் அழகாக செய்திகளைச் சொல்லியிருக்கும் தங்களின் தனித்திறன் அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் அய்யா

      Delete
  27. பின்பற்றும் பெட்டியைச் சொடுக்கினால் உள்ளே அனுமதி கிடைக்கவில்லையே ஏன்? சரிசெய்ய வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சரிசெய்யிகிறேன் ஐயா,,,,
      தாங்கள் சொன்ன படி செய்கிறேன்.
      நன்றி.

      Delete
  28. போட்டிகளில் கலந்து கொள்ளவும்,
    வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கு நன்றிகள் பல

      Delete
  29. வணக்கம் சகோதரி,

    அருமையான தொலைப்பேசி உரையாடல். ! அத்துடன் பதிவர் சந்திப்பின் விபரங்களை குறித்தும் பேச்சுக்கள். ! எப்படி இந்த கற்பனை தங்களுக்கு உதித்தது? பேச்சுக்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. நான்தான் இத்தனை நாள் அதில் கலந்து கொள்ளாமல் மிஸ் பண்ணி விட்டேன். வருத்தமாக உள்ளது. அதற்காக மன்னிக்கவும். தொடர வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலாஹரிஹரன்

    ReplyDelete
  30. வணக்கம்,
    வாருங்கள் தங்கள் அன்பின் வருகைகே போதும்,,,
    தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  31. Replies
    1. அய்யா தங்களை புதுக்கோட்டை விழாவில் சந்திக்க அனைவரும் ஆவலாய்,,,
      வாருங்கள் ஐயா,,,,
      நன்றி ஐயா தொடர்வதற்கு,,,

      Delete