Wednesday, 27 July 2016

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மன்னன்

கரந்தைத் தமிழ்ச் சங்க கல்விநிறுவனம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்கள் தம் கல்வி நிறுவனம் குறித்து ஆங்கில மொழியில் நூல் ஆக்க பெரு அவா கெண்டார். அதன் வெளிப்பாடாக நூற்றாண்டு கொண்டாடும் இவ்வேளையே அதற்கு பொருத்தம் எனக் கருதி தம் துறைப்பேராசிரியர்(ஓய்வு) திரு.அனந்தராவ் அவர்களுடன் இணைந்து 

Kingpin

of 

Karantai Tamil Sangam என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அதன் தமிழாக்க சுருக்கம்

தண்டமிழ் வேந்தன் தமிழவேள் நிறுவிய கல்விக் கோயிலாக அமைந்து கன்னித்தமிழுலகம் போற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

“ நிரம்பாது கொடுக்கும் செல்வமும் இவனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே

என்று புறப்பொருள் வெண்பாமாலை புகலுதற்கேற்ப தன் முன்னோர் காத்த முழுச்செல்வம், தான் சேர்த்த மொத்த செல்வத்தையும் கொண்டு உருவாக்கியது தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

பெயரெல்லாம் தமிழாக்கினார்

“ தமிழ் நாட்டில் தமிழ் தான் இல்லை

என்று மனம் நொந்து பாடிய பா வேந்தரின் ஏக்க வரிகளை போக்க வேண்டும் தெருவெல்லாம் தமிழ் மணக்கச் செய்தல் வேண்டும் என்று உறுதிக்கொண்டார். அதன் பயனாகக்  கடைத்தெருக்களின் விளம்பரப்பலகைகளில் உள்ள ஆங்கிலப் பெயர்களை மாற்றி அழகு தமிழ்ப் பெயர்களைச் சூட்டிடவும், அவையும் நல்ல தூய தமிழப் பெயர்களாகச் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக தில்லி தலைமையகத்திற்கு பலமுறை அஞ்சல்களையும் அனுப்பிவந்துள்ளார். பிற பள்ளியின் தலைவராக பொறுப்பேற்ற போதும் தம் பள்ளிப் போலவே பார்த்து வந்தார். ஆசிரியர் மாணவர் போற்றும் மாண்பாளராக திகழ்ந்தார்.

ஆசிரியர்கள் விரும்பும் ஆசான்

   அவரின் காலத்தில் ஆசிரியர்களுக்கு அனைத்து வகையிலும் புது மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவரின் கீழ் பணியாற்ற அனைவரும் விரும்பினர் எனில் அது மிகையன்று. ஊருக்கு ஒரு பள்ளி என்று தற்போது கூறப்படுகின்ற முறையை அந்தக் காலத்திலேயே செயல்படுத்தியவர்.
தமிழ்ப் புலமையும் தொழிற்கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச் சிறந்தது என்பதால் கலைநூல்களையும் வெளியிட வேண்டும் என்று தமிழ் அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்தவர். புலவர் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்க இவர் பட்ட பாடுகள் ஏராளாம்,,,,

மொழியின் பால் அவர்

  மொழி வளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ் மொழி பழமையானது இலக்கிய இலக்கண செறிவு மிக்கது என்பதனை நன்குனர்ந்த நம் தமிழவேள் அவர்கள் தம் பேச்செல்லாம் தமிழ்ப் பேச்சாக, மூச்செல்லாம் தமிழ்மூச்சாகத் தமிழ் பணிக்கே தம் வாழ்நாளைச் செலவிட்டார்.

   உலகின் கண் விளங்கும் உயர்கலைகள் பலவாகும். அவற்றுள் ஒன்று பேச்சுக்கலை. கற்றல் எளிது. கற்றவற்றைப் பிறருக்கு எடுத்து மொழிதல் அரிது. நா வன்மை மிக்கவர் நம் தமிழ் மகனார் நாவலர் உமாமகேசுவரனார்.

 கண்ணுதற் பெருங்கடவுளாகிய உமாமகேசன் கழகமோடமர்ந்து பைந்தமிழைப் பண்ணுறத் தெரிந்தாய்ந்த பான்மை போலச் செநதமிழ்ச் செல்வராம் தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தனிப்பெருந்தலைவராயமர்ந்து தண்டமிழை வளர்த்தாரெனின் அது மிகையன்று.

“ சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்
காய்த்தல் உவத்தல் அகற்றி

எனும் வரிகளுக்கு ஒப்பாய் கன்னித் தமிழ்க் கருத்துக்களைக் கடைப்பிடித்து வந்தவர்.

 இப்படியாக,,, இற்றைநாள் வளர்ச்சி வரை நூலினுள் ஏராளமான தகவல்கள் உள்ளன.

  பல்லாற்றானும் சங்க வளர்ச்சிக்கு உழைத்து வரும் அன்பருக்கு

இராதாகிருட்டினத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவும்

உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழாவும்

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவும்

  நடைபெற்ற அவையில் சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில்
          


   தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைபோராசிரியர் முனைவர்.கோ.சண்முகம் அவர்களுக்கு 

                                   இராதாகிருட்டினன் விருது 

வழங்கி சிறப்பித்தார்கள்.வாழ்த்துக்கள் சார்,,,

                        பூக்கள் போட்டோ க்கான பட முடிவு
17 comments:

 1. சிறப்பான நேர்முகம்..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

   Delete
 2. விழா சிறப்புடன் நிகழ்ந்தமைக்கு வாழ்த்துகள் சகோ.
  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் சகோ

   Delete
 3. பேராசிரியருக்கு,

  பாராட்டுப்பெற்ற அத்தனைபேருக்கும் விழா நிகழ்ச்சியை பகிர்ந்தளித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  தொடருங்கள் விழாவினைப்பற்றிய மேலதிக செய்திகளோடு.

  கோ

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அரசே.

   Delete
 4. ஆகா
  எனது வாழ்த்துக்களையும்இணைத்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ,,, சாருக்கு தாங்கள் தான், நேரிலே சொல்லிவிட்டீர்களே,,

   Delete
 5. விழா நிகழ்வுப் பகிர்வினைக் கண்டேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

   Delete
 6. மகிழ்வாகவும் ,பெருமையாகவும் உள்ளது
  படங்களுடன் மிகச் சிறப்பான முறையில்
  பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சியே,
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

   Delete
 7. விழா நிகழ்வின் பகிர்வு அருமை...வாழ்த்துகள் அனைவருக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா

   Delete
 8. அனைவருக்கும் வாழ்த்துகள்......

  ReplyDelete
 9. /////“ நிரம்பாது கொடுக்கும் செல்வமும் இவனே
  இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே”

  என்று புறப்பொருள் வெண்பாமாலை புகலுதற்கேற்ப/////?????

  இஃது புறப்பொருள் வெண்பா மாலையா?

  ஆயின் ஆண்டு எவண் உளது?

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete