Friday 23 December 2016

தூமணி மாடத்து




தூமணி மாடத்து

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

    தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

      மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்

   மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்

   ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

    மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

விளக்கம்
அதிக பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றும்
 சூழ விளக்குகள் ஏற்றபட்டு வெளிச்சம் உமிழ, நறுமணதிரவியம் மனம் வீச ,பஞ்சுமெத்தையில் உறங்கும் என் மாமன் மகளே கதவை திற, வா, என் அன்பு மாமியே அவளை எழுப்பி விடுங்கள், எத்தனை நேரமாக அவளை நாங்கள் அழைக்கிறோம்,, உன் மகள் தான்,, என்ன செவிடா? ஊமையாக மாறிவிட்டாளா?,சோம்பேறி,,, இல்லை, மாய மந்திரத்தில் கட்டுன்டு கிடக்கிறாளா? எழுந்திரு,,,
மாயவன் மாதவன் வைகுந்தன் என அவன் நாமத்தை சொல்
எழு,,



தொடர்புடைய படம்

11 comments:

  1. அட...! நம்ம பகவான்ஜி சொன்னது போல் - விளக்கத்துடன்...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம் டிடி சார்,, வருகைக்கு நன்றிகள்

      Delete
  2. சிறப்பான விளக்கம். கோலமும் அழகு.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிகள் சகோ

      Delete
  3. மார்கழிக் கோலங்களைப் பார்ப்பதற்காவது எழுந்து வரவேண்டும்..

    அருமை!..

    ReplyDelete
    Replies
    1. எழுப்புதல் தானே மார்கழியின் பாடல்கள்,, ஹா,,

      வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  4. விளக்கம் சொன்னதால் பாமரனும் அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா ,,,,
      வருகைக்கு நன்றி சகோ,,

      Delete
  5. மார்கழியின் மென்மைப் பதிவு. மனதிற்கு இதமாகவும், கண்ணிற்கு குளிர்ச்சியாகவும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மார்கழியின் குளிர்ச்சியில்,,

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல,

      Delete
  6. கோனார் உரை போல் விளக்கவுரை சொன்னதால் புரிந்து கொண்டேன்.

    ReplyDelete